அனைவருக்கும் வணக்கம். ஏற்கெனவே அறிவிப்புச் செய்த நினைப்பில் பதிவிலே ஏதும் சொல்லாமலேயே ஊருக்குக் கிளம்பிப் போயிட்டேன். பலரும் தொலைபேசி(செல்)யில் அழைத்துக் கேட்டதும் தான் புரிந்தது. மன்னிக்கணும்! பல்வேறு வகையான குழப்பங்கள்; எல்லாத்தையும் விட சொந்த வீட்டை விட்டுட்டுப் போகும் மன வருத்தம். ஆகவே முன்னுக்குப் பின் முரணாகி விட்டது. ஶ்ரீரங்கம் போய்ப் பால் காய்ச்சி அங்கே இரண்டு நாள் தங்கிட்டு வந்தாச்சு. அனுபவங்கள் பின்னர். இப்போத் தான் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் வந்தோம். இணையம் இருக்கானு சோதனை செய்தேன். அதோடு அநேகமா நாளையிலிருந்து இணையம் கட் பண்ணிடுவாங்கனு நினைக்கிறேன். நாளை தான் தெரியும். அப்புறமா ஶ்ரீரங்கம் போய் இணையம் இணைப்பு வந்து தான் உங்களை எல்லாம் பார்க்க/படிக்க முடியும்.
அதுக்குள்ளே யாரும் தீக்குளிக்க வேண்டாம்;மண் சோறு சாப்பிட்டு அலகு குத்திக் காவடி மட்டும் எடுத்தால் போதும். :))))))
அதுக்குள்ளே யாரும் தீக்குளிக்க வேண்டாம்;மண் சோறு சாப்பிட்டு அலகு குத்திக் காவடி மட்டும் எடுத்தால் போதும். :))))))
ஓ...வீடு மாறும் ப்ராசஸ் ஆரம்பமாகி விட்டதா...வாழ்த்துகள்.
ReplyDeleteஅங்கு (ஸ்ரீரங்கம்) இணைய இணைப்புக்கு ஏற்பாடு செய்தாயிற்றா?
ReplyDeleteஇல்லை...அலகு எத்தனை நாள் குத்தியிருக்கணும்னு தெரிஞ்சிக்கக் கேட்டேன்..!! :))))
அட... வாழ்த்துகள்.. சனி ஞாயிறு அந்த பக்கம்தான் இருந்தேன். சொல்லி இருந்தால் வந்திருப்பேன்
ReplyDeleteஓ ஸ்ரீரங்கம் வருவதற்கு ஏற்பாடுகள் தொடங்கி விட்டது போல்.
ReplyDeleteமே இரண்டாம் வாரத்தில் திருவரங்கம் வருவேன். முடிந்தால் புது விலாசத்தினை மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். தொந்தரவில்லையெனில் வந்து பார்க்கிறேன்.
புதிய இடத்தில் புதிய சூழலில் இனி உங்கள் ‘எண்ணங்கள்’ தொடரக் காத்திருக்கிறோம். வாழ்த்துகள்!
ReplyDeleteஸ்ரீரங்கமா இனி! வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாங்கள் நலம். உங்கள் நலத்தைப் பார்த்துக் கொண்டு பதிவுகளில் உங்கள் எண்ணத்தை தொடரலாம்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள். சீக்கிரம் வாங்க. வெயிட்டிங்க்.
ReplyDeleteவீடெல்லாம் நல்லபடி அமைந்ததா!. இப்போதைக்கு தானே. சீக்கிரமே சென்னைல நல்லபடி வீட்டு issues settle ஆக வேண்டிக்கறேன்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ரொம்ப நன்றி. ஶ்ரீரங்கத்தில் இணைய இணைப்புக்கு ஏற்பாடெல்லாம் ஆயிடுத்து; என்றாலும் அலகு குத்திண்டே ஆகணும். கூடவே மண்சோறும் சாப்பிட்டுத் தீச்சட்டியும் எடுத்துடுங்க. வெயிலுக்கு இதம்! :)))))
ReplyDeleteவாங்க எல்கே, விபரங்கள் தரேன். வாங்க ஒரு நாள். அங்கேயானும் வரீங்களானு பார்க்கலாம். :))))
ReplyDeleteவாங்க வெங்கட், கட்டாயமாய் வரணும்; என் கணவரிடமும் சொல்லி இருக்கேன்; வரப் போறீங்கனு. :)))
ReplyDeleteவாங்க ரா.ல. வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, உங்க சுற்றுலாவிலே உண்டா? வாங்க ஒரு தரமாவது ஶ்ரீரங்கத்துக்கு. அந்தச் சாக்கில் உங்களைச் சந்திக்கலாம்.
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, ரொம்ப நன்றி.
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, விபரங்கள் தரேன். சென்னைக்குத் திரும்பி வருவோமானு ஒண்ணும் சொல்ல முடியலை. பார்க்கலாம்; ரங்கன் என்ன நினைக்கிறானோ! :))))))
ReplyDeleteபுதிய வீட்டில், புதிய ஊரில், எல்லா நலனும், எல்லா வளமும் பெற்று குடும்பத்துடன் குதூகலமாக வாழ, எங்கள் வாழ்த்துகள். ஸ்ரீரங்கம் அருமையான ஊர். என்னுடைய நாற்பதாண்டு கால நண்பனும், சம்பந்தி குடும்பமும் அங்கு உள்ளார்கள்.
ReplyDeleteஇனி ஸ்ரீராங்கம் தலைவியா...சென்னை தலைவி இல்லையா ! ?? ;-))
ReplyDeleteநீங்க விலாசம் மட்டும் அனுப்பி வைங்கம்மா. நாங்க கண்டிப்பா வருகிறோம்..
ReplyDeleteவாங்க கெளதம் சார், வாழ்த்துகளுக்கு நன்றி. அநேகமா எல்லா நண்பர்களின் உறவினர்களும் அங்கே இருக்கிறதாச் சொல்லி இருக்காங்க.
ReplyDeleteசென்னை அரண்மனைக்கோ, பர்ணசாலைக்கோ வரலை; மாட்டேன்னுட்டீங்க. சம்பந்தியைப் பார்க்க ஶ்ரீரங்கம் வந்தால் எங்க மாளிகைக்கும் வாங்க. :)))))
வாங்க கோபி, இது ரொம்பவே ஸ்ட்ராங்கான இடம் ஆச்சே! :))))))
ReplyDeleteவாங்க கோவை2தில்லி, கட்டாயமாய்த் தரேன். என்னோட மெயில் ஐடி தெரியும் இல்லையா? அதுக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்க. :)))))))
ReplyDeleteரங்கா! ரங்கா! எல்லாம் நல்லபடி அமையும்.
ReplyDeleteபால் காய்ச்சிக் குடிச்சாச்சு என்று வல்லிம்மா சேதி சொல்லியிருந்தாங்க.
அம்பத்தூரில் இருந்த போதே பார்க்க முடியாமல் போனது, திருவரங்கத்திற்குப் போனதும் முடிகிறதோ, என்னவோ!
உங்கள் உற்சாகம் வழிநடத்திச் செல்லும். வாழ்த்துக்கள்.
வாங்க ஜீவி சார், வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. திருவரங்கனைத் தரிசிக்க என்றே கிளம்பி வாங்க, எங்க வீட்டிலேயே தங்கிட்டுப் போய்ப் பார்த்துட்டு வரலாம். ஆனால் கூட்டம் தான் அலை மோதுகிறது. 50 ரூபாய் தரிசனத்துக்கு 500 பேர் வரிசையில் என்றால் 400 ரூ, அதற்கு மேல் ஐம்பது பேர் நிற்கின்றனர். பணம் கொடுக்காமல் தான் உன்னைப் பார்ப்பேன்னு ரங்கனிடம் சொல்லிட்டேன். அவன் என்ன மனம் வைக்கிறானோ! :))))))
ReplyDeleteஓ அதான் போன வாரம் திருச்சி போனபோது ச்ரிரங்கம் பக்கம் கிர்ர் கிர்ர் சத்தம் கேட்டதா
ReplyDeleteஓ அதான் போன வாரம் திருச்சி போனபோது ச்ரிரங்கம் பக்கம் கிர்ர் கிர்ர் சத்தம் கேட்டதா
ReplyDeleteகடைசி வரை எங்கவீட்டுக்கு வரக்கூடாது பிடிவாதமா இருந்துடீங்க. சரி