இன்று தமிழ்த் தாத்தாவின் நினைவு நாள். தமிழுக்கு அவர் செய்திருக்கும் அளப்பரிய தொண்டுக்குச் சும்மாவானும் நன்றி என்ற ஒற்றைச் சொல்லை நாம் சொல்வது வெறும் சம்பிரதாயம். வறுமையிலும் மிகவும் கஷ்டப் பட்டுப் பல பணக்காரர்களின் ஆதரவைப் பெற்றுத் தமிழின் அரிய நூல்களைப் பதிப்பித்தார். அவர் இல்லை எனில் மணிமேகலை எந்த மதத்தைச் சார்ந்த நூல் என்பதையே நாம் அறிந்திருக்க மாட்டோம். பல அரிய நூல்களைச் சுவடிகளில் இருந்து கண்டறிந்து பதிப்பித்த மாமனிதருக்கு நாம் செலுத்த வேண்டிய அஞ்சலி எப்போதும், எங்கேயும் தமிழிலேயே பேசுவது ஒன்றே. ஆங்கிலச் சொற்களைத் தேவையான இடத்தின் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசுவதைக் கூடியவரை தவிர்ப்போம்.
தமிழ்த் தாத்தாவை நினைவில் வைத்து மற்றவர்களுக்கும் நினைவு படுத்துவது பாராட்டுக்குரிய செயல். தமிழ் வாழ்க.
ReplyDeleteமுழுவதுமாக வீடு செட்டில் ஆயாச்சா... எல்லா களேபரங்களையும் ஒழுங்கு படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வந்தாச்சா...
//ஆனால் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசுவதைக் கூடியவரை தவிர்ப்போம்//
ReplyDeleteதொலைக்காட்சிகளில் வரும் தமிழ்க் கொலைகளை முடிந்தவரை கண்டிப்போம்!
மாமனிதருக்கு நாம் செலுத்த வேண்டிய அஞ்சலி எப்போதும், எங்கேயும் தமிழிலேயே பேசுவது ஒன்றே. ஆங்கிலச் சொற்களைத் தேவையான இடத்தின் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசுவதைக் கூடியவரை தவிர்ப்போம்.//
ReplyDeleteநல்ல கருத்து.
தமிழ்த்தாத்தாவுக்கு வணக்கங்கள்.
அவர் புகழ் வாழ்க! தமிழ் வாழ்க!
ஸ்ரீ ரங்கம் எப்படி இருக்கிறது?
வருக..வருக.. தங்கள் வரவு நல்வரவாகுக..
ReplyDeleteஅம்பத்தூரிலிருந்தா? அல்லால், திருவரங்கத்திலிருந்தா?
ஆஹா வந்துட்டீங்களா? வாழ்த்துகள். தமிழ்த் தாத்தாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள். தமிழ்த் தாத்தாவின் பேரன் ஒருவர் (வெங்கடகிருஷ்ணன் என்று பெயர் என்று நினைக்கின்றேன்) என்னுடைய அலுவலகத்தில் எழுபதுகளில் அதிகாரியாக வேலை பார்த்தார்.
ReplyDeleteஇணையம் வந்துவிட்டதா கீதா. முதல் பதிவே தாத்தாவுக்கு அர்ப்பணம் செய்வது ஒரு புண்ணியம்தான்.
ReplyDeleteதாத்தாவின் ஆசீகளில் நம் தமிழும் வளரட்டும்.
நல்ல பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஒரளவு செட்டில் ஆயாச்சா.வருக வருக உங்கள் வரவு நல்வரவு ஆகுக !! ரைட்டா!!
ReplyDeleteதமிழ்த்தாத்தா... தமிழ் வளர்க்க அவர் எடுத்த முயற்சிகள்....
ReplyDeleteநல்ல பகிர்வும்மா. நன்றி.
வாங்க ஸ்ரீராம், இந்தப் பதிவை ஒரு மாசம் முன்னாடியே ஷெட்யூல் பண்ணிட்டேன். :)))))
ReplyDeleteவாங்க கோமதி அரசு, வந்ததில் இருந்து நான்கு முறை மழை கொட்டித் தீர்த்தாச்சு. :)))
ReplyDeleteவாங்க ஜீவி சார், எங்கிருந்தும் இல்லை; ஏற்கெனவே தயார் செய்திருந்த பதிவு. :)))
ReplyDeleteவாங்க கெளதம் சார், அவரோட எள்ளுப் பேரன் ஒருத்தர் பாரதி என்ற பெயரோடு கோவையில் என் அக்கா(பெரியப்பா பெண்) சிநேகிதராக இருந்தார். ஆனால் தமிழில் பேசிப் பார்க்கலை. :((((
ReplyDeleteவாங்க வல்லி, இது இணையம் வரதுக்கு முன்னாடி தயார் செய்தது. நன்றிம்மா.
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, நன்றிம்மா.
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, ஓரளவுக்கு செட்டில் ஆயிட்டோம். நன்றிம்மா.
ReplyDeleteவாங்க வெங்கட், நன்றிங்க.
ReplyDelete