நேத்திக்குச் சாயங்காலம் கணினியிலே உட்கார்ந்திருக்கையிலே திடீர்னு சேரோட ஆடறாப்போல் இருந்தது. என்ன ஆச்சுனு கத்தினேன். அப்போப் பக்கத்திலே வீட்டை இடிச்சதிலே ஒரு பக்கத்துச் சுவர் அப்படியே விழுந்துடுச்சுனாங்க. அப்போவே சந்தேகமா இருந்தது. ஆனால் தொடர் வேலைகளில் சுத்தமா மறந்தே போச்சு; ராத்திரி எலி வந்ததா! அப்போ எங்க ரெண்டு பேருக்கும் நடந்த யுத்தத்திலே காலம்பர மெளன விரதம். எலி என்னமோ தப்பிச்சுண்டு போயாச்சு.
இன்னிக்கு மத்தியானம் சாப்பிட 2 மணிக்கு மேல் ஆச்சு. கரண்ட் 2 மணிக்குப் போயிடும். ஆகவே வெராந்தாவிலே உட்கார்ந்திருந்தேன். ரங்க்ஸ் உள்ளே ஆளை வைச்சுக் கொண்டு ஏதோ வேலை செய்துட்டு இருந்தார். அப்போப் பார்த்து உட்கார்ந்திருந்த சோபா கிடு கிடு, கிடு கிடுனு ஆட்டம். எனக்கா அப்போத் தான் எழுந்துக்கணும்னு. இவர் வேறே எதையோ எடுத்து வைச்சுட்டு இதை என்ன பண்ணறதுனு பாருனு கூப்பிட்டார். எழுந்தா பூமியே நழுவறது. உட்கார்ந்தா சோபாவோட ஆட்டம். லேட்டாச் சாப்பிட்டது ஒத்துக்கலையா? அல்லது ரத்த அழுத்தம் அதிகமாச்சா? குறைஞ்சு போச்சா? என்னனு புரியலை. எழுந்துக்கவே இல்லை.
இரண்டு நிமிஷத்துக்கு எல்லாம் கீழே இருக்கும் உறவுக்காரப் பெண் வந்து பூகம்பத்தை உணர்ந்தீங்களானு கேட்க, "அட, இதானா!" எனத் தோன்றியது. அட, ஆமாம், ஆட்டம் போட்டதுனு சொன்னேன். ஆனால் என் கணவருக்கோ, கூட இருந்த ஆளுக்கோ எதுவுமே தெரியலையாம். எதிர் வீட்டில், பக்கத்து அபார்ட்மெண்டில், இன்னொரு பக்கத்து வீடுனு எல்லாரும் வீட்டுக்கு வெளியே. என்னையும் ஏன் வெளியே வரலைனு கேட்டாங்க. எங்கே, அந்த முழங்காலை முறிக்கும் படியில் நான் இறங்கறதுக்குள்ளே இன்னொரு ஆட்டம் ஆடிச்சுன்னா தானே இறங்கிடுவேன்; இல்லைனா மேலே போயிடுவேன்னு சொன்னேன். ஆக மொத்தம் சில விநாடிகளில் இந்தோனேசியா பத்தித் தெரிய வந்தது. இங்கே கரண்ட் இல்லாததால் செய்திகளைப் பார்க்க முடியலை. மனசுக்கு வருத்தமா இருக்கு.
இவ்வளவு மோசமான பூகம்பம் இந்தோனேசியாவிலே வந்திருக்கு. மக்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்றணும்

கடவுளை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteபகவான் இருக்கான். பாத்துக்கட்டும்!
ReplyDeleteஇந்த பூகம்பத்தை நாம உணறரதுக்குள்ள வந்துட்டுபோயிடரது. பாதிக்கப்பாட்டவங்கல்லாம் ஐயோபாவம் இல்லே?
ReplyDeleteகாப்பாற்றட்டும்.
ReplyDelete"தானே இறங்கிடுவேன்" - சிரிக்க வைத்தது.
முதலில் சென்னையில் என்றும், அப்புறம் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் என்றும் அப்புறம் பெரும்பாலான இடங்களில் என்றும் சுனாமி வரும், வராது, வராது, வரும் என்று செய்திகளை மாற்றி மாற்றிப் பார்த்து பொழுது போக்கிக் கொண்டிருந்தோம். 2004 ஆம் ஆண்டின் ரிக்டர் அளவை விட இப்போது குறைவுதான் ஆனால் ஆருக்கு மேலே போனாலே அதிகம்தான்....இன்னும் என்னென்னவோ சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்...!
ReplyDeleteசுனாமின்னு வர்ரத பாக்க மக்கள் பீச்சில கூடறாங்கலாமே!
ReplyDeleteபெங்களூரில் நான் இருக்கும் பகுதியில் ஏதும் யாரும் உணரவில்லை.
ReplyDeleteம்ம்... ஒரே நொடியில் எல்லாம் முடிந்து விடும்....
ReplyDeleteதானா இறங்கிடுவேன்... :)
நன்றிம்மா கோவை2தில்லி, அங்கேயும் நில அதிர்வு இருந்ததுனு கேள்விப்பட்டேன். கவனம்.
ReplyDelete@ வா.தி.,
ReplyDeleteவாங்க, ஆமாம், அது உண்மையே; பல சமயங்களிலும் உணர்ந்திருக்கேன். முக்கியமா முதல் முதல் பம்பாய்ப் பயணத்திலே, ரயில் புயலில் மாட்டிக் கொண்டு பாதி வழியிலே நிற்க, விலாசமே இல்லாமல் ஆட்டோவில் 200 கிமீட்டர் பயணம் செய்து பம்பாய் மைத்துனன் வீட்டிற்குச் சென்றபோது! :))))))))))
வாங்க லக்ஷ்மி, நல்லவேளையாப் பெருமளவு உயிர்ச்சேதம் இல்லை; அந்த வகையில் இறைவனுக்கு நன்றி.
ReplyDelete@அப்பாதுரை,
ReplyDeleteகாப்பாற்றட்டும்?? என்ன இது மொட்டையா? :)))))
அந்த வரிகள் பலரையும் சிரிக்க வைத்தது என்பது வந்த, பின்னூட்டங்கள் மட்டுமில்லாமல் தனி மடல்களில் இருந்தும் தெரிந்து கொண்டேன். நன்றிங்க. :)))))))
வாங்க ஶ்ரீராம், எங்களுக்கு மின்சாரமே இல்லையா, இந்தப் பிரச்னையே இல்லை. நாலு மணிக்கப்புறமா மின்சாரம் வந்தாலும் லான்ட்லைன் தொலைபேசி வேலை செய்யலை; நெட் என்னமோ அதிசயமா விட்டு விட்டு வந்தது. இன்னிக்குக் காலம்பர தான் சரியாச்சு என்றாலும் வேகம் இல்லை. ஏதோ வருது. அவ்வளவு தான். நேற்று புகார் கொடுக்கும் டோல் ஃப்ரீ நம்பர் கூட எடுக்கவே இல்லை. :(
ReplyDeleteவாங்க டி.என். முரளிதரன், ரொம்பவே பழக்கப்பட்ட பெயரா இருக்கு. ஆனால் என் வலைப்பக்கத்துக்கு இப்போத் தான் முதல்லே வரீங்கனு நினைக்கிறேன். இந்தப் பெயரில் இன்னும் யாரைத் தெரியும்னு யோசிக்கிறேன்.
ReplyDeleteஒருத்தர் கிருஷ்ணன் முரளீதரன்! :)))))
வாங்க கெளதம், பங்களூரில் சிலருக்கு உணர முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அநேகமா எல்லாருக்கும் உணர முடிந்தது.
ReplyDeleteவாங்க வெங்கட், ஆமா இல்ல? நாம ஏன் கஷ்டப்பட்டு இறங்கணும்? :))))) அந்தப் படியோ முழங்கால் முறிச்சான். எல்லோராவிலேயும், அகோபிலத்திலும் கூட ஏறிட்டேன். இது முடியலை! :))))))
ReplyDelete"""சுனாமின்னு வர்ரத பாக்க மக்கள் பீச்சில கூடறாங்கலாமே""
ReplyDeletekadavulae ! ithukku enna seyya!namba makkalukku rombavae paththadho?! ethai vaedikkai paakkarathunnu!!
blog samaththaa thaan irukku neram thaan irukkarathu illai ! padippaen aanaa
மதியம் 3 மணியளவில், குடும்பத்தோடு தரங்கம்பாடி கடற்கரையில் இருந்தோம். நிலநடுக்கமோ, சுனாமியோ என்றே தெரியாமல் மக்களைக் கூப்பிட்டுக் கலவரப்படுதினர் சிலர். ஆக மொத்தம் களேபரமாக இருந்தது. தகவல் தொடர்பு ஊடகங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஆபத்துக் காலங்களில் வதந்தி பரவாமல் தடுக்க வேண்டும். அலைபேசிதான் பேசாமடந்தையாகிவிட்டது. காரைக்கால் FM மட்டும் அவ்வப்போது தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மக்களின் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தது.என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தந்தனர். எல்லோரும் ஒரே சமயத்தில் வெளியேற நினைத்ததால், குழப்பமே மிஞ்சியது. வதந்தி தான் தீயாகப் பரவியது. எந்த பாதிப்பும் இல்லாததே மனது திருப்தியடைந்தது. எவ்வளவோ sophisticated instruments இருந்தும், சில சமயங்களில் பயனற்றதாகிவிடுகின்றதே. ஒரு ஷேர் ஆட்டோ போன்றதில், எங்களோடு சேர்த்து, மேலும் இரு குடும்பங்களைத் (அவர்கள் பயத்தால் உடல் நடுங்கிக் கொண்டிருந்தனர்) திருக்கடையூர் வரை கொண்டு வந்து விட்ட பிறகுதான் பதற்றம் சற்றே தணிந்தது. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
ReplyDeleteunga ellarukkum puthu varuda vazhththukkal
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, கூட்டத்தைக் கட்டுப்படுத்தி இருக்காங்க. அரசும் அதால் முடிந்ததைச் செய்யத் தான் செய்திருக்கிறது. ஜனங்களும் ஓரளவுக்கு விழிப்புணர்ச்சியோடு இருந்திருக்கின்றனர். நல்லவேளையா எங்கேயும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. கடவுள் அருள்!
ReplyDeleteவாங்க தீக்ஷிதரே, நீண்ட விபரமான பின்னூட்டத்துக்கு நன்றி. நல்லவேளையாப் பெரிய அளவில் சேதாரம் ஏதும் இல்லை. :)))
ReplyDeleteஜெயஶ்ரீ, உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
"தானே இறங்கிடுவேன்":))
ReplyDeleteஇதே ஆட்டம் இங்கும் இரண்டு தடவை இருந்தது.
சேதம் எதுவும் இல்லாமல்
ReplyDeleteகடவுள் காப்பாற்றினார்.
கடவுளுக்கு நன்றி.