எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 29, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 6

பெருமூச்சு விட்டாள் ராதா. அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.  எல்லாம் கண்மூடித் திறக்கிறதுக்குள்ளாக மளமளவென நடந்துவிட்டது.  நடந்தவைகளை மனதுக்குள்ளேயே அசை போட்டாள். அவளை மாமியார் வீட்டிலேயே அரை மனதாகவே சந்துரு விட்டுச் சென்றான்.  அவன் நுண்ணிய பார்வைக்கு வீட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் புரியாமல் இல்லை.  அதுவும் ராதாவும் அவனும் சில நிமிடங்கள் சேர்ந்தாற்போல் பேசினாலோ, கோயிலுக்கோ அல்லது வேறெங்கேயோ சென்றுவரக் கிளம்பினாலோ அவர்களைத் தனியே விடக் கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டவர்கள் போல இரு தங்கைகளும் கூடக் கிளம்புவார்கள்.  அம்மா வேறே அதுகளும் தான் என்ன செய்யும்? இப்படித் தானே போக முடியும்! எல்லாருமாப் போயிட்டு வாங்கனு முடிச்சுடுவாள்.  இந்த ஊருக்கு மாற்றிக் கொண்டு வந்தால் தனக்குக் குடும்ப வாழ்க்கை என்பது இருக்காதோ என்றே சந்துரு நினைத்தான்.  ஆகவே பம்பாய்க்குப் போனதுமே அவன் பங்களூர் அல்லது புனாவுக்கு மாற்றல் கேட்க நினைத்தான்.

அவனுடைய எண்ணத்திற்கேற்றாற்போலவே பங்களூரில் இருந்த பம்பாய்க்காரர் ஒருத்தர் அவன் இருக்கும் இடத்திற்கு வரவேண்டும் எனத்துடிக்க,சந்துருவும் அவரும் பேசிக் கொண்டு, பரஸ்பரம் இடம் மாறிக்கொள்வதாய் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க, பம்பாய் போன ஒரே மாதத்திலேயே பங்களூருக்கு வந்துவிட்டான் சந்துரு. ஒருவேளை ப்ரமோஷன் கிடைக்கவில்லை எனில் இது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்திருந்தான்.  அவன் இப்போது வகிக்கும் பதவியைத் தான் பங்களூர்க்காரரும் வகித்தார்.  ஆகவே எல்லாமே எளிதாகிவிட்டது.  பங்களூர் வந்ததுமே ராதாவுக்கும் வேலைக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான் சந்துரு.  ஒரு கம்பெனியில் தாற்காலிகமாய்க் கிடைக்கும் போல் இருந்தது.  தாற்காலிகம் என்றால் அனுப்புவது கடினம் என்பதால் அதைச் சொல்லாமலேயே ராதாவை அழைத்து வரவேண்டும் எனக் கிளம்பி ஊருக்கு வந்தான்.  வாசலிலேயே புதுப்புடைவை கட்டிக்கொண்டு அவன் தங்கைகள் இருவரும் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

சந்துருவைப் பார்த்ததும், "அண்ணா, அண்ணா!" என்று சந்தோஷக் கூச்சலிட்டனர்.  உள்ளிருந்து ஓடோடி வந்தாள் ராதா.  அவளை சந்தோஷத்துடன் பார்த்த சந்துரு அவள் இருக்கும் நிலையையும், உடல் நிலையையும் பார்த்துத் திகைத்துவிட்டான்.  தூக்கிச் செருகிய புடைவையோடும், கலைந்த கேசத்தோடும், அரைத்துக் கொண்டிருந்த மாவுக்கையோடும் வந்திருந்தாள் ராதா.  கல்யாணத்தின்போது பார்த்ததுக்குப் பின்னால் ஒரு மாதம் தானே ஆகி இருக்கிறது! ஆனால் இந்த ஒரு மாதத்தில் ராதா துரும்பாக இளைத்திருந்தாள். கண்களிலேயே ஒரு சோகமும் கூடத் தெரிந்தது.  கூட அழைத்துச் செல்லாமல் தப்புப் பண்ணிவிட்டோமோ என சந்துருவுக்குத் தவிப்பாக இருந்தது.  அதற்குள்ளாக, "என்ன அண்ணா,. மன்னியையே பார்த்துண்டு நிக்கிறே? அவளுக்கென்ன? மூணு வேளையும் சாப்பிட்டுக் கொண்டு சொஸ்தமாத் தான் இருக்கா.  என்ன கவலை! " என்றாள் பெரிய தங்கை.  லதாவும் உடனேயே, "எத்தனை புடைவை வைச்சிருக்கா, அவள் ஒருத்திக்கு இத்தனை புடைவையா?  எங்களுக்குப் பிரிச்சுக் கொடுத்துடுனு கேட்டு வாங்கிக் கொண்டு விட்டோம்.  கொஞ்சம் நீதான் சொல்லு அவ கிட்டே.  என்னமோ சொத்தையே தூக்கிக் கொடுத்திட்டாப்போல மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கறா!" என்று குற்றம் சாட்டினாள்.

இதற்கு மேலும் ராதா அங்கிருப்பது சரியில்லை எனச் சந்துருவுக்குப் புரிந்தது.  வாய்விட்டுச் சொல்லாமல் மெளனமாய்க் காரியத்தைச் சாதிக்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டான்.  ஆகவே, ராதாவிடம், போய்க் காபி கொண்டு வா என அனுப்பி விட்டு மெல்லத் தாய் இருக்குமிடம் தேடிச் சென்றான்.  கொல்லையிலே இரண்டாங்கட்டிலே அக்கம்பக்கத்துப் பெண்களோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள் அகிலாண்டம்,  கூட சந்துருவின் இரு தம்பிமார்கள், சந்துருவின் அப்பா எல்லாருமே அங்கே கூட்டம் கூடி இருந்தனர்.  இந்தப் பசங்க ஏன் இங்கே இருக்காங்க? என்று சந்துரு நினைக்கையிலேயே சந்துருவின் அப்பா திடீரென இரும, அந்தச் சத்தம் கேட்டுத் திரும்பிய அவன் தம்பிமார்கள் சொல்லி வைத்தாற்போல  அருகே இருந்த புத்தகக் கட்டைப் பிரித்து வைத்துக்கொண்டார்கள்.  அனைத்தையுக் கண்டும் காணாதது போல் சென்ற சந்துரு சமையலறையிலேயே சாய்ந்தாற்போல் அமர, ராதா காபி கலந்தாள்.  கணவன் காட்டிய ஜாடையைப் புரிந்து கொண்ட அகிலாண்டம், "ஏ ராதா, பாதி அரைக்கறச்சே எங்கே எழுந்து போனே?  இங்கே வா, அரைச்சு முடி;  அங்கே யார் வந்திருக்கா?  சந்துருவா?  ஏன் , சந்துரு வந்தால் என்னைப்பார்க்க மாட்டானா?  இல்லாட்டி அவனுக்கு நான் தான் காப்பி கலந்து கொடுக்க மாட்டேனா? நீ தான் செய்யணுமா?  வந்து ஒருமாசம் கூட இல்லை;  அவனோடு எத்தனை நாள் குடித்தனம் பண்ணி இருக்கே? எல்லாம் தெரிஞ்சாப்போல எல்லாத்துக்கும் நீ முந்திக்கிறயே! நகரு அந்தப்பக்கம்.  என் பிள்ளைக்குச் செய்ய எனக்குத் தெரியும். " என்றாள் படபடவென.

ராதா வாய் திறக்காமல் அங்கிருந்து நகர்ந்தாள்.  அன்றிரவு இருவரும் தனிமையில் சந்தித்தபோது அவர்கள் இருவரும் பங்களூரில் குடித்தனம் வைக்கப் போகும் விஷயத்தையும், அவளுக்கு வேலை பார்த்து வைத்திருப்பதையும் சொன்னான் சந்துரு.  அவன் முகத்தில் சந்தோஷமே இல்லை.  அதிலிருந்து மிகப்போராடியே அகிலாண்டத்தின் சம்மதம் கிடைத்திருக்க வேண்டும் எனப் புரிந்து கொண்டாள் ராதா.

எப்படியோ, இதோ, ராதா, இங்கே வந்து மூன்று மாதமாகிறது.  குடித்தனம் வைக்கத் தான் எத்தனை பாடு படுத்திவிட்டாள் அவள் மாமியார். அவள் அப்பா, அம்மா இங்கே வந்து அவங்க எல்லாரையும் பங்களூருக்கு அவங்க செலவில் கூட்டிச் செல்ல வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தினாள்.  ஆனால் சந்துரு இந்த விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாகவே இருந்துவிட்டான்.  அவங்க நேரே பங்களூர் வரட்டும்.  பெண்ணுக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொடுக்கட்டும், இங்கே எல்லாம் வந்து கொண்டிருக்க வேண்டாம் என்று கூறிவிட்டான்.  ரொம்பவும் சொன்னால் சந்துரு திரும்பிக் கொண்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அகிலாண்டமும் வாயே திறக்கவில்லை.  கிளம்புகையில் மாமனாரை நமஸ்கரிக்கையில் கடைசி மைத்துனன், "மன்னி, தனிக்குடித்தனம் போறே.  எங்க அண்ணாவை எங்க கிட்டே இருந்து பிரிச்சுடாதே.  அதோட அவசரப் பட்டுண்டு குழந்தை, குட்டினு பெத்துக்காதே.  நாங்கல்லாம் இருக்கோம்.  மறந்துடாதே." என்று சொல்ல, சின்னப்பையன் பேசும் பேச்சா இதுனு ராதா வியக்க அவள் மாமியார் அப்படியே சின்னைப் பையன் சொல்வதை ஆமோதித்தாள்.

பெருமையுடன் அவளிடம், "குழந்தை எவ்வளவு பொறுப்பா யோசித்துச் சொல்றான் பாரு! இப்போதைக்கு உனக்கு இரண்டு பெண்ணும், இரண்டு பிள்ளைகளும் இருக்காங்க, நினைவு வைச்சுக்கோ!" என்றாள்.  அதோடு அங்கிருந்து கிளம்பி பங்களூருக்கு வந்தாயிற்று.

மூன்று மாதம் ஆகிறது; ராதாவுக்கே சந்தேகம் தான்.     அன்று சந்துரு வந்ததும் மருத்துவரிடம் சென்று நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.  அம்மாவுக்குக் கடிதம் எழுத வேண்டும்.  கடிதமும் எழுதினாள்.  அதற்குள்ளாகச் சந்துரு வந்தான் அலுவலகத்தில் இருந்து.    சற்று ஆசுவாசம் செய்து கொண்ட பின்னர் சந்துரு அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். பிரித்துப் பார்த்த அவள், " என்ன உங்க அம்மா வரப் போறாங்களாமா?  என்ன விசேஷம்?" என்று கேட்டாள்.  "தெரியலை, வித்யாவைப் பெண் பார்த்துட்டுப் போயிருக்காங்க இல்லை; அது பற்றி இருக்கும். "என்றான் அசுவாரசியமாக.

"ஓஹோ" என்றாள் ராதா யோசனையுடன்.  தன் நிலைமையை மாமியாரிடம் தெரிவிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.  அகிலாண்டமும் வந்தாள். வந்ததுமே ராதாவிடம் தனிமையில் பேசிக் கொண்டிருக்கையில் குண்டைத் தூக்கிப்போட்டாள்.  ராதா திக்குமுக்காடிப் போனாள்.

Wednesday, June 27, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் --5

தந்தியை ராதாதான் வாங்கினாள்.  அதிலே சந்துருவிற்கு வேலையில் பிரமோஷன் கிடைத்திருக்கும் செய்தியும், தற்சமயம் இருக்கும் அலுவலகத்திலேயே இன்னும் ஆறு மாதங்கள் நீடிக்கலாம் என்னும் செய்தியும் காணப்பட்டது.  அப்போ, நாமும் அவருடன் போகலாம் என ராதா மனதுக்குள் எண்ணமிட்டாள்.  தந்தியை வாங்கிப் பார்த்த சந்துரு தன் பெற்றோரிடமும், மற்ற உறவினருக்கும் விஷயத்தைச் சொல்ல, எல்லாரும் ராதா வந்த நேரம் என மகிழ்வோடு கூற அகிலாண்டத்துக்குக் கோபமும், ஆத்திரமும் சேர்ந்து வந்தது.  என்றாலும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல், இப்போ பிரமோஷன்னா ராதா வந்த நேரம்னு சொல்றோம்.  பின்னாடி வேறே ஏதானும் ஆச்சுன்னாலும் அப்படித்தானே சொல்லணும்! என்றாள்.  சந்துரு உட்பட அனைவர் முகமும் சுருங்கியது.

சந்துரு நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.  "அம்மா, இப்போதைக்கு எனக்கு எங்கேயும் மாற்றல் இல்லைனு ஆயிடுத்து. ஆகவே நான் ராதாவை அழைத்துக் கொண்டு போறேன்.  அங்கே குடித்தனம் வைக்க என்னென்ன தேவை என்பதை அவளுக்குச் சொல்லு." என்றான்.

"ஏற்கெனவே வீடு பார்த்தாச்சா? சொல்லவே இல்லையே நீ?" என்றாள் அகிலாண்டம். "பெண்டாட்டி வரதுக்கு முன்னே எல்லாம் ரெடியா?" என்றாள்.  அந்தக் குரலில் இருந்த குத்தலைப் புரிந்து கொள்ளாமலேயே சந்துரு, "அதெல்லாம் இல்லைம்மா.  நான் என் நண்பனுக்குத் தந்தி கொடுத்து ஒரு வீடு பார்த்து வைக்கச் சொல்லப் போகிறேன்.  நீ நல்ல நாளாப் பார்த்துச் சொன்னால் கிளம்பிப் போனதும் அன்னிக்கே பால் காய்ச்சிச் சாப்பிட்டுவிடலாம். பின்னர் மெதுவாக வேறே நல்ல வீடு பார்த்துக்கலாம்." என்றான்.

"வீடும் பார்க்கலை; இனிமேல் பார்த்துப் போகணும். அதுக்கு ஏண்டா அவளைக் கட்டி இழுக்கிறே.  அவ பாட்டுக்கு இங்கே குழந்தைகளோடு குழந்தைகளா இருந்துட்டுப் போறா.  இப்போ அங்கே அவ வந்து உனக்கு என்ன பண்ணணும்? நான் பார்த்துக்கறேன் என் பெண்ணைப் போல.  அவ வேலைக்கு இங்கே இருந்து வேண்டுமானாலும் போயிட்டு வரட்டும்.  அவளுக்கு ஒத்தாசைக்கு இங்கே லதாவும், வித்யாவும் இருக்காங்க.  ரெண்டு பேரும் ஒத்தாசை செய்ய மாட்டேன்னு சொல்லப் போறாங்களா என்ன? எனக்கோ உடம்பே முடியலை. என்னமோ இந்த இரண்டு பெண்களுக்காகவும், இந்தப் பிள்ளைகளுக்காகவும் தான் நான் உசிரை வைச்சிண்டு இருக்கேன். " என்று பெருமூச்சு விட்டாள்.  அப்போது உள்ளே வந்த சந்தானம் தன் மனைவியைப் பார்த்து, "ராதா அங்கே குடித்தனம் வைக்கலைனாலும் என்ன? போயிட்டு வரட்டும்,  அவளும் பம்பாய் எல்லாம் பார்க்க வேண்டாமா? அதோட என் சித்தப்பாவுக்கு உடம்பு முடியலைனு கல்யாணத்துக்கு வரலை.  அவரையும் பார்த்து நமஸ்காரம் செய்துட்டு வரலாம்.  எல்லார் ஆத்துக்கும் போய்ப் பார்த்துத் தெரிஞ்சுக்கட்டுமே!" என்றார். அகிலாண்டம் அவரை முறைத்துப் பார்த்தாள்.

"இதிலெல்லாம் நீங்க தலையிடாதீங்க!" என்று ஒரே வார்த்தையாகக் கூறவே, சந்துருவுக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை.  சரி, கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் எனத் தோன்றவே எதுவும் பேசாமல் ராதாவைப் பார்த்துக் கண் ஜாடை காட்டிவிட்டு அப்பால் சென்றான்.  உடனே அவன் பின்னால் செல்ல நினைத்த ராதா, தன் கடைசி நாத்தனார் தன்னையே கவனிப்பதைக் கண்டதும் தன் தாயைத் தேடிச் சென்றாள்.  அவளிடம் விஷயத்தைச் சொல்லவும், ராதாவின் அம்மா மறுபடியும் தன்னோடு வந்துவிடு என வற்புறுத்தினாள்.  கணவனைக் கலந்து கொள்ளாமல் எதுவும் சொல்ல ராதாவுக்கு இஷ்டமில்லை.  ஆகவே மெல்ல அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டு கணவனைத் தேடிச் சென்றாள். சந்துரு அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

"ராதா, உன்னை விட்டுட்டு எப்படித்தான்,"  என ஆரம்பிக்கக் கலகலவெனச் சிரித்த ராதா, "நான் நேத்துலேருந்து தான் உங்களுக்குப் பழக்கம்.  அதுக்குள்ளே என்னை விட்டுட்டுப் போக முடியலையா?  உங்க அம்மாவுக்குக் கோபம் வரப் போகிறது." என்று ஜாடையாகச் சொன்னாள்.  சட்டென முகம் கறுத்த சந்துரு, "என்ன ஆச்சு?" என்றான்.  "ஒண்ணுமே ஆகலையே?" என்றாள் ராதா. சற்றுத் தயங்கின சந்துரு, "உன்னை இப்போ அனுப்ப மாட்டேன்னு அம்மா சொல்றாளே? நீ என்ன சொல்றே?" என்று கேட்டான்.

"நீங்கல்லாம் என்ன முடிவு பண்ணறீங்களோ அதான்!" என்றாள் ராதா.  சந்துரு கொஞ்சம் யோசித்துவிட்டு ராதாவிடம், "சரி, இங்கே இரு கொஞ்ச நாட்கள்.  நான் போய் எப்படியானும் பக்கத்து ஊருக்கோ இல்லாட்டிச் சென்னைக்கோ மாத்திண்டு வந்துடறேன்.  இல்லைனா, பங்களூர், புனானு கேட்கிறேன்.  கொடுப்பாங்க.  அங்கே வந்தால் உனக்கும் நல்ல வேலை கிடைக்கும்னு சொன்னா அம்மா ஒத்துப்பா." என்றான்.  ராதாவின் மனம், "பார்க்கலாம்," என்றது.  ஆனாலும் கணவனிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் சரி என ஒத்துக் கொண்டாள்.  அவள் எழுந்திருக்க எண்ணி எழுந்த போது, அவள் கையைப்  பிடித்து இழுத்த சந்துரு, "இரேன், எங்கே போறே அதுக்குள்ளே?" என்று கேட்க, அப்போது உள்ளே நுழைந்த லதா, "மன்னி, நீ இங்கேயா இருக்கே? அம்மா உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறாளே? நீயானா அண்ணாவோட நேரம் காலம் தெரியாம குலாவிண்டு இருக்கே?" என்று சொல்ல, சந்துரு, "லதா, அவ உனக்கு மன்னி. இப்படி எல்லாம் நீ பேசக் கூடாது." என்று சொல்ல, ராதாவை முறைத்தாள் லதா.

"வந்ததும் உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா? இன்னி வரைக்கும் எங்க அண்ணா என்னை ஒரு வார்த்தை சொன்னதில்லை.  எங்க மூணு பேரிலேயே என்னைத் தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.  அவனுக்கு எல்லாமே நான் தான் செய்யணும்னு சொல்வான்.  அப்படிப் பட்டவனை ஒரே ராத்திரியிலே மாத்திட்டியே? " என்றாள் படபடவென.  ராதாவின் கண்களில் நீர் முட்டியது.  சந்துரு மீண்டும் அவளை அடக்கப் போகத் தன் கையால் அவனைத் தடுத்தாள் ராதா. கண் பார்வையாலேயே விடுங்க எனச் சொல்ல, சந்துரு அங்கிருந்து கோபமாக வெளியேற,
"ஓஹோ, அவ்வளவுக்கு ஆயிடுத்தா?  கண்ணாலேயே எங்க அண்ணாவுக்குக் கட்டளையெல்லாம் போடறியோ?  நீ எப்படி அண்ணாவோட போய்க் குடித்தனம் நடத்தப் போறே? நானும் பார்க்கத்தானே போறேன்." என்றாள் லதா.

ராதா பதிலே பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த லதாவுக்கு அவள் புடைவை உடுத்தியிருந்த நேர்த்தியும், புடைவை அவளுக்குப் பாந்தமாக இருந்ததும், கண்களை உறுத்தியது.  பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக இருந்த லதா அப்படி ஒன்றும் அழகி இல்லை. ஆனால் ராதாவின் அழகு அவள் கண்களை உறுத்தியது.  முக்கியமாய் அவளிடம் இருந்த விதவிதமான புடைவைகள்.

Tuesday, June 26, 2012

மதுரை, மதுரை, மதுரை, மதுரை, மதுரை! பகுதி 2


Posted by Picasa ஆனைமலைப் படம், பேருந்தின் வேகத்தில் கிட்டே வரச்சே எடுக்க நினைச்சாலும்  நான் க்ளிக்கறதுக்குள்ளே தள்ளிப் போயிடுச்சு! :(

கல்யாணச் சத்திரத்துக்குச் சீக்கிரமாப் போகணும்னு வேறே இருந்தது. ஆகையால் தெற்கு கோபுரவாசலோடு கோயிலின் உள்ளே சென்றோம்.  செல்கையிலேயே சீட்டு எடுத்தாச்சு.  தர்ம தரிசனத்திற்கு மக்கள் நின்று கொண்டிருக்க, நாங்க கொலு மண்டபம் வழியாப் போய் அங்கே இருந்த வாசல் வழியா உள்ளே போனோம். உள்ளே போக வரிசை இருந்தது என்றாலும் சீக்கிரமா விட்டுட்டாங்க.  அர்த்த மண்டபம் போவோம்னு ஆசையா இருந்தா ம்ஹும், வெளியேவே நிறுத்திட்டாங்க. என்ன ஒரு சமாதானம்னா சீட்டு வாங்கிப் பார்க்கிறவங்களையும், தர்ம தரிசனத்திற்கு வரவங்களையும் இம்முறை பிரிச்சுத் தடுப்புப் போட்டிருந்தாங்க.  ஆகையால் மீனாக்ஷியை நன்றாக யாரும் ஜரிகண்டி சொல்லாமல், போ, போ, நகருனு விரட்டாமல் நின்று, நிதானமாய்ப்  பிறந்தகத்துக்கே வராமல் வெகுநாட்கள் புக்ககத்திலேயே இருந்த பெண்ணைப் பார்க்கும் அம்மாவைப் போல் பார்த்துக் கொண்டேன்.  அலங்காரம் ரொம்ப சிம்பிள் அன்னிக்கு. :)) பின்னர் வெளியே வந்து பிராகாரம் சுற்றிக் கொண்டு போகலாம்னு போனால் சுத்த முடியாது, அப்படியே போங்கனு சொல்லிட்டாங்க.  சரினு திரும்பி வந்தால் மறுபடியும் சந்நிதிக்கு நேரே வந்தோம்.  மீண்டும் சில நிமிடங்கள் தரிசனம். அப்புறமா வெளியே வந்து குறுக்கே போய், ஆஞ்சநேயரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, உள்ளே போனோம்.

இங்கேயும் தர்ம தரிசனத்துக்கு நிறையக் கூட்டமாக இருந்தனர்.  நாங்க அர்த்தமண்டபம் போய் சுந்தரேசரைப் பார்த்து மனோன்மணியைக் காட்டாமலேயே வைச்சிருக்கீங்களே?  கும்பாபிஷேஹத்து சமயத்திலே மட்டுமே வெளியே வராளேனு கேட்டுட்டு, வெளியே வந்தோம்.  அப்படியே நடந்து நியூ சினிமாப் பக்கம் போகலாம்னு போனா அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  நியூ சினிமா அங்கே இருக்கா, இல்லையானே தெரியலை.  எனக்குப்பிரசவம் நடந்த வளையல்காரத் தெரு அந்தப் பக்கம் தானே இருந்தது?  இப்போ எங்கே போச்சு?  நியூ சினிமாவுக்குப் போகும் முன்னே தெற்குச் சித்திரை வீதியில் இருந்த பழைய பேப்பர் புஸ்தகக் கடைகளை எல்லாம் வேறே பக்கம் திருப்பி இருக்காங்க போல.  அப்படியே நடந்து வந்தால், அட கிஷ்கிந்தா!

கிஷ்கிந்தா கடைசியில் ஒரு பெரிய மால் போலிருக்கு.  இது புதுசு எனக்கு.  2007-இல் கூடப் பார்க்கலை.  2011-இல் இது குறித்து யாரும் பேசலை.  இப்போத் தான் வந்திருக்கோ?  இதைத் தான் ஆட்டோக்காரர் கேட்டிருக்கார்.  அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் இந்த மூலையிலே கோபு ஐயங்கார் கடையைக் காணோமேனு தேட ஆரம்பிக்க, இங்கே இல்லை, மேலச்சித்திரையும், வடக்குச் சித்திரையும் சேரும் இடத்தில் அந்த மூலையில் அது இருக்குனு இங்கே இருந்தே காட்டிட்டு இரண்டு பேருமா காணாமல் போன இடங்களைப் பத்திப் பேசிக் கொண்டே வந்து ஆட்டோ பிடிக்கப் பார்த்தால், அம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, போயிட்டே இருக்க வேண்டி இருக்கு.  கிட்டத்தட்டத் தெற்காவணி மூலவீதியில் போய் முடியற இடத்தில் தான் ஆட்டோ பிடிக்க முடிஞ்சது.  ஆட்டோ பிடிச்சுக் கல்யாணச் சத்திரம் போற வழியிலே ராஜாபார்லியைத் தேடினேன்; கிடைக்கலை.  இப்போ இருக்கா இல்லையானு தெரியலை.  ராஜாபார்லியின் வெண்ணெய் பிஸ்கட் அப்போல்லாம் ரொம்பப் பிரபலம்,  எங்களுக்கெல்லாம் உடம்பு சரியில்லைன்னா அப்பா அங்கே இருந்து தான் பிரெட், பன் வாங்கிட்டு வருவார்.   மேலகோபுர வாசல் ஃபன்ட் ஆஃபீஸ் வாசல்லே இருந்தே வாசனை மூக்கைத் துளைக்கும்.  ஃபண்ட் ஆஃபீஸ் எதிரே இருந்த ஒரு சின்னச் சந்தில் (ஹிந்தி பிரசார சபா அங்கே தான் இருந்தது) ராஜாபார்லியின் பேக்கரி இருந்தது.   ஃபன்ட் ஆஃபீஸ் வாசல்லே முன்னெல்லாம் வெள்ளரிக்காய்க் கூறு கட்டி விப்பாங்க.  செக்காநூரணி வெள்ளரிக்காய். சின்னச் சின்னப் பிஞ்சுகள்.  ருசி நல்லா இருக்கும்.




Monday, June 25, 2012

யார் யார், யாரிவர் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ?







Posted by Picasaமாப்பிள்ளை அழைப்புக்கு வந்திருந்த ஆனையோடு யார் இது?? :))))))  இப்போதெல்லாம் ஜானவாசம்னா என்னனு பலருக்கும் தெரியாது.  ஆனால் மறைந்திருந்த அந்த வழக்கம் இப்போது சில கல்யாணங்களில் மீண்டும் வந்து கொண்டு இருக்கிறது. என்றாலும் அதில் வட இந்திய வழக்கப்படி ஆடுகின்றனர். ஒரு சில கல்யாணங்களில் "பல்லே" "பல்லே" கூடப் பஞ்சாபியர் ஆடுவது போல ஆடுகின்றனர்.  சில கல்யாணங்களில் "டான்டியா" பார்க்க முடிகிறது.  மெஹந்திவிழா எனக் கல்யாணத்துக்கு முதல்நாள் சில கல்யாணங்களில் வைக்கின்றனர்.   ஒரு பக்கம் ஹிந்தி வேண்டாம்; என்று சொன்னாலும்  வட இந்திய எதிர்ப்பைக் காட்டினாலும், இன்னொரு பக்கம் குஜராத்தி வழ்க்கப்படி புடைவை கட்டிக் கொண்டும், சல்வார், குர்த்தாக்களிலும், நேரு பைஜாமாவிலும் ஆண்களும், பெண்களும் உடை உடுப்பதும் நிற்கவில்லை.    அநேகமாய் இரு பக்கத்துப் பழக்கங்களும் இப்போதெல்லாம் உணவில், உடையில், கல்யாணங்களில் கலந்தே காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாது.


மதுரையிலே கல்யாணத்துக்குப் போயிருந்தப்போ மாப்பிள்ளை அழைப்புக் காத்திருந்த கார். வெளிச்சம் சரியாக இல்லாததால் கொஞ்சம் வேலை செய்தேன். பொதுவா எனக்கு இந்த ஃபோட்டோ ஷாப்பில் எடிட்டிங் ரொம்பச் செய்தால், வெட்டி ஒட்டினால் பிடிக்கிறதில்லை.  இயற்கைத் தன்மை போயிடும்னு ஒரு எண்ணம்.  ஆனால் இம்முறை வேறு வழியே இல்லை.  நம்ம நண்பர் இருட்டிலே மறைந்திருந்தார்.  அதே போல் காரும். பூக்கள் மட்டுமே தெரிந்தன.  ஆகவே கொஞ்சம் லைட்டிங்க் தேர்ந்தெடுத்துக் கொண்டு போட்டிருக்கேன்.

 















 கூகிள் சொல்லும் மாபெரும் பொய்! :P :P :P :P

Add blogs to follow in your Reading list

You are not currently following any blogs. Use the "Add" button to enter blogs you'd like to follow in your Reading List. Learn more

Friday, June 22, 2012

மதுரை, மதுரை, மதுரை, மதுரை!

மதுரைக்குச் சாலை வழி போய்ப் பல வருடங்கள் ஆகிவிட்டன.  திருச்சி தாண்டியதும் விராலிமலை வந்ததும் மயில்கள் கூட்டம் கூட்டமாய்க் காணப்பட்டது இப்போது அறவே இல்லை;  ஏற்கெனவே இது குறித்துப்பதிவர் வெங்கட் நாகராஜ் கூறினார். கட்டிடங்கள் நிறைய வந்துவிட்டன.  மதுரையில் நுழைகையில் யானைமலையைப் பார்த்ததும், நல்லவேளையா, இதைத் தொட்டால் அவங்களோட பணம், பதவி, அந்தஸ்து போயிடும்னு ஒரு கூற்று இருக்கிறதாலே இது பிழைச்சதுனு நினைச்சுக் கொண்டேன். மலையைப் படம் எடுக்க நினைச்சு முடியலை.  திரும்பி வரச்சே எடுத்தேன்.  ஆனால் சரியா வரலை; 

யானை மலையிலிருந்து மாட்டுத் தாவணி போனதும், எஸ்.எஸ். காலனி போக வேண்டி இப்போப் பெரியார் பேருந்து நிலையம்னு அழைக்கப்படும் சென்ட்ரல் பஸ் ஸ்டான்டுக்குப் போகப் பேருந்தில் ஏறினோம்.  கே.கே.நகர் முகமே மாறிவிட்டது.  ஷெனாய் நகரும்.  எர்ஸ்கின் ஆஸ்பத்திரி எனப்பட்ட ராஜாஜி மருத்துவமனைப் பகுதி கொஞ்சம் பழைய சூழ்நிலைகளைப் பாதுகாக்கிறது. கோரிப்பாளையம் பக்கம்  திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.  சும்மாவே நெரிசலா இருக்கும்.  இப்போக் கேட்கணுமா!  மேல் பாலத்தில் ஏறினதும் வைகையை, வறண்ட வைகையைப் பார்த்ததும் எப்போவும் போல் மனம் கனத்தது.  இங்கே திருச்சி, ஶ்ரீரங்கத்தில் காவிரி கொஞ்சமாவது கெட்டுப் போகாமல் தூய்மை ஓரளவு பாதுகாக்கப் படுகிறது.  இதே மாயவரம், கும்பகோணம் என்றால் காவிரி இல்லை சாக்கடை என அடித்துச் சொல்லலாம்.  ஆனால் மதுரையில் எனக்கு நினைவு தெரிஞ்சு ஆக்கிரமிப்புகளைத் தான் பார்க்கிறேன்.  இப்போ இன்னும் அதிகம் ஆகிக் குறுகிக் கூனிப் போய் வறண்ட முகத்தோடும், வறண்ட பார்வையோடும் எனக்கு இந்த கதிதான் விதி என்ற தலை எழுத்தோடும் வெட்கத்தோடும் காணப்பட்டாள் வைகை.  

சிம்மக்கல் பகுதியில் பழைய வீடுகள் எல்லாம் ஓரளவு மாறாமல் இருந்தாலும், எங்கு பார்த்தாலும் கடைகள்; கடைகள்; கடைகள்,  அத்தனை கடைகளில் மக்கள் ஏதோ வாங்கிக் கொண்டும் இருந்தனர்.  வடக்கு வெளி வீதியும் அப்படியே.  சேதுபதி பள்ளி நுழைவாயிலில் பாரதி சிலை இருக்குமிடம் அப்படியே காணப்பட்டாலும், புதியதொரு கட்டிடமும் வந்திருக்கிறது.  என்னவாயிருக்கும்?  போஸ்ட் ஆபீஸ் கட்டிடம் மாறவே இல்லை.  அப்படியே இருக்கிறது.  மற்றக் கட்டிடங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளது.  பெரியார் பஸ் ஸ்டான்டின் முகமே புதிதாக இருக்கிறது.  அன்று மாலை கோவில் செல்கையில் கிஷ்கிந்தாவில் இறக்கி விடவானு ஆட்டோக்காரர் கேட்டப்போ விழித்தேன்.  அவர் உடனே புரிந்து கொண்டிருக்கிறார்.  தெற்கு கோபுர வாசலில் இறக்கி விடறேனுட்டார்.  அங்கெல்லாம் பழையபடி கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது.  ஆனால் சொக்கப்ப நாயக்கன் தெருவில் இருந்து தெற்கு கோபுரம் செல்லும் நுழைவாயிலை அடைத்திருக்கின்றனர்.  வண்டிகள் அங்கேயே நின்று விடும். 

சித்திரை வீதிகளில் வண்டிகள் போகத் தடை.  கோயில் மதில் சுவர் சுற்றிப் பராமரிப்பு சுத்தமாக நன்றாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.  மெல்லிய ஜப்பான் புல்லை வளர்த்திருந்தனர்.  வெல்வெட் போல் லான் பச்சைப் பசேர் என. பூச்செடிகளும் வைத்திருந்தனர்.  எதிரே உள்ள கடைகள் எல்லாம் பெயர் மாற்றம் கண்டிருக்கின்றன.  தெற்கு கோபுர வாயில் ஆஞ்சநேயர் மட்டும் மாறவில்லை. கோயில் அப்படியே பழையபடியே காணப்பட்டது.

Thursday, June 21, 2012

தங்கையை நலம் விசாரிக்கச் சொன்ன அண்ணா!

அண்ணாக்காரரைப் பார்க்கிறது கஷ்டமா இருந்தாலும் எப்படியோ பார்த்துட முடியுது. 2007-இல் தங்கையைப் பார்க்கப்போயிட்டுப் பார்க்க முடியாம, ரூ.50/- டிக்கெட் அப்போவே. அது வாங்கியும் பார்க்க முடியாமல் கூட்டத்தில் மூச்சுத் திணற ஆரம்பிக்கவே வெளியே வரவே காவல்துறை பாதுகாப்பு தேவைப்பட்டது. :( அதுக்கப்புறமா வெறுத்துப் போய் அந்தப் பக்கமே தலை வச்சுக்கூடப்படுக்கலை.  சென்ற வருடம் செப்டம்பரில் ஒரு கல்யாணம் . தவிர்க்க முடியாத கல்யாணம். போனேன்.  ஆனால் தங்கைக்காரியைப் பார்க்கப் போகமுடியலை.  நம்ம ரங்க்ஸ் வந்திருந்தால் ஒருவேளை போயிருப்பேன்.  ஆனால் அவர் கல்யாணத்துக்கு என்னை மட்டும் அனுப்பிச்சு வைச்சுட்டுத் தப்பிச்சுட்டார்.  துணைக்கு ஆளில்லாமலும், தனியாய்ப் போய் வரும் அளவுக்கு உடல் நலமில்லாமையும் சேர்ந்து போகவே இல்லை. வந்ததும் ரங்க்ஸ் திட்டினார்.  அவ்வளவு தூரம் போயிட்டுப் பார்க்காமல் வந்துட்டியேனு. அவ கிட்டே எனக்குக் கோபம்; உன்னைப் பார்க்க வரலைனு சொல்லிட்டேன் போனதரமேனு சொல்லிட்டேன்.

இப்போ இங்கே ஶ்ரீரங்கம் வந்ததும் மறுபடி நேத்துத் திடீர்ப் பயணம்; போகலாமா, வேண்டாமானு ஒத்தையா, ரெட்டையா விளையாடிட்டு இருந்தோம்.  கடைசியில் போய்த் தான் பார்ப்போமே, ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம்னு முடிவு பண்ணினோம்.  அப்படியும் நேத்துக் காலம்பர வரைக்கும் கொஞ்சம் யோசனை தான். சமைச்சுச் சாப்பிட்டுவிட்டு ஒன்பதரை மணி போல வீட்டை விட்டுக் கிளம்பினோம். பத்து மணிக்குப் பேருந்தில் ஏறி இருந்திருப்போம்.  பனிரண்டரைக்கு மதுரையில் கல்யாணச்  சத்திரம் போயாச்சு.  அங்கே சாப்பாட்டுக் கடை முடியலை; சாப்பிடுன்னாங்க. வேண்டாம், காப்பி, டிபன் சாப்பிட்டுக்கறோம் 3 மணிக்கு.  அப்புறமா அண்ணாச்சி தங்கையைப் பார்த்துட்டு வானு சொல்லி இருக்கார்.  எப்போப் போனால் நிம்மதியாப் பார்க்கலாம்னு கேட்டோம்.  சாயரட்சை முடிஞ்சு போங்க; பார்க்கலாம்னு சொன்னாங்க.  சரினு டிபன், காப்பி முடிச்சு நாலரை மணி போல ஆட்டோ வைச்சுண்டு கிளம்பினோம்.

தெற்கு கோபுர வாசல்லே இறக்கி விட்டார் ஆட்டோக்காரர்.  அங்கிருந்து ஆடி வீதி சுத்தாமல் நேரே போயிடலாம்; அப்புறமாக் கூட்டம் வந்துடும்னு காவல்துறை ஆலோசனை வழங்க சரினு அங்கே உள்ளே இறங்கறச்சே வாசல்லேயே 100ரூ டிக்கெட் வாங்கிக்கோங்க, தங்கையை மட்டுமில்லாமல் அவள் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையையும் பார்த்துட்டு வரலாம்னு சொன்னாங்க.  அப்படியே செய்தோம்.  கொலு மண்டபத்தில் இருக்கும் வாசல் வழியாக உள்ளே விட்டாங்க.  அர்த்த மண்டபத்திலோ, அர்த்த மண்டப வாசல்லேயே உட்கார்த்தி வைக்கிறதை நிறுத்திட்டாங்க போல! ஆனாலும் பத்து நிமிஷம் யாருமே விரட்டாமல் திரும்பத்திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத்திரும்பப் பார்த்தோம்.  சண்டை போட்டேன்.   ஒரு காலத்தில்  சல்லிக்காசு கொடுக்காமல் உன்னை வந்து பார்த்திருக்கேன்.  எங்க வீட்டுப் பொண்ணு நீ.  இப்போ உன்னைப் பார்க்கக் காசு கொடுத்துக் கூடப் போனதரம் முடியலை.  இந்தத் தரம் நீ உங்க அண்ணா சொன்னதுக்காக எங்களுக்கு தரிசனம் கொடுத்திருக்கே போல. இப்படி எல்லாம் செய்யாதே.  எப்போவும் தரிசனம் கொடுக்கிறாப்போல் இந்த மானிடர்கள் மனதில் புகுந்து வேலை செய். விரைவில் உன்னைப் பார்க்கக் காசே இல்லைங்கற நிலைமை வரணும் னு வேண்டிக் கொண்டேன்.  வெளியே வரச்சே  இடப்பக்கமா வரணுமாம்;  அது தெரியாமச் சுத்திண்டு போகப் போனோம், பழைய வழக்கப் படி. அப்படிப் போங்கனு சொன்னதிலே மறுபடி ஒரு ஐந்து நிமிட தரிசனம்.  ராணியாச்சே! ராஜபோகமா இருக்கா.

அப்புறமா சுவாமி சந்நிதிக்கும் குறுக்கு வழியிலேயே போனோம். அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அந்தச் சிந்தூர ஆஞ்சநேயர் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரியவரா ஆயிட்டார்.  தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டு வந்தேன்.  சுவாமி சந்நிதியிலும் கூட்டம் தான். என்றாலும் அர்த்த மண்டபத்துக்குள்ளே போய்ப் பார்க்க முடிஞ்சது.  அடுத்தடுத்து தீப ஆராதனை எடுத்துட்டே இருந்தாங்க.  நின்னு நிதானமாப் பார்த்துட்டு வந்தோம்.

அப்பாடி , நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே மதுரைக்குப் போன திருப்தி பல வருடங்கள் கழிச்சு இம்முறைதான்.  எல்லாம் அண்ணா தயவு. மதுரை குறித்த மற்ற விபரங்கள் பின்னர்.


Monday, June 18, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால்! 4

ராதா கலங்கினாள். இப்படி ஒரு பிரச்னை அவள் எதிர்பார்க்காத ஒன்று. கணவன் சொன்னதற்கு நேர் மாறாக அன்றோ மாமியார் சுபாவம் இருக்கிறது.  அவருக்கு இதெல்லாம் தெரியுமா?  நாம் இப்போவே சொன்னால் தப்பாக அன்றோ போயிடும்! அம்மாவைப் பார்த்துக் கேட்டாள். "அப்புறமா என்ன ஆச்சு?"

"அப்புறம் என்ன? மயக்கத்தைத் தெளிவிச்சாங்க.  உன் மாமியார், " உடனே பிள்ளையைக் கூப்பிடுங்க; நான் உயிரோடு இருக்கமாட்டேன். காலை வரை எனக்குத் தாங்காதுனு சொல்லறாங்க.  ஆனால் உங்க மாமனாரின் அண்ணாவும், அவரின் அக்கா பிள்ளையுமா, என்ன நடந்தாலும் சரி, நல்ல வேளை பார்த்து இரண்டு பேரையும் சாந்தி முகூர்த்தத்துக்கு அனுப்பி இருக்கு. நாளைக்கு வம்சம் விளங்க வேண்டாமா? நடக்கிறது நடக்கட்டும்.  இப்போக் கூப்பிடக் கூடாதுனு திட்டவட்டமா மறுத்துட்டாங்க.  அப்புறமும் உன் மாமியாரும், நாத்தனார்களும் அழுதுட்டே இருந்தாங்க.  எங்களுக்கெல்லாம் பயம்மா இருக்குமா ராதா.  அப்பா சொல்றார், "ராதாவை இங்கே விட்டு வைக்க வேண்டாம்.  இந்தச் சூழ்நிலையில் அவ இருக்கிறதை விடவும், நான் கல்யாணமே ஆகலைனு நினைச்சுக்கறேன்; அழைச்சுண்டு போயிடலாம்னு சொல்றார்." அம்மா முடித்தாள்.

தலைகுனிந்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தாள் ராதா. மாமியாரின் பயம் என்ன வென்று அவளுக்குத் தெளிவாய்ப் புரிந்தது.  அந்த வீட்டின் ஒரே சம்பாதிக்கும் ஆண் அவள் கணவன் தான்.  ஆகவே தங்களுடைய பங்கு குறைந்துவிடுமோ எனப் பயம்.  அந்தப் பயத்தைப்போக்க முடியாதா?  முடியும்; என்னால் முடியும்.  இதற்காகக் கல்யாணம் ஆனமறு நாளே பிறந்த வீட்டில் போய் உட்கார்ந்தால்!  ம்ஹும் சரியாய் இருக்காது.  அவரிடம் என்ன காரணம் சொல்வது! இங்கேயே இருந்தால் ஒரு சமயம் இல்லைனா ஒரு சமயம் அவருக்குத் தெரிய வாய்ப்பு இருக்கு. அவராய்ப் புரிஞ்சுக்குவார். ஆகையால் நான் பிறந்த வீடு போகக் கூடாது.  இங்கேயே இருந்து தான் இதிலிருந்து மீண்டு வரும் வழியைத் தேடணும்.

நிமிர்ந்து பார்த்து அம்மாவைப் பார்த்து புன்னகைத்தாள் ராதா.  அம்மா மகளை விசித்திரமாய்ப் பார்த்தாள்.  எதுவுமே சொல்லாமல் தான் போய்க் குளித்துவிட்டு வருவதாய் சொல்லிவிட்டு ராதா குளிக்க ஆயத்தமானாள். "ராதா, ராதா," என அழைக்கும் குரல் கேட்க, ராதாவின் முகத்தில் வெட்கம் கவிந்தது.  இது அவர் குரல் இல்லையோ?  சட்டென வெளியே வந்து, எங்கே இருக்கிறார் எனப் பார்த்தாள்.   அவர்களுக்கு என ஒழித்து விடப் பட்டிருந்த அறையிலிருந்து சப்தம் கேட்கவே, உடனே அங்கே சென்றாள்.  அவளைப் பார்த்த சந்துரு முக மலர்ச்சியுடன், "ராதா, எங்கே போனே? அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடித்துவிட்டது.  நான் குளிக்கப் போறேன். என்னோட சோப்புப் பெட்டியைக் காணோம். கொஞ்சம் பார்த்து எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு வா." என்று கூறிவிட்டுத் தான் துண்டை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

சோப்புப் பெட்டியைத் தேடிய ராதா, அதைக் காணாமல் நேற்றுப் புதிதாய்க் கல்யாணத்தில்  வைத்திருந்ததில் இருந்து எடுத்துக் கொண்டு கிணற்றடியை நோக்கிச் சென்றாள்.  அங்கே அவள் கடைசி நாத்தனார், சோப்புப் பெட்டியைக் கணவனிடம் கொடுப்பதைப் பார்த்தாள்.  ஓ, இவள் எடுத்துக் கொண்டு போயிருக்கிறாளா, அதான் சோப்புப் பெட்டி இடத்தில் இல்லை என நினைத்த வண்ணம் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்து, "என்ன, அண்ணாவைக் காக்கா பிடிக்கிறாயா?" என விளையாட்டாய்க் கேட்டாள்.  ஒரு நிமிஷம் அவளை உறுத்துப் பார்த்த லதா," இது எங்க அண்ணா.  நான் ஏன் காக்காய் பிடிக்க வேண்டும்? நீ தான் இந்த வீட்டுக்குப் புதுசு.  உனக்குத் தான் அண்ணாவைக் காக்காய் பிடிக்க வேண்டும்.  எங்க அண்ணாவுக்கு என்ன வேண்டும் எனக் கேட்காமலேயே செய்ய எங்களுக்குத் தெரியும்.  நீ இன்னிக்கு வந்துட்டு என்னை அதிகாரம் பண்ண நினைக்காதே!" என்றாள் படபடவென.

ராதாவின் முகம் கறுத்தது.  சந்துருவும் திகைப்போடு நின்று கொண்டிருந்தான்.  தன் தங்கை சொல்வது சரியில்லை எனத் தெரிந்தும் அதை அவளிடம் சொல்ல முடியாமல் திணறினான்.  ராதா வந்த அன்னிக்கே தங்கையை நாம் கடிந்து கொண்டால் இன்னமும் அந்தப் பழியும் ராதாவின் தலையில் விடியுமே என யோசித்தான். அவளை வெற்றிப் பார்வை பார்த்த லதா, மெல்ல அவளிடம், "என்ன ரயிலில் அண்ணாவை உன் பக்கம் கூப்பிட முடிந்ததே உன்னாலே, இப்போ முயன்று பாரேன்!" என்றாள் கிண்டலாக.

ராதா மெல்ல உதட்டைக்கடித்துக் கொண்டாள்.  நேற்று அவர்கள் அனைவரும் ரயிலில் வருகையில் ராதா அருகே லதா அமர்ந்திருந்தாள்.  எதிரே சந்துரு உட்கார்ந்திருந்தான்.  அங்கிருந்து ராதாவிடம் பேச்சுக் கொடுக்க முயலும்போதெல்லாம் லதா குறுக்கிட்டு ஏதேனும் பேசினாள்.  கடைசியில் சந்துரு அருகே அமர்ந்திருந்த ஒருத்தர் இறங்குவதற்கு எழுந்திருக்க, சந்துரு, அவளை ஜாடை காட்டித் தன்னருகே அமரக் கூப்பிட்டான். அதற்குள்ளாக லதா வேகமாய் எழுந்து அண்ணன் அருகே அமர்ந்து விட்டாள்.  அந்தப் பெட்டியிலேயே அனைவரும் திகைத்தனர்.  லதாவிடம், இதமாகப் புதுக்கல்யாண ஜோடி, அம்மா, அவங்களுக்கு எவ்வளவோ பேச இருக்கும்; நீ தான் விட்டுக் கொடுத்துப் போகணும், நாளைக்கு நீயும் இப்படி ஒருத்தனைக் கட்டிக் கொண்டு போகப் போறவ தானே! என்றெல்லாம் சொல்லிப் பார்த்தனர்.  ஆனால் லதாவோ, "என் அண்ணா என்னைத் தான் கூப்பிட்டார்." என்று சொல்லிவிட்டாள். சந்துருவோ சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டுத் தானே எழுந்து ராதாவின் அருகே அமர்ந்தான்.

அப்போதே ராதாவுக்குச் சுருக்கென்றிருந்தது.  சந்துருவிடம் அங்கேயே போய் உட்காரச் சொன்னாள். ஆனால் சந்துருவோ, நான் தானே வந்தேன்; நீ ஏன் பயப்படறே! என் மனைவி கிட்டே நான் உட்காருவேன்." என்று சொல்லிவிட்டான்.  இதை லதா அவள் அம்மாவிடம் மாற்றிச் சொல்லிவிட்டாள். ராதா தான் சந்துருவைக் கூப்பிட்டதாக.  அவள் மாமியாரும் அதை உண்மை என நம்பிக் காலையில் வந்ததுமே அவளிடம், ரயிலில் சந்துரு லதாவைப் பக்கத்தில் உட்காரக் கூப்பிட்டுட்டான் என்பதற்காக அவனிடம் கோவித்துக் கொண்டாயாமே? அப்புறம் என் பக்கத்திலே உட்கார்ந்தால் தான் ஆச்சு எனப் பிடிவாதம் வேறே பிடிச்சிருக்கே? உனக்கென்ன வெட்கமே இல்லையா? வயசுப் பொண்ணு எதிரே என்னதான் கட்டினவனா இருந்தாலும் இப்படியா?" என்று கேட்டிருந்தாள். எல்லாம் ராதாவின் கண்களில் படம் போல் ஓடியது.  சந்துருவிடம் அதை எல்லாம் அவள் சொல்லவில்லை. பார்த்துக்கலாம் என விட்டு விட்டாள்.  இப்போ இந்தப் பெண் அதைச் சொல்லிக் காட்டுகிறாளே!

கடவுளே, சந்துரு பம்பாய் போகையில் அவளையும் அழைத்துச் சென்றால் தேவலை. என்ன நடக்கப் போகிறதோ!  ராதாவுக்கு உண்மையிலேயே கவலை. தான் எடுத்த முடிவு சரிதானா என்ற சந்தேகமும் வந்தது. அப்போது வாசலில் "தந்தி" என்ற குரல் கேட்கவே, கல்யாண வாழ்த்தாக இருக்கும் என நினைத்தனர் எல்லோருமே.

Saturday, June 16, 2012

கோயில்களை எடுத்து நடத்துவதால் என்ன பயன்! தொடர்ச்சி


கோயில் என்பது காதலர்கள் கூடும் இடம் அல்ல.  மக்கள் கூடி நின்று வம்பு பேசும் மடமும் அல்ல. தற்காலங்களில் கோயில் அப்படித் தான் ஆகி விட்டது.  வணிக வளாகங்களாக மாறி உள்ளன.  அங்கே மனதை மயக்கும் காதல் விளையாட்டுகளுடன் கூடிய சிற்ப விநோதங்கள் இருக்கின்றனவே எனக் கேட்கலாம். அவை நம் மனதை இன்னமும் வலுவாக்க வேண்டியே வைக்கப்பட்டுள்ளன.  இவற்றையும் வென்று நாம் இறைவனிடம் ஐக்கியம் ஆக வேண்டும் என்பதற்காகவே.  அதோடு இல்லறமின்றி நல்லறம் இல்லை என்பதனாலும் கூட.  இல்லறத்தை நல்லறமாக முடித்துவிட்டுக் கடைசியில் இறைவனடி சேர வேண்டும் என்பதாலும்.  அங்கேயும் காமத்தை வெல்ல வேண்டும். இங்கே காமம் என்பது வெறும் குடும்ப உறவு மட்டுமல்ல.  எல்லாவிதமான ஆசைகளும் சேர்ந்ததே காமம்.  பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என அனைத்துமே காமத்துக்குள் அடங்கும். இன்றைய அவசர உலகில் இந்த ஆசையை வெல்வது கடினம்.  கோயில்களை வடிகால்களாக மாற்றிக் கொண்டு விட்டனர்.  அங்கே தொலைக்காட்சித் தொடர்களை எடுப்பதனாலும், அவங்க தப்புத் தப்பாய் அங்கப் பிரதக்ஷிணம் செய்வதிலும், பிரார்த்தனைகள், வேண்டுகோள்கள் என மூட நம்பிக்கைகளைப் பரப்புவதிலும் ஆர்வம் காட்டுவதால் இன்று கோயில்கள் சந்தை மடங்களாகவும் காதலர் தனித்திருக்கும் இடங்களாகவும் மாறி விட்டன.  கோயில்களின் புனிதம் கெட்டுக் கொண்டிருக்கிறது. அதை அழிப்பவர்கள் மனிதர்களே. மனிதர்களைக் குறை சொல்லாமல் அங்கே வீற்றிருக்கும் தெய்வத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்?  ஆனால் ஆதியில் கோயில்கள் அப்படி இல்லை.  ஒவ்வொரு ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் தங்கள் சக்தியைப் பிரயோகித்து விக்ரஹங்களுக்கு சாந்நித்தியம் உண்டாக்கி அதன் மூலம் வெகு ஜனங்களுக்கு நன்மை செய்ய விரும்பினார்கள்.  எல்லாருக்குமே நான் பிரம்மம் என்பது புரிந்து விடாது.  அனைத்தும் பிரம்மம் என்பதும் புரியாது. அப்படிப் புரிந்து கொண்ட மனிதர்கள் இருந்தால் சிருஷ்டிக்கும், மரணத்துக்கும், காதலுக்கும், காமத்துக்கும், கோபத்துக்கும், தாபத்துக்கும் வேலையே இல்லையே! 

ஆகவே நம்முடைய பஞ்ச இந்திரியங்கள் மட்டுமன்றி, பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றை எல்லாம் ஒழுங்கு செய்யும் ஒரு மாபெரும் சக்தி இருக்கத் தான் செய்கிறது.  எப்படிச் சங்கீதத்தைக் காதால் மட்டும் கேட்க முடியுமோ, உணவின் சுவையை நாக்கு மட்டுமே உணர முடியுமோ, கண்களால் மட்டுமே பார்க்க முடியுமோ, மூக்கால் மட்டுமே நுகர முடியுமோ அது போலத் தான் கடவுளும்.  ஒரு இந்திரியத்தால் கண்டு பிடிக்க முடியாத ஒன்றை இன்னொரு இந்திரியம் கண்டு பிடிக்கிறது என்பதற்காக நாம் அதை இல்லை என்றா சொல்கிறோம்.  சங்கீதமே கிடையாது என்பவர் உண்டா?  நாவால் உணவை ருசிக்க இயலாது என்பவர் உண்டா? மூக்கால் நுகர்ந்தால் அது கணக்கில் வராது என்பார்களா! இல்லையல்லவா?  இவை இப்படித் தான் இருக்க வேண்டும், மாறுதலாக இருக்க முடியாது எனச் செய்தவர் யார்? நம்மால் சொல்ல இயலுமா?  மின் விளக்குகள் மின்சாரத்தின் மூலமே எரிகின்றன.  ஆனால் அந்த மின்சாரத்தை நம்மால் பார்க்க முடியுமா?  அது போலத் தான் இறைவனும்.

காண்போருக்குக் கேட்ட உருவில் காட்சி கொடுப்பான் அவன்.  நான் குழந்தையாக இருந்தப்போ என் அப்பா, அம்மாவுக்கு மகள், என் தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும் பேத்தி, என் அண்ணாவுக்குத் தங்கை, என் தம்பிக்கு அக்கா. என் சிநேகிதிகளுக்கு சிநேகிதி, ஆசிரியருக்கு மாணவி. கல்யாணம் ஆனதும் என் கணவருக்கு மனைவி, மாமனார், மாமியாருக்கு மருமகள், மைத்துனர், நாத்தனர்களுக்கு அண்ணி, என் குழந்தைகளுக்கு அம்மா.  நான் ஒருத்தியே இத்தனை அவதாரம் எடுத்திருக்கேன்.  கடவுள் எடுக்க மாட்டாரா?  நிச்சயமாய் எடுப்பார். ஞானியாக இருப்பவர்களுக்கு அனைத்தும் பிரம்மமயமாய்த் தெரியும்.  எது மாயை எனப் புரியும். சாமானிய மனிதர்களுக்கு அவை புரியுமா?  வேறொண்ணும் வேண்டாம். நாம சாப்பிடும் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  மஞ்சள் பழம் எனும் பூவன் பழம், பேயன் பழம், மொந்தன் பழம், பச்சை நாடன், நேந்திரம்பழம், ரஸ்தாளி, பெங்களூரா எனப்படும் சின்ன வாழைப்பழம், மலைப்பழம், சிறுமலைப்பழம், கற்பூர வாழை, செவ்வாழை என எத்தனை வகை.  எல்லாமும் வாழை மரத்திலிருந்து தோன்றியவை தானே! ஆனால் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு மருத்துவ குணம் இருப்பதாகவும் சொல்கிறார்கள் அல்லவா?  அது போலத் தான் இறைவனும். அடியவர்களின் குணநலன்களுக்கு ஏற்ப அவர்களுக்குப் பிடித்த வடிவை எடுத்துக் கொள்கிறான்.

அவ்வப்போது தொடரும்.

Friday, June 15, 2012

மின்சாரமாம் மின்சாரம்!

மின்சாரம் ஆறு மணி நேரமே இருப்பதால் தட்டச்சினாலும் போட முடியலை.  லாப்டாப் சார்ஜுக்கே மின்சாரம் இருக்கிறதில்லை. :((( சாயந்திரம் ஏழு மணியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போயிடுது.  காலை ஐந்து மணிக்குப் போனால் ஆறிலிருந்து ஒன்பது, அப்புறமாப் போனால் மதியம் 12இல் இருந்து மூன்று மணி வரை தான் தொடர்ச்சியாக மின்சாரம். மொத்தம் ஆறே மணி நேரம் கிடைக்கிறது. அவசரப் பதிவுகளோ, யார் பதிவுக்கும் வரதோ ரொம்பக் கஷ்டமா இருக்கு.  கிடைச்ச நேரத்திலே இன்னிக்கு எங்கள் ப்ளாகுக்குச் செலவாயிடுச்சு. :))) ஆகவே நாளைக்கு விடியுதானு பார்க்கலாம். 

Wednesday, June 13, 2012

இந்தக் கதையை எப்படி முடிக்கிறது? தொடர்ச்சி! :D

முதல்லேயே டிஸ்கி போட்டுக்கறேன். இது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவது அல்ல. ஆகவே யாரும் மனசு சங்கடப் பட்டுக்க வேண்டாம்.  நான் கேள்விப் பட்ட ஒரு விஷயத்தைக் கொஞ்சம் போல் மாற்றி என் இஷ்டத்துக்குக் கற்பனை செய்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இப்போ முதல் அத்தியாயத்தின் தொடர்ச்சி: இதைப் படித்தால் கொஞ்சம் வசதியாய் இருக்கும். :))))))
*************************************************************************************
வனிதா என்ன சொன்னாலும் ரம்யாவுக்கு அதில் சம்மதம் இல்லை. "எப்படியேனும் உண்மை தெரிஞ்சுக்கணும்.  அம்மா யார்னு தெரியணும்.  அவங்க தான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கணும். பெத்த அம்மா உயிரோடு இருக்கிறச்சே வளர்த்தவ ஏன் கல்யாணத்தை நடத்தணும்? கூடாது; இதுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன். பாட்டியிடமே கேட்டு விட்டால்? அதென்னமோ தெரியலை; பாட்டி அம்மாவைக் கண்டால் பயப்படுகிறாளோனு தோணுது.  இங்கே வந்தாலே அம்மாவை வலிய உட்கார்த்தி வைச்சுப் பேச்சுக் கொடுப்பாள்.  அதோடு சித்தியோடு அம்மாவை ஒப்பிட்டு, அம்மாதான் உசத்தினு வேறே சொல்லிப்பா.  எல்லாம் என்னைச் சமாதானம் செய்யத் தான். எனக்குத் தெரியாதா! அவ்வளவு முட்டாளா நான்? "

"இதே பாட்டி ஒரு காலத்தில் அம்மா என்னைச் சரியா வளர்க்கலைனு எவ்வளவு குத்தம் சொல்லி இருக்கா!  சாப்பாடு கூடப் போடுவியா மாட்டியானு எல்லாம் கேட்பாளே!  நானும் பாட்டி பக்கம் தான் இருந்திருக்கேன்.  அம்மா ஒண்ணுமே தரதில்லைனு சொல்லிட்டு பாட்டி வாங்கித் தரதையும் சாப்பிட்டுருக்கேன்.  அப்புறமா வாந்தி வந்து அவஸ்தைப் படுவேன். ஸ்கூல்லேயும் அம்மாவைப் பத்திக் குத்தம் சொல்லி இருக்கேன்.  பாட்டியும் அதுக்கு ஒத்து ஊதி இருக்காளே. இப்போ நான் உண்மைக் காரணத்தைச் சொல்லிக் கேட்டால் சொல்ல மாட்டாளா? நான் படிக்கிற காலத்தில் என்னை எவ்வளவு பாடு படுத்தி இருக்கா இந்த அம்மாங்கறவ!  நாளைக்கு யூனிட் டெஸ்ட்டுன்னு எனக்கு நினைவு இருக்கோ இல்லையோ அவ நினைவு வைச்சுண்டு என்னைக் காலங்கார்த்தாலே எழுப்பிப் படிக்கச் சொல்லி......."

ரம்யாவுக்குக் காலைத் தூக்கம் என்றால் அலாதி பிரியம்.  ஏழரை மணிக்குப் பள்ளிக்குக் கிளம்பணும்னா ஏழுமணி வரை தூங்குவாள்.  யாரும் எழுப்பக் கூடாது. ஆனால் அம்மாவோ ஆறரை மணியிலே இருந்து எழுப்பிண்டே இருப்பா.  ரம்யா கத்தக் கத்தக் கேட்காமல் எழுப்பிக் கூட்டிப் போய்ப் பல்லைத் தேய்க்க வைச்சுக் குளிக்க வைச்சுச் சாப்பாடைக் கையிலே போட்டு, தலை பின்னிவிட்டுப் பள்ளிக்குத் தயாராக்குவாள். காலைத் தூக்கம் போன கோபத்தில் ரம்யா எத்தனையோ நாள் காலை சாப்பிடவே மாட்டாள். கோபத்தோடு ஸ்கூலுக்குப் போவாள். இப்போதும் காலை ஏழரைக்குக் குறைந்து ரம்யா எழுந்திருக்கிறதில்லை.  எட்டரைமணிக்கு அலுவலகம்.  ஏழரைக்கு எழுந்து தயாராவதற்குள்ளாக அவள் அம்மாவுக்கு இடுப்பு ஒடிந்து தான் போகிறது.  ஏற்கெனவேயே அம்மாவைப் பாடாய்ப் படுத்தின ரம்யாவுக்கு இவள் தன் அம்மாஇல்லைனு தெரிந்ததும், உள்ளூற ஒரு திருப்தியே மேலோங்கியது.  ஆனால் அப்பா முகத்தில் தான் சோகம் தெரியும்.  ரம்யாவைப் பார்க்கும் பார்வையில் நீ செய்வது சரியில்லைனு சொல்வது தெரியும். ஹூம், அவர் பெண்டாட்டியை அவர் விட்டுக் கொடுப்பாரா?

கலவையான நினைவுகளோடு வீட்டை அடைந்தாள் ரம்யா.  வாசலில் வண்டியை வைத்தாள்.  வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது அம்மாவின் தூண்டுதலில் தான். அதென்னமோ தெரியலை; எல்லாத்தையும் கத்துக்கோனு ஒரு அம்மா. கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டா!  ஓய்வு நேரங்களில் ரம்யாவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதும், பேசிக் கொண்டிருப்பதும் மிகவும் பிடிக்கும் என்றால் அம்மா அப்போப் பார்த்து இதைக் கத்துக்கோ, அதைக் கத்துக்கோனு நீட்டி முழக்குவாள்.  ஆனால்........ என்ன இருந்தாலும் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது பேருந்தில் கூட்டத்தில் அடிபடாமல் போக வசதிதான்.  ஆனால் தனக்கு இது வசதி என்பதை அம்மா அறியக் காட்டிக் கொள்ளக் கூடாது.  ரம்யா யோசனையுடன் உள்ளே போனாள்.  அப்பா மட்டும் ஊஞ்சலில் உட்கார்ந்து இருந்தார். அம்மா இல்லை.  அவள் அண்ணா வீட்டிற்குப் போயிருக்கிறாளாம்.  நல்லதாப்போச்சு. அப்பாவிடமே கேட்டுவிடலாம்.

"உள்ளே உனக்கு டிபன், காப்பி வைத்திருக்கிறாள் அம்மா. அதைச் சாப்பிட்டு விட்டு மாடிக்கு வா ரம்யா, உன்னிடம் நான் பேச வேண்டும்." அப்பா கூறியதைக் கேட்ட ரம்யாவுக்குக்கொஞ்சம் கலக்கமாய் இருந்தாலும் என்னவாய் இருந்தாலும் சமாளிக்கலாம் எனத் தோன்றியது.  "எனக்கு டிபனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். என்னனு நீங்க சொல்லுங்க முதல்லே." என்றாள் பிடிவாதமாக.  அவளையே சிறிது நேரம் பார்த்த அப்பா ஒன்றும் பேசாமல் தன் அறைக்குச் சென்றவர் நாலைந்து டயரிகளோடு வந்தார். 

"இந்தா, நேரம் இருந்தால் இவற்றைப் படி. உனக்குத் தெரிய வேண்டியது எல்லாமும் இதில் இருக்கு!" என்றபடி மறு வார்த்தை பேசாமல் உள்ளே போய்விட்டார் அப்பா. ரம்யா தன் அறைக்குச் சென்றாள். டயரிகள் வருஷ வாரியாக இருந்தன. அவற்றில் ஒன்றில் அப்பா, அம்மா கல்யாணப்பத்திரிகை ஒட்டி இருக்கவே அதை எடுத்து முதலில் படிக்க ஆரம்பித்தாள்.  பாட்டி அம்மா கல்யாணத்திற்கு மறுநாள் முதலிரவில் மயக்கம் போட்டு விழுந்தது வரை படித்தாள் ரம்யா.  விபரம் தெரிந்த இளம்பெண்ணாக இருந்ததினால் இந்த விஷயம் அவள் மனதைச் சங்கடப் படுத்தியது.  பாட்டி இப்படியா நடந்து கொண்டாள்?

Monday, June 11, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 3

சந்துரு வருவது தெரிந்ததும், அந்த இடத்தின் சூழ்நிலையே மாறியது.  மாமியார் தன்பெண்கள், பிள்ளைகளைப் பார்த்துக் கண் ஜாடை காட்ட, அவர்கள் ஏதோ வேலையாக இருப்பது போல் காட்டிக் கொண்டு அமர, கடைசி நாத்தனாரை அழைத்து மாமியார், "மன்னியை அழைச்சுண்டு போய் வாசலிலே தண்ணீர் தெளிச்சுக் கோலம் போடச் சொல்லு. கிட்ட இருந்து எல்லாம் காட்டு. இரு மன்னிக்குக் காப்பி கலந்து தரேன்.  குடிச்சுட்டுப் போகட்டும்." என உருகினாள். கேட்டுக் கொண்டே வந்த சந்துருவின் முகம் மலர்ந்திருந்தது. அப்படியே அம்மா பக்கத்தில் அமர, அம்மா தனியாக எடுத்து வைத்திருந்த முதல் டிகாக்ஷனில் சந்துருவுக்குக் காப்பியைக் கலந்து தானே ஆற்றிக் கொடுத்தாள்.

தம்பி, தங்கைகளைப் பார்த்த சந்துரு, "இவங்க இங்கே என்ன செய்யறாங்க?" என்று கேட்கவும், அடுத்த நிமிடம் அந்த இடம் காலியானது. அம்மா, மெதுவாக,
"ஏன் சந்துரு, ராத்திரி அவ எங்களைப் பத்தி எல்லாம் ஏதாவது கேட்டாளா? என்ன சொன்னா?" என மெல்லிய குரலில் கேட்க, "உங்களை எல்லாம் பத்திக் கேட்க அதுக்குள்ளே என்ன இருக்கு அம்மா! அதெல்லாம் ஒண்ணும் பேசல்லை.  அவளுக்கு வேலை கிடைச்சிருக்கு இல்லையா? அதை மாத்திக்கிறதைப் பத்திப் பேசினோம். இந்த வேலை வேண்டாம்னு நான் சொல்லிட்டேன்." என்றான்.

தூக்கி வாரிப் போட்டது அகிலாண்டத்துக்கு.  என்ன இவன் இப்படிச் சொல்கிறானே? அப்படின்னா அவளையும் பம்பாய்க்கு அழைத்துப்  போகப் போகிறானா? அவள் வேலையைச் சாக்கு வைச்சு இங்கேயே நிறுத்திக்கலாம், ஒரு வருஷம், இரண்டு வருஷம் போனால் இந்த இரண்டாவது பெண்ணைக் கரையேத்தலாம்.  அப்புறமா நடு நடுவே போய் இருந்துட்டு வரமாதிரி அனுப்பி வைக்கணும். அப்புறம் நம்ம பேரிலேயே குத்தம் சொல்லுவாங்க..  சின்னவங்க ரெண்டு பேருடைய படிப்பும் முடியணும்.  அதுக்குள்ளே, குழந்தை, குட்டினுஆயிட்டா, என்ன பண்ணறது! எப்படியானும் தடுத்தே ஆகணும். அவள் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.  அங்கே............

சொன்ன வேலைகளை முடித்துவிட்டுக் குளிக்கப் போனாள் ராதா.  அப்போது அம்மா அவளோடு சேர்ந்து குளியலறைக்குள் நுழைந்தாள்.  மெல்ல அவளிடம், "ராத்திரி என்ன நடந்தது தெரியுமா?  நீங்க இரண்டு பேரும் சாந்திக்கல்யாண அறைக்குள்ளே நுழைஞ்சாச்சு.  நாங்க எல்லாம் அப்புறமாச் சாப்பிட உட்கார்ந்தோம். யாரோ ஒரு மாமி, உங்க புக்ககத்து உறவு தான்.. உங்க மாமியார்ட்ட, மாட்டுப் பெண் வந்தாச்சு;  அடுத்த வருஷம் ஒரு பேரக்குழந்தையைப் பெத்துக் கொடுக்கச் சொல்லுங்கோனு சொன்னா.  அவ்வளவு தான். உடனே உங்க மாமியார் ஓனு அழ ஆரம்பிச்சா."
 

"எல்லாருமாச் சேர்ந்து என் பிள்ளையை என் கிட்டே இருந்து பிரிச்சுட்டீங்களே,குஞ்சும், குளுவானுமாக் குழந்தைகளை வைச்சுண்டு இருக்கேனே.  மூத்த பெண்ணை எப்படியோக் கரையேத்திட்டேன். இன்னும் இரண்டு பெண்கள் இருக்காளே.  அதுக்குள்ளே அவனை என் கிட்டே இருந்து பிரிச்சுட்டீங்களே.  நான் என்ன  பண்ணுவேன்?  நான் இருக்க மாட்டேன். உயிரோடயே இருக்க மாட்டேன். போறேன். செத்துத் தொலைஞ்சு போறேன்.  என் பிள்ளையைக் கூப்பிடுங்க.  அவனைப் பார்த்து நாலு வார்த்தை பேசிட்டு அவன் கிட்டே சத்தியம் வாங்கிண்டு செத்துப் போறேன்." அப்படினு கத்தினாங்க. அப்புறமா மயக்கம் வந்தாப்போல் கீழே விழுந்துட்டாங்க.  இலை மேலேயே விழுந்துட்டாங்க." என்றாள்.

ராதாவின் அடி வயிறு கலங்கியது.

Sunday, June 10, 2012

ஸ்ரீசிருங்கேரி ஸ்வாமிகள் ஸ்ரீரங்கம் வருகை!



ஸ்வாமிகள் வரதுக்காக, அம்மா மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல புஷ்ப ரதம், யானை, குதிரைகள் அலங்கரிக்கப்பட்டுத் தயாராக இருந்தன. இங்கே நாளை சிருங்கேரி மடத்தின் சார்பில் ஒரு மருத்துவசாலையும், பள்ளியும் திறந்து வைக்கிறார் ஸ்வாமிகள்.  அதுக்காக வந்திருக்கிறார்.  கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பின்னர் வருவதால் நிறையக் கூட்டம். நெரிசல் தாங்கலை.  போக்குவரத்தையும் நிறுத்தாமையினால் கூட்டத்தைச்  சமாளிக்க முடியலை.
















யானை, குதிரைகள் மட்டும் ஊர்வலத்தில் அணிவகுத்துச் சென்றன.  அதிலே ஒரு யானையார் சும்மாவே இருக்கலை. நெளிந்து கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார்.  இன்னொருத்தர் கையிலே காமிராவோட போனால் அதைக் கொடுத்துடுனு பிடிவாதம். துதிக்கையை நீட்டிக் கையிலே இருக்கிறதைப் பிடுங்கப் பார்க்கிறார்.  குதிரைகள் மட்டும் சமத்தாய் போஸ் கொடுத்தன. குதிரைகளும் நம்மாளு யானையாரும் என் கை வண்ணம்.  ரதத்தின் அருகே கூட்டம் இருந்ததால் ரங்க்ஸ் போய் எடுத்தார்.  கடைசியில் ஸ்வாமிகள் ரதத்தில் ஏற மாட்டேன்னு போயிட்டார்.  காரிலேயே போயிருக்கார். போலீஸெல்லாம் சேர்ந்து மனித வளையம் போட்டுப் பாதுகாக்க ஸ்வாமிகள் ஊர்வலம் சென்றது. யாருக்கும் பார்க்க முடியலை.  வருத்தம். பூரண கும்பம், முத்து ஆரத்தி என வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

கூட்ட நெரிசலில் எல்லாரும் ஊர்வலத்தோட சிருங்கேரி மடம் போக நாங்க வீட்டுக்குத் திரும்பிட்டோம்.  ஏற்பாடு செய்தவர்கள் மக்கள் பார்க்கும்படியாக உயர்ந்ததொரு ஆசனத்தில் அமர்ந்து ஊர்வலம் வரவேண்டும் என சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டிருந்திருக்கலாமோ!  அல்லது அவர் தான் மாட்டேன்னு சொன்னாரா? தெரியலை.  நாளை பேப்பரைப் பார்த்தால் கொஞ்சம் புரியலாம்.





Posted by Picasa

Saturday, June 09, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 2

கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது.  ராதாவுக்கு விழிப்பு வந்துவிட்டது.  ஜன்னல் வழியாக வெளியே விடியும் நேரம் என்பதைப் புரிந்து கொண்டாள்.  அதான் எழுப்பறாங்க போல என நினைத்த வண்ணம் எழுந்தாள். ஒரு நிமிஷம் நிதானித்துக் கொண்டு தான் மணமாகிக் கணவன் வீடு வந்திருப்பதையும், நேற்று இரவு அவளுடைய முதல் இரவு என்பதையும், அருகே இருக்கும் கணவனையும் பார்த்ததும் அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது.  மெல்ல சப்தம் போடாமல் எழுந்து கதவைத் திறந்தாள்.  வெளியே அம்மா நின்று கொண்டிருந்தாள். இரு பெண்கள் கையில் ஆரத்தியுடன் காத்திருந்தனர். அம்மா முகத்தில் ஏதோ வாட்டம்! என்னவா இருக்கும்?

வெளியே வந்த ராதாவுக்குஆரத்தி எடுத்துவிட்டு அந்தப் பெண்கள் நகர்ந்ததும்,அம்மா அவளிடம், கிசுகிசுவான மெல்லிய குரலில்,"முதலில் உன் மாமியாரைப் போய்ப் பார்த்து நமஸ்காரம் பண்ணு.  அவங்க என்ன சொன்னாலும் காதிலேயும் போட்டுக்காதே, மனசிலேயும் வைச்சுக்காதே.  அடுத்து என்ன செய்யணும் என்பதை மட்டும் கேட்டுக்கோ." என்றாள். ராதா, "ஏன், என்ன ஆச்சு? அவங்க ஏதாவது சீரிலே அதில்லை; இதில்லைனு சொன்னாங்களா? " ஒரு நிமிடம் தாமதித்தவள், "வெள்ளிச் செம்பிலே பால் வைக்கணுமாமே, அது ஏன் வைக்கலைனு அவரை விட்டுக் கேட்கச் சொல்லி இருக்காங்க; பாரேன் எவ்வளவு" என ஆரம்பித்த ராதாவைத் தடுத்த அம்மா, "நீ என்ன சொன்னே?" என்று கேட்க, "எனக்குத் தெரியாது."னு சொன்னேன்.  நிஜம்மா எனக்கென்ன தெரியும்?" என்றாள்.

"சரி, வா,"என்று பெருமூச்சுடன் பெண்ணை அழைத்துச் சென்ற அம்மா, அவள் காலைக்கடன்களை முடித்ததும், மாமியாரைப் போய்ப் பார்க்கச் சொல்ல, ராதாவும் மாமியார் இருக்குமிடம் தேடிச் சென்றாள்.  கொல்லையில் தாழ்வாரத்தில் இருக்கும் அடுப்பில் காப்பி போடுவதாய்ச் சொல்ல அங்கே சென்றாள். மாமியார் அடுப்படியில் அமர்ந்திருக்கச் சுற்றி அவர்களின் இரண்டாவத் பெண், மூன்றாவது பெண் மற்றும் மற்ற இரு பிள்ளைகள் அமர்ந்திருந்தனர்.  எல்லாரும் அம்மாவையே சோகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க மாமியார் முகத்தில் சுரத்தே இல்லை. "மாமி," வாய் வரைக்கும் வந்த வார்த்தையை விழுங்கி விட்டு, "அம்மா, நமஸ்காரம் பண்ணறேன்." என்று கூறினாள்.

அவ்வளவு தான். நிமிர்ந்து பார்த்த அகிலாண்டம்மாள்," என் பிள்ளையை என் கிட்டே இருந்து பிரிச்சுட்டையே?  உயிரோட உன் கிட்டே தூக்கிக் கொடுத்துட்டேனே.  எல்லாருமாச் சேர்ந்து சதி செய்து என் பிள்ளையைப் பிரிச்சுட்டாங்களே! குஞ்சும், குளுவானுமாக் குழந்தைகளை வைச்சுண்டு நான் இனிமே என்ன செய்யப் போறேன். மகமாயி, தாயே, அம்மா, உன்னையே கதினு நம்பினவளை நீ இப்படி மோசம் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்டுக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

விக்கித்துப்போனாள் ராதா.  என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழிக்க, சுற்றி அமர்ந்திருந்த  அவளின் நாத்தனார்களும், மைத்துனர்களும் அவளை வெறுப்புடனும், கோபத்துடனும் பார்க்க ராதா வெலவெலத்துப் போனாள். அவளுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.  அப்போது அங்கே வந்த மாமனார், "சந்துரு எழுந்து பல் தேய்ச்சுட்டான்.  காப்பிக்கு வரான்." என்று மெல்லச் சொல்ல, அவ்வளவு தான், அங்கே சூழ்நிலையே மாறியது.

கோயில்களை எடுத்து நடத்துவதால் என்ன பயன் கீதா சாம்பசிவம்?

அப்பாதுரை

அந்தக் கோவில்களை எடுத்து நடத்துவதால் என்ன பயன் கீதா சாம்பசிவம். அதற்கு பதில் அந்த நிலத்தையும் இடத்தையும் அனாதை இல்லம், முதியோர் இல்லம், பள்ளிகூடம் என்று உருப்படியாக ஏதாவது செய்யலாமே?

அப்பாதுரை, உங்க கமெண்ட் தான் இந்தப் பதிவோட முக்கியப் பொருளே.  கமெண்டையும் பப்ளிஷ் பண்ணிட்டேன்.  பதிவு எழுதவும் விஷயம் கிடைச்சாச்சு! :)))) இனி என் பதில் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். இப்போதைக்குக் கீழே சொல்லி இருப்பதைப் படியுங்க.  அப்புறமா கதைலே வர சஸ்பென்ஸைச் சொல்ல மாட்டேன். :)))))
 
“Yoga, through which divinity is found within, is doubtless the highest road, as Lahiri Mahasaya has told us.  But discovering the Lord within, we soon perceive Him without. Holy shrines in Tarakeswar and elsewthere are rightly venerated as nuclear centres of spiritual power.”

ஸ்வாமி பரமஹம்ஸயோகாநந்தர் அவர்கள் தம் குருநாதராகிய ஸ்வாமி யுக்தேஸ்வரரின் அனுமதியுடன் யோகி ராம் கோபாலைச் சந்திக்கச் சென்றபோது வழியில் தாரகேஸ்வரம் கோயிலைக் கடக்கிறார்.  கோயிலுக்குள்ளும் செல்லவில்லை;   கோபுரத்தையும் வணங்கவில்லை.  திரும்பி வந்து குருவிடம் தனது சந்திப்பைப் பற்றிக் கூறும் முன்னர் குரு உடனே அவரிடம் கேட்பது இதுதான்.
 
“Tell me, where do you think God is?”

“Why, he is within me and everywhere!”

“All-pervading,?? Then why, young sir, did you fail to bow before the Infinite in the stone symbol at the Tarakeswar temple yesterday?” 

தூக்கிவாரிப் போட்ட பரமஹம்ஸ யோகாநந்தரிடம் தான் முதலில் நாம் கண்ட வார்த்தைகளைக் குரு கூறுகிறார்.  அப்பாதுரை, கோயில்களை ஏன் செப்பனிட வேண்டும்? அவற்றிற்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு அநாதை ஆசிரமம், மருத்துவசாலைகள், பள்ளிகள் கட்டலாம் என்கிறார்.  ஒரு காலத்தில் கோயில்கள் இவை மூன்றின் இருப்பிடமாகவும் இருந்து வந்திருக்கின்றன அல்லவா?  காலப் போக்கில் அரசு எடுத்துக் கொண்டு வருமானம், இன்னும் வருமானம், மேல் வருமானம், இந்தச் சீட்டில் கூட்டம் இத்தனை சேர்கிறதா? அப்போ இன்னும் ஜாஸ்தி போடு, ஜனங்கள் அவற்றுக்கும் வருவாங்கனு இப்போ சாதாரணக் கோயில்களில் உச்சபட்சமாய் 250ரூபாயும், மதுரை, ஸ்ரீரங்கம், பழநி போன்ற கோயில்களில் 500ரூபாயும் தரிசனச் சீட்டுகள் விற்கின்றன.  ஸ்வாமி தான் நம்முள்ளேயே இருக்கிறாரே? ஏன் கோயிலுக்குப் போக வேண்டும்?  மில்லியன் டாலர் கேள்வி!

அதோடு நம் சித்தர்களும்,
கோயில்களாவது ஏதடா! னு சொன்னதோடு அல்லாமல்,
"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?" சிவவாக்கியர் பாடல்கள்

அப்படினும் சொல்லிட்டுப்போயிட்டாங்க.  அப்படியும் கோயில்கள் குறையறதில்லை.  வெளிநாடுகளில் கூட நம்ம கோயில்களைப் போலக் கட்டிட்டு இருக்காங்க. கூட்டமும் கூடுது. கோயில்களால் பயன் உண்டா இல்லையா?  அங்கே சென்று தரிசித்தால் தான் இறைவனா? இல்லைனா இல்லையா?  அதுக்குப் பதிலாக அநாதை ஆசிரமமும், மருத்துவ சாலைகளும், பள்ளிகளும் கட்டினால் போதுமா? ஆன்மீகம் வளர்ந்திருக்கா? பக்தி உண்மையில் பெருகி இருக்கா? இவையும் ஆராய வேண்டியவைகளே.  ஆனால் நாம கோயில்கள் ஏன் தேவைனு மட்டும் பார்த்துப்போம் சரியா?

Thursday, June 07, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் ! 1

ராதாவிற்குத் திடீர்னு எல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆகலை;  ஏற்கெனவே அவள் வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தான்.  ராதா படித்துக் கொண்டிருந்தாள். வயசும் இன்னமும் பத்தொன்பது நிறையவே இல்லை; அதனால் ராதாவின் அம்மாவுக்குக் கொஞ்ச நாட்கள் போகலாம்னு எண்ணம். ஆனால் ராதாவின் அப்பாவின் வார்த்தையை மீறி அந்த வீட்டில் யாரும் எதுவும் பேச முடியாது.  அவர் சொன்னால் சொன்னதுதான்.  அப்படியே இந்த மாப்பிள்ளையை நிச்சயமும் பண்ணிக் கொண்டு வந்துவிட்டார். தெரிந்த இடம்; பையன் அரசாங்க உத்தியோகம்.  கூடப்பிறந்தவர்கள் ஐந்தாறு பேரு இருக்காங்க தான். அதனால் என்ன! பையனின் அம்மா, அப்பா இருக்காங்களே கவனிச்சுப்பாங்க. இந்த இடத்தையே முடிச்சுடலாம்.  அப்பா தீர்மானித்து விட்டார்.

கல்யாணம் குறித்த சிந்தனைகளோ, கனவுகளோ ராதாவிடம் இல்லை. ஆனால் பிறந்த வீட்டின் நிலைமை தெரியுமாதலால் ஒரு வகையில் திருமணத்தை விடுதலையாகவே நினைத்தாள்.  அதே சமயம் தான் தன் கணவனோடு இப்படி எல்லாம் பயந்து கொண்டும், அபிப்பிராயங்களை மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டும் இருக்கக் கூடாது என்ற தீர்மானமும் இருந்தது. பெண் பார்க்க வந்த போது அவள் பையனைச் சரியாகப் பார்க்கவில்லை.  கூச்சம் மட்டும் காரணம் இல்லை.  திருமணத்தின் ஆசாபாசங்களும், கனவுகளும் அவள் இள மனதில் இன்னமும் பூரணமாய்த் தன் வேலையைக் காட்டவில்லை.  ஆகவே ஒருமுறைக்கு இருமுறை பார்க்க வேண்டும் என்றோ, பேச வேண்டும் என்றோ அவள் எதிர்பார்க்கவே இல்லை.

திருமண நாளும் வந்தது. அவள் மாமியாருக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது.  ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருந்தார்.  போதாக்குறைக்குப் பையன் இப்போது திருமணமே வேண்டாம்னு சொல்லிக் கொண்டிருந்ததாகவும், பெண்ணைப் பார்த்ததுமே மனம் மாறிவிட்டதாகவும், இப்போவே இப்படின்னா கல்யாணம் ஆகி வந்ததும் எங்க பையன் எங்க சொத்தாய் இருக்க மாட்டான் என்று கவலைப் படுவதாகவும் வெளிப்படையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாருக்குமே இது தர்மசங்கடமாக இருந்தாலும் யாரும் வாயைத் திறக்கவில்லை.

ராதா ரொம்ப உயரம் இல்லை என்றாலும் நடுத்தர உயரம்.  அப்பாவின் வழியைக் கொண்டு நல்ல சிவந்த நிறம். எடுப்பான மூக்கு, வில் போல் வளைந்த புருவங்கள், நீண்ட விழிகள், அதிகம் நீளமில்லாத அடர்த்தியான, சுருண்ட தலைக்கேசம், ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப்பார்க்கச் சொல்லும் முகம். கல்யாண அலங்காரத்தில் ஜொலித்தாள். இயல்பாகவே சிவந்த முகம் வெட்கத்திலும், சந்தோஷத்திலும் இன்னமும் சிவந்து காணப்பட்டது.  மாப்பிள்ளையும் தன் மனைவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்து அந்தக் கால வழக்கப்படி மறுநாள் கிரஹப்ரவேசமும்முடிந்து பிள்ளை வீட்டில் முதலிரவு.

மாப்பிள்ளையும், கல்யாணப்பெண்ணும் முதலிரவு அறைக்குள் போயாச்சு! அறைக்கு வெளியே சங்கீதம் தெரிந்த சில பெண்கள் பாட வேண்டும் என ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மாப்பிள்ளையின் அம்மா தழுதழுத்த குரலில் ஏதோ பேசும் சப்தமும், அதை அடுத்து  தடார் என்ற சப்தமும் கேட்டது.   யாரோ விழுந்துட்டாங்க போலிருக்கே!  கூடி இருந்த விருந்தினர் எல்லாரும் ஓடி வர மாப்பிள்ளையின் தாய் கீழே விழுந்திருந்தாள்.