தந்தியை ராதாதான் வாங்கினாள். அதிலே சந்துருவிற்கு வேலையில் பிரமோஷன் கிடைத்திருக்கும் செய்தியும், தற்சமயம் இருக்கும் அலுவலகத்திலேயே இன்னும் ஆறு மாதங்கள் நீடிக்கலாம் என்னும் செய்தியும் காணப்பட்டது. அப்போ, நாமும் அவருடன் போகலாம் என ராதா மனதுக்குள் எண்ணமிட்டாள். தந்தியை வாங்கிப் பார்த்த சந்துரு தன் பெற்றோரிடமும், மற்ற உறவினருக்கும் விஷயத்தைச் சொல்ல, எல்லாரும் ராதா வந்த நேரம் என மகிழ்வோடு கூற அகிலாண்டத்துக்குக் கோபமும், ஆத்திரமும் சேர்ந்து வந்தது. என்றாலும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல், இப்போ பிரமோஷன்னா ராதா வந்த நேரம்னு சொல்றோம். பின்னாடி வேறே ஏதானும் ஆச்சுன்னாலும் அப்படித்தானே சொல்லணும்! என்றாள். சந்துரு உட்பட அனைவர் முகமும் சுருங்கியது.
சந்துரு நேரடியாக விஷயத்துக்கு வந்தான். "அம்மா, இப்போதைக்கு எனக்கு எங்கேயும் மாற்றல் இல்லைனு ஆயிடுத்து. ஆகவே நான் ராதாவை அழைத்துக் கொண்டு போறேன். அங்கே குடித்தனம் வைக்க என்னென்ன தேவை என்பதை அவளுக்குச் சொல்லு." என்றான்.
"ஏற்கெனவே வீடு பார்த்தாச்சா? சொல்லவே இல்லையே நீ?" என்றாள் அகிலாண்டம். "பெண்டாட்டி வரதுக்கு முன்னே எல்லாம் ரெடியா?" என்றாள். அந்தக் குரலில் இருந்த குத்தலைப் புரிந்து கொள்ளாமலேயே சந்துரு, "அதெல்லாம் இல்லைம்மா. நான் என் நண்பனுக்குத் தந்தி கொடுத்து ஒரு வீடு பார்த்து வைக்கச் சொல்லப் போகிறேன். நீ நல்ல நாளாப் பார்த்துச் சொன்னால் கிளம்பிப் போனதும் அன்னிக்கே பால் காய்ச்சிச் சாப்பிட்டுவிடலாம். பின்னர் மெதுவாக வேறே நல்ல வீடு பார்த்துக்கலாம்." என்றான்.
"வீடும் பார்க்கலை; இனிமேல் பார்த்துப் போகணும். அதுக்கு ஏண்டா அவளைக் கட்டி இழுக்கிறே. அவ பாட்டுக்கு இங்கே குழந்தைகளோடு குழந்தைகளா இருந்துட்டுப் போறா. இப்போ அங்கே அவ வந்து உனக்கு என்ன பண்ணணும்? நான் பார்த்துக்கறேன் என் பெண்ணைப் போல. அவ வேலைக்கு இங்கே இருந்து வேண்டுமானாலும் போயிட்டு வரட்டும். அவளுக்கு ஒத்தாசைக்கு இங்கே லதாவும், வித்யாவும் இருக்காங்க. ரெண்டு பேரும் ஒத்தாசை செய்ய மாட்டேன்னு சொல்லப் போறாங்களா என்ன? எனக்கோ உடம்பே முடியலை. என்னமோ இந்த இரண்டு பெண்களுக்காகவும், இந்தப் பிள்ளைகளுக்காகவும் தான் நான் உசிரை வைச்சிண்டு இருக்கேன். " என்று பெருமூச்சு விட்டாள். அப்போது உள்ளே வந்த சந்தானம் தன் மனைவியைப் பார்த்து, "ராதா அங்கே குடித்தனம் வைக்கலைனாலும் என்ன? போயிட்டு வரட்டும், அவளும் பம்பாய் எல்லாம் பார்க்க வேண்டாமா? அதோட என் சித்தப்பாவுக்கு உடம்பு முடியலைனு கல்யாணத்துக்கு வரலை. அவரையும் பார்த்து நமஸ்காரம் செய்துட்டு வரலாம். எல்லார் ஆத்துக்கும் போய்ப் பார்த்துத் தெரிஞ்சுக்கட்டுமே!" என்றார். அகிலாண்டம் அவரை முறைத்துப் பார்த்தாள்.
"இதிலெல்லாம் நீங்க தலையிடாதீங்க!" என்று ஒரே வார்த்தையாகக் கூறவே, சந்துருவுக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை. சரி, கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் எனத் தோன்றவே எதுவும் பேசாமல் ராதாவைப் பார்த்துக் கண் ஜாடை காட்டிவிட்டு அப்பால் சென்றான். உடனே அவன் பின்னால் செல்ல நினைத்த ராதா, தன் கடைசி நாத்தனார் தன்னையே கவனிப்பதைக் கண்டதும் தன் தாயைத் தேடிச் சென்றாள். அவளிடம் விஷயத்தைச் சொல்லவும், ராதாவின் அம்மா மறுபடியும் தன்னோடு வந்துவிடு என வற்புறுத்தினாள். கணவனைக் கலந்து கொள்ளாமல் எதுவும் சொல்ல ராதாவுக்கு இஷ்டமில்லை. ஆகவே மெல்ல அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டு கணவனைத் தேடிச் சென்றாள். சந்துரு அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
"ராதா, உன்னை விட்டுட்டு எப்படித்தான்," என ஆரம்பிக்கக் கலகலவெனச் சிரித்த ராதா, "நான் நேத்துலேருந்து தான் உங்களுக்குப் பழக்கம். அதுக்குள்ளே என்னை விட்டுட்டுப் போக முடியலையா? உங்க அம்மாவுக்குக் கோபம் வரப் போகிறது." என்று ஜாடையாகச் சொன்னாள். சட்டென முகம் கறுத்த சந்துரு, "என்ன ஆச்சு?" என்றான். "ஒண்ணுமே ஆகலையே?" என்றாள் ராதா. சற்றுத் தயங்கின சந்துரு, "உன்னை இப்போ அனுப்ப மாட்டேன்னு அம்மா சொல்றாளே? நீ என்ன சொல்றே?" என்று கேட்டான்.
"நீங்கல்லாம் என்ன முடிவு பண்ணறீங்களோ அதான்!" என்றாள் ராதா. சந்துரு கொஞ்சம் யோசித்துவிட்டு ராதாவிடம், "சரி, இங்கே இரு கொஞ்ச நாட்கள். நான் போய் எப்படியானும் பக்கத்து ஊருக்கோ இல்லாட்டிச் சென்னைக்கோ மாத்திண்டு வந்துடறேன். இல்லைனா, பங்களூர், புனானு கேட்கிறேன். கொடுப்பாங்க. அங்கே வந்தால் உனக்கும் நல்ல வேலை கிடைக்கும்னு சொன்னா அம்மா ஒத்துப்பா." என்றான். ராதாவின் மனம், "பார்க்கலாம்," என்றது. ஆனாலும் கணவனிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் சரி என ஒத்துக் கொண்டாள். அவள் எழுந்திருக்க எண்ணி எழுந்த போது, அவள் கையைப் பிடித்து இழுத்த சந்துரு, "இரேன், எங்கே போறே அதுக்குள்ளே?" என்று கேட்க, அப்போது உள்ளே நுழைந்த லதா, "மன்னி, நீ இங்கேயா இருக்கே? அம்மா உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறாளே? நீயானா அண்ணாவோட நேரம் காலம் தெரியாம குலாவிண்டு இருக்கே?" என்று சொல்ல, சந்துரு, "லதா, அவ உனக்கு மன்னி. இப்படி எல்லாம் நீ பேசக் கூடாது." என்று சொல்ல, ராதாவை முறைத்தாள் லதா.
"வந்ததும் உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா? இன்னி வரைக்கும் எங்க அண்ணா என்னை ஒரு வார்த்தை சொன்னதில்லை. எங்க மூணு பேரிலேயே என்னைத் தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவனுக்கு எல்லாமே நான் தான் செய்யணும்னு சொல்வான். அப்படிப் பட்டவனை ஒரே ராத்திரியிலே மாத்திட்டியே? " என்றாள் படபடவென. ராதாவின் கண்களில் நீர் முட்டியது. சந்துரு மீண்டும் அவளை அடக்கப் போகத் தன் கையால் அவனைத் தடுத்தாள் ராதா. கண் பார்வையாலேயே விடுங்க எனச் சொல்ல, சந்துரு அங்கிருந்து கோபமாக வெளியேற,
"ஓஹோ, அவ்வளவுக்கு ஆயிடுத்தா? கண்ணாலேயே எங்க அண்ணாவுக்குக் கட்டளையெல்லாம் போடறியோ? நீ எப்படி அண்ணாவோட போய்க் குடித்தனம் நடத்தப் போறே? நானும் பார்க்கத்தானே போறேன்." என்றாள் லதா.
ராதா பதிலே பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த லதாவுக்கு அவள் புடைவை உடுத்தியிருந்த நேர்த்தியும், புடைவை அவளுக்குப் பாந்தமாக இருந்ததும், கண்களை உறுத்தியது. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக இருந்த லதா அப்படி ஒன்றும் அழகி இல்லை. ஆனால் ராதாவின் அழகு அவள் கண்களை உறுத்தியது. முக்கியமாய் அவளிடம் இருந்த விதவிதமான புடைவைகள்.

கதை போகும் பாதையைப் பார்த்தால் ரெண்டு மூணு பகுதிகள் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டு சந்தோஷமான பகுதிகள் வந்ததும் படிக்கலாம் போலத் தோன்றுகிறது! என்ன நா......த்தனார்கள்! இந்தப் புடைவை மேட்டரும் வீ.வீ.வா.ப.யோ?
ReplyDelete:)))
ஆனால் ராதாவின் அழகு அவள் கண்களை உறுத்தியது. முக்கியமாய் அவளிடம் இருந்த விதவிதமான புடைவைகள்.
ReplyDeleteபெண் மனம்..!
வாங்க ஸ்ரீராம், ரொம்பவே பெரிசாப் போகுதோனு எனக்கும்தோணித்து. இன்னும் 2, அல்லது 3 பகுதிகளில் முடிச்சுடப்பார்க்கிறேன். :))))))
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, இது ஒரு விதத்தில் சொந்த அனுபவம்னும் சொல்லலாம். :)))))) எங்க சொந்த பந்தங்கள் எல்லாருமே என்னோட புடைவைகளைப் பார்த்து ஆசைப்படுவாங்க. என் கிட்டே புடைவையை வாங்கி ஒரு முறையாவது கட்டணும்னு சொல்லுவாங்க. ஒரு சிலர் அப்படிக் கட்டியும் இருக்காங்க. அந்தப் பொதுவான ஆசையை இங்கே ஒரு தனிப்பட்ட பெண்ணின் மேல் ஏற்றினேன். :)))))))))
ReplyDelete//ரொம்பவே பெரிசாப் போகுதோனு எனக்கும்தோணித்து. //
ReplyDeleteநான் அதற்குச் சொல்லவில்லை. எவ்வளவு நீளமாப் போனாலும் படித்து விடலாம். சோக கட்டங்களைப் படிக்க மனம் கஷ்டப் படும் என்பதற்காகச் சொன்னேன்! :))
வாங்க ஸ்ரீராம், மறுவரவுக்கு நன்றி. சோக கட்டங்களைப் படிக்க முடியலைங்கறீங்களே? இவ்வளவு மென்மையாவா இருக்கிறது? :))))) அந்தக் காலத்து சிவாஜி படத்தையெல்லாம் பார்த்துட்டுப் பிழியப் பிழிய அழுதிருப்பீங்கனு நினைக்கிறேன். :P:P:P:P
ReplyDeleteபோகட்டும்! இன்னும் நானே இந்தக் கதையைப் பத்தி ஒரு தீர்மானத்துக்கு வரலை என்பதே உண்மை. அதோடு இரண்டு தரமாக ஆன்லைனில் மனசில் படுவதை எழுதிடறேன். எனக்கே திருப்தியாய் இல்லை. முதல்லே அதைக் குறித்து ஒரு தீர்மானம் செய்து கொண்டு எழுதணும்னு தீர்மானம் போட்டிருக்கேன். அப்புறமா நீங்க சுருக்கச் சொன்னாலும் சுருக்க மாட்டேன். நீளமா வேண்டும்னாலும் கிடைக்காது. ஆகவே இப்போவே எச்சரிக்கை கொடுத்து வைக்கிறேன். :)))))))))))))))))))
கதை எழுதுவது என்றால் சோகம் சுகம் எல்லாம் கலந்துதானே வரும். போகப்போக என்னாரதுன்னு பாக்கலாமே?
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க. ஸ்ரீராமுக்கு ரொம்ப இளகிய மனசு! :))))
ReplyDelete//ஸ்ரீராமுக்கு ரொம்ப இளகிய மனசு!//
ReplyDeleteஇந்த வரியைப் படிச்சதுமே கண் கலங்க ஆரம்பிச்சுட்டேன். 'அன்புக்கு நான் அடிமை....' (ஜேசுதாஸ் குரலில் பாடிக் கொள்ளவும்!)
//சிவாஜி படத்தையெல்லாம் பார்த்துட்டுப் பிழியப் பிழிய அழுதிருப்பீங்கனு //
சிவாஜி படத்துக்குப் போகும்போது மட்டும் கர்ச்சீப்புக்கு பதிலா துண்டுதான் எடுத்துட்டுப் போவேன். கர்சீப் பத்தாது. :))
நல்லா போகுது கதை. இயல்பாவே எழுதுங்க.
ReplyDeleteகதைப் போக்கை இன்னும் தீர்மானிக்கலைனு சொல்றீங்க. வாசகர் விருப்பம் உண்டா?
1. கடைசியில அந்த மாமியாருக்கு வலிப்பு வந்த மாதிரி எழுதிடுங்க.
2. ராதா சைடுல இன்னொரு நேர்மையான துணை தேடிக்கிட்டதா எழுதுங்க.
3. ஒரு நாத்தனாருக்கு கால்ல பஸ் ஏறி பாதம் சப்பையாயிடுச்சுனு எழுதுங்க
என் பம்மல் குழுமத்தில் ஒரு நண்பன். (இவனைப் பற்றி இன்னும் கதை எழுதவில்லை)
ReplyDeleteசிவாஜி ஒவ்வொரு தடவை அழும் போதும் இவன் சிரிக்க ஆரம்பித்து விடுவான். ஹிஹி என்று சாதாரணமாகத் தொடங்கும் நகை; பிறகு சிவாஜி ஓவென்று உருக உருக இவன் உரக்கச் சிரிப்பான். ஒரு தடவை பாசமலர் பார்க்கும் பொழுது கொட்டகையில் அடி வாங்காமல் ஓடி வர நாங்கள் பட்டப் பாடு...
/ஸ்ரீராமுக்கு ரொம்ப இளகிய மனசு!//
ReplyDeleteஇந்த வரியைப் படிச்சதுமே கண் கலங்க ஆரம்பிச்சுட்டேன். 'அன்புக்கு நான் அடிமை....' (ஜேசுதாஸ் குரலில் பாடிக் கொள்ளவும்!)//
நீங்க வேறே, எம்.ஆர். ராதா குரலிலேயே சரியாப் பாட முடியலை என்னாலே! ஜேசுதாஸுக்கெல்லாம் எங்கே போக? :)))))
சிவாஜி படத்துக்குப் போகும்போது மட்டும் கர்ச்சீப்புக்கு பதிலா துண்டுதான் எடுத்துட்டுப் போவேன். கர்சீப் பத்தாது. :))//
நான் சொல்ல நினைச்சது, அப்பாதுரை அவர் நண்பரைப் பத்திச் சொல்லி இருக்கார். சிவாஜி படத்தை எல்லாம் பார்க்கிறச்சே எனக்கும் சிப்பு சிப்பாத் தான் வரும். அதாவது விபரம் தெரிந்த பின்னர். ஆரம்பகாலங்களில் நானும் அழுதிருக்கேனாக்கும்! ஒரு பத்துப் பனிரண்டு வயசு வரை அழுதிருப்பேன்.
எங்க ஸ்கூலிலே எங்க செக்ரடேரியல் கோர்ஸ் மாஸ்டர் எங்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்ததும், கம்பெனிக் கணக்கு, வழக்கும், பொருளாதாரமும் மட்டுமில்லாமல் உலக சரித்திரம், இந்திய சரித்திரம், மற்றும் சினிமான்னா எப்படி இருக்கணும்னு எல்லாமே புரிய ஆரம்பிச்சதுனு சொல்லலாம். அதுக்கப்புறமா சிவாஜி படம்னாலே சிரிப்புத் தான். கிட்டத்தட்ட அடிவாங்காமல் தப்பினால் பெரிசுங்கற நிலைமைதான் எனக்கும். :)))))))
வாங்க அப்பாதுரை,
ReplyDeleteஉங்களோட யோசனைகள் எதையுமே பரிசீலிக்கப் போறதில்லை. இன்னிக்கு மத்தியானம் தீர்மானம் பண்ணியாச்சு. கதையை எப்படிக் கொண்டு போறதுனு! :))))
நீங்க எழுதும் தரத்துக்கு இல்லாட்டியும் மனம் விட்டுப் பாராட்டறீங்களே, அதுக்காகவே இன்னும் நல்லா எழுத முயற்சி செய்யறேன்.
மத்தபடி உங்க பம்மல் நண்பர் கதை தான் என் கதையும் சிவாஜி படங்களுக்கு! :)))))
ReplyDeleteகொறஞ்சது மாமியார் நாத்தனாருக்கு கிணத்துல தண்ணியெடுக்குறப்ப கால் வழுக்கி விழுந்தாங்கன்னாவது எழுதுங்க.
ReplyDeleteஉங்க தரத்துக்கு என்ன குறை? என்ன இப்படி சொல்றீங்க. கண்ணனுக்காக படிச்சு மாஞ்சு போகுது போங்க.
ReplyDeleteஇந்தக் கதையில நல்ல முடிச்சுங்க நாலஞ்சு போட்டிருக்கீங்க.. எப்படி எடுக்குறீங்கனு பாக்கணும். வெயிட்டுங்கு.
ReplyDelete//இன்னிக்கு மத்தியானம் தீர்மானம் பண்ணியாச்சு. கதையை எப்படிக் கொண்டு போறதுனு! :))))//
ReplyDelete1)ஒரு பக்கம் எந்த வெளியூருக்கும் புருஷனுடன் போகாமல், மாமியாருடன்
நாத்தனார்களுடன் இருந்து கொண்டே சொந்த பலத்தில் காலூன்றி நின்று ஜெயித்துக் காட்டணும்ங்கற உறுதி உருவாகியிருக்கு. இப்படித் தான் கொண்டு போக வேண்டும் என்று
மிஸ்ஸாகாமல் மனசில் பதிஞ்சு போய் விட்டதால் வந்த வினை இது.
2) இது என்ன வரட்டு சேலஞ்ஜ்? நாளைக்கே இந்த அழிச்சாட்டிய நாத்தனார்களுக்கு கல்யாணம் ஆனால்
புருஷனோடு போகாமல் இப்படியா அவங்கவங்க மாமியாரோடு மல்லுக்கட்டிண்டு நிக்கப் போறாங்க?
இவங்களுக்காக என் சொந்த ஆனந்தத்தை எதுக்காக மிஸ் பண்ணனும்? ஆக, சமயம் பார்த்து
மூட்டை கட்டிக் கொண்டு கிளம்புவதே மேல்.
இதெல்லாம் எப்படியோ போகட்டும்.
இருபத்தைஞ்சு வருஷத்துக்குப் பின்னாடி வேறு போய் சேர்க்க வேண்டியதோடெல்லாம் சேர்க்கறத்துக்கு ஏத்தாப்பலே இப்பவே..
உங்க தீர்மானம் புரிஞ்சிடுத்து.
மத்தியான தீர்மானம் எப்பவுமே கொஞ்சம் மசமசன்னு தான் இருக்குங்கறதை மாற்றிக் காட்டப் போகிறீர்கள். தெரிகிறது.
முங்கூட்டியே வாழ்த்துக்கள்.
அப்பாதுரை, விட்டால் மாமியார், நாத்தனார்களை ஒரு பிடி பிடிச்சுடுவீங்க போல! :))))))) அதெல்லாம் அவங்க யாரும் எங்கேயும் விழப் போறதில்லை. :P முடிச்செல்லாம் தானா விழறது. தானே அவிழ்த்துக்கும். :))))
ReplyDeleteஎன்னோட தரத்தைப் பாராட்டிய பெரிய மனசுக்கு நன்றி.
வாங்க ஜீவி சார், யூகங்களெல்லாம் நல்லாவே இருக்கு. பார்க்கலாம், கதை எப்படிப் போகுதுனு! :)))))
ReplyDelete