அப்பாதுரை
அந்தக் கோவில்களை எடுத்து நடத்துவதால் என்ன பயன் கீதா சாம்பசிவம். அதற்கு பதில் அந்த நிலத்தையும் இடத்தையும் அனாதை இல்லம், முதியோர் இல்லம், பள்ளிகூடம் என்று உருப்படியாக ஏதாவது செய்யலாமே?
அப்பாதுரை, உங்க கமெண்ட் தான் இந்தப் பதிவோட முக்கியப் பொருளே. கமெண்டையும் பப்ளிஷ் பண்ணிட்டேன். பதிவு எழுதவும் விஷயம் கிடைச்சாச்சு! :)))) இனி என் பதில் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். இப்போதைக்குக் கீழே சொல்லி இருப்பதைப் படியுங்க. அப்புறமா கதைலே வர சஸ்பென்ஸைச் சொல்ல மாட்டேன். :)))))
அப்படினும்
சொல்லிட்டுப்போயிட்டாங்க. அப்படியும் கோயில்கள்
குறையறதில்லை. வெளிநாடுகளில் கூட நம்ம கோயில்களைப்
போலக் கட்டிட்டு இருக்காங்க. கூட்டமும் கூடுது. கோயில்களால் பயன் உண்டா இல்லையா? அங்கே சென்று தரிசித்தால் தான் இறைவனா? இல்லைனா
இல்லையா? அதுக்குப் பதிலாக அநாதை ஆசிரமமும்,
மருத்துவ சாலைகளும், பள்ளிகளும் கட்டினால் போதுமா? ஆன்மீகம் வளர்ந்திருக்கா? பக்தி உண்மையில் பெருகி இருக்கா? இவையும் ஆராய வேண்டியவைகளே. ஆனால் நாம கோயில்கள் ஏன் தேவைனு மட்டும் பார்த்துப்போம் சரியா?
அந்தக் கோவில்களை எடுத்து நடத்துவதால் என்ன பயன் கீதா சாம்பசிவம். அதற்கு பதில் அந்த நிலத்தையும் இடத்தையும் அனாதை இல்லம், முதியோர் இல்லம், பள்ளிகூடம் என்று உருப்படியாக ஏதாவது செய்யலாமே?
அப்பாதுரை, உங்க கமெண்ட் தான் இந்தப் பதிவோட முக்கியப் பொருளே. கமெண்டையும் பப்ளிஷ் பண்ணிட்டேன். பதிவு எழுதவும் விஷயம் கிடைச்சாச்சு! :)))) இனி என் பதில் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். இப்போதைக்குக் கீழே சொல்லி இருப்பதைப் படியுங்க. அப்புறமா கதைலே வர சஸ்பென்ஸைச் சொல்ல மாட்டேன். :)))))
“Yoga, through which divinity is found within, is doubtless
the highest road, as Lahiri Mahasaya has told us. But discovering the Lord within, we soon
perceive Him without. Holy shrines in Tarakeswar and elsewthere are rightly
venerated as nuclear centres of spiritual power.”
ஸ்வாமி
பரமஹம்ஸயோகாநந்தர் அவர்கள் தம் குருநாதராகிய ஸ்வாமி யுக்தேஸ்வரரின் அனுமதியுடன் யோகி
ராம் கோபாலைச் சந்திக்கச் சென்றபோது வழியில் தாரகேஸ்வரம் கோயிலைக் கடக்கிறார். கோயிலுக்குள்ளும் செல்லவில்லை; கோபுரத்தையும் வணங்கவில்லை. திரும்பி வந்து குருவிடம் தனது சந்திப்பைப் பற்றிக்
கூறும் முன்னர் குரு உடனே அவரிடம் கேட்பது இதுதான்.
“Tell
me, where do you think God is?”
“Why,
he is within me and everywhere!”
“All-pervading,??
Then why, young sir, did you fail to bow before the Infinite in the stone symbol
at the Tarakeswar temple yesterday?”
தூக்கிவாரிப்
போட்ட பரமஹம்ஸ யோகாநந்தரிடம் தான் முதலில் நாம் கண்ட வார்த்தைகளைக் குரு கூறுகிறார். அப்பாதுரை, கோயில்களை ஏன் செப்பனிட வேண்டும்? அவற்றிற்குச்
செலவிடும் பணத்தைக் கொண்டு அநாதை ஆசிரமம், மருத்துவசாலைகள், பள்ளிகள் கட்டலாம் என்கிறார். ஒரு காலத்தில் கோயில்கள் இவை மூன்றின் இருப்பிடமாகவும்
இருந்து வந்திருக்கின்றன அல்லவா? காலப் போக்கில்
அரசு எடுத்துக் கொண்டு வருமானம், இன்னும் வருமானம், மேல் வருமானம், இந்தச் சீட்டில்
கூட்டம் இத்தனை சேர்கிறதா? அப்போ இன்னும் ஜாஸ்தி போடு, ஜனங்கள் அவற்றுக்கும் வருவாங்கனு
இப்போ சாதாரணக் கோயில்களில் உச்சபட்சமாய் 250ரூபாயும், மதுரை, ஸ்ரீரங்கம், பழநி போன்ற
கோயில்களில் 500ரூபாயும் தரிசனச் சீட்டுகள் விற்கின்றன. ஸ்வாமி தான் நம்முள்ளேயே இருக்கிறாரே? ஏன் கோயிலுக்குப்
போக வேண்டும்? மில்லியன் டாலர் கேள்வி!
அதோடு
நம் சித்தர்களும்,
கோயில்களாவது
ஏதடா! னு சொன்னதோடு அல்லாமல்,
"நட்ட
கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?" சிவவாக்கியர் பாடல்கள்
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?" சிவவாக்கியர் பாடல்கள்
பார்த்துப்போம்
ReplyDeleteஉற்சாகமாகப் படியிறங்கினான் க்லே. இன்னும் சரியாக ஆறு நொடிகளில் பள்ளிக்கூட பஸ் வந்துவிடும். கதவருகே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த பணிசெமர் தத், க்லே பஸ்ஸேறும் வரை அங்கேயே நிற்பான். ஒரு மாதமாக வெளிவந்து கொண்டிருக்கும் பிள்ளைக் கடத்தல் விவரங்கள் க்லேயின் பாவுக்கு மிகுந்த கலவரத்தைக் கொடுத்தபடியால் தத் நாளைக்கு இருபத்தைந்து மணி நேரமும்
ReplyDeleteநான் எழுதின பின்னூட்டம் இங்கே out of context.. இருந்தாலும் அதை மதிச்சு ஒரு பதிவா எழுதினதுக்கு நன்றிங்கோ.
//வெளிநாடுகளில் கோவில்..// ரொம்பச் சரி. பத்தாயிரம் மைல் கடந்து வந்து இங்கயும் கோவிலுக்குத் தான் போறாங்க.. என்ன செய்ய?
கோவிலுக்கு செலவழிக்கும் நேரமும் பணமும் ஏழைகளின் பசி தீரச் செலவழிக்க மறுக்கிறோம் என்பதை ஏற்கவே முடியவில்லை. தானாக தருமம் செய்ய மனம் வருவதில்லை - கோவிலுக்குக் கொடுப்பதை ஏழைக்குத் தரலாமே? நாதன் உள்ளிருப்பதை நம்பினால் கல்லைச் சுற்றிக் கல் கட்டிக் காசெறிவதா?
(ஆமா.. பின்னூட்டம் பத்தி எங்கள் பிளாக் கண்டுபிடிச்சாங்களா இல்லையா?)
//ஆனால் நாம கோயில்கள் ஏன் தேவைனு மட்டும் பார்த்துப்போம் சரியா?//
ReplyDeleteசரி!
//(ஆமா.. பின்னூட்டம் பத்தி எங்கள் பிளாக் கண்டுபிடிச்சாங்களா இல்லையா?)//
ReplyDeleteஎண்ணங்கள் பதிவுதான்! :))
வாங்க கெளதம் சார். ரொம்ப நாளாக் காணோம். பார்க்கலாம், நன்றி.:)
ReplyDeleteஉற்சாகமாகப் படியிறங்கினான் க்லே. இன்னும் சரியாக ஆறு நொடிகளில் பள்ளிக்கூட பஸ் வந்துவிடும். கதவருகே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த பணிசெமர் தத், க்லே பஸ்ஸேறும் வரை அங்கேயே நிற்பான். ஒரு மாதமாக வெளிவந்து கொண்டிருக்கும் பிள்ளைக் கடத்தல் விவரங்கள் க்லேயின் பாவுக்கு மிகுந்த கலவரத்தைக் கொடுத்தபடியால் தத் நாளைக்கு இருபத்தைந்து மணி நேரமும் //
ReplyDeleteஇதான் கொஞ்சம் குழப்புது. சரி, கோயில்கள் இல்லை எனில் நாட்டில் வறுமையே இருக்காதா? ஏழைகள் கோயிலால் உருவானார்களா? அதை முதல்லே சொல்லுங்க. :)))))
எங்கள் ப்ளாக் எட்டெட்டு மாயாவை ஆரம்பிச்சுட்டு முழிக்கிறாங்கனு கேள்வி. இதுக்கு எங்கே? :))))))
வாங்க ஶ்ரீராம், எண்ணங்கள் பதிவுதான். சரியான விடை. அதனால் ஒண்ணும் கிடையாது போங்க. எண்ணங்கள் பதிவிலே எந்தப் பதிவுனு கண்டுபிடிங்க பார்க்கலாம்.(எனக்கும் மண்டைக் குடைச்சல்)
ReplyDelete//எண்ணங்கள் பதிவிலே எந்தப் பதிவுனு கண்டுபிடிங்க பார்க்கலாம்.//
ReplyDeleteஅது அப்பாதுரைக்கே தெரியாததால்தானே 'எங்களை'ச் சீண்டிப் பார்க்கிறார்!!!
:)))))))))))))))))
ஓகே.. இது எண்ணங்கள் பதிவுல இல்லிங்க ஸ்ரீராம். இன்னும் நாலு சான்ஸ்.
ReplyDeleteஆ!.. இந்தக் க்லே விவகாரம் இங்க எங்க வந்துச்சு? அது சும்மா க்ரிகில்ஸ் விட்டது.. கண்டுக்காதீங்க கீதாம்மா.. பின்னூட்டத்துலயே கவனமா இருங்க.. சாரி..
ReplyDelete//அப்பாதுரை said...
ReplyDeleteஓகே.. இது எண்ணங்கள் பதிவுல இல்லிங்க ஸ்ரீராம். இன்னும் நாலு சான்ஸ்//
பூ வனம் !
//Blogger Geetha Sambasivam said...
//நாதஸ்வரம் என்னும் வாத்யத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். இப்பொழுதெல்லாம் கோயில்களிலும், திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும் தான் நாதஸ்வர இசையையே அனுபவிக்க முடிகிறது. காலப்போக்கில் இங்கெல்லாம் கூட இதற்கு இடமில்லை என்கிற நிலமை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், பிற்பாடு நாதஸ்வரம் என்றால் என்னவென்றே வரும் தலைமுறைக்குத் தெரியாமல் போய் விடும்.//
மந்திராலயம் சென்று கொண்டிருந்த நாதஸ்வரக் கலைஞர்களிடம் பேசியபோது அவர்கள் சொன்னது இன்னமும் மனதில் இருக்கிறது. கிராமங்களே இப்போது காலியாக இருக்கின்றன. கிராமத்துக் கோயில்கள் கவனிப்பாரின்றி இருக்கின்றன. ஒரு காலத்தில் இவற்றை "எடுத்து நடத்தியவர்கள்" இன்று நாட்டிலேயே இல்லை. பெரும்பாலானவர்கள் வட மாநிலங்கள், வெளிநாடு என்று போயாச்சு! ஆதரிப்பவர் யார்? :((((((( //
//நாலு புஷ்பம் சாத்தியே
ReplyDeleteசுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?//
ithan unmai porul enanvo. naam ninaikkum porul kandippa illai
உன்னுள் சிவம் இருக்குனு அறியும் நிலை வரும் பொழுது கோவில்களில் இருப்பது சிலை. மந்திரம் சொல்வது தேவையற்றது . ஆனால் அந்த நிலை நம்மில் எத்தனை பேரிடம் இருக்கு ??
ReplyDeleteஇதோ, ஸ்ரீராம் சரியா கண்டுபிடிச்சிட்டாரே! வெற்றிக்கனி பறித்ததற்கு வாழ்த்துக்கள் ஸ்ரீராம்!
ReplyDeleteஒரு சின்ன குழப்பம். ஏன்,எப்படி,யாரால் என்பதைத் தாண்டி அதுவும் நன்மையில் முடிந்திருப்பது தான் ஆச்சரியம்!
என்ன நன்மை?.. அப்பாஜி எனக்கு அனுப்பியிருந்த ஒரு பின்னூடம் கீதாம்மாவுக்கு ஒரு பதிவுக்கு பொருள் ஆச்சு. அதுமட்டுமில்லை. அப்பாஜி, ஜீவி, கீதாம்மா, ஸ்ரீராம் என்று நான்கு நபர்களின் involment சரசரவென்று இதில் கோர்க்கப்பட்டு விட்டது! 'பார்வைகள்' தொடரை எப்படிக் கொண்டு போக வேண்டும் என்று மனத்தில் நான் நினைத்திருந் தேனோ, அந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாகவும் ஆகிவிட்டது. இதெல்லாம் தான் ஆச்சரியத்திற்குக் காரணம்.
நேற்று அதிகாலையில் இணையம் வந்தது தான். பிறகு நாள் பூராவும் நான் இந்தப் பக்கம் வரவில்லை. நாஷ்வெல் போயிருந்தேன். ஆனால் நேற்று காலையே யூரேக்கா!
'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப'
--என்னும் தொல்காப்பிய சூத்திரத்தை 'க்ளு'வாகக் கொடுத்து விட்டுச் செல்ல நினைத்தவன், கிளம்புகிற அவசரத்தில் அதுவும் முடியாது போயிற்று.
இன்று காலையில் பார்த்தால் உங்கள் முயற்சியில் நீங்களே கண்டுபிடித்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!
அனைவருக்கும் ஏற்பட்ட சிரமம் ஒரு பக்கத்தில் வருத்தத்தையும் கொடுக்கிறது தான்..