எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 29, 2012

யாருங்க இவங்கல்லாம்?? :)))))


43 comments:

  1. இரண்டாவது படத்துல இருக்குறவங்க நிச்சயமா மதுரைல இருந்திருக்கணும்னு சொல்லுது பட்சி.
    முதல் போட்டோவில் இருப்பவர் முகத்தில் எத்தனை நிறைவு! beautiful!

    ReplyDelete
  2. வாவ்... பழைய கருப்பு வெள்ளை படங்கள் பார்க்கவே அழகு.

    முதல் படம் நீங்க...

    இரண்டாவது தெரியவில்லை.

    ReplyDelete
  3. ஆஹா! கீதா மாமி ரொம்ப ஜோரா இருக்காங்களே! :)
    ஒன்பது கஜம் ரொம்ப பாந்தமா அழகா இருக்கு உங்களுக்கு.

    ReplyDelete
  4. நீங்களே கேட்டால் எப்படி?..

    ReplyDelete
  5. எனக்கு தெரியுமே!!! ரொம்ப நன்னாவே இருக்கு மடிசார் உங்களுக்கு:))

    ReplyDelete
  6. எனக்கு தெரியுமே!!! ரொம்ப நன்னாவே இருக்கு மடிசார் உங்களுக்கு:))

    ReplyDelete
  7. நீங்க தான் முதல் போட்டோ.... ரொம்ப அழகா இருக்கேள். அந்த சிரிப்பு நன்னா இருக்கு. அடுத்து உங்க குழந்தைகளா......

    ReplyDelete
  8. வாங்க ரா.ல. வடை உங்களுக்கே. முதல் ஃபோட்டோவில் நானே தான். என் அண்ணா கல்யாணத்தும் போது எடுத்தது. எடுத்தவர் என்னோட சித்தப்பா அசோகமித்திரன். :))))) நிறையப் பேர் இந்தப் படத்தைப் பார்த்துப் ப்ரின்ட் எடுத்துட்டுப் போனதாச் சொல்வார். நல்ல ஃபோட்டோகிராபர்! :))))

    இரண்டாவது படமும் நான், நடுவில் என் தம்பி, வலது ஓரம் அண்ணா. மூணு பேரும் ஒரு நவராத்திரி சமயம் எடுத்தது இது. நாங்க அப்போ மதுரை வடுகக் காவல் கூடத் தெருவில் இருந்தோம். டவுன்ஹால் ரோடு வழியாக அண்ணா முன்னே செல்ல, தம்பி பின்னே வர, நான் நடுவே செல்ல இப்படி ஓர் ஊர்வலம் சென்றபோது அங்கே இருந்த கிருஷ்ணா ஸ்டுடியோ என்னும் ஃபோட்டோ ஸ்டுடியோக்காரர் அப்பாவின் அத்யந்த நண்பர் எங்களைப் பார்த்துக் கூப்பிட்டு இந்தப் படத்தை எடுத்தார். :))))) இதன் நெகட்டிவ் கிடைக்கலை.

    ReplyDelete
  9. அப்பாதுரை,

    சரியாக் கண்டு பிடிச்சுட்டீங்க. இரண்டாவது படமும் மதுரையிலே எடுத்தது தான். முதல் படமும் மதுரையிலே தான். மற்ற விபரங்கள் ரா.ல.வுக்குச் சொல்லி இருக்கேன்.

    ReplyDelete
  10. வாங்க வெங்கட், இரண்டாவதுக்கு விளக்கம் சொல்லிட்டேன். :))))

    ReplyDelete
  11. வாங்க மீனாக்ஷி, எனக்குக் கல்யாணம் ஆகி ஐந்தாவது வருஷம். என் அண்ணா கல்யாணத்துப்போ எடுத்தது இது. நாத்தனார் தாலி முடிய ஒன்பது கஜம் கட்டிக்கணும் என்பது எங்க வீடுகளிலே எழுதப் படாத சட்டம். மதுரை பழக்கமானவங்களுக்கு தானப்பமுதலித் தெருவில் உள்ள கண் ஆஸ்பத்திரி என அழைக்கப்படும் கல்யாணச் சத்திரம் தெரியும். அந்தச் சத்திரத்து மாடி இது.

    ReplyDelete
  12. வாங்க ஜீவி சார், எப்படியோ என்னைப் பார்க்காமலேயே கண்டு பிடிச்சுட்டீங்க! :)))) சிலரால் முடியலை.

    ReplyDelete
  13. வாங்க ஜெயஶ்ரீ, உங்களுக்கு நிச்சயம் தெரியும். இரண்டாவது படத்திலேயும் நான், தம்பி, அண்ணா. :))))

    ReplyDelete
  14. சுபாஷிணி, இரண்டாவது படம் கறுப்பு, வெள்ளை. அதிலிருந்தும் உடை அலங்காரத்திலிருந்தும் பழைய படம்னு தெரிஞ்சிருக்கணுமே! என் பொண்ணு மறந்து கூடப் பாவாடை, சட்டை போட்டதில்லை. எப்போவும் சல்வார், குர்த்தா தான்! :)))) அதோட எங்களுக்கு ஒரே பையர் தான். இரண்டாவது படம் நான், என் அண்ணா, தம்பி. எங்க அண்ணா பொண்ணு அவங்க வீட்டுக் கஜானாவிலிருந்து இந்த சேமிப்புகளைப் பார்த்துட்டு எங்களுக்கெல்லாம் அனுப்பி இருக்கா. அதான் பகிர்ந்தேன். :))))

    ReplyDelete
  15. // நல்ல ஃபோட்டோகிராபர்! :))))// அதான் எப்படியோ மேனேஜ் பண்ணிட்டார்! அப்ப கணினி போட்டோஷாப் எல்லாம் இல்லையே? ரொம்ப திறமைசாலிதான்! :P

    ReplyDelete
  16. முதலாவது படம் நீங்கதான்னு நன்றாகத் தெரிகிறது! (வேறு யார் படத்தைப் போடப் போகிறீர்கள் என்ற லாஜிக் மட்டுமில்லை, முகத்தில் இப்போதைய ஜாடையும் தெரிகிறதே...

    இரண்டாவது படம் நீங்களே சொல்லிட்டீங்க... எல்லோருக்கும் கடைசியா வந்ததால டி என் பி எஸ் சி கொஸ்டின் பேப்பர் மாதிரி ஆகி விட்டது!

    ReplyDelete
  17. வாங்க வா.தி. ரயிலுக்கு நேரமாகலை?? வம்பு வளர்த்துட்டு இருக்கீங்க?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P

    :)))))))

    ReplyDelete
  18. முகத்தில் இப்போதைய ஜாடையும் தெரிகிறதே.//

    சரியாப் போச்சு போங்க. எப்போப் பார்த்தீங்க என்னை?? நான் உங்களைப் பார்த்ததே இல்லையே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
    தொப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.
    மயக்கம் போட்டு விழுந்துட்டேனாக்கும். :)))))

    ReplyDelete
  19. எங்கே பார்த்திருப்பேன் என்று யூகிக்க முடியுமா? :)))

    ReplyDelete
  20. தெரியலை ஸ்ரீராம், ஐடியா இல்லை. :(

    ReplyDelete
  21. மத்தியானம் ரெண்டு தரம் வந்தேன்; ரெண்டு தரமும் மின்சாரம் நோ. :)))

    கமென்ட் போகலைனு நினைச்சால் போயிருக்கு.

    கோபி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  22. ஆ! துப்பறியும் ஸ்ரீராம்?

    ReplyDelete
  23. நீங்கதானா போட்டோல.. (அப்புறம் என்ன கேள்வி?)
    சிரிச்ச முகத்துடன் போஸ் கொடுக்க பலருக்கும் தோணாது.. எப்பப் பாத்தாலும் ஹிஹிஹிஹினு சிரிச்சுட்டிருக்குறவங்க போட்டோக்கு மட்டும் உம்ம்னு இருப்பாங்க.
    இந்த போட்டோ அப்படியில்லாம இத்தனை வருஷம் கழிச்சும் நல்லாயிருக்கு. beautiful. பத்திரமா வச்சிருக்கீங்களே!

    ReplyDelete
  24. ஒரே விடை தான்.

    அதை எத்தனை விதத்தில், விதவிதமாகச் சொல்லி மகிழ்ந்திருக்கிறீர்கள்?..

    அதான். படிக்கப் படிக்க மனம் கவர்ந்தது.

    ReplyDelete
  25. ஆமாம்,ஸ்ரீராம் எப்படிக் கண்டு பிடிச்சார்னு தெரியலை. ஒருவேளை மழலைகள் ஆசிரியர் குழுவிலே பார்த்திருப்பார். :)))

    ReplyDelete
  26. அப்பாதுரை,

    அண்ணா கல்யாண ஆல்பத்திலே இருந்தது. அதிலே இருந்து தான் அண்ணா பொண்ணு ஸ்கான் பண்ணி இருக்கணும். :))))

    ReplyDelete
  27. அப்பாதுரை, என்னோட கல்யாணம் பத்தின பதிவுகளிலே எங்க கல்யாண ஊஞ்சல் படம், (கறுப்பு, வெள்ளை) மாலை மாற்றல், இன்னும் ஓரிரு படங்கள் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்தப் பதிவுகள் நீங்க படிச்சீங்களானு தெரியலை. நேரம் இருந்தால் பாருங்க. கல்யாணமாம் கல்யாணம் என்ற தலைப்பிலே எழுதி இருப்பேன். தொந்திரவு பண்ணறேனோ? :)))

    ReplyDelete
  28. வாங்க ஜீவி சார், ரசித்தமைக்கும், உளம் திறந்த பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  29. நீங்கதானே .. இதுல என்ன சந்தேகம் :))))

    ReplyDelete
  30. தோ பாருங்கப்பா, எல்கே எம்புட்டுச் சீக்கிரமா வந்து கண்டு பிடிச்சுட்டாரு! :))))))

    ReplyDelete
  31. //நீங்கள்தானா:)?//

    ஹிஹி. :))

    பெண்களூர் ரயில்வே ஸ்டேஷனில் நீங்க வந்த போது(2006ல) எடுத்த படத்தையும் போட்டு, அதுக்கும் இதுக்கும் ஆறு(அறுபது) வித்யாசங்கள் கண்டுபிடியுங்க பாக்கலாம்னு ஒரு போட்டி நடத்துவோமா..? :P

    ReplyDelete
  32. /நல்ல ஃபோட்டோகிராபர்! /

    ஆம், அருமையாக எடுத்திருக்கிறார்.

    இரண்டாவது படம் எடுக்க பட்ட விதம்.. கற்பனையில் காட்சியாக விரிந்து விட்டது.

    //(2006ல)//

    அதன் பிறகு வரவேயில்லையா பெங்களூர் பக்கம்?

    ReplyDelete
  33. முதல் படத்தைப் பார்த்ததுமே தெரிந்துகொண்டுவிட்டேன், நீங்கள்தான் என்று. (ஸ்ரீராம் எனக்கும் உங்கள் படம் அனுப்பியிருந்தார்.) எங்கள் வாசகர்கள் பற்றிய விவரங்கள் நெட்டிலே / சந்துல எங்கே கிடைத்தாலும், ஆசிரியர்கள் எல்லோரும் மற்ற ஆசிரியர்களுக்கு (எங்கள் ஆசிரியர்களுக்கு மட்டுமே) போட்டுக் கொடுத்துவிடுவோம்.
    இரண்டாவது படம் சுலபமாக யூகித்துவிடலாம்!

    ReplyDelete
  34. அம்பி, எங்கே இந்தப் பக்கம் காத்து வீசுது? இந்தியா வந்திருக்கீங்களோனு நினைச்சேன். வரலையாமே!

    அது சரி, இன்னும் நாப்பது வருஷம் கழிச்சு நீங்க உங்க இப்போதைய படத்தையும், அப்போதைய படத்தையும் பார்த்து நூறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்கணுமாக்கும். :P :P :P

    ReplyDelete
  35. ஒட்டக் கூத்தரே, உங்க வருகையே முதல் வருகை. அப்புறம் எப்படித் தெரியும் உங்களுக்கு? :))))) வரவுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  36. ரா.ல. இரண்டாவது படம் எடுத்த மாலைவேளை எனக்கு இன்னமும் நினைவில் இருக்கு. பெண்களூருக்கு அப்புறமா ஒரு தரம் வந்தோம். :)))) யாருக்கும் சொல்லலை. :))))

    ReplyDelete
  37. வாங்க கெளதம் சார், who is that black sheep? :P:P:P:P ஸ்ரீராம் அநேகமா மழலைகளிலே இருந்து தான் எடுத்திருக்கணும். இல்லைனா வல்லமையிலே. மழலைகள் படத்தைத் தான் வல்லமையிலே போட்டிருக்காங்க. :))))))

    ReplyDelete
  38. கல்யாணமாம் தொடர் தானே? படிச்சிருக்கேன். போட்டோ பாத்த ஞாபகமில்லை.. தேடிப்பாத்துடறேன்.

    ReplyDelete
  39. மதுரைக்கே உரிய சம்த்து அழகு. பியூட்டிஃபுல் கீதா.சந்தோஷமா இருக்கு.
    தம்பி அண்ணாவோட உங்கள் படமும் ரொம்ப நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  40. அருமையான இளமைக்காலப் படங்கள்.

    ReplyDelete