எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 02, 2012

சீப்பி, சீப்பியாய்ச்சாப்பிடுங்க!

பொன்ஸ் அக்கா சீப்பியின் செய்முறை கேட்டிருக்காங்க. அவங்க குட்டிப் பாப்பாவுக்குச் செய்து கொடுக்கணுமாம்.  சீப்பியை உப்புப்போட்டு ஒரு முறையிலும், இனிப்புச் சேர்த்து ஒரு முறையிலும் செய்யலாம்.  இரண்டையும் இங்கே எழுதுகிறேன்.  இந்த வலைப்பக்கம் பல தரப்புக்கும் போய்ச் சேருவதால் இங்கே எழுதுகிறேன்.   சாப்பிடலாம் வாங்க பதிவுப் பக்கம் பலருக்கும் தெரியாது.  ஆகவே அங்கே எழுதிப் பயனில்லை. :)))

தேவையான பொருட்கள்:

ஒரு கிண்ணம் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணை  ஒரு டேபிள் ஸ்பூன், பிசைய நீர்.  பொரிக்க எண்ணெய் அல்லது நெய்.

அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, பெருங்காயத் தூளை நன்கு கலந்து வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.  கொஞ்சம் கொஞ்சமாக நீரைச் சேர்க்கவும்.  மாவு ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் பிசைய வேண்டும்.  மாவைக் கையால் உருட்டும் பதத்துக்குப் பிசைய வேண்டும்.  பின்னர் அவற்றை நீளமான விரல்கள் போன்ற அளவுக்கு உருட்டி வைத்துக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அவற்றைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.  பல் முளைக்கும் பருவத்துக் குழந்தைகளில் இருந்து ஐந்து வயதுக் குழந்தைகள் வரை இவற்றைத் தாராளமாக உண்ணக் கொடுக்கலாம்.  இவற்றின் முனையைக் குழந்தைகள் வாயில் வைத்துச் சீப்பிக் கொண்டு ருசியை அறிந்து சாப்பிடுவதால் இதற்குச் சீப்பி எனப் பெயர்.

அடுத்து இனிப்புச் சேர்த்தது.  

மாவு வகைகள் மேற்சொன்ன அளவுக்கு ஒரு கிண்ணம் வெல்லம் போட்டுப் பாகு காய்ச்சவும்.  பாகு உருட்டினால் தக்காளிப் பழம் போல் உருள வேண்டும்  அந்தப் பதத்தில் எடுக்க வேண்டும்.

அரிசிமாவில் உளுந்து மாவு, வெண்ணெய் சேர்த்துக் கொண்டு தயாராக வைத்திருக்கவும்.  இதில் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.  கிளறிக் கொண்டே இருக்கவும்.  மாவு கெட்டிப் பட்டதும் பாகை நிறுத்திவிடவும்.  சற்று நேரம் நன்கு கிளறி விட்டுக் கைகளால் சீப்பி போல உருட்டிக் கொண்டு நெய் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.  இது வெல்லச் சீடை ருசிக்கு இருக்கும்.  வெல்லச் சீடை மாவிலேயும் முறுக்கு மாவிலேயும் சீப்பி செய்துடுவேன்.  ஆகவே அப்படியும் செய்யலாம்.  படங்கள் இப்போது இல்லை.  அடுத்த வாரம் செய்யும்போது எடுத்துப் போடறேன்.

14 comments:

  1. தேன்குழல்! ஐந்து வயதுக்கு மேல் இருந்தால் சாப்பிடக் கூடாதா?! :))

    ReplyDelete
  2. நோ படம், நோ கமென்ட்!

    ReplyDelete
  3. நான் கேட்க நினைத்ததை ஸ்ரீராம் கேட்டாச்சு!

    எத்தனை வயதானாலும் மனதளவில் குழந்தைகள் தானே நாம்! :)))

    ReplyDelete
  4. ம்ஹூம், ஸ்ரீராம், தேன்குழல் வேறே, சீப்பி வேறே. தேன்குழல் சொப்பிலே பண்ணறது. இது கையாலே உருட்டறது. சிலின்டர் ஷேப்பிலே! :))))))

    ReplyDelete
  5. வாங்க வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பண்ணினாத் தானே படம் போட முடியும்? :P:P:P

    ReplyDelete
  6. வாங்க வெங்கட், ஐந்து வயசுக்கு மேலேயும் சாப்பிடலாமே

    ஹிஹிஹி, எங்க வீட்டிலே பண்ணிட்டு நாங்க ரெண்டு பேரும் தானே சாப்பிட்டுட்டு இருக்கோம்! :)))))))

    மீ த ஒன் அன்ட் ஒன்லி பாப்பா இன் தி வலை உலகம்! தெரிஞ்சு வைச்சுக்கோங்க! :))))

    ReplyDelete
  7. வாங்க லக்ஷ்மி, செய்யும் போது தான் எடுக்கணும். :))))

    ReplyDelete
  8. ரொம்ப தாங்க்ஸ்!!!! எங்க கோகுலாஷ்டமிக்கு உள்ள‍ எழுதாம போயிடுவீங்களோன்னு நினைச்சேன்!

    ஆமாம், சீடை மாதிரி பண்ண‍னும்னு சொல்றீங்களே, சீடை மாதிரி இதுவும் வெடிக்குமா?

    ReplyDelete
  9. வாங்க பொன்ஸ் அக்கா, சீடையே சரியான பதத்தில் பிசைஞ்சு பண்ணினால் வெடிக்காது. உப்பை அப்படியே சேர்க்காமல் உப்பு நீராகச் சேர்த்துப் பிசையுங்கள். சீடையும் வெடிக்காது; சீப்பியும் வெடிக்காது. சீடைக்கு அதிகமாய்ப் பிசையாமல் கொஞ்சம் உதிராக இருந்தாலே போதுமானது. சீப்பிக்கு நன்றாகவே பிசைந்து கொள்ளலாம். :)))))

    ReplyDelete
  10. ஆமாம், தக்காளிப் பழம் போல் உருளணும்னா என்ன‍ ? தனியா கிண்ண‍த்துல தண்ணி வச்சிகிட்டு வெல்ல‍க் கரைசலை அதில் விட்டா அப்புறம் எடுத்து உருட்டினா, குட்டியா உருண்டையா வரணும், அதானே? அந்த உருண்டை சின்ன‍தா மிளகு சைஸ்ல இருந்தா போதும் தானே? - தக்காளிப் பழம் அளவுக்கு பெரிசா வரவேண்டியதில்லை தானே? :சீரியஸான கேள்வி, நெஜமா இந்த சந்தேகம் வந்துடுத்து....

    ReplyDelete
  11. பொன்ஸக்கா, தக்காளிப் பதம்னா தக்காளி சைஸுக்கு எல்லாம் இல்லை! :))) அதுவும் யு.எஸ். தக்காளி சைஸுனா போக வேண்டியது தான்!

    பாகைத் தண்ணீரிலே விட்டுக் கையாலே உருட்டினால் உருட்ட வர வேண்டும். அது மிளகு சைஸுக்கு உருட்டினாலும் ஓகே, தக்காளி சைஸுக்கு உருட்டினாலும் ஓகே! சரியா? இப்போப் பிரியுதா? :))))))

    ReplyDelete
  12. கீதாம்மா, எங்க வீட்டில் இன்னொரு குட்டி பாப்பா வந்தாச்சு இந்த வருஷம்.மறுபடியும் சீப்பு ரெசிபி தேடி வந்து பார்த்தேன். அப்படியே வச்சிருக்கீங்க.. ரொம்ப தேங்க்ஸ். உங்க லேட்டஸ்ட் பதிவையும் பார்த்தேன். இப்படியே ஹேப்பியா இருங்க... மறுபடியும் ரொம்ப தேங்க்ஸ்.

    போன முறை பண்ணினப்போ இது நல்ல வந்தது. எங்க முதல் வாண்டுக்கு அப்பதான் பல் வந்தது, நல்ல சீப்பி சாப்பிட்டது. இந்த குட்டி வாண்டு எப்படின்னு இனிமேதான் பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நினைவு வைச்சுட்டு மறுபடி வந்ததுக்கு நன்னி பொன்ஸக்கா! (இப்படிக் கூப்பிட்டு எத்தனை வருஷம் ஆகுது!) அது சரி, சின்னப் பயலா? அல்லது குட்டிக் குஞ்சுலுவா? அதோட இல்லாமல் நீங்க உங்க கொள்கைப் பிடிப்பிலே இருந்து மாறி இருப்பதும் சந்தோஷத்தைத் தருது! முன்னேயே சொல்ல நினைச்சுச் சொல்லலை! இப்போச் சொல்லிட்டேன்! (தைரியமா!) :)))))))))

      Delete