எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 05, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில்


போன வாரம் சனிக்கிழமையன்னிக்கு உறவினர்கள் சென்னையிலிருந்து வந்தாங்க.  அதுக்கு முன்னாலே இருந்தே வீட்டில் கொஞ்சம் வேலை அதிகமாய் இருந்தது.  இணையம் பக்கம் அதிகமா வர முடியலை.  எழுதறதுக்கு என்னமோ நிறைய இருக்கு.  சென்னையிலிருந்து வந்தவங்களை வரவேற்று அன்று ஓய்வு எடுத்துக்கொள்ள வைத்து மறுநாள் ரங்கநாதரைப் போய்ப் பார்த்துக் குசலம் விசாரித்து வரச் சொன்னோம்.  எங்களுக்கு வீட்டில் வேலை இருந்ததால் நாங்க போகலை.  மறுநாள் எல்லாருமாய்ச் சேர்ந்து கோயில்கள் செல்லத் திட்டம் போட்டோம்.  உ.பி.கோயில் போகலைனு சொல்லிட்டாங்க.  அதனால் சிங்கனாரைப் பார்த்துவிட்டு, நலம் விசாரித்துக் கொண்டு நேரே அகிலாண்டத்தைப் பார்க்க முடிவு செய்தோம்.  அதன் பின்னர் உத்தமனையும், பிக்ஷாடனரையும் பார்த்து, பிரம்மாவை என்னனு கேட்டுட்டுப் பின்னர் சமயபுரம் போகத் திட்டம்.  அங்கே எனக்கு ஆதி கண்ணனூர் ஆதி மாரியம்மனையும், விக்ரமாதித்தனும், பட்டியும் வேதாளத்தோடு விளையாடிய இடத்தையும்,  விக்கிரமாதித்தனோட உஜ்ஜையின் மகாகாளியையும் சேர்த்துப் பார்க்க ஆவல். ஆனால் நம்ம ரங்க்ஸ் அதற்குத் தடா போட்டுவிட்டார்.

வீட்டின் சர்வாதிகாரி சொன்னப்புறம் நாம் ஒரு அப்பாவி என்ன சொல்ல முடியும்? பேசாமல் கேட்டுக்கொண்டேன்.  வந்தவங்க கிட்டே நீ பாட்டுக்கு ஆதி மாரியம்மன், உச்சினிமாகாளினு எல்லாம் கதை விடாதேனு மிரட்டல் வேறே.  வேறே வழியில்லாமல் வந்தவங்க போற வரைக்கும் வாயைத் தைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறமா எங்கே போறதுனு யோசிச்சப்போத் தான் உத்தமர் கோயில் பிரம்மா இன்னொரு இடத்திலேயும் வந்து பாருனு சொல்லுவாரேனு நினைப்பு வந்தது. ஆஹா, இப்போ மொத்தத் தமிழ்நாட்டு மகாஜனங்களும் தங்கள் தங்கள் தலைவிதியை மாத்திக்கணும்னு திருப்பிடவூர் போறாங்களேனு நினைப்பு வந்தது.  சரி அங்கேயும் போய்ட்டு, பிரம்மபுரீஸ்வரரையும் பதஞ்சலியையும், வியாக்ரபாதரையும் பார்த்துட்டு அப்படியே ஐயனாரையும் அரங்கேற்றம் பண்ணின கதை என்னனு விசாரிக்கணும்.  ப்ளான் தயாராச்சு.  மறுநாள் காலம்பர எழுந்து கிளம்பத் தயார் செய்து வண்டி வந்ததும் டிரைவரோட சின்ன மீட்டிங் போட்டதிலே அவர் திருவெள்ளறையும் சேர்த்துக்குங்கனு ஆலோசனை சொல்ல திட்டத்தில் அதுவும் அவசரம் அவசரமாய்ச் சேர்க்கப் பட்டது.


புதிர் ஒண்ணுக்கு விடை: சிங்கம் திரும்ப அழைத்தது ஏன்?

எல்லாரும் கிளம்பினோம்.  ரம்மியமான சூழ்நிலையில் குடியிருந்த சிங்கத்தைக் கண்டு பேசிவிட்டுக் கிளம்ப மனசில்லாமல் அங்கிருந்து அகிலாண்டத்தைப் பார்க்கப் போனோம்.

புதிர் இரண்டு:
அகிலாண்டம் (ஹிஹிஹி) சொன்னது என்ன?   அங்கே ஏன் படம் எடுக்கலை?

 உள்ளே நுழைகையிலேயே அலுவலக அறையில் காமிராவுக்கு 30 ரூனு போட்டிருக்க அங்கே போய் டிக்கெட் கேட்டால் உள்ளே தான் வாங்கிக்கணும்னு சொல்லிட்டார்.  சரினு உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போனோம்.  கிட்டத்தட்ட கர்பகிரஹம் வந்தாச்சு.  உள்ளே நுழைய டிக்கெட் வாங்கறச்சே காமிரா டிக்கெட்டும் வாங்க நினைச்சா, அங்கே படம் எடுக்கக் கூடாதாம்.  வெளிப் பிரகாரத்தில் மட்டும் எடுக்கலாமாம்.  இதுக்கு எதுக்கு எனக்குக் காமிரானு நினைச்சுட்டு, "வேண்டாம் போங்க"  னு நான் கோவிக்க, காமிராவையும், பணத்தையும் வாங்கி சந்தோஷமாய் உள்ளே போட்டார் ரங்க்ஸ்.  திரும்பிப் போறச்சேயாவது எடுக்கலாம்னா, நீ   மட்டும் இங்கேயே தங்கி எடுத்துட்டு அங்கே இருக்கணும்; நாங்க எல்லாம் போறோம், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே எல்லாக் கோயிலுக்கும் போகலைனா அப்புறமா மூடிடுவாங்க; பார்க்க முடியாது." னு மிரட்டல் வர, ஒண்ணும் பேச முடியலை.
கையது கொண்டு மெய்யது பொத்திக் கொண்டு பேசாமல் கிளம்பினேன்.  அடுத்தது உத்தமர் கோயில் என்னும் பிக்ஷாண்டவர் கோயில்.  அதுக்கு முன்னாடி திருவானைக்கா கதையை என்னனு பார்ப்போம்.  என்ன படமா?  இன்னொரு தரம் திருவானைக்கா போறச்சே கட்டாயமா எடுத்துட மாட்டோமா?  திருவானைக்கா பத்தின செய்திகள் தொடரும்.

9 comments:

  1. மின்னல் வேகப் பயணம்! அதிரடி சுற்றுலாவா?

    ReplyDelete
  2. ஆஹா... அருமையான பகிர்வுகள் எங்களுக்குக் கிடைக்கப்போகுது. ஒவ்வொரு கதையா சொல்லிட்டு வாங்கம்மா.. கேட்க நாங்க தயார்.

    ReplyDelete
  3. நாமல்லாம் ஊர்சுத்துவதே இங்க எல்லாருடனும் பகிர்ந்துகொள்ளத்தான்னு நினைக்கிரேன். நானும் இப்படிதானே எங்க போனாலும் அதை பதிவா போட்டுடரேன் யாம் பெற்ற இன்பம்/////////////

    ReplyDelete
  4. ஊர் சுற்றவா :)) வருகின்றோம்.

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், அதிரடிச் சுற்றுலா தான். முதல்லே நாங்க போறதா இல்லை; அப்புறமா அவங்க கூப்பிட்டதாலே போனோம். :))))

    ReplyDelete
  6. வாங்க வெங்கட், கதையெல்லாம் ரெடியா இருக்கு. போடணும். :))))

    ReplyDelete
  7. ஆமாம் லக்ஷ்மி, பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் தானே. உங்க பதிவுக்கு நாளைக்கு வரணும். பார்ப்போம். இங்கே மறுபடி மின் தடை ஜாஸ்தி ஆகி இருக்கிறதாலே கிடைக்கிற நேரத்துக்குள்ளே பார்க்க வேண்டி இருக்கு. :(((

    ReplyDelete
  8. வாங்க மாதேவி, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. நன்றிம்மா.

    ReplyDelete
  9. சொல்லுங்க சொல்லுங்க. மாமா பாவம்.. அவரை சர்வாதிகாரி என்று சொல்றீங்களே

    ReplyDelete