எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 11, 2013

திரிசிரபுரம் திருச்சியான கதை!


வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஏற்பட்ட போட்டியில் கைலை மலையைப் பெயர்த்து வாயு வீச கைலையின் ஒரு பகுதி இங்கே விழுந்ததாகவும், இத்தலத்தில் இருந்த மூன்று தலைகளையுடைய திரிசிரன் என்னும் அசுரன் ஈசனை நோக்கித் தவம் இருந்ததாகவும், பல்லாண்டுகள் தவமிருந்து தன் இரு தலைகளை அக்னியில் போட்டபின்னரும் காட்சி தராமல் போகவே, மூன்றாவது தலையையும் போடுகையில் ஈசன் காட்சி கொடுத்து இழந்த இரு தலைகளையும் திரும்ப அளிக்கிறார்.  அசுரனின் வேண்டுதலுக்காக திரிசிரநாதர் என்ற பெயருடன் இங்கேயே இருந்து அருள் பாலித்தார்.  இதன் காரணமாகவே இவ்வூரும் திருச்சிராமலை என அழைக்கப்பட்டு இப்போது திருச்சி என அழைக்கப்படுகிறது.

முதல் கால அபிஷேஹங்கள் முடிந்து, வாழைத்தார் கொண்டு போயிருந்தவங்ககிட்டே இருந்து அவற்றை வாங்கிக் கொண்டு ஸ்வாமிக்கு எதிரே வைத்தனர்.  பின்னர் சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனைகள் ஆரம்பித்தன.  இங்கே பணம் கட்டிட்டு ஸ்வாமியைப் பார்க்க வேண்டும் என்பது இல்லை என்பதோடு கர்பகிரஹத்துக்கு அடுத்த அர்த்த மண்டபத்திலேயே நின்று தாயுமானவரைத் தரிசிக்க முடிந்தது.  எவ்வளவு பெரியவர்!  ஒரு க்ஷணம் தஞ்சை பிருகதீஸ்வரரோ என்னும்படியான மயக்கம் ஏற்பட்டது.  ஆனால் அவர் இவரை விடப் பல மடங்கு பெரியவர்.  என்றாலும் இவரும் மிகப் பெரியவரே.  எல்லாவற்றிலும்.  ராக்ஷஸ லிங்கம் என அழைக்கின்றனர்.  அங்கே தரிசனம் முடிந்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு வாழைத்தாரை விநியோகம் செய்யச் சொல்லித் திரும்பக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு விநியோகம் செய்ய ஆரம்பித்தோம்.  நம்மைப் போலவே கொண்டு போன எல்லாரும் விநியோகம் செய்ய, பழமயம். :) வேறொருத்தர் பாலும், பானகமும் நிவேதனம் செய்திருக்க அனைவருக்கும் அதுவும் கிடைத்தது.  மலை ஏறிய சிரமம் தீரப் பாலும், பானகமும் குடித்துவிட்டுப் பின்னர் முடிந்தவரை பழங்களை விநியோகம் செய்த பின்னர் அங்கிருந்து அம்மன் சந்நிதிக்குச் சென்றோம். அம்மன் சந்நிதியில் திரை போட்டிருந்தனர்.  அலங்காரம் ஆகிக் கொண்டிருந்தது.

அலங்காரம் முடிந்து அங்கும் அர்ச்சனைகள் முடித்துக் கொண்டு குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு மட்டுவார் குழலியைக் கண்கள் நிறையத் தரிசனம் செய்து கொண்டோம்.  இந்தக் கோயிலின் கொடிமரம் பின்பக்கமாக இருக்க, ஒரு கணம் திகைத்தோம்.  பின்னர் புரிந்தது.  கிழக்கு நோக்கியே இருந்த ஈசன், சாரமாமுனிவருக்காக மன்னனைத் தண்டிக்க வேண்டி மேற்கு நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவர் அப்படியே மேற்கு நோக்கியே இருந்துவிட, கொடிமரம் சந்நிதி வாயில் இரண்டும் அப்படியே முன்னிருந்தபடியே இருந்து விட்டது.  ஆனால் இப்போதும் வழிபாடுகள் நடக்கையில் சந்நிதிக்குப் பின்னால் இருந்தே மேளதாளம் வாசித்துத் தேவாரம் பாடுகின்றனர்.  இது இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் ஆகும்.  இங்குள்ள தக்ஷிணாமூர்த்தியை ஞான தக்ஷிணாமூர்த்தி என்கின்றனர்.  நாயக்கர் காலத்து அரசரான விஜயரகுநாத சொக்கநாதர் ஆட்சியின் போது கேடிலியப்ப பிள்ளைக்கு மகனாப் பிறந்த ஓரு ஆண் மகவுக்குத் தாயுமானவரின் பெயரையே வைத்து வளர்த்து வந்தனர்.

அந்தக் குழந்தை வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்தவனாக மன்னனிடம் பணி புரிந்த சமயம் ஈசனே குருவாக இருந்து உபதேசம் செய்து ஆட்கொண்டதாய்ச் சொல்கின்றனர்.  இவரை மெளன குரு என்ற பெயருடன், அழைக்கின்றனர்.  மெளன குரு மடம் ஏற்கெனவே மலை ஏறுகையிலேயே பார்த்தோம். அருணகிரியாரின் திருப்புகழில் கூட இந்தக் கோயில் இடம்பெற்றிருப்பதோடு அல்லாமல், தக்ஷிணாமூர்த்தியைக் குறித்து "தர்ப்ப ஆசன வேதியன்" எனப் பாடி இருப்பதாகவும் தெரிய வருகிறது.  மற்றும் மர வடிவில் மஹாலக்ஷ்மியும், மர வடிவில் துர்க்கையும் இங்கே காணப்படுகின்றனர்.  சாரமாமுனிவருக்கும் சிலையும், அவருக்கு அருகே விஷ்ணு துர்கையும் காணப்படுகின்றனர்.  தாயுமானவர் என்னும் பெயரைப் பெற்றதின் காரணமான சம்பவம் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாசம் பிரம்மோற்சவத்தில் நடத்தப் படுகிறது.  சோமாஸ்கந்தர் வடிவில் உற்சவர் அலங்காரங்களுடன் வர, அவர் அருகே கர்ப்பிணிப் பெண்ணான ரத்னாவதியின் சிலையை வைத்துத் திரை போட்டு மறைக்கின்றனர்.  பின்னர் ரத்னாவதியின் மடியில் குழந்தை ஒன்றை அமர வைத்து அலங்கரித்துத் திரையை விலக்கி தீபாராதனை காட்டுகின்றனர்.  பிரசவ மருந்துகளும், தைலங்களுமே பிரசாதமாய்க் கொடுக்கப் படுகிறது.  மேலும் ஈசன் இங்கிருந்து புறப்பாடாகும் வேளையில் சங்கு ஊதி அறிவிக்க வேண்டி சங்குச்சாமி என்பவரும் கொடிமரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே காணப்படுகிறார்.

அடுத்து உச்சிப் பிள்ளையார் தான்.  இந்தக் கோயிலில் தாய், தந்தை, மூத்த மகன் மூவரும் தனித்தனிக் கோயில்களில் இருந்து அருள் பாலிக்கின்றனர். இக்குன்றை ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு வடிவத்தில் பார்க்க முடியும்.  நந்தி, சிம்மம், விநாயகர் என ஈசன், அம்பிகை, பிள்ளையார் ஆகியோருக்கு ஏற்றதான வடிவங்களில் காண முடியும்.



தாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழி.



உச்சிப் பிள்ளையாருக்குச் செல்லும் முன் உள்ள தளத்தில் இருந்து தெரியும் திருச்சி நகரின் காட்சி பறவைப் பார்வையில்.



உச்சிப்பிள்ளையாரின் படிகளை ஒட்டித் தெரியும் காட்சி. இங்கிருந்து உச்சிப் பிள்ளையாருக்கும் குறைந்தது ஐம்பது, அறுபது படிகள் போல் ஏறித்தான் போகணும்.  உச்சியிலே தொங்கிட்டு இருக்கார் பிள்ளையார்.  அவரை நாளைக்குப் பார்ப்போமா?


19 comments:

  1. அங்கே சமணர் படுகை இருக்கு தெரியுமா?

    ReplyDelete
  2. Good one! Photos.... -- oh I wish I were in trichy! I like uchchi pillaiyaar temple... nearby -- there s this hotel surya... very nice coffee! :) when u enter the main guard gate-- guess there is this hotel-- sarda? I forgot... U get jigar thanda.... still there?? :) oh yeah-- the pillaiyaar... yes.. I forgot about him!

    ReplyDelete
  3. நீங்கள் ஸ்ரீரங்கம் வந்து செட்டிலாகி, உச்சி மலை மீது வீற்றிருக்கும் பிள்ளையார் பற்றி எழுத வேண்டும் என்று இருக்கிறது பாருங்கள்.. நாளை பார்க்கலாம்.

    ReplyDelete
  4. குதிரைக்குப் பட்டம் கட்டியது போல நாங்கள் உ.பி மட்டுமே பார்த்து வந்திருக்கிறோம் என்று தெரிகிறது. தாயுமானவரை பார்க்க விட்டிருக்கிறோம். அடுத்த முறை பார்க்க வேண்டும். இந்தக் காலத்தில் யாராவது இறைவனைக் காண தவம் இருக்கிறார்களோ... தலை, கை, கால் எல்லாம் கிள்ளிப் போட்டு இல்லாவிட்டாலும் மோன தவத்தில்?

    ReplyDelete
  5. படத்துடன் அருமையான கதையையும், திருச்சி பெயர் காரணத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நாளை நானும் உங்களுடன் தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. வாங்க ஜேஜே, தெரியும், ஆனால் இருந்த அலுப்பிலும், களைப்பிலும் போக முடியலை. அதோடு கூட வந்தவங்களுக்கும் அதிலே ஆர்வம் இருக்கணுமே! :)))))

    ReplyDelete
  7. வாங்க மாதங்கி, ஜனவரியில் வரப்போவதாய்ச் சொன்ன நினைவு! :)))) எப்போ வரப் போறீங்க? அநேகமா மாசக்கடைசியிலே நாங்க சென்னை போகலாம். மார்ச் முதல் வாரம் திரும்பலாம். ஆகையால் அதுக்கு முன்னால், அல்லது அதுக்குப் பின்னால் வாங்க. :)))

    ReplyDelete
  8. வாங்க ஜீவி சார், கருத்து ஒண்ணும் சொல்லலையே? :))))

    ReplyDelete
  9. வாங்க ஸ்ரீராம், ஏறும்போதே தாயுமானவர் கோயிலுக்குச் செல்லும் வழினு அறிவிப்புப் பலகையோட தலவரலாறு அறிவிப்புப் பலகையும், தலவரலாறு ஓவியங்களையும் பார்க்க முடியுமே? ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கோம்.

    ReplyDelete
  10. @ஸ்ரீராம்,

    இந்தக் காலத்திலும் தியானத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பவர்களை அறிவேன். அதுவும் ஒரு தவம் தானே!

    ReplyDelete
  11. வாங்க மீனாக்ஷி, உச்சிப் பிள்ளையாரையும் பார்த்துடலாம்.

    ReplyDelete
  12. Planning for a trip in March 1st week... Had earlier planned to come in Jan. but I fell ill-- so couldn't make it! :)

    ReplyDelete
  13. திருச்சிராமலை பெயர்க் காரணம் தெரிந்து கொண்டேன்.

    உச்சி மலைக்கு வருகின்றேன்.
    மலையிலிருந்து நகரைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    ReplyDelete
  14. திருச்சி பெயர் காரணம் அருமை.

    நிறைய சிறப்பான தகவல்கள்.படங்கள் எல்லாம் மிக அழகு.

    மலையிலிருந்து பார்க்கும் போது ஸ்ரீரங்கத்தை சுற்றி ஓடும் காவிரியும்,கொள்ளிடமும் ரங்கநாதரின் கோவிலுக்கு ஒரு மாலை போட்டது போல் இருக்கும் என்று சொல்லிக் கேள்வி பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  15. திருச்சி பெயர்க்காரணம் அறிந்து கொள்ள முடிந்தது...

    தாயுமானவரை பார்த்துட்டு உங்க கூட உச்சி பிள்ளையாரை பார்க்க வந்துண்டிருக்கேன் மாமி. பார்த்து அழைச்சுண்டு போங்கோ...:)

    ReplyDelete
  16. மாதங்கி, மறு வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  17. வாங்க மாதேவி, ஆமாம், உச்சியிலே இருந்து நகரைப் பார்க்கப் பார்க்கக்கண் கொள்ளாக் காட்சி தான்.

    ReplyDelete
  18. வாங்க ராம்வி, கொள்ளிடம் இங்கே இருந்து தெரியாது. :)

    ReplyDelete
  19. வாங்க கோவை2தில்லி, உங்களை நான் பார்த்து அழைச்சிண்டு போகணுமா? ஹிஹிஹிஹிஹி!

    ReplyDelete