எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 18, 2013

உஜ்ஜையினியின் காளி இங்கே திருச்சியில் இருக்கா!


சென்ற மாதம் சென்ற இந்தப் பயணத்தில் நாங்கள் முதல் நாள் ரங்கநாதரைத் தரிசித்துவிட்டுத் துளசிப் பிரசாதமும் கிடைத்தது என்பதை ஏற்கெனவே சொன்னேன்.  மறுநாள் காலை முதலில் காட்டழகிய சிங்கத்தைத் தரிசித்தோம்.  அருமையான கோயில்.  ஏற்கெனவே  இந்தக் கோயில் குறித்துப் பதிவு போட்டுவிட்டேன்.  அடுத்து நாங்கள் சென்றது சமயபுரம்.  சமயபுரம் குறித்தும் ஏற்கெனவே எழுதிவிட்டேன்.  ஆனால் இம்முறை சென்ற முறை போல் எல்லாம் இல்லாமல் உள்ளே நுழைய 25 ரூபாய் டிக்கெட் எடுத்தும் சுற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றிப் போக வேண்டி வந்தது.  முன்னெல்லாம் 25 ரூ டிக்கெட்டுக்கு நேரே உள்ளே செல்லலாம்.  ஆகஸ்ட் மாதம் சென்றபோது கூட அப்படித் தான் போனோம்.  அதுக்கப்புறமா மாத்திட்டாங்களாம்.  திருப்பதி தரிசனம் போல வளைந்து வளைந்து செல்கிறது பாதை.  பாதை சரியாகவும் இல்லை.  ஒரே கிராவலாய்க் கொட்டி இருக்காங்க.  சின்னதாய்க் கடுகு பட்டாலே துடித்துப் போகும் எனக்கு அந்தப் பாதையில் நிற்க, நடக்க என ஒரு வித்தையே செய்ய வேண்டியாச்சு.  எல்லாருமே கஷ்டப் பட்டோம். குறைந்தது ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் சுற்றினதும் தான் சந்நிதிக்கு நேரே உள்ள மண்டபத்துக்கே வர முடிந்தது.

அங்கே தரிசனம் முடிச்சுட்டு நேரே இனாம் சமயபுரம்  மற்றும் உச்சிமாகாளி கோயில் இருக்கும் மாகாளிபுரம் போக ஆயத்தமானோம்.  இம்முறை வந்த விருந்தாளிகளிடம் ஏற்கெனவே நான் இந்த ஆதி சமயபுரம் குறித்தும், உஜ்ஜையினி மாகாளி  குறித்தும் வேதாளம் குறித்தும் சொல்லி இருந்தேன்.  ஆகையால் நம்மவரால் வாய் திறக்க முடியலை.  ஹிஹிஹி.  முதலில் நாங்கள் சென்றது  மாகாளிபுரம் என்னும் மாகாளிக்குடி.   சமயபுரம் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாகவே இது இருக்கிறது.  முதலில் இந்தக் கோயிலுக்குத் தொண்ணூறுகளில் என் தம்பியோடு சென்றோம்.  அதன் பின்னர் இருமுறை நாங்க இரண்டு பேரும் போயிருக்கோம்.  நாங்க போனதைப் பதிவாயும் போட்டிருக்கேன்.  படங்கள் போடவில்லை.  இந்தக் கோயிலில் தான் நம்ம விக்கிரமாதித்தன் வழிபட்டானாம்.  காடாறு மாசம், நாடாறு மாசம் என வாழ்க்கை நடத்திய விக்கிரமாதித்தன் ஒரு சமயம் காடாறு மாசத்தின் போது ஒரு சமயம் இங்கே காடாறு மாசம் தங்க வந்ததாயும், அப்போது தன்னுடன் கொண்டு வந்த காளி சிலையை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டதாகவும், திரும்பச் செல்கையில் அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.




விக்கிரமாதித்தன் எவ்வளவோ முயன்றும் அந்தச் சிலையை எடுக்க முடியாததால் காளியிடம் கெஞ்சுகிறன் தன்னுடன் வரும்படி.  காளியோ தான் இங்கேயும் இருக்க ஆசைப்படுவதாயும் தன் சக்தி இங்கும் தங்கும் என்றும் கூற வேறு வழியின்றி அங்கேயே அந்த அம்மனை அப்படியே விட்டுவிட்டு வழிபாடுகள் செய்து வந்தான். ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்து வந்திருக்கிறது அல்லவா?  அந்தக் கோயில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் கோயில்.  அம்மன் அர்த்த்நாரீஸ்வர வடிவத்தில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியாகத் தாண்டவக் கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில், ஆனால் அதே சமயம் சாந்தமான பாவனையில் காணப்படுகிறாள்.  அர்த்த நாரீஸ்வர வடிவமும் விசித்திரமாகக் காணப்படுகிறது.  வழக்கமாய் அம்பாள் இடப்பக்கமும், ஸ்வாமி வலப்பக்கமுமாய்க் காணப்படும் வடிவம் மாறி அம்பாள் வலப்பக்கமும், ஸ்வாமி இடப்பக்கமுமாய்க் காண்கிறோம்.  அதோடு அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு,என்றெல்லாம் கைகள் இல்லாமல் மூன்று கைகளும் உள்ளன. அம்மனுக்குள்ளாக ஈசன் அடக்கம் எனச் சொல்வதைப் போல இங்கும் மூலஸ்தானத்தில் விமானத்தின் மீது ஒரே கலசம் காணப்படுகிறது. பொதுவாகச் சிவன் கோயில்களில் சிவன் சந்நிதியின் மேல் மட்டுமே  ஏக கலசம் காணப்படும்.  ஆனால் இங்கே அம்பாள் கோயிலிலும் ஏக கலசம் காணப்படுகிறது.

11 comments:

  1. விக்ரமாதித்தன் கதையில் வரும் மாகாளிபுரம் கோயில் இது தானா! வெக்காளி அம்மானை இதுவரை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை...:(

    சமயபுரத்துக்கு ரோஷ்ணி 45 நாள் குழந்தையாக இருந்த போது எடுத்து சென்றேன். மாமனார், மாமியார், நாத்தனாருடன்...

    அடுத்த முறையாவது கணவரோடு செல்ல வேண்டும். வேண்டுதல் பாக்கி இருக்கு.

    ReplyDelete
  2. உஜ்ஜைனி மாகாளி என்றதுமே பட்டி-விக்ரமாதித்தன்தான் வந்தார்கள்!

    //வழக்கமாய் அம்பாள் இடப்பக்கமும், ஸ்வாமி வலப்பக்கமுமாய்க் காணப்படும் வடிவம் மாறி//

    இடம் கொடுக்கக் கூடாது என்பார்களே....!!!! :)))))

    ReplyDelete
  3. சமயபுரம் சென்றிருந்தாலும், காளி/ஆதி சமயபுரம் கோவில்களுக்குச் சென்றதில்லை. அடுத்த முறை வரும்போது செல்ல வேண்டும் - பார்க்கலாம்.....

    ReplyDelete
  4. விக்கிரமாதித்தன் வணங்கிய உஜ்ஜையினி மாகாளி கோவில் பற்றிய தகவலும் படங்களும் அருமை.

    ReplyDelete
  5. 25 ரூபாய் டிக்கெட் எடுத்தும் சுற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றிப் போக வேண்டி வந்தது. முன்னெல்லாம் 25 ரூ டிக்கெட்டுக்கு நேரே உள்ளே செல்லலாம். ஆகஸ்ட் மாதம் சென்றபோது கூட அப்படித் தான் போனோம். அதுக்கப்புறமா மாத்திட்டாங்களாம். திருப்பதி தரிசனம் போல வளைந்து வளைந்து செல்கிறது பாதை. பாதை சரியாகவும் இல்லை. ஒரே கிராவலாய்க் கொட்டி இருக்காங்க. சின்னதாய்க் கடுகு பட்டாலே துடித்துப் போகும் எனக்கு அந்தப் பாதையில் நிற்க, நடக்க என ஒரு வித்தையே செய்ய வேண்டியாச்சு. //

    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று அப்படியே விட்டு விட்டார்கள் போலும்.
    எனக்கும் உங்களை மாதிரி தான். என் கணவர் அனிச்ச மலரோ உடம்பு என்று கேலி செய்வார்கள்.
    உஜ்ஜையினி காளி பார்க்கவில்லை வந்து பார்க்க வேண்டும்.
    விக்கிரமாதித்தன் பூஜித்த காளி என்றவுடன் ஆவல் அதிகமாகிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க கோவை2தில்லி, வெக்காளி அம்மன் வேறே, இந்தக் காளிவேறே. இவள் உஜ்ஜையினி மஹாகாளி. வெக்காளி அம்மன் தான் திரிபுரேஸ்வரராக இருந்த செவ்வந்தி நாதர் என்ற தாயுமானவர் மணல் மாரி பொழிந்த போது உறையூரைக் காத்து ரக்ஷித்தது. அது பின்னர் விபரம் எழுதறேன். இவள் இங்கே சமயபுரத்திலிருந்து இரண்டே மைலுக்குள் இருக்கும் உஜ்ஜையினி மஹாகாளி.

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், ஆமாம் இடம் கொடுக்காமலேயே இருந்துட்டா ஆனந்த செளபாக்கிய சுந்தரி. :))))

    ReplyDelete
  8. வாங்க வெங்கட், பலருக்கும் இந்தக் கோயில்கள் குறித்துச் சரியாத் தெரியலை. அதனால் கூட்டமும் இருக்காது. கிட்டக்கப் போய் நிம்மதியாத் தரிசனமும் பண்ணலாம். :)))))

    ReplyDelete
  9. வாங்க ராம்வி, கருத்துக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, ஒரு தரம் வந்து பாருங்க. இந்தக் கோயில்கள் குறித்த தகவல்கள் சரியாகப் பொதுமக்களைச் சென்றடையாததால் அங்கிருக்கும் உள்ளூர் மக்களைத் தவிர மற்றவர்களுக்கு அவ்வளவாத் தெரியலை. திருச்சியிலே இருக்கிறவங்க, ஸ்ரீரங்கத்திலே இருக்கிறவங்களிலே கூட பலருக்கும் தெரியலை. :))))

    ReplyDelete
  11. சமயபுரம் நேரடி தர்சனம் கிடைக்கவில்லை.
    உங்கள் பகிர்வின் மூலம் உஜ்ஜையினி மஹாகாளி தர்சனங்கள் கிடைத்தது.

    ReplyDelete