எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 08, 2013

குட்டி ஆனை !

இந்தக் குட்டியானை திருப்பனந்தாள் மடத்திலே இருந்தது.  நாங்க அந்த மடத்துக்கு 2,3 வருடம் முன்னே போனப்போ கஜபூஜைக்காக வந்துட்டு இருந்தது.  தெய்வானை என்று அழைத்திருக்கின்றனர்.  உண்மைப் பெயர் அம்பிகாவாம்.அதை நிறுத்திப் படம் எடுத்தேன்.  பூஜை செய்யறச்சே எடுக்கணும்னு ஆசை.  ஆனால் மடாதிபதியின் அனுமதியைப் பெற வேண்டும்,  மானேஜர் மூலம் பெறலாம் எனில் அவர் அன்னிக்கு வரலை.  அனுமதி தரலை. நல்லா விளையாடிட்டு இருந்தது.  ரொம்பவே பிடிச்சது எனக்கு.  பாருங்களேன் நிறத்தை! எவ்வளவு பளிச்சுனு இருக்கு!  இந்தக் குட்டியானை திடீர்னு நேத்திக்கு மர்மமான முறையில் இறந்து விட்டதாம்.  பேப்பரில் படிச்ச ரங்க்ஸ் எனக்குச் சொல்ல நானும் பேப்பரைப் பார்த்தேன். நல்லாத் தான் இருந்திருக்கு.  ஏன் செத்துப் போச்சுனு புரியலைங்கறாங்க. பரிசோதனைக்கு ரத்த சாம்பிள் அனுப்பி இருக்காங்களாம். திருப்பனந்தாளிலே எல்லா மக்களும் இதன் மேல் மிக அன்பாக இருந்திருக்காங்க.  இதை அழுது கொண்டே அடக்கம் செய்தார்களாம்.  செய்தி படிச்சதில் இருந்து ரொம்பவே வருத்தம்! ஏற்கெனவே நிறைய யானைங்க ரயிலில் அடிபட்டுச் செத்துட்டு இருக்குங்க. யானைகளே குறைஞ்சுடுமோனு கவலையாப் போயிடுத்து!!

22 comments:

  1. Miga arumayana padhivu... en thamizh kavithaigal vasikka www.nisu1720.blogspot.com

    ReplyDelete
  2. மிகவும் வருத்தமாக இருக்கிறது...

    ReplyDelete
  3. அபிராமியைத் தொடர்ந்து இந்தக் குட்டியா? வருத்தமாக இருக்கிறது என்ன கோளாறு என்று கண்டறியப் பட வேண்டும்.

    ReplyDelete
  4. தெய்வானை என்ற அம்பிகாகுட்டி இறந்தது மிகவும் வருத்தமாய் இருக்கிறது. குட்டி யானை படம் அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  5. ஆனை படத்தை பாத்து கொஞ்சம் ரசிச்சுட்டுதான் நீங்க எழுதி இருக்கறதையே படிக்க
    ஆரம்பிச்சேன். படிச்சதும் கண்கலங்கிட்டேன். எனக்கு தாங்கல. எவ்வளவு அழகா இருக்கு இந்த குட்டி.

    நான் வேலை பாத்துண்டு இருந்த போது எங்கள் அலுவலகத்துக்கு ரொம்ப பக்கத்துலதான் அகஸ்தியர் கோவில் இருக்கும். கோவில்ல சிவன், பெருமாள் இரண்டு சன்னதியுமே உண்டு.மூலவர்கள் எல்லாருமே சின்ன சின்னதா ரொம்ப லட்சணமா நின்னுண்டு இருக்கா மாதிரிதான் வடிவமைச்சு இருக்கும். அடிக்கடி சுவாமிகள் எல்லாரும் அந்த கோவிலுக்கு வருவா. சுவாமிகள் வரும்போது ஆனை வரும். அது வாசல்ல நிக்கும். நாள் தவறாம அந்த கோவில் போயிட்டுதான் ஆபீஸ் போவேன். ஒரு முறை ஒரு குட்டி ஆனையை அழைச்சுண்டு வந்துட்டா. அது ஒரு நொடி கூட சும்மா இருக்காம தலையை தலையை ஆடிண்டு, போறவா வரவா எல்லார் மேலயும் தும்பிக்கையை நீட்டிண்டு அலங்காரத்தோட கொள்ளை அழகா இருந்துது. நான் ரசிச்சு ரசிச்சு அங்கேயே நின்னுண்டு ஆபீஸ் போக கூட மனசில்லாம இருந்தேன். அந்த ஆனை பாகன், இது அம்மாக்கு கடைசி நிமிஷத்துல உடம்பு சரி இல்லாம போனதால இதை கூட்டிண்டு வர மாதிரி ஆயிடுத்தம்மா. பாருங்க இது ஒரு நிமிஷம் கூட இது சும்மாவே இருக்க மாட்டேங்கறதுன்னு சொல்லி
    ரொம்ப சலிச்சுண்டான். நான் அது அழகுல மயங்கி போய் நின்னுண்டே இருந்து அன்னிக்கு ஆபீஸ் லேட்டாதான் போனேன். இன்னிக்கும் என் மனசுல அந்த ஆனை இருக்கு. இப்ப இந்த படத்தை பாத்தபோது அந்த ஆனை நினைவுதான். ஆனா பதிவை படிச்சதும் மனசு வெறுத்து போய்டேன்.

    ReplyDelete
  6. இறந்தாலும் ஆயிரம் பொன்.

    ReplyDelete
  7. அச்சச்சோ !!! :( Please update if you get to know the reason for death.

    ReplyDelete
  8. அச்சச்சோ !!! :( Please update if you get to know the reason for death

    ReplyDelete
  9. குட்டியானை மனதை கலங்கவைத்துவிட்டதே ..!

    ReplyDelete
  10. குட்டியானை மனதை கலங்கவைத்துவிட்டதே ..!

    ReplyDelete
  11. சுகுமார், முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. வா.தி. நன்றி.

    ReplyDelete
  13. டிடி, பல மாதங்கள் கழித்து வந்ததுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. ஸ்ரீராம், என்னனு இன்னும் தெரியலை. :(

    ReplyDelete
  15. கோமதி அரசு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. மீனாக்ஷி, ஆனைக்குட்டியைப் பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. செய்த்துப் போனது ரொம்ப வருத்தமாத் தான் இருக்கு! :(

    ReplyDelete
  17. அப்பாதுரை, புதைச்சுட்டாங்க, அதனால் எதுவும் செய்ய முடியாது.

    ReplyDelete
  18. கவிதா, வருகைக்கு நன்றி தெரிஞ்சால் பகிர்ந்துக்கறேன்.

    ReplyDelete
  19. ராஜராஜேஸ்வரி, வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  20. குட்டி யானை இறந்தது மிகவும் வருத்தமா இருக்கு....அழகா இருக்கு :(

    ReplyDelete
  21. அழகோ அழகு!

    இப்படியாகிவிட்டதே :(
    மிகுந்த கவலையாகிவிட்டது.

    ReplyDelete