ஹிஹிஹி,அருணாசலம் படம் என்னோடஆன்மீகப் பயணம் பக்கத்திலே இருந்து எடுத்தேன். இந்தப் படம் என்னோட பிகாசா ஆல்பத்திலே கணினியிலே இருக்கு. நான் மடிக்கணினியில் எழுதுவதால் பதிவில் இருந்தே சுட்டுப்போட்டுட்டேன். எப்படியோ படம் என்னோடது தானே! எங்கள் ப்ளாக் போடற படத்துக்குப் போட்டியா இதுவரைக்கும் வேறு கிடைச்சுட்டு வருது. பார்ப்போம், அடுத்த வாரத்தில் இருந்து! :))))))
நேத்திக்கு என்னோட நீண்ட நாள் நண்பரைச்சந்தித்தேன். நேத்திக்கு மதுரை போனோம். மாட்டுத்தாவணியில் இருந்து நேரே மீனாக்ஷியைத் தரிசிக்கச் சென்றோம். எப்போதும் தெற்கு கோபுர வழியாச் செல்வோம். இல்லைனா மேலகோபுரம்வழி. நேத்து வடக்கு கோபுரம் வழி சென்றோம். ஹைதை குண்டுவெடிப்பு எதிரொலி சோதனை மேல் சோதனை. உள்ளே மீனாக்ஷி ஆனந்தமாக ஸஹஸ்ரநாம அர்ச்சனாதிகள் முடிந்து உச்சிக்காலத்துக்குத் தயாராகக்காத்திருந்தாள். நிதானமாகத் தரிசனம்செய்து கொண்டோம். பின்னர் சுவாமி சந்நிதிக்கு வந்து அங்கேயும் நன்றாக தரிசனம் முடித்துக் கொண்டு நேரு நகரில் என் அண்ணா வீடு செல்கையில்வடக்கு ஆவணிமூல வீதி, வடக்குமாசி வீதி, மேல மாசிவீதி,சம்பந்த மூர்த்தித்தெரு வழியே ஆட்டோ செல்கையில், ராமாயணச் சாவடி கடந்ததைக் கவனிக்கவில்லை. அல்லது இப்போ இல்லையா? ஒரு மண்டபம் இடிபாடுகளில் இருந்தது. அதான் ராமாயணச் சாவடியா? :( வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் படிகள் தரிசனம் கிடைத்தது. வடக்கு ஆவணி மூலவீதியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடம் இப்போது காலி மைதானமாக உள்ளது. அங்கே எத்தனை முறை பூக்கள் வாங்கப் போயிருக்கோம் என நினைத்துப் பார்த்தேன். அங்கே உள்ள பொன்னு ஐயங்கார் ஆரம்பப்பள்ளியைப் பார்க்க மறந்து போச்சு! அங்கே தானே ஐந்து வகுப்பு வரை படிச்சிருக்கேன்.
அதுக்கு அப்புறமா தானப்ப முதலி அக்ரஹாரம் செல்லும் வழியை ரங்க்ஸுக்குக் காட்டினேன். கொஞ்ச தூரத்தில் வந்துட்டார் நம்ம நண்பர். ஆட்டோவை விட்டு இறங்காமலேயே அவரைப் பிரார்த்தித்துக்கொண்டேன். எத்தனை,எத்தனை பரிக்ஷைகள்! பரிக்ஷை எழுதிய இடம் வேறாக இருந்தால் கூட கிளம்பும் முன்னர் வந்து இவரைப்பார்த்துவிட்டுப் பேனாவை அவர் பாதத்தில் வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு விபூதி வாங்கிக்கொண்டு திரும்பி வருவது வழக்கம். எனக்கோ, அண்ணா,தம்பிக்கோ சாப்பாடு சாப்பிட முடியாமல் வாந்தி, வயிற்றுக் கோளாறு இருந்தால் அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு இந்தப் பிள்ளையாரை தினம் தினம் வழிபடும் பூசாரியிடம் கொடுத்து மந்திரித்து வாங்கி வரச் சொல்லுவாள். அப்படியே செய்வோம். அவர் என்ன மந்திரிப்பார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அதைத் தான் முதலில் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடுவோம். அவ்வளவு ஏன்? என் பெண்ணுக்கு திடீர்னு பால் சாப்பிட முடியாமல் அலர்ஜி வந்தப்போ கூட அம்மாவே பாட்டிலில் பாலைஊற்றிக் கொண்டு இங்கே வந்து மந்திரித்து எடுத்து வந்து கொடுத்திருக்காங்க. எல்லாம் நினைவில் வந்தது.
சந்திரா என்ற பெயரில் இருந்த பழனி தியேட்டர் இருந்த இடம் இப்போது வேறு ஏதோ! இந்தச்சந்திரா தியேட்டரில் தான் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன். இங்கே எஸ்.பாலசந்தரின் (வீணை பாலசந்தர்) "பொம்மை" படம் ஓடினப்போ பலமுறை போயும் டிக்கெட்டே கிடைக்காமல் கடைசி வரை படம் பார்க்கவே முடியலை. :( இன்று வரையும் பார்த்ததில்லை! அப்போது கூட்டம் தாங்காமல் ஜனங்கள் வெளியே எல்லாம் நிற்பார்கள். போக்குவரத்தே ஸ்தம்பிக்கும். அதே போல் சென்ட்ரல் தியேட்டரில் புதுப்படம் வந்தால் அங்கே கூட்டம் கூடி இப்படித்தான் நடக்கவே முடியாதபடி இருக்கும். ஏற்கெனவே மேல கோபுர வாசல் நெரிசல் தாங்காது. பொதுவாக நான் பார்த்த இடங்கள் எதுவும் அதிகமாய் மாற்றம் தெரியவில்லை என்றாலும் முக்கிய வீதிகளில் கட்டிடங்கள் எல்லாம் பழைய மாதிரியில் இருந்து மாறி உள்ளன. ஆனால் இன்னமும் மாசி வீதிகளில் மக்கள் வசிக்கின்றனர். ஆவணி மூல வீதியில் தான், குறிப்பாக மேல ஆவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதியில் தான் குடியிருப்புகள் அனைத்தும் வணிக வளாகங்களாகி விட்டதாய்த் தெரிய வருகிறது. இன்னும் அந்தப் பக்கம் போய்ப் பார்க்கலை. அதுவும் ஒரு நாள் போகணும்.

'சபாஷ்! சரியான போட்டி!'
ReplyDeleteமதுரை அனுபவம் அருமை. என் கணவருக்கும் மதுரை தான் மிகவும் பிடித்த ஊர். திருமணம் ஆனவுடன் மதுரைக்கு அழைத்துப் போய் ஒரு சந்து விடாமல் சுற்றிக் காண்பித்தார்.
சமீபத்தில் போயிருந்தபோது 'மிகவும் மாறிவிட்டது..' என்று அங்கலாய்த்தார்!
வாங்க ரஞ்சனி, அவங்க போடற படத்துக்கு ஏத்தாப்போல் என்னிடமும் ஒண்ணு எப்படியோ கிடைக்குது. பார்க்கலாம் அடுத்த வாரம். :))))))
ReplyDeleteமதுரை மாறி இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் சில இடங்கள் இன்னமும் பழமை மாறாமல் இருக்கிறது. அவற்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றபடி கோயிலைச் சுற்றி எல்லாம் முழுக்க முழுக்க மாறி விட்டது. தெற்கு கோபுரம் அருகே உள்ள வளையல்காரத் தெரு இருந்த இடமே தெரியலை. :(((
அங்கே நிறையப் பழைய புத்தகக் கடைகள் இருக்கும். அவற்றைக் காணவே காணோம். :( அந்த இடமே இப்போது முற்றிலும் மாறிப்போயிருக்கு! இன்னமும் நாங்க இருந்த மேலாவணி மூல வீதியைப் போய்ப் பார்க்கலை. பார்த்தால் தெரியும் மாற்றங்கள். :)
அப்படியே எங்க ஊருக்கும் வந்திருக்கலாமே...?
ReplyDeleteமாரியம்மன் மாசித் திருவிழாக வெகுஜோராக நடை பெறுகிறது...
போட்டி படம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteதிருவண்ணாமலை தரிசனம் இரண்டு தடவை கிடைத்து விட்டது.
நம்ம நண்பர். ஆட்டோவை விட்டு இறங்காமலேயே அவரைப் பிரார்த்தித்துக்கொண்டேன். //
நண்பரை கீழே இறங்கி குசலம் விசாரிக்கவில்லையா?
எங்கள் வீட்டு பக்கமே ஒருமுறை போய் விட்டு மறுமுறை போகும் போது எல்லாம் மாறிவிடுகிறது. அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
அடேடே... நம்ம ஊருக்கு பொய் வந்தீங்களா...
ReplyDeleteதானப்பா முதலித் தெரு, மேல மாசி வீதி... சென்ட்ரல் தியேட்டர் அருகில் எம் எஸ் அம்மா இருந்த தெருவில் சமீபத்து வருடங்கள் வரை அப்பா, அண்ணன் இருந்தார்கள். இப்போது ஊருக்கு வெளியே!
சந்த்ரா தியேட்டரா... சாந்தி இல்லை? (மேல மாசி வீதியில், ஆலால சுந்தர விநாயகர் கோவில் பின்புறம்)
அப்புறம் போட்டிப் படம்... ஹிஹி எங்கள் படம்தான் நல்லாயிருக்கு!
//அங்கே நிறையப் பழைய புத்தகக் கடைகள் இருக்கும். அவற்றைக் காணவே காணோம்.//
ReplyDeleteநியூ சினிமா தியேட்டர் பக்கம்தானே... இன்னும் இருக்கே...!
வாங்க டிடி, பைபாஸிலே போனதாலே உங்க ஊரே வரலையே! :( ரயிலில் போயிருந்தால் வந்திருக்கும். திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தம்பி.
ReplyDeleteவாங்க கோமதி அரசு,
ReplyDeleteகீழே இறங்கலை; இறங்கி இருக்கலாம். ஆனால் வீட்டிலிருந்து இரண்டு முறை அழைப்பு வந்துவிட்டது. சாப்பிடக் காத்துட்டு இருந்தாங்க. அங்கே போனால் எப்படியும் அரை மணி ஆகும். இன்னொரு சமயம் இறங்கலாம்னு வைச்சுட்டேன். :))))
வாங்க ஸ்ரீராம், எனக்குத் தெரிஞ்சு மதுரையில் சாந்திங்கற பேரிலே நான் இருந்தவரைக்கும் தியேட்டர் இல்லை. அப்புறமா வந்ததோ என்னமோ. நேரு பிள்ளையாருக்குக் கொஞ்சம் தள்ளி இருந்த இந்தத் தியேட்டர் பழனி என்ற பெயரிலே இருந்துட்டு அப்புறமா சந்திரானு மாறித்து.
ReplyDeleteஅனுமந்தராயன் கோயில் தெருப்பக்கம் போகலை. :)))) முன்னெல்லாம் மீனாக்ஷி புத்தகாலயம் அங்கே இருந்தப்போ புத்தகங்கள் வாசிக்கக் கொடுப்பாங்க. பக்கங்களைப் பொறுத்து நாலணாவில் இருந்து கொடுக்கணும். நிறைய ஜெயகாந்தன் புத்தகங்கள் அங்கே வாங்கிப் படிச்சிருக்கேன். இப்போ இருக்கானு தெரியாது! ஒரு தரம் ஹிந்தி பிரசார சபாவுக்குப் போனப்போ அங்கே போனது. அப்புறமாக் கடைசியா நான் ஹோமியோபதி சான்றிதழ் வாங்கப் போனேன். அது இருக்கும் 20 வருடங்கள். :))))))
இப்போ அந்தப் பக்கம் கிஷ்கிந்தா வந்தப்புறம் மாத்தி இருக்காங்கனு நினைக்கிறேன். பழைய புத்தகக் கடைகளை எல்லாம் இப்போ அங்கே பார்க்க முடியலை. முன்னெல்லாம் தெற்குச் சித்திரை வீதியிலேயே பார்க்கலாம்.
ReplyDeleteஆகா! மதுரை.
ReplyDelete
ReplyDeleteமதுரைக்குப் போக பயணத்திட்டம் இருக்கிறது. பெரும்பாலும் மார்ச் 2-ம் தேதி மார்ச் 3-ம் தேதிவாக்கில் அங்கிருப்போம். உங்கள் பதிவு பார்த்ததிலிருந்து ஆர்வம் கூடியிருக்கிறது. எங்களுக்கு மதுரையில் எல்லாமே புதிதாயிருக்கும். வாழ்த்துக்கள்.
ஆஹா மதுரை!ஒவ்வொரு வீதியாக அனுபவித்தீர்களா./
ReplyDeleteபடிக்கும் போதே பெருமூச்சு வருகிறது.
சபாஷ் சரியான போட்டி கீதா .போட்டோ அழகா இருக்கு,
ஏட்டிக்கு போட்டியா! :) படம் நல்லா இருக்கு. பதிவும்தான். மதுரை பக்கம் போனதே இல்லை. இனிமேதான் எல்லா இடங்களுக்குமே போகணும்.
ReplyDeleteஉஜ்ஜயினி மகாகாளி கோவில் பதிவும் படித்தேன். படு சுவாரசியம். வேதாளம், சுளுவான் குட்டி குட்டியா சன்னதி உள்ள படம் பதிவுல பாக்கவே ஜோரா இருக்கு. தாமதாமான பின்னூட்டம். மன்னிக்கவும். பின்னூட்டம் எழுத நேரம் கிடைக்கவே இல்லை. எல்லாம் ஒரே
ஓட்டமாவே இருக்கு.
//அப்புறம் போட்டிப் படம்... ஹிஹி எங்கள் படம்தான் நல்லாயிருக்கு!//
ReplyDeleteஅநியாயமா இல்லையோ! என் கிட்டேயும் அதைப் போலவே ஒரு படம் இருக்கு. தேடணும். இந்த ஆல்பத்திலே இல்லை. :))))))
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே. அதனாலே என்னோட படம் தான் அருமையான படம். :))))))
வாங்க மாதேவி, மதுரை போயிருக்கீங்களா?
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், மதுரைக்குப் போயிட்டு வந்து அனுபவத்தை எழுதுங்க. :)))))
ReplyDeleteஸ்ரீரங்கம் வந்த இந்தப் பத்து மாதங்களில் மூன்றாம் முறையாக மதுரைக்குப் போயிருக்கேன். சென்னையிலே இருக்கையில் பல வருடங்கள் போகவே முடிந்ததில்லை. :)))))
ReplyDeleteநன்றி ரேவதி. ஆமாம், அதுவும் நான் ஸ்கூல் போகும் வழியாகவே ஆட்டோ சென்றதா! கல்பாலம் வந்ததும், (பழைய கல்பாலம் கீழே இருக்கு) :( ஒரே மலரும் நினைவுகள். பேருந்துக்காக அப்பா கொடுக்கும் பத்துக்காசை மிச்சம் பிடிக்கவென்று கல்பாலம் வழியாக பள்ளிக்கு நடந்து போனதும், திரும்பறச்சேயும் நடந்து வந்ததும் பத்து நாட்கள் பத்துக்காசு சேர்ந்து ஒரு ரூபாய் ஆனதும், ஏதோ பெரிய பணக்காரி ஆகிட்ட மாதிரி சந்தோஷமும்,
ReplyDeleteஆஹா, அந்த நாட்கள் இனி ஏது? :)))))))
வாங்க மீனாக்ஷி, படம் நல்லா இருக்குனு ஸ்ரீராம் கிட்டே சொல்லுங்க! :P :P :P :P(இதெல்லாம் ஸ்ரீராமுக்குத் தான்!) :))))))))
ReplyDeleteஅதான் உஜ்ஜையினி பதிவில் காணோமேனு நினைச்சேன். நன்றி வரவுக்கும், கருத்துக்கும். :)))))
மதுரை நினைவுகள் அருமை.
ReplyDeleteநானும் 1989-91 வரை மதுரையில் இருந்திருக்கிறேன்.அப்பொழுது இருந்தது மாதிரி இப்பொழுது மதுரை இல்லைதான்.
போட்டிக்கேற்ற படம் பிரமாதம்.
ReplyDeleteமுன்பு மதுரையில் என் பெரியம்மாவும், மாமாவும் இருந்தார்கள். இப்போ மாமா குடும்பம்....மீனாட்சியம்மன் கோவிலுக்கு எப்போதோ சென்றது...
வாங்க ராம்வி, தொண்ணூற்று ஒன்றில் நீங்க பார்த்த மதுரை கூட நான் பிறந்த மதுரை இல்லையாக்கும்! :)))))
ReplyDelete//போட்டிக்கேற்ற படம் பிரமாதம். //
ReplyDeleteஅப்படிச் சொல்லுங்க கோவை2தில்லி, ஹாஹாஹா!
மதுரை ரசிகர்கள் நிறையப் பேர் இருப்பாங்க போல! :))))