எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 17, 2013

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! கவலையே படமாட்டோமுல்ல!

எங்களுக்கு உடம்பு சரியாயில்லைனு தெரிஞ்சு வைச்சுட்டு மின் வாரியம் ராத்திரி கரெக்டா ஒன்பது மணிக்கு மின்சாரத்தை நிறுத்திடும்.  அப்போத் தானே சீக்கிரமாப் படுத்துப்பீங்க?  காலம்பர சீக்கிரம் எழுந்துக்க வேண்டாமா?  ஆகவே ராத்திரிப் பூராவும்  ஒரு மணிக்கு ஒருதரம் தான் மின்சாரம் வரும்.  காலம்பர சீக்கிரமா எழுந்துக்கணுமேனு 3 மணிக்கு மின்சாரத்தை நிறுத்திட்டு நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவாங்க.  அப்படியும் தூங்கினீங்கன்னா, நீங்க எந்த வேலையும் செய்துக்க முடியாதுனு சொல்லாமல் சொல்லுவாங்க.  எப்படீங்கறீங்களா?  காலையிலே சீக்கிரம் எழுந்து வேலைகளைக் கவனிக்கலைனா அப்புறமா ஆறு மணியிலிருந்து ஒன்பது அல்லது பத்து வரை எதுவும் முடியாது.

அந்த இரண்டு மணி நேரத்துக்குள்ளாகக் காலை ஆகாரம், காலைச் சமையல் போன்றவற்றுக்குத் தயார் செய்துக்கணும்.  பள்ளிக்குப் போற குழந்தைங்க இருந்தால் அவங்களுக்குக் காலை ஆகாரத்துக்குச் சட்னி கொடுக்க நினைச்சா நீங்க சட்னி ஆயிடுவீங்க.  ஆறு மணிக்குள்ளாக அதை முடிவு செய்து அரைச்சு வைச்சுடணும். ஆறு மணிக்கே மின்சாரத்தை நிறுத்திச் சில நாட்கள் எட்டு மணிக்கு, பல நாட்கள் ஒன்பது மணிக்கு, மற்ற நாட்கள் பத்து மணிக்குனு மின்சாரத்தைக் கொடுப்பாங்க.  அப்படியே எட்டு மணிக்கோ, ஒன்பதுக்கோ மின்சாரம் வந்து நீங்க கிரைண்டரில் அரிசி, உளுந்து போட்டிருந்தால், சரியாப் பாதி அரைக்கையில் மின்சாரம் நிக்கும்.  இல்லாட்டித் துணி தோய்க்கப் போட்டிருந்தால் தோய்ச்சு முடிச்சு ஸ்பின்னரில் போடும் சமயம் மின்சாரம் இருக்காது.

ஏன்னு கேட்கிறீங்களா?  எங்கேயானும் சமையலை முடிச்சுட்டுச் சாப்பிட்டுவிட்டு அக்கடானு போய்ப் படுத்தீங்கன்னா?  உங்களை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைக்க இந்த மின்சாரமும் மின்வாரியக் காரங்களும் படற கஷ்டம் யாருக்குப் புரியும்?  காலம்பர எட்டு மணிக்கு மின்சாரம் வந்தால் அப்பாடா எப்படியும் பத்து மணி வரைக்கும் இருக்கும்னு ஆறுதல் பட்டுக்க முடியாது.  சமையலில் பாதி அரைக்க, கரைக்கனு செய்யும்போது மின்சாரம் போகலாம்.  ஆகவே காலங்கார்த்தாலே எழுந்துக்கறச்சே அரைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணி அரைச்சாலும் எப்படியோ தெரிஞ்சுக்குவாங்க.  அம்மி எல்லாம் எதுக்கு இருக்கு?  உங்களுக்கு உடல் பயிற்சி வேண்டாமா? அவங்க மின்சாரத்தை எப்போ வேணா எப்படி வேணா நிறுத்துவாங்க.

அதாகப் பட்டது தொடர்ந்து இரண்டு மணி நேரம் இருக்கும்னு நினைச்சு எந்த வேலையானும் நீங்க ஆரம்பிச்சா அவ்வளவு தான்.  பாதி வேலை தான் ஆகும்! மிச்ச வேலையை முடிக்கிறவரைக்கும் நீங்க படுக்கவோ ஓய்வு எடுக்கவோ முடியாதே!  இப்போ என்ன பண்ணுவீங்க?  நேத்திக்குக் காலம்பரப் பத்து மணிக்குப் போன மின்சாரம் அப்புறமா கொஞ்ச நேரம் வந்துட்டுப் பனிரண்டுக்குப் போயிட்டு திரும்ப வரச்சே நாலு மணி.  இன்னிக்கு இரண்டு மணிக்கு வந்திருக்கு.  என்ன நடக்குமோ தெரியலை, பயம்ம்மா இருக்கு!  வர வர மின்சாரம் இருக்கும் நேரத்தைச் சொல்லிடலாம் போல இருக்கு.  பகலில் நான்கு மணி நேரம். மாலை ஒரு மணி நேரம், இரவில் நான்கு மணி நேரம். :(

ஹையா ஜாலி, இன்னிக்கு நாலு மணிக்குப் போகலையே!  இதைத் தவிரவும் பராமரிப்புக்காக ஒரு நாள் பூரா மின்சாரத்தை நிறுத்தறது தனி! :)))

எஞ்சாய்!

18 comments:

  1. கொடுமை.. உண்மையில் இந்த விஷயத்தில் ஜெ அரசு தோல்வி அடைந்து விட்டது

    ReplyDelete
  2. ரொம்பக் கொடுமையா இருக்கே... அங்கே 617 மெகாவாட் உற்பத்தி, இங்கே 200 மெகாவாட் உற்பத்தி, 15 நாள்ல கூடங்குளம், நாளை மறுநாளிலிருந்து கூ.கு என்றெல்லாம் அறிக்கைகள், இந்த வருட ஜூன் முதல் மின்வெட்டு முற்றிலும் நீங்கி விடும், இப்போதே படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது என்றெல்லாம் சொல்கிறார்களே... அதே சமயம் மதுரையில் இந்த அளவு மின்வெட்டு இல்லை போலேருக்கே...

    ReplyDelete
  3. நீங்களும் இன்று மின்சாரம் பத்தி போட்டாச்சா?
    நானும் மின்சாரமே! மின்சாரமே!! என்று பதிவு போட்டு இருந்தேன். இரண்டு நாளுக்கு முன்.
    மின்சார தடை மிகவும் கஷ்டபடுத்துகிறது.

    நீங்கள் சொன்னது எல்லாம் வரிக்கு வரி மிகசரி. இப்படித்தான் இருக்கு மின்சார தடை.
    எது வந்தாலும் சமாளிக்கும் திறன் உண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு.

    ReplyDelete
  4. இடுக்கண் வருங்கால் மாதிரியா?

    ReplyDelete
  5. ரொம்ப கஷ்டம்.

    ReplyDelete
  6. வாங்க எல்கே, அதிசயமாப் பதிவுப் பக்கம் வந்துட்டீங்க! :)))))

    ReplyDelete
  7. ஸ்ரீராம், 15 நாளில் கூடங்குளம்னு நாராயணசாமி 15 மாசமாச் சொல்லிட்டு இருக்காரே! அதோட மின்வெட்டுக் குறைஞ்சிருக்குனு பேப்பரிலே படிச்சீங்கன்னா அதிகம்னு அர்த்தம் எடுத்துக்கணுமாக்கும்! இவ்வளவு அப்பாவியா நீங்க? :))))))))) மதுரைக்கு இந்த வாரக் கடைசியிலே போவேன். அப்போ நேரிலேயே தெரிஞ்சுட்டு வரேன். எனக்குத் தெரிஞ்சு இருக்குனு தான் சொல்றாங்க.

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, உங்க மின்சாரப் பதிவு அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி. நாங்க சென்ற வாரம் கும்பகோணம் போயிருந்தப்போ அங்கேயும் மின்வெட்டு இருக்குனு தான் சொன்னாங்க. எப்படியோ சமாளித்துத் தானே ஆக வேண்டி இருக்கு! :)))))

    ReplyDelete
  9. வாங்க அப்பாதுரை, ஆமாம், அப்படியே தான். தலைக்கு மேலே போனால் சாணென்ன? முழமென்ன? :)))))

    ReplyDelete
  10. வாங்க ராம்வி, கஷ்டம் தான், என்ன செய்யறது! :(

    ReplyDelete
  11. இதெல்லாம் பழகிப் போய் விட்டது....:))

    சட்னியெல்லாம் எப்பவாவது தான்.. கரெண்ட் இருக்கும் போது மிளகாய்ப்பொடி அரைச்சு வெச்சுடறது..:) கலந்த சாதங்கள் பெட்டர்னு தோணுது. பொடி போட்ட சாம்பார், ரசம்...இப்படியே இருக்க வேண்டியது தான்.

    வெயில் வேற ஒரு பக்கம் இப்பவே கொல்ல ஆரம்பிச்சுடுத்தே....

    ReplyDelete

  12. THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED.!

    ReplyDelete
  13. மின்சாரம் இருக்கும் நேரத்துக்குள்ளே அரைச்சு வைச்சுக்கணும் கோவை2தில்லி. மிளகாய்ப் பொடி ஒத்துக்கறதில்லை! :))) அரைக்க முடியலைனா சாம்பார் அல்லது கொத்சு தான். :))))

    ReplyDelete
  14. வாங்க ஜிஎம்பி சார், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. :)))

    ReplyDelete
  15. சகித்துக் கொண்டு தான் இருக்கோம் வேறே வழியில்லாமல். :)))))

    ReplyDelete
  16. கஷ்டம் தான்....

    தில்லியில் எங்களது தேவையை விட அதிகம் மின்சாரம் வேண்டாமென்று திருப்பிக்கொடுத்துட்டொம் கிரிட்-க்கு!

    தமிழகம் உத்திரப் பிரதேசம் ஆகிக்கொண்டு வருகிறது.... அங்கேயும் பல வருடங்களாக 18 மணி நேர பவர் கட்!

    ReplyDelete
  17. வாங்க வெங்கட், அதான் தர மாட்டேன்னு மத்திய அரசு சொல்லிடுச்சே!:)))))

    ReplyDelete
  18. "மின்சாரக் கண்ணா என்னோடு வாறாய்.... என்று பாடிடுங்க:))


    இன்னுமா தீரவில்லை :((

    ReplyDelete