எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 01, 2013

எங்கேயும் எப்போதும்



"எங்கேயும் எப்போதும்"படம் பார்த்தேன். விஜய் தொலைக்காட்சியில் போட்டிருந்தாங்க. ஏற்கெனவே 2011 ஆம் வருஷம் ஹூஸ்டனில் இருக்கையில் பார்க்க நினைச்சு உட்கார்ந்துவிட்டுக் கொஞ்சம் போல் பார்த்ததுமே இரவு நேரமாயிடுச்சுனு போய்ப் படுத்துட்டேன்.  அதுக்கப்புறமும் நிறையத் தரம் தொலைக்காட்சிகளில் வந்தும் பார்க்க முடியலை.  இன்னிக்கு மறுபடி விஜயில் போட்டிருக்கிறதைப் பார்த்ததும் உட்கார்ந்தேன். அமுதாவாக நடிக்கும் பெண் சென்னைக்கு நேர்முகத் தேர்வுக்கு வந்துவிட்டு கெளதம் என்னும் நபரோடு நகரம் பூரா சுற்றும் காட்சி.  கொஞ்சம் காமெடியாகவே இருந்தது.  இதிலே அந்தப் பெண் நேர்முகத் தேர்வுக்குப் போறச்சே கைப்பையையும், தோள் பையையும் கெளதமிடம் கொடுத்துட்டுப்போறவரை ஏற்கெனவே பார்த்திருந்தேன்.  இவங்க இருவருக்கும் இடையே அவங்க அறியாமலேயே காதல்!

அதுக்கப்புறமா திருச்சியிலே நடக்கும் காட்சிகள். மணிமேகலையாக நடிக்கும் பெண் தான்   நடிகை அஞ்சலியாமே.  தினசரிகளில் அடிபடும் அஞ்சலியா இவர்??? நடிப்பு நல்லாவே இருக்கு. ஆனால் காதலனைப் படுத்தி எடுத்துடறார். அந்தக் காதலனாக நடிப்பவரும் கிராமத்து அப்பாவித் தனத்தை நல்லா வெளிக்காட்டுகிறார்.  இரண்டு பேரும் சென்னை செல்லும் பேருந்தில் விழுப்புரம் போறாங்க.  சென்னைக்குக் காதலனைத் தேடிச் சென்ற அமுதாவும் ஒரு தனியார் பேருந்தில் திருச்சிக்குத் திரும்பறாங்க. இங்கே திருச்சிக்கு அமுதாவைத் தேடி வந்த கெளதம் சென்னைக்கு காதலர்கள் செல்லும் அதே பேருந்தில் திரும்பறார். ஏகப்பட்ட வேகம் எடுத்து பேருந்துகள் வந்து கொண்டிருக்கின்றன.  அப்போ சென்னையிலிருந்து(?) செல்லும் ஒரு லாரியின் மேல் போட்டிருந்த மஞ்சள் நிற ப்ளாஸ்டிக் ஷீட் வேகத்திலும் காற்றிலும் பறந்து வந்து அரசு பஸ் முன்னால் மூடிக் கொள்கிறது.  ஓட்டுநருக்குப் பார்க்க முடியலை.  எதிரே வேகமாக வரும் தனியார் பேருந்து.

இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள கடும் விபத்து.  தன் குழந்தையைப் பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் முதன் முதல் பார்க்கச் செல்லும் அப்பா, கல்லூரிக் காதலர்கள், பரிசுக் கோப்பையுடன் பயணிக்கும் மாணவியர்னு பல்வேறு கனவுகளோடு இருந்த அனைவருக்கும் விபத்தில் ஏற்பட்ட இழப்புத் தான் முக்கியக் கரு.  இயக்குநர் வேகம் விவேகம் இல்லை என்பதையும் அறிவுறுத்துகிறார்.  பல்வேறு கனவுகளோடு செல்லும் மக்களின் வாழ்க்கையில இந்த விபத்தினால் ஏற்படும் திடீர் மாற்றம், அதன் விளைவு எல்லாம் நன்கு புரியும்படி படம் எடுக்கப்பட்டிருக்கிறது.  பின்னணி இசை, காமிரா ஒளிப்பதிவுனு படம் முழுதும் ரசிக்கும்படி இருந்தாலும்,

மனதில் ஏகப்பட்ட பாரம்!  பொதுவாக திரைப்படத்தின் உருக்கமான காட்சிகள் சிரிப்பை வரவழைத்தாலும் இவை நிஜத்தில் தினம் தினம் நடைபெறுவதால் அவற்றை எண்ணி மனம் கனத்துப் போய் விட்டது. மொத்தத்தில் நல்லபடம்.  புதிய இயக்குநர்.  முதல் படம்னு சொல்றாங்க.  நல்லதொரு செய்தியோடு படத்தைச் சொல்லி இருப்பதற்குப் பாராட்டுகள்.  தியேட்டரில் நல்லா ஓடிச்சானு எல்லாம் தெரியலை.

வழக்கம்போல இதையும் ஆரம்பத்திலிருந்து பார்க்கலை.  பாதியிலிருந்து தான் பார்த்தேன்.  அமுதாவும், கெளதமும் பஸ்ஸில் கே எம்சியில் இறங்க வேண்டிய இடத்திலிருந்து பார்க்க ஆரம்பித்தேன். :))))  இளைய தலைமுறைக்குப் பிடிச்சிருந்திருக்கும்னு எண்ணுகிறேன்.


30 comments:

  1. படம் நன்றாக இருக்கும் பார் அம்மா என்று என் மகள் பார்க்க வைத்தாள்.
    நானும் பார்த்தேன் மனதை கனக்க வைத்த முடிவு.
    படவிமர்சனம் அருமை.

    ReplyDelete
  2. இன்னும் பார்க்கலை.... :)

    ReplyDelete
  3. சினிமா விமர்சனம் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  4. நீங்க எழுதியதை நான் படிக்கல்லை.

    நானும் இப்பொழுது தான் அந்த படம் டி.விலே பார்த்தேன்.

    உயிரோட இருக்கிற அவனும் அவளும் ....mangalyam thanthunaa ne naa .!!!

    வேண்டாம்.

    நீங்க கோவிச்சுப்பேள். நமக்கு எதுக்கு வம்பு...

    நான் நீங்க காசிக்கு போகிற வழிலே இருக்கிற அனுமாரை காட்டி இருக்கிறேள் இல்லையா. in the last posting.
    அவரை ஸ்துதி பண்ணிண்டு இருக்கிறேன்.

    அதஹ
    அஹம் பிரும்மசர்யம் க்ருஹீத்வா. ச்வப்னமேபி ந த்ருச்யாமி

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  5. படத்தில் வரும் சிறு சிறு கதா பாத்திரங்கள் கூட சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கும், நான் என் அம்மாவை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்தேன்...

    ReplyDelete
  6. விஜய் தொலைக்காட்சியில் இது எத்தனையாவது முறை என்று தெரியவில்லை, கவலைப்படாதீர்கள், அடுத்த வாரமும் போடுவார்கள், பார்த்து விடலாம்.

    ReplyDelete
  7. //இளைய தலைமுறைக்குப் பிடிச்சிருந்திருக்கும்னு எண்ணுகிறேன்.//

    ஆமாம். எனக்குப் பிடிச்சிருந்தது.

    ReplyDelete
  8. படம் பார்த்திருக்கேன். (சும்மா தொடர என்று போடாமல் ஒரு வரி!)

    ReplyDelete
  9. //திரைப்படத்தின் உருக்கமான காட்சிகள் சிரிப்பை வரவழைத்தாலும்

    நீங்களுமா?
    சிவாஜி கணேசன் படத்துக்குப் போயிட்டு அடி வாங்காத குறையா தியேடர்லந்து ஓடி வருவோம்.

    ReplyDelete
  10. கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
  11. சினிமா தியேட்டரில் வெளியாகும் போது தான் எல்லோரும் விமர்சனம் போடுவாங்க. ஆனா நீங்க தொல்லைக்காட்சியில் பல முறை போட்ட படத்துக்கு விமர்சனம் போட்டிருக்கீங்க. அதிலும் இளைஞர்களுக்கு பிடிக்கலாம்னு வேறெ ஒரு லைன். அப்ப நீங்க இளைஞி இல்லேன்னு ஒத்துக்கறீங்களா?. எப்பூடீ!

    ReplyDelete
  12. வாங்க கோமதி அரசு, நேத்து என்னமோ திடீர்னு படம் பார்க்கும் எண்ணம். :))) இதுக்கு முன்னாடி பலமுறை இந்தப்படம் வந்திருக்கு.

    ReplyDelete
  13. வெங்கட், நிச்சயமாப் பாருங்க.

    ReplyDelete
  14. நன்றி வைகோ சார், விமரிசனம்னு அலசித் துவைக்கலை. சும்மாப் பகிர்ந்தேன். :)))

    ReplyDelete
  15. வாங்க சூரி சார், நீங்களும் பார்த்தீங்களா? பெயர் கூடத் தெரியாமல் ஒரு நாள் முழுதும் சுத்திட்டு, அவனைத் தேடிச் சென்னை வந்து, கடைசியில் நினைவு வந்ததும், கேட்கும் முதல் கேள்வியே பெயர் என்ன? தான். ரொம்ப நல்லா இருந்தது அந்தக் காட்சி. :))) பல வருடங்கள் கழிச்சு ரசிச்சுப் பார்த்த தமிழ்ப்படம்.

    ReplyDelete
  16. வாங்க ஸ்கூல் பையர், ஆமாம், கட்டாயமாய்ப் பார்க்க வேண்டிய படம் தான்.

    ReplyDelete
  17. ஶ்ரீநிவாசன் கிருஷ்ண மூர்த்தி, முதல் வருகைக்கு நன்றி. தொலைக்காட்சியில் பலமுறைகள் வந்திருப்பதாய் நானும் சொல்லி இருக்கேனே! :))) என்னமோ நேத்துப் படத்தைப் பார்த்ததும், அதன் தாக்கம் கொஞ்ச நேரம் போகலை. பகிர்ந்தேன். :)))

    ReplyDelete
  18. @ஶ்ரீநிவாசன் கிருஷ்ணமூர்த்தி,

    நீங்களும் ஶ்ரீரங்கமா? இன்னும் தசாவதார சந்நிதி பார்க்கலை; பார்க்கணும். :)))

    ReplyDelete
  19. வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி, எல்லாம் போட்டி போட ஆரம்பிச்சுட்டீங்க! கீழே மஞ்சூர் என்ன கேட்டிருக்கார் பாருங்க. :))))

    பி.கு. படம் எனக்குப் பிடிச்சதாலே இளைய தலைமுறைனு என்னைத் தானே சொல்லிண்டேன்! :))))

    ReplyDelete
  20. வாங்க அப்பாதுரை,

    அம்பத்தூரிலே எழுபதுகளிலே
    "சோ நாடக விழா" போட்டாங்க. அப்போ "யாருக்கும் வெட்கமில்லை!" அப்படினு கொஞ்சம் சீரியஸான சப்ஜெக்டிலே ஒரு நாடகம். அதிலே ஒரு சீரியஸான டிஸ்கஷனிலே ஆடியன்ஸ் எல்லாரும் உருகிட்டு இருக்கிறச்சே நான் மட்டும் சிரிச்சுட்டு இருந்தேனா?

    எல்லாருக்கும் சந்தேகம்! எனக்கு மண்டையிலே மசாலா இல்லையா? அல்லது இருந்து பிசகிடுத்தானு! விசித்திரமாய் என்னையே பார்க்க, நான் திரும்பி அவங்களைப் பார்க்க, கூட வந்த என் தம்பி தான் நாங்க ஏதோ பேசிச் சிரிச்சுட்டு இருக்கோம், நாடகத்துக்கு இல்லைனு சமாளிப்ஸ் பண்ணினார். :))))

    ReplyDelete
  21. டிடி, லேட்டாப் பார்த்தாலும் லேட்டஸ்டாப் பார்த்திருக்கோமுல்ல! :)))

    ReplyDelete
  22. //சினிமா தியேட்டரில் வெளியாகும் போது தான் எல்லோரும் விமர்சனம் போடுவாங்க. ஆனா நீங்க தொல்லைக்காட்சியில் பல முறை போட்ட படத்துக்கு விமர்சனம் போட்டிருக்கீங்க.//

    ஹாஹாஹா, மஞ்சூர், ஶ்ரீரங்கத்திலே மழை பெய்யுதேனு யோசிச்சேன். நீங்க இங்கே வந்ததாலே தான்னு பக்ஷி சொல்லுது. :))))
    நாங்க எப்போவுமே தியேட்டரிலே போய்ப் பார்க்க மாட்டோமே! அதான் பார்த்ததும் விமரிசனம் பண்ணிட்டோம்.


    //அதிலும் இளைஞர்களுக்கு பிடிக்கலாம்னு வேறெ ஒரு லைன். அப்ப நீங்க இளைஞி இல்லேன்னு ஒத்துக்கறீங்களா?. எப்பூடீ!//

    எப்பூடியும் இல்லைங்க. அங்கே தான் தப்புப் பண்ணிட்டீங்க. நாங்க இளைஞிங்கறதாலே தானே படமே பிடிச்சிருந்தது. இது எப்பூடி?????? நம்மை விட்டா வேறே யாரு இருக்க முடியும்???

    ReplyDelete
  23. படம் நன்றாக இருக்கும். நான் இருமுறை பார்த்து விட்டேன்...:)

    ReplyDelete
  24. உடல் உறுப்பு தானம் பற்றி சொல்லியிருப்பாங்க...

    ReplyDelete
  25. எனக்கு பிடித்த படங்களுல் ஒன்று! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  26. வாங்க ஆதி, ஆமாம் உறுப்பு தானமும் இந்தப் படத்தின் முக்கியச் செய்தி ஒண்ணு. அதை விட்டுட்டேன்.

    ReplyDelete
  27. வாங்க சுரேஷ், முதல் வரவு(?). கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  28. எப்போதோ பார்த்துவிட்டேன். மனதை கனக்க வைத்த முடிவுதான்.

    ReplyDelete
  29. யாத்திரை பதிவுகளுக்கு நடுவில் கொஞ்சம் relaxation-ஆ? அடுத்த முறை இந்தப்படம் வரும்போது பார்க்கிறேன்.
    வழக்கு எண் பாத்தீங்களா?

    ReplyDelete