ஆனால் நான்கும் சேர்ந்து தான் ஒரு டிரிப் என்பதை என்னமோ நானும் வற்புறுத்தவில்லை. சாதாரணமாக நான் எங்கே போனாலும் இம்மாதிரி விஷயங்களில் முன்னெச்சரிக்கையா இருக்கிறதோடு கூடியவரை சண்டையும் நான் தான் போடுவேன். எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன். அன்னிக்கு என்னமோ எனக்கும் ஆகிவிட்டது. சாப்பிட அழைத்துச் செல்லும் முன்னர் அந்தப் பையரிடம் சாப்பாடு ஆன பின்னால் பரதன் குகை பார்க்கலாமானு கேட்டதுக்கு அதுக்குத் தனியாப் பணம் கொடுக்கணும்னு என்னிடமும் சொன்னார். திரும்பும் வழியில் ஆட்டோவை எங்களுக்கு மட்டும்னு பேசி இருப்பதை லக்ஷியம் செய்யாமல் எல்லாரையும் ஏற்றிக் கொள்ளவும் ஆரம்பித்து விட்ட்டார். என்னால் முடிந்தவரை ஆக்ஷேபங்களைத் தெரிவித்தேன். என்றாலும் அது நிற்கவில்லை.
அதோடு நாங்க டிக்கெட் முன்பதிவுக்குப் போனோம். மறுநாள் கான்பூர் செல்லும் சித்ரகூட் எக்ஸ்ப்ரஸில் முன்பதிவு செய்யச் சென்றோம். அங்கே நான் லக்னோ செல்லணும்னு சொல்ல, கான்பூர் தான் செல்லணும்னு ரங்க்ஸ் சொல்ல முன்பதிவு செய்யும் ஏஜென்ட் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார, சிறிது நேரம் ஒரே குழப்பம். லக்னோ செல்வதானால் நாங்க வந்த அதே ரயில் ஜபல்பூரிலிருந்து திரும்பி சித்ரகூடத்துக்கு நடு இரவு இரண்டு மணிக்கு வருது. அதைப் பிடிக்கணும். கான்பூர் போறதானால் மதியம் இரண்டு மணிக்கு இங்கிருந்தே கிளம்புது. கான்பூருக்கு எட்டு மணிக்கெல்லாம் போயிடும். அதிலே போகலாம். என்று அவர் சொல்ல, நான் நடு இரவில் லக்னோ செல்லும் சித்ரகூட் எக்ஸ்பிரஸில் ஏ.சி. முன் பதிவு செய்துட்டுப் போகலாம்னு சொன்னேன். ஆனால் ரங்க்ஸோ இங்கிருந்து கிளம்பும் வண்டி எல்லாமே பொதுப்பெட்டி தான். சுலபமா இடம் கிடைக்கும். கஷ்டப்பட வேண்டாம். வரச்சே இருக்கும் கஷ்டம் இருக்காதுனு எல்லாம் சொல்லி என்னை ஒரு மாதிரி சம்மதிக்க வைத்தார். கடைசியில் முன் பதிவே செய்யலை. பின்னர் சாப்பிட அழைத்துச் செல்லச் சொன்னோம்.
போகும்போது அந்த ஆட்டோக்காரரிடம் மறுநாள் இரண்டு மணிக்கு வண்டி என்றும் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு விட வருவாயா என்றும் கேட்டதற்கு உருப்படியாக ஒரு விஷயத்தை அந்த ஆட்டோப் பையர் கூறினார். அவர் மத்தியப் பிரதேச வாசி என்றும் அவர் ஆட்டோ மத்தியப் பிரதேச எல்லையில் மட்டுமே ஓட்டணும்னும், ரயில்வே ஸ்டேஷன் உத்திரப் பிரதேசப் பகுதியில் இருப்பதால் அங்கிருக்கும் ஆட்டோக்காரங்க தான் அழைத்துச் செல்ல முடியும்னு சொன்னார். அவங்க இங்கே வரலாமானு கேட்டதுக்கு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டான்டுனு அவங்க அழைத்துச் செல்லவும், அங்கிருந்து இங்கே கொண்டு விடவும் செய்வார்கள். மற்றபடி இங்கே உள்ளே செல்ல நாங்க மட்டும். அவங்க வர முடியாது என்றார். விசித்திரமான இந்தச் செய்தியைக் கேட்டு உள்ளூரக்கொஞ்சம் பயமும் வந்தது. உ.பி. ஆட்டோ நாம கிளம்பும் நேரம் தங்கி இருக்கும் ஹோட்டல் பக்கமா வரணும். வந்தால் தான் கிடைக்கும். இல்லைனா என்ன செய்யறது? வயித்தை இப்போவே கலக்க ஆரம்பிக்க ரங்க்ஸிடம் என் கவலையைப் பகிர, அவரோ இந்த ஆட்டோ ஒண்ணையே பிடிச்சு உ.பி. எல்லை வரை போயிட்டு அங்கிருந்து உபி ஆட்டோ பிடிச்சுக்கலாம், ஒண்ணும் கஷ்டமில்லைனு சொன்னார்.
ஹோட்டலில் நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டேன். வெளியே போனாலே மதியச் சாப்பாடைக் கூடுமானவரை தவிர்ப்பேன். கல்யாணங்கள்னு போனாலும் ஒரு வேளை காலை ஆகாரம் சாப்பிட்டுடுவேன். மதியம் சாப்பிட மாட்டேன். இரவு ரொம்ப லேசான உணவு மட்டும் எடுத்துப்பேன். ஹோட்டல் ஊழியரிடம் லஸ்ஸி கேட்டதுக்கு தயிர் இல்லைனும் கொஞ்சம் போல் மோர் இருக்கிறதாகவும் சொல்லிட்டு அதைக் கொண்டு வந்து கொடுத்தார். காலாநமக், ஜீரகத் தூள், பெருங்காயம், உப்பு எல்லாம் போட்டு வாய்க்கு ருசியான மோர். அந்த ஹோட்டலிலேயே மேலே தங்குமிடம். நல்ல அறைகளாகவே தெரிந்தன. முதல்நாள் இரவு இந்த வழியாவே போயிருந்தும் நமக்குத் தெரியலையேனு நினைச்சுண்டேன். அப்போக் கூட அந்த ஹோட்டல்காரங்க கிட்டே சார்தாம் பார்க்க எவ்வளவு பணம். ஆட்டோக்காரர் பரதன் குகைக்குத் தனியாக் கேட்கிறாரே னு கேட்டுத் தெரிஞ்சுக்கத் தோணலை. சாப்பிட்டு முடிஞ்சதும் ஆட்டோக்காரர் ஹோட்டல் அறைக்கு முன்னால் கொண்டு விட்டு விட்டார். மீண்டும் பரதன் குகை பார்க்கணும்னு நாங்க சொல்ல, அதுக்கு நானூறு ரூபாய்னு சொல்லிட்டு போகறதா இருந்தாக் கூப்பிடுங்க வரேன்னு சொல்லிட்டுப் போயே போய்விட்டார். ( பேசின முழுத் தொகையையும் வாங்கிக் கொண்டுதான்) . உடல் களைப்பா, மன அலுப்பா, என்னனு சொல்ல முடியாமல், முதல்நாள் இரவு முழுதும் விழித்திருந்தது வேறே, எல்லாம் சேர்ந்து உடல் தள்ளாட , துணிகள் துவைத்தது வேறே எனக்கு அலுப்பு! ஹோட்டல் அறைக்கு மெதுவா மேலே ஏறி (கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரத்தில் முப்பது/நாற்பது படிகள்) வந்து சேர்ந்தோம். ஓய்வு எடுத்துக் கொண்டோம்.
மாலை தேநீர் குடிக்கணும்னா கூட அந்த முப்பது, நாற்பது படிகள் இறங்கி வெளியே வந்து மலைச்சரிவிலிருந்து மேலே ஏறி சாலைக்குச் சென்று ஆட்டோ பிடிச்சுப் போகணும். ஒண்ணுமே வேண்டாம் சாமி! னு உட்கார்ந்து விட்டோம். உடம்பெல்லாம் ஜுரம் வரும் போல் வலி. அப்போது அறைக்கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்தால் இந்த அருமையான, அழகான ஹோட்டலை எங்களுக்கு அறிமுகம் செய்த நபர் அங்கே நின்றிருந்தார். கூடவே அந்த அழகான ஹோட்டலின் காப்பாளர் பையரும் நின்றிருந்தார். வந்தவர், "நீங்க ஏன் இன்னும் இங்கே தங்கி இருக்கீங்க? அறை வாடகை கொடுக்கலையாமே?" எனக் கடுமையாகக் கேட்டார். எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
அறைக்குள் நுழைந்ததுமே 450 ரூ அறை வாடகைனு சொன்னதுக்கு 500 ரூ கொடுத்திருக்கோமே. மிச்சம் கூட இன்னும் வாங்கிக்கலைனு சொல்ல, அது மதியம் பனிரண்டு மணியோடு முடிஞ்சுடுத்து. இப்போ மாலை மணி ஐந்து ஆகிவிட்டது. இந்த நாளுக்கான வாடகையைக் கொடுக்காமல் நீங்க தங்க முடியாதுனு சொல்ல, இவ்வளவு தானா விஷயம்னு இன்னொரு ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து நாளை மதியம் பனிரண்டு மணிக்குக் கிளம்புகிறோம். அது வரை இருக்கலாமானு உறுதி செய்து கொண்டோம். கடைசியில் அந்த ஹோட்டலும் நாங்க இரண்டாவதாய்ப் பார்த்த ஹோட்டலும் ஒரே நபரால் நடத்தப்படுகிறதாம். படுக்க மட்டுமே இடம்னு சொன்ன ஹோட்டலில் காப்பாளாராக இருப்பவர் தான் தன் முதலாளியின் இந்த ஹோட்டலுக்கு எங்களை அனுப்பி வைத்திருக்கிறார். இதை எல்லாம் தெரிந்து கொண்டு நாங்க இங்கே தேநீருக்குப் படும் கஷ்டத்தையும், சாப்பாட்டுக்கு இறங்கிப் போக வேண்டியதன் சிரமத்தையும் ஒரு பாட்டம் சொல்லி அழுதோம்.
அந்த மனிதர் உண்மையாகவே நல்ல மனிதர். உபகார சிந்தையுள்ளவர். ஆகவே அந்த ஹோட்டலில் காப்பாளப் பையரைக் கோவித்தார். முடியாதவங்க, அதிலும் வயசானவங்க இவங்களை இப்படி நினைக்க விடலாமா? னு கேட்டுட்டு, எங்களிடம் எது வேணும்னாலும் இந்தப் பையரிடம் சொல்லுங்க, செய்து கொடுப்பார்னு சொல்ல, நாங்க யோசித்தோம். ஆனால் அவர் விடலை. அந்தப் பையரிடம், எனக்கு இவங்க கிட்டே இருந்து இனி எந்தவிதமான புகாரும் வரக்கூடாது. அவங்க இருவரும் நாளை மதியம் பனிரண்டு மணிக்குக் கிளம்பும் வரை கூட இருந்து ஆட்டோ பிடிச்சு அனுப்பும் வரை உன் பொறுப்புனு கண்டிப்பாய்ச் சொல்ல அவரும் தலையை ஆட்டினார். எங்களிடமும் எந்தக் கவலையும் படாதீங்க. இவன் எல்லாம் செய்து கொடுப்பான். என்று சொன்னார். அவ்வளவில் எங்களுக்கும் மனம் கொஞ்சம் சாந்தி அடைந்து, அன்றிரவுக்கு உணவு வாங்கிக் கொடுப்பாரா என்றும் கேட்டோம்.
உணவுப் பார்சல் வாங்கி வந்து கொடுப்பார்னு சொல்ல நாங்க ஆறு தவா ரொட்டியும் ஒரு மிக்சட் வெஜெடபிளும் வாங்கித் தரச் சொன்னோம். சரினு தலையை ஆட்டிட்டுப் போனாங்க. எங்க பணமே அவங்ககிட்டே இருந்ததாலே உணவுக்குனு பணம் கொடுக்கலை. அவங்களும் கேட்கலை.

//சரினு தலையை ஆட்டிட்டுப் போனாங்க. எங்க பணமே அவங்ககிட்டே இருந்ததாலே உணவுக்குனு பணம் கொடுக்கலை. அவங்களும் கேட்கலை.//
ReplyDeleteதிரும்ப வந்தாரா? அறிய ஆவலுடன்.....
வித்தியாசமான அனுபவங்கள்...!
ReplyDeleteI did not read the post. Let me read once you complete the entire thing. I can't go with suspense :)
ReplyDeleteஎன்னென்ன சிரமங்கள்... தனியாகப் போனதால் இந்நிலையா?
ReplyDeleteதொடரும் சிரமங்கள்.....
ReplyDeleteம்ம்ம்...
ReplyDeleteஇப்படியெல்லாம் சிரமப் பட்டு போய் இருக்க வேண்டுமா என்று கேட்கமாட்டேன். ஏன் என்றால் இவ்வளவு சிரமங்கள் இருக்கும் என்று உங்களுக்கே தெரியாதே.
வாங்க வைகோ சார், இன்னிக்குப் பதிவில் விடை இருக்கு. :))))
ReplyDelete@ராஜராஜேஸ்வரி, நன்றி.
ReplyDelete@பிங்கோ, மர்ம நாவல் படிக்கிறச்சே கூட முடிவை முன் கூட்டியே பார்த்துடுவீங்களோ? :))))
ReplyDeleteஸ்ரீராம், ஒரு விதத்தில் சரி தான். குழுவாகப் போயிருந்தால் வண்டி எல்லாம் அவங்க ஏற்பாடு செய்திருப்பாங்க. காட்ட வேண்டியவற்றைக் காட்டி இருப்பாங்க தான். ஆனால் குழுவிலும் ஏமாந்ததும் உண்டு. நவ பிருந்தாவன் போயிட்டு இதே போல் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டோம். குழுவோடு தான் போனோம். :)))) இதெல்லாம் நேரம் என்பது தான் சரி.
ReplyDeleteகுழுவாகப் போவதிலும், செளகரியம், அசெளகரியம் இரண்டும் இருக்கிறது. எங்க பிரச்னை குழுவில் அறைகள் கிடைக்காது. அவங்க ஹாலில் அல்லது ஸ்கூலில், சத்திரத்தில் தங்க வைக்கிறாங்க. வெகு சிலர் மட்டுமே அறை ஏற்பாடு செய்து தருகிறார்கள். அவங்க இந்தச் சுற்றுலாத் திட்டம் போடலை. வேறு ஊர்கள் செல்லும் திட்டங்கள் தான் இருந்தன. :)))
ReplyDeleteவெங்கட், சிரமம் எல்லாம் பட்டுத் தான் எதையும் அடையணும்.:))))
ReplyDeleteஜிஎம்பி சார், சிரமம் இருக்கும்னு தெரியும். ஆனால் சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்படுவோம்னு நினைக்கலை. :))))
ReplyDeleteஇந்த ஆட்டோ ஒண்ணையே பிடிச்சு உ.பி. எல்லை வரை போயிட்டு அங்கிருந்து உபி ஆட்டோ பிடிச்சுக்கலாம், ஒண்ணும் கஷ்டமில்லைனு சொன்னார்.//
ReplyDeleteஅதுதானே!
அப்படி செய்தீர்களா?
சிரமங்கள் பட்டாலும் சித்திரகூடத்தை நன்கு தரிசனம் செய்து விட்டீர்கள் அல்லவா!
உங்கள் சிரமத்தில் நாங்கள் தர்சிக்கின்றோம். மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, அப்படிச் செய்யலை. :)))) சித்திரகூட தரிசனத்தில் பரதன் குகையைக் கடைசி வரை பார்க்க முடியலை. :(
ReplyDeleteவாங்க மாதேவி நன்றி.
ReplyDelete