பையர் ஊரிலே இருந்து வரச்சேயே நிமோனியா வந்து குணமடைந்த உடம்போட வந்தார். வந்து நாலு நாளைக்கு நல்லா இருந்தார். அதுக்கப்புறமா மறுபடியும் உடம்பு சரியில்லை. அதோட அலைச்சலும் சேர்ந்துக்கவே பையர் ஒரு பக்கம், அவர் மனைவி (மருமகள்) இன்னொரு பக்கம்னு போட்டி போட்டுப் படுத்துட்டாங்க. தினம் இரு வேளை மருத்துவரோட சந்திப்பு. அப்படியும் சரியாகலை. அதோடு வெள்ளிக்கிழமை ஒரு விசேஷம் வேறே வீட்டிலே வைச்சிருந்தோம். அதுக்கு மருமகளின் பெற்றோர் வந்திருந்தாங்க. நல்லா இருந்தவங்க, பாவம், அவங்களும் படுத்துட்டாங்க. :((( ஆக மொத்தம் வீட்டிலேயே ஒரு சின்ன ஆஸ்பத்திரி வைக்கலாம் போல, மூலைக்கு மூலை ரத்தப் பரிசோதனை செய்த சான்றுகள், மருந்து பாட்டில்கள், மாத்திரைப்பட்டைகள், வெந்நீர், கஞ்சி, ப்ரெட் டோஸ்ட்,னு வீட்டோட சூழ்நிலையே மாறியாச்சு!
இப்போதைக்கு நாங்க ரெண்டு பேரும் தான் வீட்டிலே நடமாடிட்டு இருக்கோம். மத்தவங்களும் சீக்கிரம் நடமாட இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் இணையத்துக்கு வரதே பெரிய விஷயமா இருக்கு. :))))) இன்னும் ஒரு வாரத்திலே பையர் அமெரிக்கா திரும்பணும். அதுக்குள்ளே உடம்பு சரியாகணும்னு வேண்டிக்கோங்க.
இப்போதைக்கு நாங்க ரெண்டு பேரும் தான் வீட்டிலே நடமாடிட்டு இருக்கோம். மத்தவங்களும் சீக்கிரம் நடமாட இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் இணையத்துக்கு வரதே பெரிய விஷயமா இருக்கு. :))))) இன்னும் ஒரு வாரத்திலே பையர் அமெரிக்கா திரும்பணும். அதுக்குள்ளே உடம்பு சரியாகணும்னு வேண்டிக்கோங்க.
அடடா! ரொம்ப வருத்தமா இருக்கே. 2010லே என்னை அழைத்துப் போக வந்த என் பெண்ணுக்கு டிங்கு வந்து பாடாய் படுத்தி விட்டது. Even though my son got pneumonia infection in the UK, it is true that we are paying the long term price for neglecting Social and Preventive Health Medicine in India. I shall send a separate mail to you about the advice given in the UK National health Service Website. Please mail me the names of the drugs, particularly the antibiotic given in a private mail. I shall share any worthwhile information in the meanwhile. One precaution. Wash your hands in antibacterial hand wash, as often as possible.
ReplyDeleteI wish them speedy recovery.
Regards,
Innamburan
பையர் உட்பட அனைவரும் சீக்கிரம் குணம் பெற பிரார்த்தனைகள்.
ReplyDeleteஎங்கள் வீட்டிலும் சென்னையைத் தாக்கிக் கொண்டிருக்கும் வினோத ஜுரம் வீடு முழுவதும்! ஒருவார அவஸ்தைக்குப் பின் நான் தேவலாம். சின்னவன் படுத்து எழுத்தான். தற்சமயம் மாமியாரும், மனைவியும். தொண்டைப் பிரச்னை போல ஆரம்பித்து, இருமல், விட்டு விட்டு (வைரல்) ஜுரம், குளிர்....இத்யாதி, இத்யாதி!
ReplyDeleteமாறி மாறி வரும் Climate எங்கும் அப்படித்தான் இருக்கு...! ம்... க்கும்... க்கும்... ஹச்... ஹச்...
ReplyDeleteவிரைவில் அனைவரும் குணமடைய வேண்டுகிறேன்...
அடடா.....
ReplyDeleteஅனைவரும் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும்.
எல்லோருக்கும் சீக்கரமாக உடம்பு குணமாக என் பிரார்த்தனைகள்.
ReplyDeleteகொடுமை தான். அத்தனை பேரையும் கவனிக்கும் தெம்பு உங்களுக்கு இருக்கிறது ஆறுதலான விஷயம். அனைவரும் விரைவில் குணமாகட்டும். இங்கத்து மருந்துக்கு பழகிப் போன உடம்ப வேறே..
ReplyDeleteஶ்ரீராம் சொல்லும் சென்னையின் வினோத காய்ச்சல்.. ப்லூ இல்லையா?
//இந்தச் சூழ்நிலையில் இணையத்துக்கு வரதே பெரிய விஷயமா இருக்கு.
ReplyDeleteரொம்ப முக்கியம் போங்க..:)
அனைவரும் பூரண நலம் பெற நானும் பிரார்திக்கிறேன் .
ReplyDeleteTake Care!
அடடா! எல்லோரும் விரைவில் குணமாக பிரார்த்தனைகள்..
ReplyDeleteஅப்பாதுரை said...
ReplyDelete**இந்தச் சூழ்நிலையில் இணையத்துக்கு வரதே பெரிய விஷயமா இருக்கு.**
//ரொம்ப முக்கியம் போங்க..:)//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
’இந்த சூழ்நிலையில் வாசகர்களையாவது இது தொற்றிக்கொள்ளமல் பிழைத்துப்போகட்டும்’
என்ற நல்லெண்ணத்தில் சொல்லியிருப்பாங்களோ? ;)
அனைவரும் நல்ம் பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete
ReplyDeleteஇதை நான் எழுதும்போது அனைவரும் நலமாயிருப்பார்கள் என வேண்டிக் கொண்டே புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் பூரண நலம் பெற பிரார்திக்கிறேன்.
ReplyDeleteபிறக்கும்புத்தாண்டு உங்கள் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நலத்தை தரட்டும் இனிய வாழ்த்துகள்!.
அன்பான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்போ எல்லாருக்கும் கொஞ்சம் பரவாயில்லை. சம்பந்தியை டாக்டர் கிட்டேக் காட்டி கொஞ்சம் தேவலையானதும் ஊருக்கு அனுப்பி வைச்சு அங்கிருந்து சுகமேனு பதிலும் வந்தாச்சு. பிள்ளைக்கும், மருமகளுக்கும் கொஞ்சம் பரவாயில்லை. என்றாலும் பையருக்கு லீவ் முடிந்து விட்டதால் அவர் திட்டப்படி நான்காம் தேதி திரும்புகிறார். இறை அருள் துணை நிற்கும்.
ReplyDeleteஅன்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.