சற்று நேரத்தில் மீண்டும் அறைக்கதவு தட்டப்பட, கதவைத் திறந்தேன். ஐம்பது மில்லி கூடப் பிடிக்காத ஒரு தம்ளரில் தேநீர். அந்த விடுதிக்காப்பாளரோடு முன்னர் எங்களிடம் பேசிச் சமாதானம் செய்த நபரும் வந்திருந்தார். தேநீரை எடுத்துக்க சொன்னாங்க. இந்த மட்டும் கிடைச்சதேனு நினைச்சு எடுத்துக் கொண்டோம். மீண்டும் சரியா ஏழரைக்குள்ளாக உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வருவார்னு உறுதியளித்துவிட்டுப் போனார். நல்லவேளையாகப் பழங்கள் நிறைய வாங்கி வைச்சிருந்தோம். அதிலிருந்து ஒரு ஆப்பிளும், வாழைப்பழமும் எடுத்துக் கொண்டேன். முதல்நாள் அயோத்தியிலிருந்து கிளம்புகையில் உணவு சாப்பிட்டது தான். சித்திரகூடத்தில் காலை ஆகாரமும் நான் ஒழுங்காய்ச் சாப்பிடலை. அங்கே சுத்தினது, சில இடங்களில் ஏறி இறங்கியது, குகைக்குள் சென்றதுனு உடம்பு அசதியும், பசியும் மிதமிஞ்சிப் போயிருந்தது. ஏழரை மணிக்குக் காத்திருந்தேன்.
ஏழரை ஆகியும் ஒண்ணுமே வரவில்லை. ரங்க்ஸ் வெளியே சென்று பார்த்தப்போ அந்தத் தளத்தில் காலியாய்க் கிடந்த மற்ற அறைகளுக்குப் புது நபர்கள் வந்திருப்பதாகவும், அவங்களோடு பேசிக் கொண்டிருப்பதாகவும், இன்னும் பத்து நிமிஷத்தில் போய் வாங்கி வருவதாய்ச் சொன்னதாகவும் சொன்னார். சரினு காத்திருந்தோம். எட்டரை மணியும் ஆகிவிட்டது. அந்த ஆள் போனதாய்த் தெரியலை. கீழே போய்ப் பார்த்தார். அந்த நபர் கிளம்பவே இல்லைனு தெரிஞ்சது. சும்மாத் தான் இருந்திருக்கார். ஆனால் சாப்பாடு வாங்கப் போகலை. இவரும் சும்மாச் சும்மாச் சொல்லக் கூடாதுனு பார்த்துட்டு வந்துட்டார். ஒன்பதும் ஆயிற்று. ஒன்பதரையும் ஆயிற்று. இப்போ அவருக்கும் பசி தாங்க முடியாமல் போக மீண்டும் கீழே போனார். அந்த நபர் அப்போது தான் யாருடனோ வண்டியில் கிளம்பிக் கொண்டிருந்திருக்கிறார்.
சரி எப்படியும் அரை மணியில் வந்துடுவார்னு நினைச்சால் பத்தரைக்கும் வரவே இல்லை; உடனே எங்களிடம் ஏற்கெனவே கொடுத்திருந்த கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். அந்த விடுதிக்காப்பாளப் பையர்னு நினைச்சால் வேறே யாரோ எடுத்துப் பேசினாங்க. என்ன விஷயம்னு கேட்டு, நாங்க சொன்னதும், கவனிக்கிறேன்னு சொல்லிட்டு வைச்சுட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் கிட்டத்தட்டப் பதினோரு மணி ஆகையில் அந்த நபர் அவசரம் அவசரமாக வந்தார். அதற்குள்ளாக ரங்க்ஸ் மீண்டும் வந்துட்டாரானு பார்க்கப் போக அவரிடம். ஏன் முதலாளிக்குத் தொலைபேசினீங்கனு கேட்டிருக்கார். நாங்க அப்போது தான் பேசினது முதலாளினு தெரிஞ்சுண்டோம். அதைச் சொன்னதும், ஒண்ணும் சொல்லாமல் வாங்கி வந்த சாப்பாடைக் கொடுத்துட்டுப் போக இருந்தவரிடம், சும்மா இருக்காமல் ரங்க்ஸ் காலை தேநீர் வேணும், சாயந்திரம் கொடுத்தது போல் இரண்டு கப் கொடு, எவ்வளவு பைசா கொடுக்கணும்னு கேட்டுட்டு,சாயந்திரம் கொடுத்ததுக்கும் சேர்த்துப் பணம் கொடுத்தார். காலை ஆறரை மணிக்குத் தரச் சொன்னதுக்கு அந்த நபரும் சம்மதித்தார்.
உணவுப் பார்சலைப் பிரித்தால், அதைக் கொண்டு வந்திருந்த ப்ளாஸ்டிக் பையே மிகவும் மட்டரகமானதாக இருந்தது எனில் உள்ளிருந்து ஒரே நாற்றம். நாங்க கேட்டது ஆறு தவா ரொட்டியும், ஒரே ஒரு சப்ஜியும் மட்டுமே. இதிலோ பத்து ரொட்டிகளுக்கு மேல் இருந்ததோடு ஏதோ தால், சப்ஜினு வேறே இருந்தது. தெரு ஓர டாபாவில் வாங்கி இருக்கார் போல. நல்ல ஹோட்டல்களில் வாங்கி இருந்திருந்தால் அலுமினியம் ஃபாயில் டப்பாக்களில் போட்டு, அதையும் ஒரு அழகான அட்டைப்பெட்டியில் வைத்துக் கொடுத்திருப்பாங்க. இது எங்கே எப்படிச் செய்ததோ! அதோடு இது ஒருவருக்கு மட்டுமே ஆன உணவு. ஏனெனில் இங்கே சாப்பாடு ஐம்பது ரூபாய்க்குப் பத்து ரொட்டிகள் தராங்க. சாதம் வேண்டாம்னா கூட இரண்டு ரொட்டி. ஆகவே ஒருத்தருக்கான உணவைத் தான் வாங்கி இருக்கார். இது கட்டாயம் நூறு ரூபாயும் இருக்காது. அந்த உணவை அப்படியே கட்டி அங்கே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கையில் இருந்த சில பிஸ்கட்களையும், இன்னும் கொஞ்சம் பழமும் சாப்பிட்டுவிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தோம்.

//அந்த உணவை அப்படியே கட்டி அங்கே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கையில் இருந்த சில பிஸ்கட்களையும், இன்னும் கொஞ்சம் பழமும் சாப்பிட்டுவிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தோம்.//
ReplyDeleteஅட ராமா ! இதைக் காத்திருக்காமல் முன்பே செய்திருக்கலாமோ !
யாருக்குத்தெரியும் ?இதுபோலெல்லாம் நடக்கப்போகிறது, என்று.
தாங்கள் பசியுடன் காத்திருந்தது சுவையாக + திருப்தியாக எழுதப்பட்டுள்ளது.
பாராட்டுக்கள்.
என்ன கொடுமை :((
ReplyDeleteஇங்கே பல இடங்களில் வாங்கி வரும் உணவுகள் நன்றாக இருப்பதில்லை. கடையில் சென்று சாப்பிடுவது தான் நல்லது.
ReplyDeleteசில சமயங்களில் சாலையோர உணவகமாக இருந்தாலும் சுவையான உணவு கிடைக்கும்......
அடக் கொடுமையே... ராமர் விஷயம்னாலே கஷ்டம்தானா...! பசியோடு மணிக்கணக்கில், நாள் கணக்கில் காத்திருப்பது ரொம்பக் கொடுமை.
ReplyDeleteகொடுமையான விசயம்தான்! அப்புறம்? காத்திருக்கிறேன்! அடுத்த பதிவுக்கு! நன்றி!
ReplyDeleteவெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது உங்களைப்போல் பிஸ்கட், பழங்கள் என்று எடுத்துச் செல்வது நல்லது... நல்லவேளை, தப்பித்தீர்கள்....
ReplyDeleteவாங்க வைகோ சார், என்னமோ அந்த ஹோட்டல்லே போய் மாட்டிண்டோம். நகருக்குள் இருக்கும் ஹோட்டல்களில் சரியாத் தேடிப்பார்த்து அறை வாடகைக்கு எடுக்க நேரம் சரியாக அமையவில்லை. இரவு 3 மணி அளவில் எத்தனை ஹோட்டல் ஏறி இறங்க முடியும்? மத்தியானம் பனிரண்டு மணிக்கு அயோத்தியை விட்டுக் கிளம்பியது. உட்கார்ந்தே பனிரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வந்தது உடல் அலுப்பில் எங்காவது ஒதுங்கினால் போதும்னு இருந்தது.
ReplyDeleteஆமாம், மாதேவி கொடுமை தான்.
ReplyDeleteவாங்க வெங்கட், டாபா என்றாலும் பஞ்சாபி டாபாக்களில் வேண்டுமானால் உணவு நல்லா இருக்கலாம். :))) இது சுத்தமாப் பிரிக்கவே முடியலை. அப்படியே மூடிக் கட்டித் தூக்கி எறிந்தோம். :(
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், ராமர் அங்கே பழங்கள், காய்களைத் தானே சாப்பிட்டிருக்கார். அதோடு குறுகிய குகையில் தானே இருந்திருக்கார். அதான் எங்களுக்கும் தங்க இடமும் அப்படிக் கிடைச்சிருக்கு! சாப்பாடும் பழங்களாவே போச்சு! :))))
ReplyDeleteவாங்க சுரேஷ் நன்றி.
ReplyDeleteஸ்கூல் பையன், எப்போவுமே எங்களிடம் பிஸ்கட், பழங்கள் இருக்கும். சென்னை சென்றால் கூட. சமயங்களில் ரயில் ரொம்ப தாமதம் ஆனால் உதவுமே! :)
ReplyDelete