எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 14, 2013

ஆண்டாளம்மாவின் அழுகை!

நாலு வருஷம் கழிச்சு யு.எஸ்ஸில் இருந்து பையர் வந்திருக்கார்.  அதோட உடம்பும் சரியாய் இல்லாமல் போயிடுச்சு. :( திடீர்னு மூக்கடைப்பு, ஜலதோஷம். உட்காரமுடியலை; படுக்க முடியலை.  கடந்த இரு நாட்களாக வெளியே சாப்பிட நேர்ந்ததில் வயிறு அப்செட். எல்லாமும்சேர்ந்து கொண்டு இரண்டு நாட்களாக எழுந்திருக்கவே முடியலை. மெதுவா நேத்திக்கு மெயில் மட்டும் ஒண்ணு, ரெண்டு பார்க்க உட்கார்ந்தேன்.  முடியலை. படுத்துட்டேன். இன்னிக்குத் தான் கொஞ்சம் பரவாயில்லை.   ஆனாலும் சில நாட்களுக்கு இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி வந்துட்டுத் தான் போகணும். :))

ஆண்டாளம்மா அழுதாங்களாம். ஶ்ரீரங்கம் கோயில் ஆனையம்மா ஆண்டாள் இங்கே ரொம்பவே பிரசித்தி பெற்றது.  அதுக்குக் காலுக்குத் தங்கக் கொலுசு எல்லாம் பண்ணிப் போட்டிருக்காங்க.  நவராத்திரியன்னிக்கு மெளத் ஆர்கன் எல்லாம் வாசிச்சு, நாட்டியம் ஆடி எல்லாமும் பண்ணுவாங்களாம்.  கூட்டம் தாங்க முடியாது!  அதான் போக முடியலை. :(  இப்போ ஆண்டாளம்மா அழுத கதைக்கு வருவோமா!



இவங்க ஆண்டாளம்மா இல்லை; வேறே ஒரு விசேஷத்துக்கு வந்தவங்களைப் படம் பிடிச்சுப் போட்டேன்.  ஆண்டாளம்மா படம் கிடைக்கலை.  தினமும் ரங்கநாதர் கிட்டே ராத்திரி போயிட்டு வரேன்னு சொல்லிட்டுத் தான் போவாங்க. இவங்களைப் பார்த்துக்கிறது ஶ்ரீதர் என்ற நபர். பாலக்காட்டு பிராமணர்.  ஆண்டாளம்மாவும் கேரளாவிலே இருந்து வந்தாங்க போல. இவர் தான் வருஷக் கணக்கா ஆண்டாளம்மாவைக் குழந்தையை விட கவனமாப் பார்த்துக்கறார்.

ஆண்டாளம்மாவைப் பார்த்துக்க இன்னொரு ஆளை ஏற்பாடு பண்ணச் சொல்லி ஹிந்து அறநிலையத் துறை சொல்லி இருக்கு.  அதுக்காகப் பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு.  ஶ்ரீதரனுக்கு அரை மனசாம். வேண்டாம்னு சொல்லிப் பார்த்திருக்கார்.  ஆனால் நேற்று மீண்டும் பேச்சு, வார்த்தை நடைபெற்றதில் ஶ்ரீதரன் மனம் வருந்திப் போய் வெளியே வந்திருக்கார். வந்தவர் ஆண்டாளம்மாவைப் பார்த்து,"உன்னைப் பார்த்துக்க வேறொரு ஆள் வரப் போறாங்க.  நான் போறேன் உன்னை விட்டுட்டு!" னு சொல்ல, ஆண்டாளம்மா கடுமையா மறுத்து இருக்காங்க.  தும்பிக்கையைத் தலையைனு ஆட்டி மறுத்ததோடு அல்லாமல் கண்ணீர் விட்டும் அழ ஆரம்பிச்சுட்டாங்களாம்.  சுற்றி இருந்த கூட்டம் எல்லாம் பார்த்துட்டு ஆண்டாளம்மாவுக்கும் ஶ்ரீதருக்கும் இருக்கிற பாசப் பிணைப்பைக்கண்டு வியந்து மனம் நெகிழ்ந்து போயிட்டாங்களாம்.

கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு.  பாவம் ஆண்டாளம்மா! :(


செய்திக்கு நன்றி: தினமலர்

26 comments:

  1. மனசுக்குக் கஷ்டமா இருக்கு.. ஆனால், யானைக்கு எப்படி பேசுவது எல்லாம் புரிகிறது?

    உடம்பைப் பார்த்துக்குங்க..

    //பையர் ஊர்லேருன்து வந்திருக்கார்...//

    சந்தோஷ நேரங்கள்.

    ReplyDelete
  2. பையன் ஊரிலிருந்து வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி... எஞ்சாய்!

    உடல்நலனை பார்த்துக்கோங்க மாமி...

    ஸ்ரீதர் ஆண்டாளை ரொம்பவே கவனமா பார்த்துப்பார்... ஆண்டாளுக்கும் எல்லாம் புரியும்... குளிக்கும் போது ஸ்ரீதர் சொல்வதை எல்லாம் சரியாய் செய்யும், குளித்து விட்ட ஈரத்தோடு தும்பிக்கை மணலில் படாமல் இருக்க தும்பிக்கையை வாயில் வைத்து வைத்துக் கொண்டு போனதை பார்த்து அசந்து போனேன்..:))

    சாப்பிடக் கூட மக்கள் தருவது எல்லாவற்றையும் தர மாட்டார்...பார்த்து தான் தருவார்..

    ReplyDelete
  3. இன்று காலை தினமலரில் இந்த செய்தியைப்படித்து விட்டேன்.

    வருத்தமாகவே இருந்தது. என்ன சொல்வதென்றே புரியவில்லை.

    யானைக்கு ஓர் தனி மனிதரிடம் எவ்வளவு பாசம் பாருங்கோ. ;)

    மகன் வருகை கேட்க சந்தோஷம்.

    ReplyDelete
  4. பதிவெல்லாம் ஒரு பக்கமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு உடம்பைப் பார்த்துக்கோங்கோ.

    நானும் அதே முடிவில் தான் உள்ளேன். ஆனாலும் செயல் படுத்தத்தான் முடியவில்லை.

    ReplyDelete
  5. ஆண்டாள் யானையும், ஸ்ரீதர் என்ற பாகனும் போல நாமும் வலையுலகில் பின்னிப் பிணைத்து விட்டோம்.

    பாசமுள்ள அதனை எப்படி விட்டு விலக முடியும்? ;)

    ஆண்டவா ! காப்பாத்து !!

    ReplyDelete
  6. உடம்பு தான் முக்கியம்... மற்றவை அப்புறம் தான் அம்மா...

    ReplyDelete

  7. உடம்புக்கு முடியாமல் இருக்கும்போது வலைப் பக்கம்வருவதைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம், இங்கு மட்டும் என்ன வாழுதாம். வீட்டுக்கு வீடு வாசப்படி. மகன் இருக்கும்போது உடம்புக்கு வந்தாலும்தெரியாது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் கீதா மேடம்.பதிவெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.

    ReplyDelete
  9. பாவம் ஆண்டாளம்மா! :

    ReplyDelete
  10. ஏன் இப்படி செய்கிறார்கள் ? அதிகாரி கணக்கு வழக்கோட நின்னுக்கலாம்ல

    ReplyDelete
  11. வாயில்லா ஜீவன்களுக்கும் மனம் உண்டே.

    உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  12. உடல் சுகவீனம் உற்றிருக்கும் தாங்கள் இந்நேரத்தில் சற்று உடல் நலத்தையும் தேற்றிக்கொண்டு ஆறுதலாக வலைத்தளப் பக்கம் வரலாமே .வாயில்லாத ஜீவன்கள் கொண்டுள்ள அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை என்று மற்றுமொரு தருணத்தை
    நினைவு கொள்ள வைத்துள்ளது இந்த ஆண்டாளம்மாளின் கண்ணீர் !!
    மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

    ReplyDelete
  13. பல மாதங்களாகவே ஸ்ரீதர் அவர்களை வெளியேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.....

    ஆண்டாளுக்கு நிச்சயம் கஷ்டம் தான்.....

    உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். பதிவுலகம் எங்கே போய்விடப் போகிறது?

    ReplyDelete
  14. வாங்க ஶ்ரீராம், யானையோட பேசறதுக்குன்னே தனியானதொரு மொழி இருக்கே! நமக்குப் புரியாது. யானைங்க புரிஞ்சுக்கும். :))))

    ஆமாம், வந்ததில் இருந்து ஒரே சுத்தல் தான். வீட்டிலே இருக்கும் நேரம் கம்மியா இருக்கு! :(

    ReplyDelete
  15. நன்றி ஆதி. உடம்பு இப்போப் பரவாயில்லை. ஆண்டாளை நினைச்சால் தான் வருத்தமா இருக்கு! :(

    ReplyDelete
  16. வாங்க வைகோ சார், அறநிலையத் துறைக்காரங்க தப்புப் பண்ணறாங்க. ஆனால் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. :(

    ReplyDelete
  17. வைகோ சார், முடியலைனா இணையத்துக்கு வர மாட்டேன். சில சமயம் முக்கியமான மடல்கள் இருக்கும். குழுமத்தின் வேலை இருப்பதால் கொஞ்ச நேரமாவது உட்கார வேண்டி இருக்கும். :)))))

    ReplyDelete
  18. நன்றிடிடி, உடம்பு இப்போப் பரவாயில்லை.

    ReplyDelete
  19. வாங்க ஜிஎம்பி சார், உடம்புக்குப் பையர் வந்திருக்கிறதெல்லாம் தெரியலை. அது பாட்டுக்குப் படுத்துது! :))))

    ReplyDelete
  20. நன்றி ராஜலக்ஷ்மி மேடம்.

    ReplyDelete
  21. வாங்க கடைசி பெஞ்ச், சில மாதங்களாவே முயற்சி செய்யறதா வெங்கட் சொல்றார் பாருங்க. எனக்கு அது புதுச் செய்தி! :(

    ReplyDelete
  22. வாங்க ரா.ல. வாயில்லா ஜீவன்களுக்கு நம்மை விடவும் இளகிய மனம்.

    உடம்பு இப்போத் தேவலை.

    ReplyDelete
  23. வாங்க அம்பாளடியாள், அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஆண்டாளம்மாவின் கதி என்ன ஆனதுனு இனிமேல் தான் கேட்கணும். :(

    ReplyDelete
  24. வாங்க வெங்கட், எனக்கு இந்தச் செய்தியே புதுசு. பாவம் ஆண்டாள், அதைவிடப் பாவம் ஶ்ரீதர்! :( ஆனால் இது சரியானதில்லை என்பது போகப் போகப் புரியும்.

    ReplyDelete
  25. "உன்னைப் பார்த்துக்க வேறொரு ஆள் வரப் போறாங்க. நான் போறேன் உன்னை விட்டுட்டு!" னு சொல்ல, ஆண்டாளம்மா கடுமையா மறுத்து இருக்காங்க. //

    இவ்வ்வளவு நாள் பார்த்துக் கொண்டதில் ஏற்பட்ட பாசத்தை ஸ்ரீதர், ஆண்டாள் இருவராலும் மறக்க முடியுமா?

    உங்கள் மகன் அவர்கள் வந்து இருப்பது மகிழ்ச்சியான தருணம். உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்.




    ReplyDelete
  26. ஆண்டாள் பாவம். படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete