எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 16, 2013

வால்மீகி ஆசிரமத்திலிருந்து கங்கைக்கரைக்கு!


சீதையைப் போன்ற பிரதிமையைச் செய்து அருகே இருக்கும் கோலத்தில் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள்.  இந்தச் சிற்பம் சீதை பாதாளத்தில் பிரவேசித்ததாய்ச் சொல்லப்படும் பள்ளத்துக்குப் பின்னால் உள்ள ஒரு தூணில் செய்துக்கப்பட்டுள்ளது. அனைவரும் சீதை பூமியில் மறைவதைப் பார்த்த வண்ணம் இருப்பதாய்ச் செதுக்கி இருக்கிறார்கள்.

சிற்பம் செதுக்கி இருக்கும் தூண்


வால்மீகி ஆசிரமத்தில் பார்க்கவேண்டியவை எல்லாம் பார்த்து முடிந்ததும் அங்கிருந்து கங்கைக்கரையில் உள்ள பிரம்மவர்த்த காட் என்னும் படித்துறைக்குச் செல்லச் சொன்னோம் வண்டி ஓட்டியிடம்.  பாதை குறுகல் தான்.  எல்லா வடநாட்டுத் தெருக்களும் கங்கைக்கரைக்குச் செல்லும் பாதை இப்படித் தான் உள்ளது.  ஆனாலும் வண்டியில் செல்லலாம்.  என்றாலும் வண்டி ஓட்டிக்கு அரை மனசு தான்.  நாங்க வற்புறுத்தவே வண்டியை ஓட்டிச் சென்றார்.  கரைக்குச் சிறிதே தூரத்தில் இந்த வண்டி போகாது இறங்கி நடந்து செல்லுங்கனு சொல்லவே அங்கிருந்த மக்கள் இதைவிடப் பெரிய வண்டியான இனோவா, டவேரா எல்லாம் உள்ளே போயிருக்கு; உங்க வண்டி இன்டிகா தானே இது போகும் போங்கனு வற்புறுத்தி உள்ளே அனுப்பிச்சாங்க.  ஒருவழியா கங்கைக்கரைக்குக் கொண்டு விட்டார். 

இந்தக் கரையில் தான் முதலில் பிரம்மா பூமிக்கு வந்து முதல் மநுவை சிருஷ்டி செய்து சிருஷ்டியை ஆரம்பித்ததாய்ச் சொல்கின்றனர்.  முதல் மநுவின் கோயில் லக்நோவுக்கு அருகிலுள்ள நைமிசாரண்யத்தில் இருக்கிறது.  அடுத்து அங்கே தான் செல்லப் போக்றோம்.  இங்கே பிரம்மா வந்து கால் பதித்ததுக்கு அடையாளமாக மரத்தால் ஆன பாதுகைகள் இருக்கின்றன.  அதை ஒரு தனிக் குண்டத்தில் கங்கைக்கரையிலேயே சந்நிதி போல் கட்டி வைத்திருக்கின்றனர்.  இங்கே வந்து கங்கைக்கரையில் குளித்துவிட்டு பிரம்மாவுக்கு வழிபாடு செய்வதை மிகவும் விசேஷமாகச் சொல்கின்றனர்.



கங்கை


இன்னொரு தோற்றம்



கீழே ரிஷபம் இருக்கிறது தெரியுதா?  இடப்பக்கம் அம்பிகை


மற்றும் சில வடிவங்கள்


பிரம்மாவின் பாதச் சுவடுகள், ஒரு படிக்கட்டில் இது இருக்கிறது.  இந்தப்படிக்கட்டு கங்கை ஓடிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து முப்பது, நாற்பது படிகள் மேலே உள்ளது, வெள்ளக் காலத்தில் கங்கை இதை முழுக அடித்துவிடுவாள்  என்கிறார்கள்.



இன்னொரு தோற்றம். இங்கேயும் பண்டிட்கள் வசூல் மன்னர்களாக இருக்கின்றனர்.




இது தான் துருவன் சந்நிதியாக இருக்கணும்,  அங்கே வழிகாட்டிகள் கிடைக்கலை.  அதனால் சரியாகச் சொல்ல ஆட்கள் இல்லை.







18 comments:

  1. படங்கள் + விளக்கங்கள் யாவும் அருமை. கங்கையைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. மாகாப்பு போட்டு இருக்கிறதா? கடவுளின் திரு உருவசிலைகளுக்கு?

    ReplyDelete
  3. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. மாகாப்பு போட்டு இருக்கிறதா? கடவுளின் திரு உருவசிலைகளுக்கு?

    ReplyDelete
  4. அருமையான படங்கள் ,
    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. படித்து விட்டேன். ரிஷபம் தெரிகிறதா என்றதும் மறுபடி பார்த்து 'ஆமாம், தெரிகிறதே' என்றேன். கேட்டதோ?

    ReplyDelete
  6. படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை அம்மா.. நன்றி...

    ReplyDelete
  7. சமீபத்தில் காசியில் கங்கையின் தரிசனம் கிடைத்தது என்றாலும் இந்த பிர்மாண்டம் பிரமிக்க வைத்தது.

    புகைப்படங்கள் வெகு சிறப்பு. உன்னிப்பாக பார்க்க வைத்தது.
    உங்கள் புனிதப் பயணங்களில் இந்தப் பயணம் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் போலிருக்கு.

    நெடுநாட்கள் கழித்து கோமதி அரசு அவர்களை உங்கள் பதிவில் பார்த்ததில் மகிழ்ச்சி. எங்கே காணோமே என்று நானே அவர்களைக் கேட்பதாக இருந்தேன்.

    ReplyDelete
  8. பிரம்மாவின் காலடி புல்லரிக்க வைத்தது. நிஜமாத்தான்.
    கங்கை படமும்.

    ReplyDelete
  9. வாங்க வைகோ சார், நன்றி.

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, பல மாதங்கள் ஆகிவிட்டன உங்களைப் பார்த்தே. வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  11. காப்புப் போட்டிருக்கிறதாத் தெரியலை. எல்லாம் மார்பிள் சிற்பங்கள்.

    ReplyDelete
  12. நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  13. வாங்க ஶ்ரீராம், ரிஷபத்துக்குக் கேட்டிருக்கும்னு நினைக்கிறேன். :)))))

    ReplyDelete
  14. வாங்க டிடி, நன்றி.

    ReplyDelete
  15. வாங்க ஜீவி சார், ஹரித்வாரிலும் கங்கையின் அகலம் பிரமிக்க வைக்குமே. இன்னும் சில இடங்களும் இருக்கின்றன. ஆனால் என்னைப் பிரமிக்க வைத்தது காசியில் இருந்து கயா செல்லும் வழியில் கண்ட சோன் நதிப் பாலம் தான். :)))))

    ReplyDelete
  16. //பிரம்மாவின் காலடி புல்லரிக்க வைத்தது. நிஜமாத்தான்.
    கங்கை படமும்.//

    @அப்பாதுரை, த்ரீமச்சாத் தெரியுதே! :P :P :P :P :P :P :P :P :P :))))))

    ReplyDelete
  17. படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  18. படங்களும் விளக்கங்களும் நன்று.
    தொடர்ந்து வருகிறேன்.....

    ReplyDelete