எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 08, 2013

வால்மீகி ஆசிரமத்தில்!

கான்பூரில் இருந்து கிட்டத்தட்டப் பதினைந்து மைல் தொலைவில் பிட்டூர் உள்ளது.  இது ஒரு காலத்தில் பேஷ்வாக்களால் ஆட்சி செய்யப்பட்டது. இந்திய சுதந்திரப் போரில் முக்கியப் பங்கு வகித்த ஊர் ஆகும்.  1857 இன் பிரசித்தி பெற்ற கலகமும் இங்கே தான் ஆரம்பிக்கப்பட்டதாய்ச் சொல்லுகின்றனர்.  ராணி லக்ஷ்மி பாய் என்னும் ஜான்சி ராணிக்கும் இது தான் பிறந்த ஊர் என்கின்றனர்.  ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பேஷ்வாவாக இருந்த பாஜிராவ் 2  என்பவர்  பேஷ்வாக்களில் கடைசி பேஷ்வா. ஆங்கிலேயரால் கான்பூரை விட்டு வெளியேற்றப்பட்டார்.  பிட்டூர் ஒரு காலத்தில் கான்பூரையே சேர்ந்திருந்தாலும் முக்கிய அரண்மனையிலிருந்து வெளியேறிய பேஷ்வா பிட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டார்.  நாளடைவில் அவருடைய தத்துப்புத்திரன் நானா சாஹேபிற்கும் இதுவே தலைநகராயிற்று. எனினும் விரைவில் பிரிட்டிஷ் காரர்கள் இங்கே முற்றுகை இட்டு மாளிகையையும் பல கோவில்களையும் தரைமட்டமாக்கினார்கள்.  இது சரித்திரம் சொல்லும் கதை.


ஆனால் ராமாயண காலத்திலேயே இந்த ஊர் இருந்ததாகவும், அப்போது வேறு பெயரில் இருந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.  அதற்கு ஆதாரங்களாக இப்போது இருப்பவையே வால்மீகி ஆசிரமம், லவ, குசர்கள் பிறந்த இடம்.  அஸ்வமேத யாகத்தின் போது போர் புரிய வந்த ஹனுமனை லவ, குசர்கள் கட்டியது. மேலும் சீதை பூமியில் விழுந்து மறைந்த இடம் ஆகியன இந்த ஆசிரமத்திலேயே உள்ளது.  மேலும் ஶ்ரீராமாநுஜர் இங்கே வந்து சென்றிருக்கலாம் என்பதற்கு அடையாளமாக ஒரு ஸ்தம்பமும் இந்த ஆசிரமத்தில் காணப்படுகிறது.  இது குறித்து அங்கு யாருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

ஆசிரமத்திலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாக கங்கை ஓடுகிறாள்.  கங்கைக்கரையின் மேற்கே அமைந்திருக்கும் இந்த ஊரில் கங்கைக்கரையில் காணப்படும் பிரம்மவர்த்த காட் என்னும் படித்துறையில் தான் பிரம்மா படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் கங்கையில் குளித்துவிட்டு வழிபாடுகள் செய்ததாகச் சொல்கின்றனர்.  அவர் பாதச் சுவடுகள் எனப்படும் பாதுகைகள் அங்கே காணப்படுகின்றன.  இவற்றைத் தனி சந்நிதியாக அமைத்து வழிபடுகின்றனர்.  கங்கையில் நீர் வரத்து அதிகம் இருக்கையில் இவை மறைந்துவிடுமாம்.  நாங்கள் சென்றபோது புது வெள்ளம் வடிய ஆரம்பித்த நேரம். ஆகையால் பார்க்க முடிந்தது.

அவத ராஜாவின் மந்திரியால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் கோயிலும் இருக்கிறது.  துருவன் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து என்றென்றும் ஒளிரும் துருவ நக்ஷத்திரப்பதவி பெற்றதும் இந்த கங்கைக்கரையில் தான் எனப்படுகிறது.  நாம் பிட்டூர்க்கு வரும் வழியிலேயே  பிட்டூர்  சாலையிலேயே சித்திதாம் ஆசிரமம் என்னும் ஆசிரமம் காணப்படுகிறது.  சுதான்ஷுஜி மஹாராஜ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட விஷ்வ ஷாந்தி மிஷனால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆசிரமும் பெரிதாக இருக்கிறது.  மிகப்பெரிய வளாகம்.  அங்கே கைலை மலையைச் செயற்கையாக நிர்மாணித்திருப்பதாய்க் கூறுகின்றனர்.  ஆனால் நாங்கள் செல்லவில்லை. நேரப் பற்றாக்குறை தான் காரணம்.  இதைத் தவிரவும் ஶ்ரீராமன், ஜானகிக்குக் கோயில், லவ, குசர்களுக்குக் கோயில் என்று கோயில்கள் ஆசிரமம் என உள்ளன.  வால்மீகி ஆசிரமத்தின் அழகும், மெளனமும், அமைதியும், அங்கே சென்றதுமே ஏற்பட்ட நிம்மதி உணர்ச்சியும் வார்த்தையில் வடிக்க முடியாதது.


படங்கள் தனிப்பதிவில்.

8 comments:

  1. இனி தொடர்கிறேன் அம்மா...

    ReplyDelete

  2. பல இன்னல்களுக்கிடையே கதைகள் பல தன்னுள்ளே கொண்டுள்ள இடம் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்களே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //வால்மீகி ஆசிரமத்தின் அழகும், மெளனமும், அமைதியும், அங்கே சென்றதுமே ஏற்பட்ட நிம்மதி உணர்ச்சியும் வார்த்தையில் வடிக்க முடியாதது.//

    அடடா, கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

    கொடுத்து வைத்தவர்கள், நீங்கள். ;)

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. உங்களுடன் நாங்களும் தரிசித்தோம்...

    படங்களைப் பார்க்க இதோ வருகிறேன்.

    ReplyDelete
  5. வாங்க டிடி, தொடர்வதற்கு நல்வரவு.:)))

    ReplyDelete
  6. @ஜிஎம்பி சார்,

    ஆம் ஐயா,இன்னல்களும் மகிழ்வும் கலந்து தானே வாழ்க்கை!

    ReplyDelete
  7. உண்மைதான் வைகோ சார், அங்கே சென்றதுமே மனம் சொல்லொணா அமைதியில் ஆழ்ந்தது. வைப்ரேஷன், வைப்ரேஷன்னு சொல்லுவாங்களே, அது என்னனு அன்னிக்குத் தெளிவாப் புரிஞ்சது. :))))

    ReplyDelete
  8. வாங்க வெங்கட், நன்றி.

    ReplyDelete