எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 17, 2014

மோதி அலை இங்கேயும்! :)

ஹிஹிஹி, மோதி அலை இங்கேயும் அடிச்சிருக்கு!  சும்மாவே நம்ம ரங்க்ஸுக்கும், நமக்கும் ஏழாம் பொருத்தம்.  அவர் கிழக்குனா நான் மேற்கு. அவர் தொலைக்காட்சினா நான் கணினி. அவர் சாம்பார் சாதம் சாப்பிட்டால் நான் சாம்பாரை ஸ்பூனிலே விட்டுக்கும் டைப்!  அவர் உயரம்; நான் எதிர்மறை! எனக்கு வம்பிழுக்க, கலகலவெனப் பேசப் பிடிக்கும்;  அவர் நேர்மாறாக இருப்பார்.  இப்போல்லாம் நானே அப்படி மாறிட்டதா அக்கம்பக்கம், உற்றம் சுற்றங்களிலே சொல்லிட்டு இருக்காங்க.

தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்கள் வாங்க எனக்குப் பிடிக்காதுன்னா அவர் வாங்கித் தான் பார்க்கலாமேங்கற டைப்.  பயங்கர ஷாப்பர்; நான் ஷாப்பிங் என்றாலே அலறும் டைப்!  ரொம்ப ஆசையா எனக்குப் பயன்படுமா; பயன்படாதானு கூடத் தெரிஞ்சுக்காம, கேட்டுக்காம வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கிக் குவிக்க ஆசை;  வாங்கவும் செய்வார். அவ்வப்போது நான் போடும் கத்தலால் கொஞ்சம் ஆசைகளை மட்டுப்படுத்திக்கிறார்.  

அதே மாதிரித் தான் காய்கள் வாங்கறச்சேயும்.   நான் திட்டம் போட்டு இன்றைய சமையலில் இருந்து நாளை, நாளன்னிக்கு வரை யோசிச்சுட்டு அதுக்கு ஏற்றாற்போல் வாங்கணும்னு சொல்வேன்.   அதோடு வத்தக்குழம்பு என்றால் பொரிச்ச கூட்டு அல்லது மோர்க்கூட்டு, சாம்பார் எனில் தேங்காய் போட்ட கறி அல்லது வதக்கல் கறி அல்லது பொரிச்ச கூட்டு. மோர்க்குழம்பு என்றால் புளிக்கீரை அல்லது புளி விட்ட கூட்டு, துவையல்னா பச்சடி அல்லது டாங்கர் என யோசித்து அதற்கேற்ப காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பேன்.  ஆனால் அவர் பொரிச்ச குழம்பு பண்ணிட்டு வாழைத்தண்டு மோர்க்கூட்டும் பண்ணுனு சொல்வார்.  என்னோட பிபி எகிற ஆரம்பிக்கும்.

அவர் மார்க்கெட்டுக்குப் போனால் ஒரே நாளில் வெண்டைக்காய், பூஷணிக்காய், சேனைக்கிழங்கு, வாழைத்தண்டு, வாழைப்பூனு வாங்கிக் குவிப்பார்.  இது எல்லாத்தையுமே உடனே சமைச்சாகணும்.  இல்லைனா ருசியும் குன்றும், காய்களும் வீணாகிவிடும். வெண்டைக்காயை என்னதான் குளிர்சாதனப் பெட்டியிலே வைச்சாலும் கொஞ்சம் முத்தத் தான் செய்யும். பூஷணிக்காயை இன்று வாங்கி இன்றே சமைக்கணும்.  அதே போல் வாழைத்தண்டு, வாழைப்பூவும்.  ஒரு வாழைப்பூவே எங்களுக்கு 2 நாட்களுக்கு வரும்.  அதே போல் வாழைத் தண்டும். இந்த அழகில் எல்லாத்தையும் ஒண்ணா வாங்கிட்டு வந்துட்டு என் கிட்டேயும் வாங்கிக் கட்டிப்பார்.

பச்சை மிளகாய் வீட்டிலே இருக்குனு சொன்னால் கூட அங்கே நல்லா இருந்தது.  சின்னச் சின்ன மிளகாயா, விலையும் கம்மினு சொல்லிட்டு வாங்கி இருப்பார்.  அதை என்ன உடம்பிலேயே அரைச்சுப் பூசிக்கிறதுனு கோவிப்பேன். ஆனாலும் அடுத்த முறையும் அப்படியே!  இந்த அழகில் தான் நாங்க குடித்தனம் பண்ணிட்டு இருக்கோம். ஆனால் பாருங்க இத்தனை இருந்தும் இன்றைய நாளை மறந்தது இல்லை.  முதல் நாளே நினைவூட்டுவார்; நினைவூட்டிப்பார்.  இந்த வருஷம் சுத்தமா நினைவில் இல்லை.  

என்னனு கேட்டால் எல்லாம் மோதி அலையாம்!  மோதி அலை வந்து எல்லாத்தையும் சுத்தமா மறக்கடிச்சுட்டுப் போயிடுச்சு! இன்னிக்குக்காலம்பர பொண்ணு கூப்பிட்டு வாழ்த்துச் சொன்னப்போத் தான் நினைவிலேயே வந்திருக்கு.  இதுக்கு ஒரு கத்து கத்தலாமா?  சும்மா விட்டுடலாமா?  என்ன சொல்றீங்க?

35 comments:

 1. அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
 2. மோடி அலையால் தங்களின் இனிய
  _____________ நாளை ஊர் உலகமே கொண்டாடி, பட்டாஸ் கொளுத்தி, லட்டு, ஜாங்கிரி, சாக்லேட் முதலியன ஊரெங்கும் பஸ்ஸில் போவோர் வருவோருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளதே ! ;)))))

  சந்தோஷப்படுங்கோ.

  அவரைப் படுத்தாதீங்கோ !
  பாவம் அவர் ... நல்ல மனிதர்.

  ReplyDelete
 3. Happy Anniversary Mrs Shivam. May God bless you both with health spiritual wealth and all happiness

  unga special puttu kesari bajji paNNittu ennai ninaissukkavum.

  ReplyDelete
 4. Happy Anniversary Mrs Shivam. May God bless you both with health spiritual wealth and all happiness

  unga special puttu kesari bajji paNNittu ennai ninaissukkavum.

  ReplyDelete
 5. அடேடே..... இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. வாழைப்பூ இரண்டு மூன்று நாள் வைத்துச் சமைக்கலாமே? அதை விடுங்கள், சேனைக்கிழங்கு? நாங்கள் வாங்கி ஒருவாரம் கழித்துக் கூட சமைத்திருக்கிறோமே...! வாழைத் தண்டு கூட குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூன்று நாட்கள் கழித்துக் கூட சமைத்திருக்கிறோம். தவறோ!

  ReplyDelete
 7. வைகோ சார் நன்றி. எங்கே படுத்தறது! :))))) அதெல்லாம் சும்ம்ம்ம்ம்மா உள உளாக்கட்டிக்குச் சொன்னேன். :)

  ReplyDelete
 8. நன்றி ஜெயஶ்ரீ, வீட்டிலே இப்போ ஸ்வீட்டே பண்ணறதில்லை. யாரானும் வந்தாக்க அவங்களுக்குக் கொடுக்கக் கூடக் கடையிலே வாங்கி வைச்சுடறார். இல்லைனா வீட்டிலே பண்ணி அதைச் சாப்பிட முடியாமத் தவிக்கணும். :)

  ReplyDelete
 9. நன்றி வெங்கட்.

  ReplyDelete
 10. நன்றி ஶ்ரீராம், கண்டு பிடித்த ஜெயஶ்ரீக்கும் ஊகித்த வைகோவுக்கும் தான் முதல் நன்றி. :))))

  ReplyDelete
 11. வாழைப்பூ இரண்டாம் நாளே கறுக்க ஆரம்பிக்குமே ஶ்ரீராம். வாழைத் தண்டும் வாங்கின அன்று சமைத்தால் இருக்கும் ருசி மறுநாள் சமைக்கையில் இருக்காது. சேனைக்கிழங்கை ஒரு வாரம் வைத்திருந்தால் கிட்டத்தட்டப் பாதிக் கிழங்கைச் சுரண்டி எடுக்கணும். :( கறுத்துப் போயிருக்கும்.

  அதோடு வாழைத்தண்டு, வாழைப்பூவை நான் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலே சமைப்பேன். ஊறுகாய்கள் கூடக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதில்லை. அதோட உண்மையான ருசி போயிடும். :(

  ReplyDelete
 12. இப்போது தான் ஒரு ஆறு மாசமாக ஒரு சொந்தக்காரர் சொன்னார்னு சேனைக்கிழங்கைப் பேப்பரில் சுற்றி அல்லது நல்ல பருத்தித் துணியில் சுற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு 3, 4 நாள் கழிச்சுச் சமைக்கிறேன். ஆனால எவ்வளவு தான் முன் கூட்டியே எடுத்து வெளியே வைச்சிருந்தாலும் நறுக்கும்போது போதும் போதும்னு ஆயிடும். :(

  ReplyDelete
 13. இனிய நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 14. OPPOSITE POLES ATTRACT....?..!நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நானுமே டிவியில் அடித்த மோதி அலையில் மாட்டிக் கொண்டேன். கணினி பக்கம் வரவேயில்லை. இப்ப தான் வந்தேன். நான் லேட்டாக சொல்லும் திருமண வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளுங்க மேடம்.

  ReplyDelete
 16. நன்றி ராஜராஜேஸ்வரி

  ReplyDelete
 17. நன்றி ஜிஎம்பி சார்.

  ReplyDelete
 18. வாங்க ராஜலக்ஷ்மி, மோதி அலை எனக்கு வெள்ளிக்கிழமை மத்தியானத்தோட சரியாப் போச்சு! :) நன்றிங்க.

  ReplyDelete
 19. அட???மெளலியா??? ஆச்சரியமாத் தான் இருக்கு. நன்றிப்பா.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள். வணக்கங்கள்.
  ரங்ஸுக்கு ஜே! அடடா.. என்னா ப்ரீ டைப்பு?!

  ReplyDelete
 21. அப்பாதுரை, எங்கே அடிக்கடி காணாமல் போயிடறீங்க? மெயில் போட்டதைக் கூடக் கண்டுக்கலை! :(

  ReplyDelete
 22. அடடா.. என்னா ப்ரீ டைப்பு?!//

  என்னைத் தானே சொல்றீங்க?? :)

  ReplyDelete
 23. கீதா நானும் மறந்தேனே. மாஅப்பு மா. நீங்கள் இருவரும் நீண்ட நாட்கள் நல்லபடியா இதே போலநண்டுபிடிக் குடித்தனமா சந்தோஷமா இருக்கணும். மாமா நல்லவர்ன்னால் மாமி ஏகத்துக்கு நல்லவர்.என்றேன்றும் நல்வாழ்வுக்கு இறைவன் வழி செய்யட்டும். இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. இனிய (தாமதமான) திருமண நாள் வாழ்த்துக்கள்.

  எங்களுடைய மிரர் இமேஜ்! ரங்கஸ் ரொம்பவும் சிஸ்டமேடிக். நமக்கு அதெல்லாம் வராது!

  ReplyDelete
 26. அட, வல்லி, இது என்ன மன்னிப்பு எல்லாம் கேட்டுண்டு! நான் முதலில் போடவேண்டாம்னு நினைச்சேன். அப்புறமா உங்க போஸ்டிலே என்னோட கமென்டைப் பார்த்துட்டுப் போட்டேன். :)

  ReplyDelete
 27. நன்றி சுரேஷ்!

  ReplyDelete
 28. வாங்க ரஞ்சனி, நானும் சிஸ்டமாடிக் தான். பிரச்னையே அது தான். பலருக்கு ரசிக்கவில்லை. :))))) என்னால் மாறவும் முடியலை! :))))) இப்போல்லாம் என் வரை தான் பார்த்துக்கறேன். சுயநலமாயிட்டேனோனு தோணும். :)))))

  ReplyDelete
 29. இனிய (தாமதமான)திருமண நாள் வாழ்த்துக்கள் ,நமஸ்காரங்கள் அம்மா.சீக்கிரம் நான் ஊருக்கு வந்தால் தேவலை . போஸ்டிங் ஒண்ணும் ஃபாலோ பண்ண முடியாம கஷ்டமா இருக்கு!!!!!...

  ReplyDelete
 30. நன்றி பார்வதி. மெதுவா வாங்க. ஒண்ணும் அவசரம் இல்லை. என்னைக் கேட்டால் இம்மாதிரியான இடைவெளி தேவை. நான் வீட்டிலேயே வாரம் ஒரு நாள், இரண்டுநாளாவது முக்கிய மடல்கள் மட்டுமே பார்ப்பது என வைத்துக் கொள்வேன். சில நாட்களின் கணினியைத் தொடாமலும் இருப்பது உண்டு. நம் மன உறுதியையும் சோதித்துக் கொள்ளலாமே. ஒரேயடியாகக் கணினிக்கும், இணையத்துக்கும் அடிமை ஆகவும் கூடாது. இப்போவும் ஒரு மணி நேரம் உட்கார்ந்தால் அடுத்த ஒரு மணி நேரம் கணினியை மூடுவதுனு வழக்கம்.

  மத்தியானம் மட்டும் தொடர்ந்து இரண்டு மணி நேரம். அப்போது தான் எழுதுவது எல்லாம். :)))))

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள்.
  17ம் தேதிதான் ஊரிலிருந்து வந்தேன். கடமையை நிறைவேற்ற அடிக்கடி கோவை பயணம் மெதுவாய் வந்து பழைய பதிவுகளை படித்து வருகிறேன்.
  உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. வாங்க கோமதி அரசு, இந்தப் பின்னூட்டத்தை இப்போத் தான் கவனிக்கிறேன். மிக்க நன்றி. உங்கள் கடமை குறித்து ஏற்கெனவே சொல்லி இருந்ததால் அதான் வர முடியலைனு நினைச்சுண்டேன். வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 33. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete