எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 05, 2014

குலை குலையாம் முந்திரிக்கா!

ரஞ்சனியோட கொழு கொழு கன்னைப் படிச்சதும் கொசுவத்தி மிக மிக வேகமாயும், புகை மண்டியும் சுத்தத் தொடங்கிடுச்சு.  அப்போதெல்லாம் விளையாடிய ஒரு சில விளையாட்டுக்கள் நினைவில் வந்தன.  முதல்லே ]

குலைகுலையாம் முந்திரிக்கா


திரி திரி பந்தம்
திருமால் தந்தம்
திரும்பிப் பார்த்தால் ஒருமொட்டு

வட்டமாய் எல்லோரும் உட்கார்ந்துக்கச் சுத்தி வருபவர் பாடுவார்.  பாடுவார் என்ன கிட்டத்தட்ட மந்திரம் மாதிரி முணுமுணுப்பார்.  உடனே வட்டத்தில் உள்ள ஒருத்தர் முதுகில் தன் கையில் உள்ள துண்டை அல்லது ஏதேனும் பொருளை ஒளித்து வைப்பார். ஒளித்து வைக்கிறது தெரியாமல் வைக்கணும்.  இதுக்காக நாலைந்து பேர் முதுகில் தட்டு என்ற பெயரில் செல்ல அடிவிழும்.  கடைசியில் யார் முதுகில் ஒளிச்சு வைச்சிருக்காங்கனு கண்டு பிடிக்கணும்.  சில சமயம் அவசரப் பட்டு யார் முதுகில் ஒளிச்சு வைச்சிருக்கோமோ அவங்க தன்னோட முதுகிலே இருக்குனு தெரிஞ்சு என் பேர் பூஷணிக்காய்னோ, கத்திரிக்காய்னோ சொல்லிடறது உண்டு.

குலையா குலையா முந்திரிக்காய் (சுற்றுபவர் பாடும் பாடல்)
நரியே நரியே சுற்றி வா (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)
கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான் (சுற்றுபவர் பாடும் பாடல்)
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)

சுத்தி வருபவர் யார் முதுகில் இருக்கோ அவங்களை எழுப்பி விட்டுட்டு அந்த இடத்தில் உட்காரணும். எழுப்பப்பட்டவர் சுத்தி வரணும்.  இதிலே ஏதேனும் தப்பு இருந்தாலோ, மாற்றம் இருந்தாலோ சொல்லுங்கப்பா.

அப்புறமாக் கண்ணாமூச்சி விளையாட்டு


கண்ணாமூச்சி ரேரேரே
காட்டுமூச்சி ரேரேரே
ஒரு பழம் தின்னுட்டு???? மறந்து போச்சு

அப்புறமா என்ன???

அடுத்து

கிச்சு கிச்சுத் தாம்பாளம்,கியாங், கியாங் தாம்பாளம்னு வரும். மறந்திருக்கு!

அப்புறமா

கல்லா, மண்ணா,

அதுக்கப்புறம்

புளியங்கொட்டை இருந்தால் கூடப் போதும் ஒத்தையா, ரெட்டையாக்கு!

ஒத்தையா இரட்டையா

கொஞ்சம் மறந்து போன

சீதாப்பாண்டி

இப்போவும் விளையாடிப் பார்க்கும்

தாயம்

கனவுகளாகிப் போனப்

பல்லாங்குழி


பார்க்கவே முடியாத

பூப்பறிக்க வருகிறோம்

13 comments:

 1. முதலிரண்டு விளையாட்டின் பாடல்களிலும் சினிமாப் பாடல்கள் உண்டு! பாலூட்டி வளர்த்த கிளி படத்தில் குலைகுலையாய் முந்திரிக்காய், 'ஜெயம்' படத்தில் கண்ணாமூச்சி ரே ரே பாடல்! இதில் பல்லாங்குழி விளையாடியிருக்கிறேன். குலைகுலையா முந்திரிக்கா ஆட்டமும் கோகோ ஆட்டமும் ஒன்றுதானே?

  ReplyDelete
 2. நாலு மூலை தாச்சி விட்டு விட்டீர்களே மேடம்.

  ReplyDelete
 3. இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது அம்மா...

  ReplyDelete

 4. இதற்கு முந்தைய பதிவில் பாவாடை சட்டை வயசு நினைவுகள் அருமை என்பதுபோல் எழுதி இருந்தேன். இதற்கும் அதே அதே.

  ReplyDelete
 5. பழங்கால விளையாட்டுக்களை நியாபகப் படுத்திவிட்டீர்கள்! அருமை! நன்றி!

  ReplyDelete
 6. வாங்க ஶ்ரீராம், சினிமாப்பாட்டு இருக்கிறது தெரியாது. பாலூட்டிவளர்த்த கிளி, ப்ழம் கொடுத்துப் பார்த்த கிளி என்பது கெளரவம் படத்தின் பாடல் இல்லையோ? சினிமாவா வந்திருக்கு? கோகோ வேறேனு நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. வாங்க ராஜலக்ஷ்மி, நாலு மூலைத் தாச்சி, சொட்டாங்கல், பரமபதம், ட்ரேட் விளையாட்டுனு எத்தனையோ விட்டுட்டேன். :)

  ReplyDelete
 8. ஜிஎம்பி சார், இவற்றைக் குறித்து அறியாத இந்தத் தலைமுறைக்கு இதை எடுத்துச் செல்லும் முயற்சியே இது.

  ReplyDelete
 9. வாங்க சுரேஷ், நன்றிப்பா.

  ReplyDelete
 10. அந்தக் கால விளையாட்டுக்களை நினைவில் அசைபோட வைத்து விட்டீர்கள் கீதா!

  குலை குலையா முந்திரிக்கா..
  நிறைய நிறைய சுத்தி வா..
  என்று நாங்கள் விளையாடுவோம்.

  கண்ணா மூச்சி ரேரே...
  காட்டு மூச்சி ரேரே ...
  உனக்கொரு பழம்...
  எனக்கொரு பழம் ..
  கொண்டோடியா !

  ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்ததாம்...
  ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்ததாம்...

  இரண்டு பேர் கை கோத்து மேலே தூக்கி வைத்துக் கொள்ள, மற்றவர்கள் கீழ் வழியாக அடுத்த பக்கம் செல்ல வேண்டும். பத்தாம் எண்ணைச் சொல்லும்போது அகப்பட்டுக் கொள்பவர் அவுட். இதுவும் அந்தக்கால விளையாட்டுதான?

  பல்லாங்குழியிலும், தாயத்திலும் ஏமாற்றும் அண்ணன், தம்பிகளோடு சண்டை போட்டு ஆட்டம் பாதியில் களைவதுதான் அதிகமாக இருக்கும்!இந்தக் காலக் குழந்தைகளுக்கு இது போன்ற எந்த அனுபவமும் கிடையாது.

  ReplyDelete
 11. இனிய நினைவுகள். பல விளையாட்டுகள் நானும் விளையாடியதுண்டு.....

  ReplyDelete
 12. அட, அட! என்ன ஒற்றுமை! சென்ற வெள்ளிக்கிழமை இந்த ஒருகுடம் தண்ணி ஊத்தி விளையாட்டைப் பற்றி எனது குழந்தைகள் வளர்ப்புத் தொடரில் எழுதினேன். இங்கு வந்தால் நீங்கள் குலைகுலையா பற்றி எழுதியிருக்கிறீர்கள்.
  இதோ இணைப்பு:
  http://wp.me/p2IA60-1wJ
  @ஸ்ரீராம், குலைகுலையா விளையாட்டில் வட்டமாக உட்கார்ந்து கொள்வோம். கோகோ வில் நேர் வரிசையில் உட்கார்ந்து சுற்றி வருபவர்கள் ஒருவர் விட்டு ஒருவர் இடையில் புகுந்து வரவேண்டும், இல்லையா?

  எங்கள் வீட்டில் என் அக்கா அதிகம் விளையாட வரமாட்டாள். நான் என் தம்பி அண்ணாக்களுடன் சேர்ந்து கிட்டுப்புள், கோலி, பம்பரம் எல்லாம் விளையாடுவேன்! :)

  ReplyDelete
 13. ஹாஹா ரஞ்சனி, நானும் உங்களைப்போலவே தம்பியோடு கோலி, பம்பரம் எல்லாம் விளையாடுவேன். தம்பிக்கு பம்பரத்தில் "அப்பீட்" எடுக்க வராத போதெல்லாம் அவனுக்காம நான் எடுத்துக் கொடுப்பேன். :))) அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான்! முதுகுத் தோல் உரியும்! :)))))

  ReplyDelete