பெற்ற தாயைப் போலவே பேசும் மொழியையும், பிறந்த நாட்டையும் போற்றிப் பாராட்டுவது மக்கள் கடமையாகும்.மொழிக்குத் தெய்வமான கலைமகளைத் தாயாகவே கருதி வழிபடுவது பெரியோர்கள் இயல்பு. அப்படியே நிலமகளையும் அன்னையாக வணங்கி வருவதும் நம் நாட்டினர் வழக்கம். பண்டைக்கால முதற்கொண்டே தம் தம் நாட்டினிடத்தே அன்பு கொள்ள வேண்டுமென்ற கொள்கை மக்களுக்கு இருந்து வருகின்றது. காப்பியங்களில் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு நாட்டுப் படலம் சொல்லப் படுகிறது. அதனால் நாட்டைப் பற்றிய செய்தியின் தலைமை விளங்கும். மனிதராய்ப் பிறந்த யாவருக்கும் தாய் நாட்டின் மீது அபிமானம் இருத்தல் இயல்பு. திருக்குறளில்,
"சிறை நலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்
உறைநிலத்தோடொட்டல் அரிது." என்பதன் விசேடவுரையில் பரிமேலழகர் பலத்திற் குறைந்த வீரர்களும் தம்முடைய நாட்டினிடத்திலேயுள்ள பற்றினால் பகைவரை எதிர்த்து வெற்றி பெறுவார்கள். அவர்கள் தம்முடைய நாட்டை விட்டுப் பிரிவதைக் காட்டிலும் சாவதற்குத் துணிந்திருப்பார்கள்" என்று தமிழ்த் தாத்தா தாய்மொழியைக் குறித்துத் தெரிவிக்கிறார்.
இப்போச் சில நாட்களாகக் காலை வேளையில் அரை மணி நேரம் கூடக் கணினியில் அமர முடியவில்லை. இதை நேத்தே ஷெட்யூல் செய்ய நினைச்சு வேலை மும்முரத்திலும் அடுத்தடுத்து யாராவது வந்து கொண்டிருந்ததிலும் முடியலை! :)))) ஆகவே கொஞ்சம் தாமதமாகவேனும் போட முடிந்ததுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தாத்தாவின் பிறந்த தினத்தில் தாத்தாவுக்கு நமது அஞ்சலிகள்.
என்னடா இன்னும் காணோமே என்று பார்த்தேன்.
ReplyDeleteஹிஹிஹி, ஷெட்யூல் பண்ணி வைச்சிருக்கணும். நேத்திக்குக் கணினி பக்கமே வர முடியலை! :( ஒரே மக்கள் கூட்டம் வீட்டிலே! இன்னிக்கு யாருமே இல்லையா! எனக்கே ஒரு மாதிரியா இருக்கு! :)))))))
Deleteஒரே மக்கள் கூட்டம் வீட்டிலே!// வோட்டு போட்டவங்களுக்கு ஏதாவது கொடுத்தீங்களா? :P:P:P:P
ReplyDeleteஓட்டுப் போட்டவங்களுக்கு நாங்க எதுக்குக் கொடுக்கிறோம் வா.தி.???? ஓட்டெல்லாம் இல்லாமலேயே இங்கே வரதுக்கு வரிசையிலே நிக்கிறாங்க மக்கள்! இந்த வாரத்துக்கு நேத்தோட சரினு நினைக்கிறேன். அதுவும் தெரியலை! :)))) வர ஞாயிற்றுக்கிழமை ஒரு பத்துப் பேர் வருவாங்களோனு நினைச்சேன். இப்போ இடம் மாத்தியாச்சு! :))))
Delete//தாத்தாவின் பிறந்த தினத்தில் தாத்தாவுக்கு நமது அஞ்சலிகள்.//
ReplyDeleteஆம் அஞ்சலிகள்..
வாங்க ராம்வி, நன்றிம்மா.
Deleteஷெட்யூல் செய்தாலும் அதன்படி பதிவுகள் எனக்கு வெளி வருவதில்லை. எங்கு தவறோ தெரியவில்லை. .
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், சில சமயம் எனக்கும் அப்படி நடப்பதும் உண்டு. ஷெட்யூல் செய்யும்போதே வெளி வந்ததும் உண்டு. தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம். :))))
Deleteமக்களை விடவா...?
ReplyDeleteதொடருங்கள் அம்மா...
தாத்தாவை மறக்காத தமிழ்ப் பேத்திக்கு என் வாழ்த்துகள். அவரைப் போன்ற மகானைப் பற்றி எழுதவும் ஒரு தகுதி வேண்டுமே
ReplyDeleteதமிழ் தாத்தாவிற்கு எனது அஞ்சலிகளும்!
ReplyDeleteதமிழ் தாத்தா - லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பதிவு!
ReplyDelete