எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 07, 2015

நம்ம ஆஞ்சியும், தும்பிக்கை நண்பரும்!



இதோ இருக்கும் ஆஞ்சியைத் தான் பார்த்துட்டு வரேன். அதோ கொஞ்சம் தள்ளித் தெரியறாரே அவர் தான் பட்டாசாரியார்.  சிடு சிடு எப்போப் பார்த்தாலும்.  சாப்பிட்டுட்டு இருக்கார் போல! அதிசயமா இன்னைக்கு அலைபேசி எடுத்துட்டுப் போயிருந்தேன்.  ஏனெனில் இன்னைக்கு ரங்க்ஸும் வெளியே போனதால் என்னைக் கையில் அலைபேசியை எடுத்துட்டுப் போனு சொல்லி  இருந்தார்.  ஆனால் நான் கிளம்பிக் கீழே போறச்சேயே அவர் வந்துட்டார்.  ஆனாலும் அலைபேசி கையில் இருந்தது.  அதில் எடுத்த படம் தான் இது.





இந்தத் தும்பிக்கை நாதர் இங்கே அம்மா மண்டபத்திலேயே இருப்பவர்.  இவரை வைத்துப் பாகன்கள் பிழைக்கின்றனர்.  யாரோ கொடுக்கும் வசூலுக்குத் தான் தும்பிக்கையார் சிரிச்சுட்டே போய் வாங்கிக்கறார். வரவங்க சாப்பிடக் கொடுத்தாச் சரி. அவருக்கே போய்ச் சேரும்.  காசு கொடுத்தால் அதைப் பாகன்கள் கிட்டேத் தான் கொடுக்கிறார்.  இளைச்சுப் போய் எலும்பெல்லாம் தெரியுது பாருங்க!  ஒரு நாள் காமிரா எடுத்துட்டுப் போய்ப் படம் எடுத்துட்டு வரேன்.   நான் படமே எடுக்கிறதில்லைனு எல்லோரும் கேலி செய்யவும் உடனே எனக்கு  வீராவேசம் வந்துடுத்துனு நினைக்கிறேன். :))))))

13 comments:

  1. பட்டாச்சர்யார் கொஞ்ச வயசுக்காரரா தெரியறாரே...

    பாவம் தும்பிக்கை நண்பர். யாரிடமும் புகார் தர முடியாதா?

    இதே நண்பரை அதிகாலை இருளில் நானும் பு.ப எடுத்தேனே..!

    ReplyDelete
    Replies
    1. தும்பிக்கையார் இன்னிக்குக் கொஞ்சம் ஃப்ரெஷாத் தெரிஞ்சார். நல்ல நாமம் போட்டு அலங்கரித்திருந்தனர். அவரும் வரவங்க, போறவங்களை எல்லாம் வம்புக்கு இழுத்துட்டு இருந்தார். அலைபேசியும் கொண்டு போகலை; காமிராவும் கொண்டுபோகலை. காவிரிப் படித்துறை வரை இன்னிக்கு நாத்தனார் தயவால் போனேன். தினம் ஆஞ்சியை மட்டும் பார்த்து ஹெலோ சொல்லிட்டு தும்பிக்கையாருக்கு ஒரு வணக்கம் சொல்லிட்டு வந்துடுவேன். :))) நாளைக்குப் போனால் படம் எடுத்துட்டு வரணும். ஶ்ரீரங்கம் வந்த புதுசுலே எடுத்துப் போட்டிருக்கேன்.:)

      Delete
    2. பட்டாசாரியார் ரொம்பச் சின்ன வயசும் இல்லை, ரொம்ப அதிக வயசும் இல்லை. நடுத்தர வயசுக்காரர். :))))

      Delete
  2. ஸ்ரீரங்கத்து பட்டாச்சாரியர்கள் கொஞ்சம் சிடுசிடுவென்றுதான் இருக்கிறார்கள்! ஆனால் நான் திருமணம் செய்து கொண்டு முதன் முதலில் வந்தபோது ஒரு பட்டாச்சாரியார் நல்லவிதமாக தரிசனம் வைத்தார்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சுரேஷ். எனக்குக் கசப்பான அனுபவங்கள் பல இருந்தாலும் ஒன்றிரண்டை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். :)) என்ன செய்வது!

      Delete
  3. வீராவேசம் தொடரட்டும் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, டிடி, இன்னிக்கே குறைஞ்சு போச்சோ? நாளைக்குப் பார்க்கலாம்.

      Delete
  4. நான் படமே எடுக்கிறதில்லைனு எல்லோரும் கேலி செய்யவும் உடனே எனக்கு வீராவேசம் வந்துடுத்துனு நினைக்கிறேன். :))))))//

    அதனால் நன்மை எங்களுக்கு இறைவனின் தரிசனம்.
    வெற்றிலைமாலை, துளசி மாலை போட்ட அனுமன் தரிசனத்திற்கு நன்றி.
    யானைக்கு உணவையும் கொடுக்க விட மாட்டேன் என்கிறார்கள், கொடுத்தால் அதையும் பையை நீட்டி பாகன்களே பெற்றுக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, பொதுவாகவே இங்கே ஶ்ரீரங்கத்தில் பசுமாடுகளுக்கோ, யானைக்கோ உணவு கொடுக்க விடுவதில்லை. அதுக்கு ஒத்துக்காத உணவாக இருந்தால் என்ன செய்வது என்பது தான் காரணம். இரண்டாவது காரணம் உணவுக் கட்டுப்பாடு. அப்புறமா அதுக்கு உடம்பு வந்து ஏதேனும் ஆச்சுன்னாலும் மக்களே சரியாக் கவனிக்கலைனு சொல்லிடுவாங்களே. ஆனால் இந்தத் தும்பிக்கையாருக்கு வாழைப்பழம், தேங்காய் போன்றவை கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.

      Delete
  5. படமெடுக்க நீங்க என்ன பாம்பா சும்மா சொன்னது கீதா. சனிக்கிழமை ஆஞ்சி தரிசனம் . .இதே தும்பிக்கையார் வீதிகளில் கடைகண்ணியில் காசு வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன் ஸ்ரீரங்கத்தில்

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இன்னிக்குத் தும்பிக்கையாரைக் காணோம். எங்கே போனார்னு தெரியலை. போறாத குறைக்குத் திருச்செந்தூர் கோயில் ஆனையார் 30 வயசுக்கெல்லாம் இறந்தது வேறே மனதுக்குக் கஷ்டமாப் போச்சு! :((

      Delete
  6. ம்ம்ம்... படம் எடுத்துட்டீங்க போல! :))))

    திருவரங்கத்தில் ஆண்டாள் தவிர இந்த யானையார் ஆங்காங்கே இருப்பதைப் பார்த்ததுண்டு... பாவமா இருக்கும்.....

    ReplyDelete
  7. "இளைச்சுப் போய் எலும்பெல்லாம் தெரியுது" . மனதுக்கு கஸ்டமாக இருந்தது,

    ReplyDelete