எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 22, 2015

பதிவர் மாநாடு ஶ்ரீரங்கத்தில்!

ரஞ்சனி நாராயணன் இந்த வாரம் ஶ்ரீரங்கம் வருவதைக் குறித்து எனக்கு ஒரு மாசம் முன்னேயே தொலைபேசிச் சொல்லி இருந்தார். அவர் வரும்போது இங்கே உள்ள திருச்சி, ஶ்ரீரங்கப் பதிவர்கள் அனைவரையும் பார்க்க ஆசைப்பட்டார்.  வெள்ளிக்கிழமையன்று ஶ்ரீரங்கம் வந்த ரஞ்சனி இன்று மாலை பதிவர்கள் அனைவரையும், வயதிலும், அனுபவத்திலும் மூத்த பதிவரான திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் வீட்டில் சந்திப்பதாகவும் எல்லோருமே அங்கே வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  சந்திக்கும் நேரம் மாலை ஐந்து மணியிலிருந்து.  கிளம்புவது அவரவர் விருப்பம் போல் என முடிவு செய்யப்பட்டது.


நாம தான் எப்போவும் அவசரக் குடுக்கை.  அதோடு இப்போது உறவினர் வருகையாக வேறே இருக்கிறது.  நாளைக்கு ஒரு பூணூல் கல்யாணம் வேறே கலந்துக்கணும்.  ஆகவே வந்துட்டு உடனே கிளம்பிடுவேன் என அனைவரையும் மிரட்டி வைச்சிருந்தேன். சாயந்திரம் ஐந்து மணி என்றால் சரியான ராகுகாலத்தில் கிளம்பணுமேனு நினைச்சால் நம்ம ரங்க்ஸ் நாலு மணிக்கே என்னைக் கிளப்பி விட்டுட்டார்.  சீக்கிரம் போனால் சீக்கிரம் வரலாம்.  அதோடு எனக்கு இருட்டிப் போச்சுன்னா வண்டி ஓட்டுவது கஷ்டம்னு சொன்னார்.  அவரோட கவலைஅவருக்கு.  பூணூலுக்கு வந்திருக்கும் விருந்தினர் வேறு வீட்டுக்கு வந்தாலும் வரலாம்.

ஆகவே அவர் என்னைக் கொண்டு விட்டுவிட்டுத் திரும்ப வீட்டுக்கு வருவதாகவும், பின்னர் ஆறு, ஆறரை போல் அழைத்து வருவதாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு தரப்பும் மனமார ஒத்துக் கொண்டு கையெழுத்துப் போட்டோம்.,  வீட்டை விட்டுக் கிளம்பி திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் வீட்டுக்குச் சென்றோம்.  அங்கே உள்ள விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்துப் போடும்போதே திரு வைகோ, திரு தமிழ் இளங்கோ, திருமதி ராதா பாலு ஆகியோர் என்னை அடையாளம் கண்டு கொண்டு கூப்பிட்டனர்.   அங்கேயே திருமதி வெங்கட் நாகராஜ், அவர்கள் மகள் ரோஷ்ணி ஆகியோரையும் பார்க்கக் கீழேயே ஒரு சின்னச் சந்திப்பு நடந்து முடிந்து அனைவரும் திருமதி ருக்மிணி அவர்கள் இல்லம் நோக்கிச் சென்றோம்.

இரண்டாவது மாடியில் இருக்கும் அவர்கள் வீட்டில் திரு ரிஷபன் முன்னரே வந்து காத்திருந்தார்.  ஏற்கெனவே ரிஷபன் எங்க வீட்டுக்கு வந்திருந்தும் அவரை எனக்கு அடையாளம் தெரியாமல்  திருதிருவென முழிக்க திருமதி வெங்கட்டும், அவர்கள் மகளும் ரிஷபன் சாரைத் தெரியலையா?  உங்க வீட்டுக்கு வந்திருக்காரே என்றனர்.  கொஞ்சம் இல்லை; நிறையவே அசடு வழிந்தது.  எங்களை அவரும் திருமதி ருக்மிணியும் வரவேற்க, அனைவரும் ஒருவருக்கொருவர் சிறிது நேரம் அறிமுகம் செய்து கொண்டு பேசினோம். அதற்குள்ளாக ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் ஒரு பெரிய பையுடன் வர அதற்குள் மாவடுவா என ஆவலுடன் நான் பார்க்க, அவர் கொடுத்ததோ அவருடைய புத்தகம். மாவடுவுக்கு மீண்டும் முன் பதிவு செய்து கொண்டு உட்கார்ந்தேன். இந்தியா ஜெயித்துவிட்டது என்பது தெரிந்தவுடனே வெளியே கிளம்பிய ரஞ்சனி அவர் கணவருடன் வந்து சேர்ந்தார். அவருடன் சிறிது நேரம் அறிமுகம்.  மீண்டும் பேச்சு.

சற்று நேரத்தில் ஒருவர் கையில் பையுடன் வர இவரை எங்கேயோ பார்த்திருக்கேன்; எங்கேனு தான் தெரியலை என நான் நினைக்க அதற்குள்ளாக ராதா பாலுவும், ரஞ்சனியும் இவர் யார்னு என்னைக் கேட்க, நான் அவர்களைக் கேட்க இம்முறையும் பெரிய அளவில் அசடு வழியும்படி வந்தவர், "நான் மாதங்கியின் அப்பா!" என்றார்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என மனதுக்குள் என்னை நானே சொல்லிக்கொண்டேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு முறை வீட்டுக்கு வந்திருக்கார்.  ஆனாலும் யார்னு புரியாமல் முழிச்சிருக்கேன்.  இன்னும் அசடு வழிய யார் வரப் போறாங்களோனு நினைக்க இனி யாரும் இல்லைனு சொன்னாங்க.

மாதங்கியின் அப்பா அஷ்டாவதானியாம்.  இந்தத் தகவலே எனக்கு இன்று தான் தெரியும். தமிழ் இளங்கோ அவர்கள் பாரத ஸ்டேட் வங்கி என்று சொல்லவும் நான் என் தம்பியைக் குறித்துச் சொன்னேன்.  அவரும் யார்னு புரியலை, பார்த்தால் புரியும் என்று சொன்னார். பெண்கள் அனைவரும் சமையலைப் பத்தியே அதிகம் எழுதறீங்க, சமையலறையை விட்டு எப்போ வெளியே வரப் போறீங்கனு தமிழ் இளங்கோ கேட்க, நாங்க வெளியே வந்தால் உங்களுக்குச் சாப்பாடு எப்படிக் கிடைக்கும்னு நான் கேட்க, ஹோட்டலில் சாப்பிடலாம்னு அவர் சொல்ல, ஒரு நாள், இரண்டு நாள்னா சாப்பிடலாம்.  என்னிக்கோ சாப்பிட்டாலே ஒத்துக்கறதில்லை. என்று நான் சொல்ல திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் சமையல் செய்வதன் முக்கியத்துவத்தைக் கூறினார்கள்.

அஸ்வமேத யாகம் செய்வதற்குச் சமம் ஒருவருக்குச் சமைத்துப் போட்டுப் பசியாற்றுவது என்று அவர் சொல்ல, பேச்சு மெல்ல மெல்ல நகர்ந்து ஒவ்வொரு ஹோட்டலின் சுவையையும் குறித்துப் பேசப்பட்டது.  உடனே நான் சும்மா இருக்காமல் இப்போச் சாப்பாடு பத்தித் தானே பேசறோம்.  சமைக்கலைனா பேசமுடியுமானு கேட்க, சுவை குறித்துத் தான் பேசறோம்னு அவர் சமாளிக்கப் பேச்சுப் பல திசைகளிலும் சென்றது.  ஒவ்வொருவராகத் தங்கள் காமிராவில் படம் பிடித்தனர்.  படங்களை அநேகமாக வைகோ அவர்கள் வெளியிடுவார்.  நான் காமிரா கொண்டு போகவில்லை;  செல்ஃபோனிலும் எடுக்கவில்லை.

பின்னர் என்னை அழைத்துச் செல்ல ரங்க்ஸ் தொலைபேசிக் கேட்க நானும் கிளம்பத் தயாரானேன்.  அதற்குள்ளாக ரஞ்சனி, வைகோ, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஆகியோர் அவரவர் புத்தகங்களை எங்களுக்குப் பரிசாகக் கொடுத்தனர்.  திருமதி ராதா பாலு வெற்றிலை, பாக்கு, ரவிக்கைத் துணி வைத்துக் குங்குமச் சிமிழ், விஷ்ணு பாதத்தோடு அளித்தார். செவிக்கு மட்டும் உணவில்லாமல் வயிற்றிற்கும் திருமதி ருக்மிணி சேஷசாயி செய்து வைத்திருந்தார்.  இட்லி, உ.கி. போண்டோ, கடையில் வாங்கிய மில்க் ஸ்வீட், காஃபி ஆகியன. நான் வயிறு ஏற்கெனவே சரியில்லாததால் இரண்டு இட்லியும் ஸ்வீட்டும் மட்டும் எடுத்துக் கொண்டேன்.  உ.கி. போண்டோ எண்ணெய்ப் பதார்த்தம் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.  பின்னர் காஃபி குடித்துவிட்டு உட்கார்ந்திருக்கையில் கீழே வந்த ரங்க்ஸ் அங்கிருந்து என்னை அழைக்க  அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி வீட்டுக்கு வந்தாச்சு.

மத்தவங்க உட்கார்ந்திருக்காங்க.  அவங்க கிளம்ப இன்னும் நேரம் ஆகும்னு நினைக்கிறேன்.  ஆகவே மற்றவை அவங்க பதிவுகளில் பார்த்துக் கொள்ளலாம். 

39 comments:

 1. அடடா.... சுடச்சுடப் பதிவு!

  சுவையான பதிவு... உ.கி. போண்டா, இட்லி ஸ்வீட் எல்லாம் இருக்கே!

  கிரிக்கெட் ஜெயித்த மகிழ்வில் நாங்கள் இருக்கும்போது நீங்கள் அங்கு பதிவர் சந்திப்பின் மகிழ்வில்... வாழ்க வளமுடன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், உண்மையிலேயே ருசியான பதிவு தான். :))) எனக்குத் தான் சாப்பிட முடியாதபடிக்கு வயிறு தொந்திரவு! :)

   Delete
  2. உ.கி. போண்டோ நான் சாப்பிடவே இல்லை! :( :)))))

   Delete
 2. சுடச்சுட பதிவு எழுதியாச்சா மாமி...:)

  இனிமையான மாலைப்பொழுதாக அமைந்தது.

  நாங்களும் 7 மணி போல அங்கிருந்து கிளம்பிவிட்டோம்...:)

  ரஞ்சனிம்மாவால் தான் எல்லோரையும் ஒருங்கே சந்திக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது...

  ReplyDelete
  Replies
  1. ரொம்பச் சூடான பதிவு! இல்லையா? நீங்களும் பதிவு போட்டிருக்கீங்களா?

   Delete
 3. கொஞ்சம் இல்லை; நிறையவே அசடு வழிந்தது.

  யாரு அள்ளிணா? ரங்க்ஸ் கூட இல்லையே. ஒரு வார்த்தை: கீதாவோ, ரஞ்சனியோ சொன்னா வந்திருப்பேனே. னே!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, அசடு வழிந்து ஓடியது "இ" சார். அதுக்கப்புறமா இரண்டு பேரையும் பார்க்கவே எனக்கு வெட்கமாக இருந்தது! :) ரங்க்ஸ் வந்திருப்பார்! வீட்டிற்கு விருந்தினர் வருவாங்களோனு ஒரு எண்ணம்! அதான்! அதோடு பால் வாங்கணும். பூனையார் சுத்திட்டிருக்கார். :))))

   Delete
 4. எழுதியிருந்த விதம் மிக அருமை! கூடவே இருந்த மாதிரி உண‌ர்வு ஏற்பட்டது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ சாமிநாதன், வரவுக்கும், பாராட்டிற்கும் நன்றி.

   Delete
 5. ஆயிரம் வேலைகள் இருப்பதாகச் சொல்லி, பதிவர் சந்திப்பிலிருந்து, அவசர அவசரமாகப் புறப்பட்டது, இந்தப்பதிவினை வெளியிடுவதற்குத் தானா? நீங்க பலே ஆளு.

  நான் இப்போத்தான் சந்திப்பின் முதல் பகுதியையே சற்று சஸ்பென்ஸ் கொடுத்து ஆரம்பித்துள்ளேன்.

  அதற்குள் இப்படி என் சஸ்பென்ஸ் என்கிற பூசணிக்காயைப் போட்டு உடைத்து விட்டீர்களே !

  என் பதிவு ஏனோ வழக்கம்போல டேஷ் போர்டில் தெரியாமல் உள்ளது. இதோ இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2015/02/1.html

  அன்புடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. வாங்க வைகோ சார், அங்கிருந்து கிளம்பும்போது எழுதும் எண்ணமெல்லாம் இல்லை. அதனால் தான் படங்களும் எடுக்கவில்லை. அப்புறமா திடீர்னு தோன்றிய ஓர் எண்ணத்தில் எழுதினேன். :)))) உங்க பதிவையும் பார்த்தேன். :)

   Delete
 6. வைகோ ஐயாவின் தளத்தில் நாளை படங்களுடன் பகிர்வு வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, அவர் விஸ்தாரமாக எழுதுவார். பொறுத்திருந்து பார்ப்போம். :)

   Delete
 7. சுடச்சுட பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு......

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், அனைவருமே உங்களை நினைவு கூர்ந்தோம்.

   Delete
 8. சுடசுட போண்டா சாப்பிட்ட மகிழ்வு. அருமையான அன்பர்களின் கூட்டம். அனைவருமே சிறந்த பதிவர்கள் . பகிர்ந்து கொண்டதற்கு மிக நன்றி. திருச்சி ஸ்ரீரங்கம் மோஸ் ட் ஹாப்பனிங் பிளேஸ் ஆகிவிட்டது. அடுத்த தமிழ்ப் பதிவர்கள் மாநாட்டை அங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என் வேண்டுகோள்.
  என் மனம் நிறைந்த நன்றி கீதா.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவர் மாநாடு புதுக்கோட்டையிலாம் வல்லி! நேத்துத் தான் ஆதி வெங்கட் சொன்னாங்க. போக முடியுமானு தெரியலை. உள்ளூர்னா எப்படியோப் போயிடலாம். பார்ப்போம். :)

   Delete
 9. சுடச்சுட சுவையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி! படிக்கும் போதே, உங்கள் விவரிப்பு (narration) நேற்றைய பதிவர் சந்திப்பினை மீண்டும் என் கண்முன்னே கொணர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தமிழ் இளங்கோ ஐயா, பாராட்டுக்கு மிக்க நன்றி.

   Delete
 10. நம்மை photo எடுத்த்த பிறகு, photo-வில் எப்படி இருக்கிறோம் என்று ஆவலோடு பார்ப்பது போல

  தங்கள் பதிவை ( பயந்து கொண்டே) பார்த்த்தேன்..நல்ல வேளை !

  மாலி.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, மாலி சார், நானில்லை பயப்படணும்! :) உங்களுக்கு எதுக்கு பயம்?

   Delete
 11. அருமையான பதிவர் சந்திப்பு .
  நேரில் கலந்து கொண்டமாதிரி இருந்தது .

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, நன்றிங்க.

   Delete
 12. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 13. ஆஹா....கீதா....நாங்கள்லாம் கிளம்பறதுக்குள்ள ஆத்துக்கு போய் பதிவே போட்டாச்சா....சூப்பர்! உங்களையெல்லாம் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ராதா, சைகிள் காப்பிலே நேரம் கிடைச்சது. உடனே ஆன்லைனிலே அப்படியே தட்டச்சித் திரும்பிக் கூடப் பார்க்கலை! பப்ளிஷ் கொடுத்துட்டேன். :)

   Delete
 14. நானும் இந்த சந்திப்பு குறித்த ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதில் உங்களது இந்த பதிவினையும் மேற்கோள் காட்டி இருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவையும் படிச்சேன் ஐயா. சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.

   Delete
 15. Replies
  1. வாங்க துளசி, நன்றி.

   Delete

 16. சந்திப்புகள் மகிழ்வூட்டும்
  மகிழ்வூட்டும் பதிவர்கள் சந்திக்கையில்
  சந்திப்புகள் பயன்தருமே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி காசிராஜலிங்கம்.

   Delete
 17. என்னை (தளத்தை) மறந்துட்டீங்களே அம்மா...

  ReplyDelete
  Replies
  1. உங்களை மறப்பதா? புரியலையே டிடி???????

   Delete
 18. நானும் உங்களைப் போல எப்போதுமே முன்னால் போய் நிற்பவள் தான். அன்று காலை பூணூல் கல்யாணம், அதற்கும் முன்பு இரண்டு திவ்ய தேச சேவை என்று இருவருமே களைத்துப் போய்விட்டோம். அடுத்தநாள் தில்லைஸ்தான விஜயம். அதற்கு முன்னேற்பாடுகள் என்று தாமதமாகிவிட்டது.

  அடுத்தமுறை நிச்சயம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் போனில் சொல்லிவிட்டு.
  எல்லோருடனும் நிறையப் பேச முடியவில்லை என்பது குறைதான்.
  உங்கள் ரங்கஸ் -ஐயும் பார்க்க முடியவில்லை. அடுத்தமுறை இதையெல்லாம் நிவர்த்தி செய்து விடலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரஞ்சனி, உள்ளூர் என்பதால் நேரத்தோடு போக முடிஞ்சது. அதோடு இது ஒண்ணும் அலுவலகக் கூட்டமெல்லாம் இல்லையே, நண்பர்கள் சந்திப்புத் தானே! தாமதம் ஏற்புடையதே! :))) வாங்க இன்னொரு முறை சாவகாசமா.

   Delete
 19. நான் பதிலெழுதினேனே. ஒருவேலை கூகல்லேயா. இருக்கும். முதல்லே இதுதான் படிச்சேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சி அம்மா, இந்த ஒரு கருத்துத் தான் வந்திருக்கு. ஸ்பாமிலே கூடத் தேடிட்டேன். வேறே இல்லை. :(

   Delete