இன்னிக்குக் காலம்பர நடைப்பயிற்சிக்குப் போன ரங்க்ஸுக்கு அதிர்ச்சி! சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்திருக்கிறது. இதிலே என்ன அதிர்ச்சினு கேட்கறீங்களா? இருக்கே! நேற்று ராத்திரி தான் நான் இன்னிக்குக் காலம்பர வடாம் போட அரிசியும், ஜவ்வரிசியுமாக நனைத்து வைத்தேன். இன்னிக்கு வடாம் போடணும்னு நேத்திக்குத் திடீர்னு எடுத்த முடிவு தான். ஆனால் பாருங்க, எப்படியோ நம்ம வருணருக்குப் புரிஞ்சிருக்கு. உடனே எங்கிருந்தோ மழை மேகங்களை அனுப்பிட்டார்!
நனைச்சு வைச்சதை அரைக்கலாமா, வேண்டாமானு ஒரு யோசனை. அல்லது அரைச்சுட்டு உளுத்தம்பருப்பையும் நனைச்சு அரைச்சுத் தோசையாக வார்த்துடலாமா, இல்லைனா சேவையாகப் பிழிஞ்சுடலாமானு எல்லாம் யோசிச்சேன். எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக யோசிக்கையில் ரங்க்ஸ் மட்டும் தைரியமாக நீ வடாமே போடு, மழை வந்தால் பார்த்துக்கலாம்னு சொன்னார். அப்புறமா நானும் சரி ஒரு கை இல்லை; இரண்டு கையாலும் பார்த்துடலாம்னு வடாமே போட்டுட்டேன். வடாம் போடறச்சே எங்கிருந்தோ வெயில் வந்துடுச்சு!
அதுக்கப்புறமாக் கொஞ்சம் மேகங்கள் வந்து மூடிக் கொள்ளக் கவலையுடன் இருந்த என்னை இப்போது வந்திருக்கும் வெயில் கொஞ்சம் ஆறுதல் கொள்ள வைத்திருக்கிறது. வடாம் போடற கவலையில் இருந்ததால் படம் எல்லாம் எடுக்கலை. (இல்லாட்டி மட்டும் எடுத்துடுவியோ? னு என். ம.சா. கேட்குது; அதை விடுங்க!) பொரிக்கும்போது கட்டாயம் படம் எடுத்துடறேன். செரியா????
படம் கொடுத்த கூகிளாருக்கு நன்றி. 4 பெண்கள் பக்கத்தில் உள்ளதாம். நான் இன்னிக்கு ஓமப்பொடி வடாம் மட்டும் போட்டிருக்கேன். போன வருஷம் எல்லா வடாமும் திருட்டுப் போன மாதிரி இந்த வருஷம் போகாமல் இருக்கணும்னு வடாத்து மாவிலேயே பிள்ளையார் பண்ணிக் காவல் வைச்சுட்டு வந்திருக்கேன். எப்படியும் இன்னிக்குக் காயும் முன்னரே எடுக்க மாட்டாங்க. நாளைக்குத் தான் ஜாக்கிரதையா இருக்கணும். :)))))

அதெல்லாம் மழை வராது கீதா. கொஞ்சம் கூழ் எடுத்துவைங்கோ. காயாத வடாம் பத்து.>}}}
ReplyDeleteநேற்றைய வடாம் காய்ஞ்சுடுத்து. பொரிச்சும் பார்த்தாச்சு! :) கூழ் வடாம் போடலை வல்லி. ஓமப்பொடி வடாம் தான் நேத்திக்குப் போட்டேன். இன்னிக்குக் கட்டை வடாம். :)
Deleteஆச்சர்யம். இன்றுதான் என் பாஸ் கிட்ட வடாம் போடுவது பற்றிப் பேசினேன். அப்புறம் பிழியலாம் என்று நான் சொன்னபோது, காற்று வந்து விடும், அதற்குமுன் பிழியணும் என்றார் என் பாஸ். பார்த்தால் நீங்கள் பிழிந்தே விட்டீர்கள்.
ReplyDeleteஉபரித் தகவல் : குடைமிளகாய் பொன்னிறமாய்க் காய்ந்து விட்டது!
வடாம் போட்டாச்சா? இங்கே மிளகாய் கிடைச்சது. ஆனால் குடமிளகாய் இல்லை. :) சின்ன மிளகாய். தயிரில் ஊறிக் கொண்டு இருக்கிறது. அநேகமாய் நாளை வெயிலுக்குப் போகும். :)
Deleteவடாம் போலீஸ் இல்லையா?
ReplyDeleteவடாம் மாவைப் பயன்படுத்த எப்படியெல்லம் ஐடியா போடுறீங்க!! பொருந்துமோ என்னவோ சுமைக்கூலி வசனம் ஞாபகம் வந்தது.
வடாம் போலீஸ்?? அப்பாதுரை? புரியலையே?
Deleteவடாம் மாவை இலைவடாமாகக் கூடப் போட்டிருக்கலாம். ஆனால் வெயில் தான் வந்துடுச்சே. இன்னிக்கும் கொஞ்சம் போட்டிருக்கேன். :)
அச்சச்சோ...! இங்கு தூறல் விழுதே...
ReplyDeleteடிடி, நான் அங்கெல்லாம் வரவே இல்லையே! :))))
Deleteமாசிமாதம்தான் வடாமிட சிறந்தது என்று சொல்வார்கள். பொரிவடாம் அப்போது இட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.. நான் இட்ட சென்னை வெயில் வடாமிது.. நான்கு பெண்கள் தளத்தில் எழுதியது. வடாத்திற்கு மாவைக் கிளரி வைத்து விட்டு, ஸாமி பகவானே நல்லபடி வெயில் காயவேண்டும் என்ற வேண்டுதல் நமக்கெல்லாம் வழக்கம்தானே. வெதர் ரிபோர்ட் படித்துவிட்டு ஜெனிவாவில் வடாம் இடுவேன். ஒவ்வொருநாள் கைகொடுத்து விடும்.
ReplyDeleteசென்னையில் மாடி ஏறி நான் பிழியவில்லை. பெண்ணாத்து உபயம்.. நான் மிஷினில் மாவை அரைத்து வந்து கிளறிப் பிழிவேன்.. மாவு மட்டும் கிளறினேன்.
கூழ்வடாம் ருசியாயிருக்கும். உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி.
வாங்க காமாட்சி அம்மா, உங்க வடாம் படமா அது? ரொம்ப நன்றி. இன்னிக்கும் பிள்ளையார் பிடிச்சுக் காவல் வைச்சுட்டுத் தான் வந்திருக்கேன். நான் மாவை மெஷினில் அரைப்பது இல்லை. ராத்திரியே அரிசியையும் ஜவ்வரிசியையும் ஊற வைச்சுட்டுக் காலையில் மிக்சியில் நீர் விட்டு அரைத்துக் கொண்டு கிளறுகிறேன். மாவு பவுடராக இருந்தால் எனக்கு என்னமோ சரியா வரதில்லை. கட்டி தட்டிடும். இது கட்டியே இல்லாமல் பந்து போல் மாவு திரண்டு வந்துடும். :)))))
Deleteஅன்புடன்
ReplyDeleteரொம்ப நன்றி அம்மா. நீங்கள் என்னை தாராளமாகப் பெயர் சொல்லியே அழைக்கலாம். நமஸ்காரங்கள்.
Deleteஅதென்ன இங்கும் இப்போது தூறல்? பெங்களூருவில்வடாம் எல்லாம் சீக்கிரமே காய்ந்துவிடும் .காற்றில் ஈரப் பதம் குறைவு. எத்தனை நாள் காயப் போடுவீர்கள்.?
ReplyDeleteவாங்க ஜிஎம்பிசார், அங்கேயுமா? நேத்துப் போட்டது ஒரே காய்ச்சலில் காய்ந்து விட்டது. எத்தனை நாள் காயப் போடுவீர்கள் என்பது வடாத்துக்கு இல்லை. வற்றல் என்றால் 2,3 நாட்கள் காயணும்.:)))
Deleteவடாத்து மாவிலேயே பிள்ளையார்.. அடடா அவரை எப்படி பொரிப்பீங்க ?
ReplyDeleteவாங்க ரிஷபன் சார், வடாத்து மாவின் வாசனை உங்களைக் கூட இழுத்துட்டு வந்திருக்கா? ஆஹா! பிள்ளையாரைப் பொரிக்க மாட்டேன். அவர் சும்ம்ம்ம்ம்ம்மாக் காவல் தான். இன்னிக்கும் ஒரு பிள்ளையாரைக் காவலுக்கு வைச்சிருக்கேன். :)
Deleteஎங்கம்மா கூட இப்படித்தான் சொல்லுவா தான் வடாத்துக்கு அரிசி ஊரப்போட்டா சென்னையில் என்றுமே வராத மழை வந்திடும் அப்படீன்னு. ஆனாலும் தப்பிச்சுடும் ஒவ்வொரு தடவையும். அப்படி ஒரு தடவை போட முடியாமல் போய்விட்டது. இரண்டு நாள் கழித்து அதை இலைவடாமாக போட்டாச்சு.
ReplyDeleteஹாஹா ராம்வி, உங்க அம்மாவும் நானும் ஒரே படகில் பயணிக்கிறோமா? நானும் அப்படித் தான் வேறே ஒண்ணும் இல்லைனா இலை வடாம் தான் அப்படினு யோசிச்சேன். கடைசியில் வடாம் பிழிஞ்சாச்சு. இன்னிக்கு இரண்டாம் முறையாவும் பிழிஞ்சாச்சு. :)
Deleteவடாம் கூடவா திருடுகிறார்கள்! திருச்சி மக்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் போல!
ReplyDeleteகுடியிருப்பில் இருப்பவர்கள் இல்லை சுரேஷ். அவங்க வீடுகளில் வேலை செய்யும் பெண்மணிகள். இதைத் திருடிக் கொண்டு போய்க் கடைகளில் கிலோ நூறு, நூற்றைம்பதுக்கு விற்றுப் பணம் சம்பாதித்து விடுவார்களாம். போன வருஷம் நான் போட்ட வெங்காயக் கறிவடாம் கிலோ நூற்றைம்பதுக்கு விற்றதாய்க் கேள்வி. :))))
Deleteவெயிலோ மழையோ குளிரோ எது என்றாலும் நான் வடாம் போடணுமுன்னு நினைச்சால் போதும் ஒன்னுமேசெய்யாது. வீட்டுக்குள்ளேயே வடாம் தான் நம்ம ஷ்டைலு:-)))
ReplyDeleteவாங்க துளசி, வடாத்தோட ராசி வராதவங்களை எல்லாம் இழுத்துட்டு வந்திருக்கு! வீட்டில் வடாம் போட்டுட்டுப் படமும் போடுங்க. வந்து கண்ணாலேயே பார்த்துக்கலாம். :)
Deletehttp://thulasidhalam.blogspot.co.nz/2008/05/blog-post_21.html
Deleteஉடனே போட்டுட்டேன்:-)))))