ஹிஹிஹிஹி, இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு இதாங்க! மாமியாருக்குக் கொடுத்து அனுப்பறதுக்காக நேத்து மைசூர்ப்பாகு பண்ணினேன். கொஞ்சம் இல்லை, நிறையவே மிருதுவாகப் பண்ணினேன். வயசானவங்க சாப்பிடணுமே!
அதைத் தாம்பாளத்தில் கொட்டியதுமே படம் எடுக்க நினைச்சு அடுத்தடுத்த வேலைகளில் மறந்து போச்சு, அதுக்குள்ளே ரங்க்ஸ் பாகப்பிரிவினையை முடிச்சுட்டார். என் பங்குக்கு வந்தது இது மட்டும் தான்!
போனால் போகட்டும் போடானு மனசுக்குள்ளே பாடிக்கொண்டே இதை மட்டும் இப்போ செல்லில் படம் எடுத்தேன். இல்லைனாலும் இப்போல்லாம் தித்திப்புப் பண்டங்கள் சாப்பிடறதைக் குறைச்சாச்சு., இதுவே ரங்க்ஸ் சாப்பிட மாட்டார். நான் மட்டுமே! :) அதான் போதும்னு விட்டுட்டோம். :)

கீழே உள்ளது கொஞ்சம் பரவாயில்லையா வந்திருக்குனு நினைக்கிறேன். தீர்ந்து போகிறதுக்குள்ளே ஓடி வந்து எடுத்துக்குங்க! யார் முதல்லே வரப் போறது?
no no.. .romba hard aa irukkum pOla... i dont want it .. i need soft one
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சாப்பிட்டுப் பார்க்காமலேயே சொன்னால் எப்பூடியாம்?
Deleteமைசூர்ப்பாகு எடுத்துக் கொண்டேன். நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, நிஜம்மாவே நல்லா இருந்தது! :)
Deleteநான் எடுத்துக் கொண்டு விட்டேன்!
ReplyDeleteஅதானே, ஒண்ணு குறைஞ்சதேனு நினைச்சேன்! :)
Deleteமைசூர் பாகு எனக்கு மிகவும் பிடிக்கும்! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்!
DeleteMars surface mathirinna irukku ?
ReplyDeleteஆசான், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteமைசூர் பாகு நல்லாருக்கு. நானும் சாப்பிட்டேன்.
ReplyDeleteவாங்க ரஞ்சனி, உங்களுக்குச் சர்க்கரை எல்லாம் ஒண்ணும் இல்லை தானே! எடுத்துக்கோங்க! :)
Deleteமைசூர்பாகுபடம் பார்த்தேன். எடுத்துக்கொள்ள முடியவில்லை பாவ்லா பண்ணவும் தெரியவில்லை.
ReplyDeleteஹாஹாஹா, சும்ம்ம்ம்ம்மா இதெல்லாம் ஒரு ஜாலியான விளையாட்டுத் தானே ஜிஎம்பிசார்,
Deleteஅந்த வஸ்து கொஞ்சம் மஞ்சளால்ல இருக்கும் !!!
ReplyDeleteமுகநூலிலே பதில் எழுதி இருந்தாலும் இங்கேயும் சொல்றேன். கடலை மாவை வறுக்காமலும், நெய்யை நன்கு காய்ச்சி ஊற்றாமலும் மைசூர்ப்பாகு கிளறும்போது இளமஞ்சள் நிறத்தில் வரும். உண்மையில் மைசூர்ப்பாகு கொஞ்சம் பொன்னிறத்தில் தான் வரணும். துண்டங்களின் மேலே ஓட்டை போட்டுக் கொண்டு புரையோடி இருக்கணும். அதான் சரியான பதம். :) இதிலே அந்த அளவுக்குப் போகலை. கொஞ்சம் முன்னால் எடுத்துட்டேன். வயசான மாமியார் சாப்பிடணுமே! :)
Deleteமுன்பெல்லாம் அம்மா அடிக்கடி செய்வார்கள். எனக்கும் பிடிக்கும்! படத்தில் பார்த்து மனதை தேற்றிக் கொண்டேன்!
ReplyDelete