படம் நன்றி கூகிளார்
நேற்று எழுதிய பதிவில் கேஷுவின் வலக்கரம் சின்முத்திரை காட்டுவதாக எழுதி இருந்தேன். ஆனால் அது தப்புனு கேஷுவோட படத்தோடு விளக்கம் அளித்திருக்கிறார் நாகர்கோயில்காரர் ஆன திரு கண்ணன் ஜே.நாயர். நாகர்கோயில்க் காரர் ஆன அவர் சின்முத்திரை தக்ஷிணாமூர்த்திக்கே உரியது என்றும் இது சின் முத்திரை இல்லை, யோகமுத்திரை என்பார்கள் என்றும் எழுதி இருக்கிறார். கோயிலில் தரிசனத்தின் போது பட்டாசாரியார் (போத்திமார்) சின்முத்திரை என்றே சொன்னதாக நினைவு. கையில் குறிப்புப் புத்தகங்கள் ஏதும் இல்லை. மனதில் குறித்துக் கொண்டது தான். தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இணையத்தில் தேடிப் பார்த்தபோது விக்கி பீடியாவில் சின்முத்திரை என்றே இருக்கிறது. தினமலர் கோயில் பக்கத்தில் முத்திரை என்று மட்டுமே போட்டிருக்கின்றனர். இன்னொரு வலைப்பக்கம் யோகமுத்திரை என்றே குறிப்பிட்டிருக்கிறது. ஆகவே அதன் பின்னர் படங்களைத் தேடி எடுத்துப் பெரிது படுத்திப் பார்க்கையில், நாமெல்லாம் "டூ" விட்டால் "சேர்த்தி" போடுவோமே அது போல் விரல்களை வைத்திருக்கிறார் கேஷு! ஆக நம்மோடு சேர்த்தி தான் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த முத்திரையின் அர்த்தமே வேறே. இதற்குத் தத்துவ ரீதியாக அர்த்தமே வேறாகும். சுவகரண முத்திரை என்பதை நம் தோழி எழுதிய முத்திரைகள் குறித்த பதிவில் படித்திருக்கிறேன். அதை உறுதியும் செய்து கொண்டேன். ஆகத் தவறாகச் சின் முத்திரை எனக் குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும். இப்போது கோயிலின் தலவரலாறு.
பிரம்மா யாகம் செய்யும்போது தவறு நேரிட கேசன், கேசி ஆகிய இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க வேண்டித் திருமாலை வேண்ட, அவரும் கேசனை அழித்துக் கேசியின் மேல் பள்ளி கொண்டார். கேசியின் மனைவி கங்கையையும், தாமிரபரணி நதியையும் திருமாலை அழிக்க வேண்டி அழைக்க, பூமாதேவி அந்த இடத்தை மேடாக்கினாள். கங்கையும், தாமிரபரணியுமோ திருமாலை வணங்கி அவரைச் சுற்றிக் கொண்டு வட்டமாக ஓடத்தொடங்கினார்கள். திருமாலைச் சுற்றி வட்டமாக ஆறுகள் இரண்டும் ஓடியதால் "வட்டாறு" என அழைக்கப்பட்ட இடம், திருவும் சேர்ந்து திருவட்டாறு எனப்படுகிறது.
//வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே.//
என நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். கேசனை அழித்ததால் கேசவன் என இவரை அழைக்கின்றனர். கேசியோ தப்ப முயற்சி செய்தான். 12 கைகளுள்ள அவன் தப்ப முயன்ற போது கேசவப் பெருமாள் அவன் கைகளில் 12 ருத்ராக்ஷங்களை வைத்துத் தப்பவிடாமல் தடுத்தார். இந்தப் பனிரண்டு ருத்ராக்ஷங்கள் இருந்த இடமே திருவட்டாறைச் சுற்றி இருக்கும் 12 சிவன் கோயில்கள். மஹாசிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் 12 சிவாலயங்களையும் தரிசித்த பின்னர் திருவட்டாறுக்கு வந்து இங்கே கேஷுவின் காலடியில் உள்ள சிவனையும் தரிசித்துச் செல்வார்கள். இங்கே பெருமாளின் நாபியில் இருந்து தாமரையோ, பிரம்மாவோ கிடையாது. இவரை திருவனந்தபுரத்து அனந்துவுக்கு அண்ணன் என்றும் சொல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 3 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரைக்கும், பின்னர் பங்குனி மாதம் அதே 3 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரை சூரியனின் அஸ்தமன கதிர்கள் இந்தப் பெருமாளின் மேல் படும் என்கின்றனர்.
கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மது,கைடபர்கள் ஆகியோரும் இருக்கின்றனர். இங்கேயும் ஒரு ஒற்றைக்கல் மண்டபம் உண்டு. கோயிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் உள்ள தூண்களில் தீப லக்ஷ்மியின் சிலைகள் காணப்படுகின்றன. (படம் எடுக்க அனுமதி இல்லை) கோயிலின் கொடிக்கம்பத்தில் உள்ள கல்வெட்டில் தமிழில் பொறித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாளை திருவோணம் இந்தக் கோயிலின் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அதைத் தவிரவும் ஐப்பசி, பங்குனித் திருவிழா, தை மாசம் கள பூஜை ஆகியன பிரசித்தி பெற்றது ஆகும்.
முதலில் படம் எடுக்கலாம்னு நினைச்சுப் பிரகாரங்களைத் தூரத்துப் பார்வையில் படம் எடுத்தேன். அங்கிருந்த அறநிலையத் துறை அதிகாரி பார்த்துவிட்டு எச்சரிக்கை கொடுத்தார். ரொம்பவும் ரகசியமாவெல்லாம் எடுக்க இஷ்டமில்லை. பார்த்துட்டாங்கன்னா காமிராவைப் பிடுங்கி அழிப்பாங்க. அதிலே ஏற்கெனவே எடுத்ததும் போயிடும். ஆகையால் நிறுத்திட்டேன். பிரகாரம் இப்படித் தான் நீளமாகப் போகிறது. இந்தக் கோயில் திருவனந்தபுரம் அனந்துவோட கோயிலை விடப் பழமையானது என்றும் கிட்டத்தட்ட 3000 வருடப் பழமையான ஒன்று என்றும் சொல்கின்றனர்.
கோயிலின் தோற்றம், பக்கவாட்டுப் பார்வையில்
அங்கிருந்த அறிவிப்புப் பலகை! இதைப் படம் எடுக்க மட்டும் அனுமதி கொடுத்தாங்க. :)
வணக்கம் சகோ திருவட்டாறு விடயங்கள் அறியாதவை அறிந்து கொண்டேன் புகைப்படத்தில் காணொளி போல தெரிகிறதே ஏன் ? பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவாங்க கில்லர்ஜி! காணொளி எல்லாம் இல்லை. சில சமயங்களில் அவசரத்தில் காமிராவை எங்கேயோ அழுத்தும்போது வீடியோ காட்சி பதிவாகிறது. அதைக் கண்டு பிடித்துச் சரி செய்தாலும் மறுபடியும் அப்படி ஆகிறது. ஒரு நாள் உட்கார்ந்து எல்லாவற்றையும் கிண்டிக் கிளறினால் தான் புரியும். ஆறு வருஷமாக் காமிராவைக் கையாண்டாலும் என்னோட புத்திக்கு எட்டினது இவ்வளவு தான். மற்றபடி காணொளி எடுக்கணும்னு தான் ஆசை! எங்கே! பயந்து பயந்து காமிராவை வெளியே எடுக்கும் முன்னர் கோயில்களில் சத்தம் போட்டுடறாங்க! :(
Delete3000 வருடப் பழமையான கோவிலா? அடேங்கப்பா...
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ஆமாம், பார்த்தாலே தெரியும், மிகப் பழைய கோயில் என்பது.
Deleteஹிஹி.. சின் முத்திரைனாலே என்னானு கேக்க இருந்தேன்.. இப்போ யோக முத்திரைனா என்னனும் சேத்தே சொல்லிடுங்க. அப்புறம் நைசா சுவகர்ண முத்திரைனு வேறே சொல்லியிருக்கீங்க.. அதையும் கொஞ்சம் வெவரமாக வெளக்கிப் போடுங்க.
ReplyDeleteமுத்திரை எல்லாம் பத்தி எழுத ஆரம்பிச்சா எங்கேயோ போகும் அப்பாதுரை! எனக்கும் இந்த முத்திரைகள் குறித்துப் படிச்சதில் இருந்து எழுத ஆசை தான். அதைத் தனியா வைச்சுக்கறேன். இப்போ இல்லை. :)
Deleteகீதா, நாங்க போனபோது இப்படிப் படம் எடுக்கத்தடா ஒன்னும் இல்லை. வெளிப்ரகாரமெல்லாம் எடுத்துட்டு, உள்ளே போகும்போது நானாகவே கேமெராவை கைப்பையில் வச்சேன்.
ReplyDeleteமுன்பு எழுதிய பதிவின் சுட்டி இது. நேரமிருந்தால் பாருங்க.
http://thulasidhalam.blogspot.co.nz/2009/06/2009-35.html
அதை ஏன் கேட்கறீங்க துளசி! அனுமதி கேட்டதுக்குக் கூட அந்த அதிகாரி அம்மா கொடுக்கலை! :( நீங்க 2009 ஆம் வருஷம் போயிருக்கீங்க. ஆச்சே ஆறு வருஷம்! மாறி இருக்கும் எல்லாம். :(
Deleteபொதுவாக பல கேரளத்துக் கோயில்களில் அனுமதி கிடையாது புகைப்படம் எடுக்க.....மட்டுமல்ல திருவட்டாரில் அனுமதி கிடையாது நாங்கள் இருந்த போதே...
ReplyDeleteநாங்கள் வியப்பதுண்டு சகோதரி துளசி கோபால் எப்படி பல கோயில்களை எடுக்கின்றார் என்று...நாங்கள் செல்லும் போது ஒரு மிக மிக அரிதான கோயில் யாருக்கும் அவ்வளவு அறியாத கோயில் செம்மந்திட்டா கோயில் மிக மிக பழைய கோயில் ஆனால் அங்கு பல கட்டுப்பாடுகள்....படம் எடுக்கவும் முடியவில்லை...
திருவட்டார் மிக மிக பழையகோயில்தான் திருவனந்தபுரம் கோயிலைவிட பழசு அதனால் திருவட்டாரரை திருவனந்தபுரத்துக் காரருக்கு அண்ணா என்பர்......
வாங்க துளசிதரன்/கீதா, தமிழ்நாட்டுக் கோயில்களில் அனுமதி வாங்கினாலும் சில இடங்களில்படங்கள் எடுக்க முடியாது. தடுப்பார்கள். இந்தக் கோயிலில் அனுமதியே கொடுக்கலை! மற்றபடி கேஷுவை அனந்துவுக்கு அண்ணா என்றே சொன்னார்கள். :)
Deleteமேடையில் மிக அழகான மரசிற்பங்கள் ( கார்விங்கஸ்) இருக்குமே , பார்த்தீர்களா ? பிள்ளையார் கல்யாணத்திற்கு சீர் கொண்டு போகும் காட்சிகள் மிக அருமையாக இருக்கும், சுண்டு விரலை விட சின்ன வாழைத்தார்கள் மிக அழகு .
ReplyDeleteஎன்ன பலன் ஷோபா? படங்கள் எடுக்க அனுமதி இல்லை! :(
Deleteசிவனார் காலடியில் இல்லை. கையடியில் தானே இருக்கிறார்.
ReplyDeleteஅழகான பெருமாள். சேர்த்தி சின்னம் இனிமை. கூடி இருந்து குளிர இவனை விட்டால் வேறு யார்.மிக நன்றி கீதா.