அப்புவோட அப்பாவும், அக்காவும் திரும்ப ஊருக்குப் போகணும்னு கிளம்பி மும்பை போயாச்சு. அப்புவும், அவ அம்மாவும் இருக்காங்க. அடுத்த வாரம் போறாங்க! அப்புவுக்குப் பொழுதே போகலை! சின்னக் குரலில் பேசிக் கொண்டு, கோவித்துக் கொண்டு விளையாடிக் கொண்டு இருக்கிறது. எனக்கு உதவி செய்யறேன்னு சொல்கிறது. இன்னிக்கு மாதுளம்பழம் சாப்பிட்டுவிட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு அலம்பி வைக்க எழுந்தேன். அப்பு தான் வாங்கி அலம்பி வைப்பதாகச் சொல்லிக்கொண்டு வந்து விட்டது. வேண்டாம்னு சொல்லிட்டு நான் அலம்பி வைச்சேன். அவ அக்காவைப் போல் அமெரிக்கன் நேசல் ஆக்சென்ட்(American Nasal Accent) இல் பேசலை. கொஞ்சம் புரியறாப்போல் நிதானமாப் பேசறா!
திங்களன்று உள்ளூர்க் கோயில்களுக்குப் போனோம். சமயபுரத்தில் முன்னெல்லாம் நூறு ரூபாய்ச் சீட்டு வாங்கினால் நேரே போய் சாமி தரிசனம் செய்யலாம். ஆனால் இப்போ அதுக்கும் சுத்துத் தான்! மற்ற இடங்களில் எல்லாம் எளிதாக தரிசனம் செய்தோம் செவ்வாயன்று சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில் போய்விட்டு அங்கிருந்து திருநள்ளாறு போனோம். வைத்தீஸ்வரன் கோயிலில் ஏகக் கூட்டம். ஆனால் அங்கே கட்டளை வைத்திருப்பதால் குருக்களுக்கு முன் கூட்டித் தகவல் அனுப்பி இருந்தோம். குருக்களும் எங்களுக்காகக் காத்துட்டு இருந்தார். எல்லா சந்நிதிகளிலும் தரிசனம் முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி மாயவரத்தில் அபிராமி ஓட்டலில் ரங்க்ஸும், மாப்பிள்ளையும் மட்டும் சாப்பிட்டார்கள். நாங்க நாலு பேரும் ஜூஸ் குடிச்சோம்.
அதன் பின்னர் மாயவரத்திலிருந்து நேரே திருநள்ளாறு சென்றோம். இரண்டே முக்காலுக்கே போய்விட்டோம். அங்கேயும் குருக்கள் தெரிந்தவர் இருப்பதால் அவங்க வீட்டில் நாலு மணி வரை உட்கார்ந்திருந்துவிட்டுப் பின்னர் கோயில் திறந்ததும் தரிசனம் முடித்துக் கொண்டு நாலரை, நாலே முக்காலுக்கெல்லாம் கிளம்பி விட்டோம். திரும்பும்போது திருவாரூர் வழி சென்றால் எளிது என எல்லோரும் சொல்லவே அப்படிப் போனதில் தாமதம் தான் ஆயிற்று. எட்டு மணிக்குத் தான் ஶ்ரீரங்கம் வந்தோம்.
சிதம்பரம் செல்ல ஶ்ரீரங்கத்திலிருந்து ஜெயங்கொண்டான் வழியாக கங்கை கொண்ட சோழபுரம் சென்று அங்கிருந்து கொஞ்சம் தடம் மாறிச் செல்ல வேண்டி இருக்கிறது. சரியாகக் காலை ஆறு மணிக்குக் கிளம்பினோம். ஒன்பது மணிக்கெல்லாம் சிதம்பரம் கீழ வீதி போயாச்சு. பத்து மணிக்கெல்லாம் கால பூஜை நேரம் என்பதால் நேரே கோயிலுக்குப் போய்விட்டோம். அதன் பின்னர் தீக்ஷிதர் வீட்டுக்குப் போயிட்டு அங்கே அவர் கொடுத்த கல்கண்டு சர்க்கரைப் பொங்கலைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வைத்தீசுவரன் கோயிலுக்குப் போனோம்.
வழியில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கீழே இறங்கிப் பார்க்க ஆசைதான். முதல்முறையாகப் பார்க்கிறேன் இந்தக் கோயிலை. ஆனாலும் கோபுரம் என்னதான் பெருவுடையார் கோயில் கோபுரம் போல் இருந்தாலும், ஏதோ ஒரு குறை தென்படத் தான் செய்தது, அதோடு அவ்வளவு உயரமும் இல்லைனு நினைக்கிறேன், வண்டி ஓட்டுநர் வண்டியை நிறுத்தறேன், இறங்கிப் பாருங்கனு தான் சொன்னார். ஆனால் ரங்க்ஸ் தான் அப்புறமா நம்ம அம்மாவை (என்னைத் தான்) இங்கேயே விட்டுட்டுப் போறாப்போல் ஆயிடும்னு சொல்லி வண்டியை நிறுத்தவே விடலை. படம் எடுக்க முயன்றேன். படமா, பப்படமானு தெரியலை. சரியாவே வரலை. பொண்ணு எடுத்திருக்கா. நல்லாவும் வந்திருக்கு. அனுப்பறேன்னு சொல்லிட்டு அனுப்பவே இல்லை! :( ஆனால் கோயிலைப் பார்க்கையில் மனம் என்னமோ ஒரு இனம்புரியாத சோகத்தில் ஆழ்ந்தது! ஏன் என்றே புரியவில்லை. எல்லாக் கோயில்களையும் பார்க்கையில் ஏற்படும் பெருமித உணர்வு வரவில்லை.
படத்துக்கு நன்றி கூகிளார்
சும்மா ஒரு மாறுதலுக்கு எங்க வீட்டு மொட்டை மாடிப் படம் வேறே கோணத்தில் பொண்ணு எடுத்தது ரெண்டு கீழே போடறேன்.

காவிரி வித்தியாசமான ஒரு கோணத்தில்
உ.பி.கோயிலும் ஒரு வித்தியாசமான பார்வையில்
முந்தைய பின்னூட்டம் போஸ்ட் ஆகும் நேரம் நெட் கனெக்ஷன் பறிபோனது. பின்தொடரும் ஆப்ஷன் டிக் இருப்பதால் இருக்கும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஹிஹிஹி, ஶ்ரீராம், உங்க கமென்ட் காக்காய் தூக்கி! :) திரும்பப் போடுங்க! :P :P
Deleteithellaam oru pathivu! GRRRRRRRRRR! :-))))))))))))
ReplyDeleteஹாஹாஹா,{எத்தனை தரம் ஹிஹிஹினு சொல்றது! அப்புறமா உதடெல்லாம் நீளமாயிடுமோனு பயம்ம்ம்ம்ம்மா இருந்தது! :)} படிச்சதில் குறைச்சல் இல்லையாம்!
Deleteமளமளவென்று நீங்கள் போகும்போது கூடவே நானும் வந்து தரிசனம் செய்து கொண்டு வந்து வட்டோன். சுலபமாந தரிசனம். நன்றி. அன்புடன்
ReplyDeleteவாங்க காமாட்சி அம்மா, சுலபமான தரிசனம் தான் போன இடங்களில் எல்லாம். வருகைக்கு நன்றி.
Deleteதொடர்கிறேன் அம்மா...
ReplyDeleteநன்றி டிடி
Deleteஒரு தகவல் வேண்டி மெயில் அனுப்பி இருக்கிறேன்
ReplyDeleteபார்த்தேன் ஐயா, பதில் அனுப்பறேன்.
Deleteமாயவரத்தில் கோமதி அரசு இருக்கிறார், தெரியும் இல்லையா.?
ReplyDeleteதெரியும், ஆனால் நாங்க என்னிக்குப் போறோம்னு நிச்சயமாத் தெரியாததால் முன் கூட்டிச் சொல்ல முடியவில்லை. அங்கே போய்ப் பேசிக் கொண்டோம். எங்கள் பயணம் குழந்தைகளுடன் இருந்தால் அதில் முன் கூட்டித் திட்டம் போடுவது நடப்பது இல்லை.
Deleteவிரிவான கட்டுரைகள் பிறகு வருமா? தொடர்கிறேன்.
ReplyDeleteவிரிவா எல்லாம் எழுதலை வெங்கட்! :) அம்புடுதேன்!
Deleteதரிசன விவரங்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
ReplyDeleteஎஞ்சாய்! குழந்தைகள் இருந்தாலே வீடு குதூகலம்தான்...
ReplyDeleteஎக்ஸ்ப்ரஸ் வேகத்தில் இத்தனை கோவில்களையும் உங்களுடன் பார்த்தாச்சு.
ReplyDeleteகங்கை கொண்ட சோழ புரத்தில் ஸ்வாமி உள்ளே இருக்கிறாரா.
கோபுரத்தில் இருக்கும் அழகு மனதில் பதிய வில்லையே கீதா.
Super journey :)
ReplyDelete