கோயிலின் பிரதான நுழைவாயில் (படத்துக்கு நன்றி கூகிளார்)
அனந்த கிருஷ்ணருக்குத் தை மாதம் பிரம்மோத்ஸவம் நடக்கும் என்கிறார்கள். பூசத்தன்று தேர்த்திருவிழாவும் ஆயில்யத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும் எனக் கூறுகின்றனர். கிருஷ்ண ஜயந்தி விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறும். இது நாகராஜா கோயில் என்பதால் கோயில் கொடி மரத்தில் கருடன் இல்லை. சாதாரணமாகப் பெருமாள் கோயில்களில் கொடிமரத்தில் கருடனே காணப்பட்டாலும் இங்கே மூலவர் நாகராஜா என்பதாலும் கருடன் நாகத்தின் விரோதி என்பதாலும் ஆமையே காணப்படுகிறது. மஹாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்ததன் அடிப்படையில் இங்கே ஆமையக் கொடிமரமாக வடிவமைத்ததாகச் சொல்கின்றனர். அனந்தகிருஷ்ணரும் புறப்பாட்டு சமயங்களில் ஆமை வாகனத்திலேயே கிளம்புகிறார்.
ஓடவல்லி என்னும் கொடியே இங்கே தல விருட்சம். வெளிப் பிரகாரத்தில் நாகலிங்க மரம் புஷ்பங்களை வர்ஷிக்கிறது. அருகிலுள்ள இடத்தில் துர்க்கை அம்மன் சந்நிதி காணப்படுகிறது. துர்கையை இங்கே அம்மச்சி துர்கை என அழைக்கின்றனர். இந்த துர்கை சிலை இங்குள்ள நாகர் தீர்த்தத்தில் கிடைத்ததாகவும் சொல்கின்றனர். கோயிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
நாகராஜா கோயிலில் இருந்து நாங்கள் சென்றது திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு! கோயில் பனிரண்டு வரை திறந்திருக்கும் என்று சொன்னார்கள். ஆகவே நேரம் இருக்கிறது என்று நினைத்தோம். வண்டி திருவட்டாறை நோக்கி ஊர்ந்தது. வழியெங்கும் அழகான இயற்கைக் காட்சிகள். பசுமை போர்த்திய வயல்கள், மேகங்கள் மூடிய மலைகள்! காமிராவை எடுத்தால் வண்டி போடும் ஆட்டத்தில் கீழே போட்டுடுவேனோ எனப் பயமாக இருந்தது. ஒரு வழியாகத் திருவட்டாறும் வந்து சேர்ந்தது. அதற்குள்ளாக மனதில் எதையோ நினைத்துக் கொண்டு வந்த நம்ம ரங்க்ஸ் திருவட்டாறில் ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்து தரும் முகவர்கள் யாரேனும் இருந்தால் பார்க்கணும்னு சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் கோயிலுக்குத் தான் முதலில் சென்றோம். கீழே இறங்கும்போது மணி பத்தரைக்குள் தான். ஆனாலும் அங்கிருந்தவர்கள் எங்களைச் சீக்கிரம் போகச் சொல்லி அவசரப் படுத்தினார்கள். நடை சார்த்திவிடுவார்களாம். பதினோரு மணிக்கெல்லாம் மூடி விடுவார்களாம்.
என்னடா இது சோதனை என அந்த உயரமான படிகளில் ஏறணுமேனு யோசித்துக் கொண்டே ஏறினேன். கோயிலின் உள்ளிருந்து வந்த ஒரு பட்டாசாரியார் எங்களைப் பார்த்துவிட்டுச் சீக்கிரம் வாங்க, நடை சார்த்திடுவோம், திருப்பணி நடைபெறுவதால் அதிக நேரம் கோயிலைத் திறந்து வைப்பதில்லை." என்று சொன்னார். மெல்ல மெல்ல மேலே ஏறினோம். மறுபடி திருவனந்தபுரம் மாதிரியே இங்கேயும் குறுக்கு வழியில் (இதுவும் பிரதக்ஷிணமாகவே அமைந்தது. ) சென்றோம். மீண்டும் உயரமான படிகள். ஒவ்வொரு படிக்கும் நடுவே இரண்டடியாவது உயரம் இருந்தது. அவற்றில் ஏறி மேலே உள்ள மண்டபத்தை அடைந்தோம்.
ஆஹா! நீள நெடுகப் படுத்துக் கிடந்தார் ஆதிகேசவர். 22 அடி நீளம். இதுவும் ஒரு திவ்ய தேசமே. 77 ஆவது திவ்ய தேசம் என்கின்றனர். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். கோயில் தமிழ்நாட்டு முறையில் கட்டியது இல்லை. மிக மிகப் பழமையான கோயில் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. பட்டாசாரியார்கள் பொறுமையுடன் நாங்கள் மேலே ஏறி வரும் வரை காத்திருந்து தீப ஆராதனை காட்டி தரிசனம் செய்து வைத்தனர். பெருமாள் தெற்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார். வடக்கே திருவடி. மேற்கே திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரைப் பார்த்த வண்ணம் இருப்பதாகச் சொல்கின்றனர். மேற்குப் பார்த்த பெருமாளைப் பார்ப்பது சிறப்பு என்றும், திருவனந்தபுரம் அனந்துவைப் பார்க்கும் முன்னர் இவரை முதலில் பார்க்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். ஆனால் நாங்க அனந்துவைப் பார்த்துட்டு வந்தே கேஷுவைப் பார்த்தோம். கேஷு கோவிச்சுக்கல்லாம் மாட்டார் என்று தெரியும்.
இதுவும் சாளக்கிராமங்களால் ஆன கடுசர்க்கரை யோகத் திருமேனி! இங்கேயும் மூன்று வாயில்கள் உள்ளன. திருமுக வாயிலில் இடக்கையைத் தொங்கப் போட்ட வண்ணம் படுத்திருக்கிறார் கேஷு. அடுத்த திருக்கர வாயிலில் வலக்கை சின்முத்திரை காட்டுவதையும் சங்கு, சக்கரங்களையும், உற்சவரோடு அமர்ந்திருக்கும் தாயாருடைய வடிவத்தையும் காண முடியும். திருவடி வாயிலில் திருப்பாதங்களின் அருகே சிவலிங்கமும், ஒளிந்திருக்கும் அசுரர்கள் இருவரையும் காண முடியும்.
கோயிலுக்குச் செல்ல ஏறும் படிகள்
உள்ளே பிரகாரத்தின் ஒரு பகுதி
கோவில் மூடும் நேரங்களை திடீர் திடீரென மாற்றிக் கொள்வதால் நமக்கும் பிரச்னையாகி விடுகிறது. அசநாலும் பார்த்து விட்டீர்கள் போல.
ReplyDeleteபதிவில் இணைத்திருப்பது வீடியோ என்று நினைத்தேன். படம்தானா? ஓடவில்லையே?
ஶ்ரீராம், பதிவில் வீடியோவை எல்லாம் இணைக்கும் அளவுக்குத் தெரியாது. :) இது ஏதோ தற்செயலாக வந்தது. அப்படியே இணைத்திருக்கேன். ஆல்பத்தில் சிலது தெரியவே இல்லை. :)
Deleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்!
Delete22 அடி பெருமாளா. எவ்வளவு அழகா இருந்திருப்பார். இத்தனை உயரப் படிகளில் எப்படி ஏறினீர்கள் கீதா.
ReplyDeleteஆமைக் கொடியைப் பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். கேசவா காப்பாத்து.
ஆமாம், அழகோ அழகு தான் வல்லி. கஷ்டப்பட்டுத் தான் ஏறினேன். பட்டாசாரியார் இருவருக்கும் கை கொடுத்தார். :)
Delete22 அடி gigantic தான். பிரகாரம் இன்னும் அகலமாக இருக்க வேண்டுமே?!
Deleteபிரகாரமா? மண்டபமா? மண்டபத்தைச் சொல்றீங்கனு நினைக்கிறேன். நல்ல அகலமான பெரிய மண்டபம் தான். சிதம்பரம் கோயில் போல மேலே ஏறித்தான் பெருமாளைப் பார்க்கவேண்டும். திருவனந்தபுரத்திலும் அப்படியே! இந்தக் கோயிலை முன்மாதிரியாகக் கொண்டு தான் திருவனந்தபுரம் கோயில் கட்டியதாகச் சொன்னார்கள்.
Deleteகடுசர்க்கரை யோகத் திருமேனி// கடுசர்க்கரை என்றால் என்ன என்றும் சொல்லி அருளணும்!
ReplyDeleteகல், சுண்ணாம்பு, கடுகு, சர்க்கரை கலந்த கலவை! கல், சுண்ணாம்பினால் விக்ரஹம் செய்து விட்டுப் பின்னர் மேலே கடுகும், சர்க்கரையும் கலந்த ஒருவிதப் பசை!
Deleteஹோம்வொர்க் சரியாச் செய்திருக்கேனா சார்?
இன்னொரு முறை "சொல்லி அருளணும்" னு எல்லாம் சொன்னீங்கன்னா எதுவுமே சொல்ல மாட்டேன்! ஆமாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (நிஜமான கோபம்)
Deleteநானும் அதைத்தான் கேட்க நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே அருளிட்டீங்க. நன்றி. (நான் ஏதோ சாப்பாட்டு வஸ்துனு நினைச்சேன். என் புத்தி.)
Deleteவம்பாதுரை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
Deleteதிருமதி ஆலயரத்னாவுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇ
நன்றி "இ" சார். :)
Deleteகேஷுவைப் பல இடங்களில் பார்த்தாலும் திருவட்டாறில் போய்ப் பார்க்கவில்லை. மூன்று வாயில்கள் அவசியம் என்றே தோன்றுகிறது. எல்லாவற்றையுமொரெசேரக் காண்பது சுவாரசியத்தைக் குறைக்குமோ.
ReplyDeleteஇல்லை, இந்த மாதிரிப் பார்க்க வேண்டும் என்றொரு சம்பிரதாயம் இருக்கு போல! கேரளக் கோயில்களில் தான் இப்படிக் காண முடிகிறது. இங்கெல்லாம் எல்லா இடங்களிலும் பள்ளி கொண்ட பெருமாளை அப்படியே பார்க்கலாம். இதுவரைக்கும் பார்த்ததிலே திருமயம் தான் பெரிய பெருமாள் என்றார்கள். ஆனால் இங்கே திருவட்டாறில் அப்படி இல்லைனு சொல்றாங்க. எனக்கு என்னமோ திருமயம் பெருமாள் தான் பெரியவராத் தெரிகிறார். :)
Deleteகடுசர்க்கரை யோகத் திருமேனி. அர்த்தம் தெரிந்தது. கேஷு,சேஷு இவாளெல்லாம் எவ்வளவு இயல்பா உங்களோடுப் பழகுகிறார்கள். ஏம்பா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் தரிசனம் கொடேன். கேஷுவையும்,சேஷுவையும் ஸுலபமாக நினைத்துக் கொள்ளலாம் போலிருக்கு. எங்கவீட்டுப் பையன்களெல்லாம் ஷ் என்ற பெயர் கொண்டவர்கள். அதற்கு மேடச்சாக எனக்கு கேஶு ஸேஷு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. எல்லா இடங்களுக்கும் வந்த மாதிரி ஒரு உணர்வு. அன்புடன்
ReplyDeleteஆமாம், அம்மா. நம் வீட்டு மனிதர்கள் போலவே பழகுவாங்க. அதிலும் இந்தப் பிள்ளையார் இருக்காரே, ரொம்பவே பழக்கம்! :)) ரொம்பக் கோபம் வந்து நான் தினசரி பிரார்த்தித்துக்கொள்ளும் பிள்ளையாரை ஒரு டப்பியிலே போட்டு மூடிட்டேன். :) இன்னும் திறக்கவில்லை. :)
Deleteவணக்கம் சகோ சிறந்ததொரு பதிவு நன்றி
ReplyDeleteதளத்தில் இணைந்து கொண்டேன் தொடர்வேன்
கில்லர்ஜி
வாங்க கில்லர்ஜி, முதல்வருகைக்கும் இணைந்தமைக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.
Deleteஎனக்கும் கேஷு தான் திருமயம் பெருமாளை விட பெரியவர் ன்னு தோணித்து , ஆனால் சமீபத்தில் புதுக்கோட்டை போன போது அங்கு ஒருவர் திருமயம் பெருமாள் தான் பெரியவர் என்று சாதித்தார் , மீண்டும் ஒரு முறை திருமயம் சென்று பார்க்க வேண்டும்
ReplyDeleteவாங்க ஷோபா! திருமயம் பெருமாள் தான் பெரியவர்னு சொல்றாங்க. இன்னொரு முறை திருமயம் போய்த் தான் கேட்டுக்கணும். :)
Delete