கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகம். நேற்றுப் பகல் முழுவதும் வெயில் சுட்டெரிக்க, மாலையில் திடீரென இந்திரனார் கருமேகங்களைத் திரட்டி வஜ்ராயுதத்தையும் ஏவ விண்ணில் ஒரே முழக்கம், பேரொளி! அதைப் பார்த்த உடனேயே இரவு எட்டு மணிக்கு வாயுவின் ஆட்டம்! உடனே கோபம் கொண்ட வருணன் நீரை வர்ஷிக்க ஆரம்பிக்க, வாயுவின் உக்கிர தாண்டவம் ஆரம்பம் ஆனது. பக்கத்துத் தோட்டத்து மரங்கள் அனைத்தும் எங்கள் பகுதியின் ஜன்னலை உரசி உரசி பெரும் சப்தம்! நான் மட்டும் சளைத்தவனா என வருணன் வேகமாக மழை நீரைக் கொட்ட இவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு விண்ணில் தீபாவளி கொண்டாடினான் இந்திரன்.
பேரிடி முழங்க, அண்டமே கிடுகிடுத்தது. மீண்டும் மின்னல், அதைத் தொடர்ந்து இடி முழக்கம். நல்ல வேளையாக ஏழு மணிக்கெல்லாம் இணைய இணைப்பை நிறுத்தி இருந்தேன். இடியின் ஆரவாரம் அதிகமாய் இருந்ததால் தொலைக்காட்சியையும் நிறுத்தி விட்டுப் போய்ப் படுத்துவிட்டோம். ஏசியும் போடவில்லை. வெளியே வாயுவும், வருணனும் நடத்திய போட்டியில் கடைசியில் ஜெயிச்சது யாருனே தெரியாமல் இருவரும் ஓசைப்படாமல் விலகி விட்டனர். தோற்று விட்டோமோ என்னும் வருத்தத்தில் அரை மணி நேரம் வருணன் மெல்ல மெல்ல அழுது பார்த்தான். ஆனால் வாயு இருந்த இடமே தெரியவில்லை. பின்னர் மெல்ல மெல்ல வருணனும் அடங்க இந்திரனும் யதாஸ்தானம் திரும்பி விட்டான். பத்து மணிக்கெல்லாம் கப்சிப்!
மழை பெய்த சுவடே தெரியலை! :( இன்று சூரியனார் வரலாமா, வார விடுமுறை எடுக்கலாமானா யோசிக்கிறார் போலும்! ஒரு வேளை தாமதமாக வந்தாலும் வருவார். தாமதமாக வந்தாலும் கோபத்தில் சுட்டெரிக்கிறார்.
பேரிடி முழங்க, அண்டமே கிடுகிடுத்தது. மீண்டும் மின்னல், அதைத் தொடர்ந்து இடி முழக்கம். நல்ல வேளையாக ஏழு மணிக்கெல்லாம் இணைய இணைப்பை நிறுத்தி இருந்தேன். இடியின் ஆரவாரம் அதிகமாய் இருந்ததால் தொலைக்காட்சியையும் நிறுத்தி விட்டுப் போய்ப் படுத்துவிட்டோம். ஏசியும் போடவில்லை. வெளியே வாயுவும், வருணனும் நடத்திய போட்டியில் கடைசியில் ஜெயிச்சது யாருனே தெரியாமல் இருவரும் ஓசைப்படாமல் விலகி விட்டனர். தோற்று விட்டோமோ என்னும் வருத்தத்தில் அரை மணி நேரம் வருணன் மெல்ல மெல்ல அழுது பார்த்தான். ஆனால் வாயு இருந்த இடமே தெரியவில்லை. பின்னர் மெல்ல மெல்ல வருணனும் அடங்க இந்திரனும் யதாஸ்தானம் திரும்பி விட்டான். பத்து மணிக்கெல்லாம் கப்சிப்!
மழை பெய்த சுவடே தெரியலை! :( இன்று சூரியனார் வரலாமா, வார விடுமுறை எடுக்கலாமானா யோசிக்கிறார் போலும்! ஒரு வேளை தாமதமாக வந்தாலும் வருவார். தாமதமாக வந்தாலும் கோபத்தில் சுட்டெரிக்கிறார்.
ஏற்கெனவே பகிர்ந்த பழைய படங்களில் ஒன்று தான். என்றாலும் நேற்றிரவு ஜன்னல் கதவைத் திறக்க முடியவில்லை. சாரல் உள்ளே வந்து அறை முழுவதும் தண்ணீராக ஆகிவிடும் போல் இருந்தது. காற்றின் வேகமும் அதிகம். ஆகவே எடுத்த படத்தையே பகிர்கிறேன்.
இங்கு நேற்று காலை இலேஸாகத் தூறல். இரவு காற்றும் இலேஸாக! இன்று காலை முதல் ரம்மிய வானம்!
ReplyDeleteஅதான் விமானங்கள் எல்லாமும் தரை இறங்கப் பிரச்னைனு தொலைக்காட்சிச் செய்திகள் கூறினவே! :)
Deleteஎன் மச்சினன் திருச்சியில் வெயில் அதிகம் என்று நேற்று தொலைபேசினான் இன்று மழை கொட்டியது என்றும் சொன்னான். உங்கள் பதிவும் சொல்கிறது.
ReplyDeleteஆமாம், ஆடி மாதம் வெயில் அதிகம் இருக்காது. ஆனால் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகம் தான். இரண்டு நாட்களாகக் கொஞ்சம் மழை!
Deleteநேற்று எங்கள் ஊரிலும் பெரிய அளவில் காற்று மழை, இடி என ஒரே அமர்க்களம்! ஓட்டு வீடானாதால் மண் அடைத்து சில இடங்களில் ஒழுகலும் கூட! ஒரே கலாட்டாதான்!
ReplyDeleteஓட்டு வீட்டில் நாங்களும் இருந்திருக்கோம். :) ஆங்காங்கே ஒழுகும் இடத்தில் பாத்திரங்களை வைப்பது உண்டு. ஒரே அறை தான் கெட்டிக் கட்டிடம் என அந்த நாளில் சொல்லும் மெட்ராஸ் டெரஸ் போட்ட (உத்திரக்கட்டைகள் போட்ட மேற்கூரை) அறை. நல்லவேளையாகக் கொஞ்சம் பெரிதாக இருந்ததால் மழை அதிகம் ஆனால் நாங்கள் ஐவரும், (அப்பா, அம்மா, அண்ணா, நான், தம்பி) அங்கே படுப்போம். ஒழுகும் கூரைக்கடியிலிருந்தே விறகு அடுப்பில் அம்மா சமைப்பார். அடுப்புப் பக்கம் நல்லவேளையாக ஒழுகாது. :)
Delete'மழை' என்றாலே என் கவிதை ஒன்று ஜிஎம்பீ சாருக்கு தப்பாமல் நினைவுக்கு வரும். உங்களுக்கு?..
ReplyDelete//மழை மங்கை
Deleteசடசடவென சப்தம் கேட்டு
சந்தோஷம் தாங்கவில்லை
எவ்வளவு காலமாச்சு என்கின்ற
ஏக்கம் மனசில் முட்டி மோதியது
அந்தி மாலை பொன்னுருக்கு வெயிலில்
மங்கையவளுக்கு மஞ்சள் கொடுத்து வரவேற்பு
திண்ணைக் கம்பியூடே பார்க்கையில்
கண் நிறைத்து கன்னியவள் களிப்பாய்
கூத்தாடியது நிறைவாய்த் தெரிந்தது
பாளம் பாளமாய் நில வெடிப்பு பார்த்து
பரிதவித்த வானத்துக் கண்ணீரோவென
நினைப்பும் வந்து மலைப்பு ஏற்பட்டது
முதலில் சாய்ந்து சன்னமாய்
பின் நெட்டக்குத்தலாய் நேராய்
தாரையாய் தளிராட்டமாய்
ஒயிலாய் ஓரத்தில் ஒசிந்து
மயிலாய் நர்த்தனமிட்டது
பார்க்கப் பார்க்கப் பரவசம்
நோக்க நோக்க களியாட்டம்
சோவென்று பாடிய பாட்டில்
சொகுசாய் ஆடிய ஆட்டத்தில்
திடும்மென ஒரு மாறுதல்
ஒதுங்கி ஒதுங்கி ஓரமிட்டதில்
பதுங்கிய பரிதாபம் புரிந்தது
வீசி வீசியவள் விரவிச் சிதறி
கூசிக் குன்றியது தெரிந்தது
உற்றுப் பார்த்ததில்
உண்மை உறைத்தது
அகல அகல கைவிரித்தவளை
அள்ளிப் போக ஆலாய்ப் பறந்த
காமுகன் காற்றின் குறும்பு தான்
பாடாய்ப் படுத்தியது இவளை
விடாது பின்னாடி துறத்தினான்
மேலிருந்து கீழ் என்றதனால்
மேலாடை விசிறித் தடுமாறினாள்
இடது வலது என்று மாறி மாறி
இழுத்த இழுப்புக் கெல்லாம்
இம்சை பொறுக்காது இழுபட்டாள்
படபடவென்று இடி இடித்து
பளிச் சென்று கீற்றாய் வானில்
பளீரிட்டது மின்னல் வெளிச்சம்
தடதடவென்று சீறி சிடுசிடுத்ததில்
தளிர்கொடி தப்பித்தாள் பாவம்
ஒலித்த ஒலியிலும் ஒளியிலும்
காணாமல் போனது காற்று
இப்பொழுது நிம்மதியாய்
வானத்திற்கும் பூமிக்கும்
நீள நீள கம்பி நட்டு நடுவில்
தன்னில் தானே கரைந்து
நிச்சலனமின்றி நீராடல்
தேரோடும் வீதியிலே
தெய்வமாய் வந்தாளென்று
ஊரெங்கும் பூக்கோலம்
தெருவெங்கும் மாக்கோலம்//
இது தான் இல்லையா? :) வேறே எழுதி இருந்தால் எனக்குத் தெரியாது! :)
@ ஜீவி அந்தக் கவிதையின் லிங்க் கேட்டிருந்தேனே. மறுமுறையும் வாசிக்கத்தான்
ReplyDelete//http://engalblog.blogspot.com/2014/07/blog-post_22.html//
Deleteஇந்தப் பதிவில் தான் வந்திருந்தது. வந்திருக்கிறது என்பதை உறுதியும் செய்து கொண்டேன். :)
இன்றைக்கு இங்கேயும் நல்ல மழை. திருமண வரவேற்பு ஒன்றிற்குச் சென்று திரும்பிய போது மழை பிடித்துக் கொள்ள, ஆட்டோவில் வரும் போது சாலை முழுவதும் வெள்ளம்! வண்டிக்குள் இருந்தாலும் நனைந்து போனேன்! நீண்ட நாட்கள் கழித்து மழையில் நனைவதிலும் ஒரு ஆனந்தம் வரத் தான் செய்தது!
ReplyDeleteபொதுவாகப் பெரு நகரங்களில் மழை என்றால் சாலை வெள்ளக்காடாகவே மாறி விடுகிறது. டெல்லியும் விதிவிலக்கல்ல! :)
Delete/மழை என்றாலே அது பற்றிய என் கவிதை ஜீஎம்பி சாருக்கு நினைவுக்கு வரும்/ அந்த நினைவே ஜீவி சாருக்கு இப்போதுதான் வந்தது. நான் அவரிடமே லிங்க் கேட்டிருந்தேனே. நீங்களாவது கொடுத்தீர்களே நன்றி மேடம்
ReplyDeleteஜீவி சார் பார்த்திருக்க மாட்டார் என்றே நினைத்தேன். அதே போல் சொல்லி இருக்கிறார். இணையத்தில் இருந்தாலும் பல சமயங்களிலும் என்னாலும் உடனடியாகப் பார்க்க இயல்வது இல்லை. இந்தக் கவிதை தான் என ஜீவி சாரும் உறுதி செய்திருக்கிறார்.
Deleteஇப்போது தான் பார்த்தேன் உங்கள் வலைத்தளத்தில் என் கவிதை! ஹையா!
ReplyDeleteஜிஎம்பீ சார், வேறு வித பிரசுரங்களுக்காக என் பல பதிவுகளை என் வலைத்தளத்திலிருந்து எடுத்து விட்டேன்.
அதில் இந்தக் கவிதையும் ஒன்று. அதனால் தான் நீங்கள் கேட்ட பொழுது லிங்க் அனுப்ப வில்லை. அந்த நினைவு இருந்ததினால் தான் இந்தத் தளத்திலும் அதை நினைவு கொண்டேன். கீதா அம்மாவின் லிங்க் கூட 'எங்கள் பிளாக்'கை சுட்டுகிறது. :)))
எப்படிப் பதிவுகளை நீக்கினீங்க? மனசே ஆகலை எனக்கு! நான் படிச்சது என்னமோ எங்கள் ப்ளாகில் தான். அதனால் தான் உடனடியாகக் கிடைத்தது.:)
Deleteஎங்கள் ப்ளாக்கில் படித்திருந்தாலும் அதை எந்தப் பதிவு என்று உடனே தேடி எடுத்து விட்டீர்களே.... அட!
Deleteஜி எம் பி ஸார் என்னையும் கேட்டிருந்தார். எனக்கு பதில் தெரியவில்லை. வெட்கமாய் இருக்கிறது!
ஹிஹிஹிஹி, நாங்க யாரு?
Deleteபதிவுகளை எடுத்து விட்டாலும் அவற்றைப் பத்திரமாக சேமித்து வைத்திருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எழுதியவை இன்னும் நிறைய தகவல்கள் சேர்ந்து விரைவில் புத்தகமாக வெளிவரவிருக்கிறது. அசோக மித்திரன் சார் பற்றிய கட்டுரை மிக அற்புதமாக அமைந்திருக்கிறது. தங்கள் தகவலுக்காக.
Delete