எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 18, 2015

ரங்கு வீட்டுக்குக் கிரஹப்ரவேசம்!

நம்ம வீட்டுக் கதை இருக்கவே இருக்கு! இப்போ நம்ம ரங்குவோட வீட்டிலே நடைபெற்ற கும்பாபிஷேஹப் படங்கள் பகிர்ந்துக்கறேன். என்ன? போய்ப் பார்த்தேனாவா? கடவுளே! அந்தக் கூட்டத்திலே எங்களாலே நிற்கவே முடியாது. ஆகையால் வீட்டிலே இருந்து தொலைக்காட்சியிலே தான் பார்த்தோம். ராஜகோபுரத்திலே அபிஷேஹம் பண்ணறதையாவது பார்க்கலாமோனு மாடிக்குப் போனேன். ஒண்ணுமே தெரியலை. ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கே! சரினு தொலைக்காட்சியிலேயே பார்த்துட்டேன். அதிலே எடுத்த படங்கள் தான்! சுடச்சுடப் போடறேன்.






பர வாசுதேவர், பிரணவ விமானத்தில் கருவறைக்கு நுழையும் இடத்திற்கு நேர் மேலே இருக்கார். அவருக்கு நடக்கும் வழிபாடுகள்.




ராஜகோபுரம் ஒரு பார்வை. மேலே ஆட்கள் இருப்பதே தெரியலை!

ஶ்ரீரங்கத்தின் மரங்களடர்ந்த தோப்பின் காட்சிகள் ஒரு பார்வை!


ஶ்ரீரங்கம் ஊர் பறவைப் பார்வையில்




பிரணவ விமானத்தின் மேலுள்ள கலசங்களுக்கு அபிஷேஹம் நடைபெறும் முன் நடைபெற்ற வழிபாடுகள்.


அடுத்தடுத்த கோபுரங்கள், கடைசியில் தெரியறது ராஜகோபுரம்

அபிஷேஹம் நடைபெறுகிறது.

பிரணவ விமானத்தின் மேலே!

வெள்ளிக்குடத்தால் அபிஷேஹம் நடைபெறுகிறது.


பரவாசுதேவர் கிட்டப்பார்வையில்




பரவாசுதேவருக்கு அபிஷேஹம் நடைபெற்றது.

பார்த்தவங்க மீண்டும் பார்த்துக்கலாம். பார்க்காதவங்க பார்த்துக்கலாம். சென்னையில் சில இடங்களில் தான் மின்சாரம் இருக்குனு சொன்னாங்க. அதான் பதிவிட்டேன். பார்த்து ரசிக்கவும். இன்னும் பெரிய ரங்குவை ஒரு நாள் போய்ப் பார்க்கணும். போய்க் கிட்டத்தட்ட நாலைந்து மாசத்துக்கு மேலே ஆகுது! நம்பெருமாளையும் பார்த்து சௌக்கியம் விசாரிக்கணும். நேத்தி ஜாலியா உபய நாச்சியார்களோடு ரத்தினாங்கியில் காட்சி அளித்தார்.



நம்ம கருடாழ்வார் சுத்திச் சுத்தி வந்தார். அந்தப் படம் என்னவோ தெளிவாக விழலை என்றாலும் பகிர்ந்திருக்கேன். 

21 comments:

  1. அன்பு கீதா மிக மிக நன்றி. இத்தனை கருணையோடு நீங்கள் அளித்திருக்கும் படங்களுக்கு இங்கிருந்து நமஸ்காரம் செய்து கொள்கிறேன்..
    வெகு அழகாக் வந்திருக்கும் ஸ்ரீரங்கனுக்கும் நன்றி.அழகோ அழகுக் காட்சிகள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ரொம்ப நன்றி.

      Delete
  2. அது என்னன்னு தெரியல்ல.
    இன்னிக்கு நேரடி ஒளிபரப்பு லே கும்பாபிஷேகம் பார்த்தப்போ
    நீங்க பார்த்துக்கொண்டு இருப்பீர்களோ என்று நினைத்தேன்.

    என்னோட பிரண்ட்ஸ் சேஷாத்ரி (ஜீயர் மடத்துலே ஆஸ்தான ஜோசியர்) மற்றும் கிடம்பி கே. இராமன் (கோவிலிலே பல உற்சவங்களிலே முதல் மரியாதை (இந்த முதல் மரியாதை வேற, நீங்க சிவாஜி, ராதா நடிச்ச படத்தை பத்தி சொல்லல்லே ) இவருக்கு.
    இரண்டு பேருமே
    அரங்கன் முன்னாடியே அப்படியே ஸ்தம்பிச்சு போய் நிற்க்கிறா.
    அரங்கன் கடாக்ஷம் வந்துடுத்துன்னா வேற என்ன வேணும் !

    போடோ எல்லாமே நன்னா இருக்கு.

    எல்லோருக்கும் க்ஷேமம் மலரும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சு.தா. நானும் எல்லோரையும் நினைத்தேன். யாரெல்லாம் பார்க்கறாங்களோனு! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
    2. பேப்பரிலே அந்த பட்டர்களுக்கு வேறே பெயர் போட்டிருக்கு! ஆனால் நீங்க சொல்வது யாரைனு தெரியலை! அவங்களும் இருந்திருக்கலாம்.

      Delete
  3. ஜெயா டீவியில் காலையில் நேரடி ஒளிபரப்பு! எனக்கு கோயிலில் பூஜையிருந்ததால் முழுதும் காண முடியவில்லை! அந்த குறையை தீர்த்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. அரங்கன் கோவில் கும்பாபிஷேகம் பார்க்க கன் கொள்ளாக் காட்சி. பதிவிட்டதற்கு நன்றி மேடம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி காணாமல் போயிடறீங்க! :)

      Delete
  5. ஓ... இன்றுதான் கும்பாபிஷேகமா? நான் பார்க்க விட்ட காட்சிகளை இங்கு பார்த்துக் கொண்டேன். நன்றிகள். ஊரில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்திருக்குமே....!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அம்மாமண்டபம் ரோடே மக்கள் வெள்ளம் தான்! நான் தெருவிலேயே இறங்கலை! :)

      Delete
  6. வணக்கம்
    காண முடியாத காட்சியை தொகுத்து தந்தமைக்கு நன்றி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன். ப்ளாகர் வேகமாய்த் தட்டச்சாதே என்று மிரட்டல்! :)

      Delete
  7. நான் கோவிலுக்கு போய்விட்டதால் பார்க்கவில்லை., உங்கள் பதிவின் மூலம் பார்த்தேன் . நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு!

      Delete
  8. பரவாசுதேவன் ரொம்ப அழகு! நாங்களும் நேற்று ஒரு கல்யாணத்திற்குப் போய்விட்டோம். செய்திகளிலேயும் பார்க்க முடியவில்லை. இங்கு உங்கள் தயவில் பார்த்துவிட்டேன். நன்றி கீதா!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் சானல்களில் சென்னை வெள்ளத்துக்கே இப்போது முக்கியத்துவம். இதெல்லாம் முக்கியம் இல்லை. ஜெயா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு! :)

      Delete
  9. உங்கள் மூலம் நானும் சில காட்சிகளை கண்டேன்..... நன்றி கீதாம்மா...

    ReplyDelete
  10. Akka, thank you so much. for various reasons, i could not see the live telecast. thanks for sharing.

    ReplyDelete