அப்பாடானு இருக்கு. ஒரு வழியாக் குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாம் சுபமாக முடிவடைந்தன. இனிமேல் பயணங்கள் குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்று மாலை நாலு மணிக்குத் தான் மும்பையிலிருந்து திரும்பி வந்தோம். மைத்துனர் பையருக்குக் கல்யாணம், 29 ஆம் தேதி மும்பையில் நடந்தது. அதுக்காகப் போயிட்டு இன்று தான் திரும்பினோம். பார்க்கப் போனால் அங்கே பத்து, பதினைந்து நாள் டேரா போடுகிறாப்போல் இருந்தது. ஆனால் இப்போ அதுக்குத் தேவை இல்லைனு சொல்லிட்டாங்க. இங்கேயும் நம்ம சொந்தக் காரியங்களை இனிமேல் பார்க்கணும்.
இணையத்திலே ஒழுங்கா இருந்தே ஆறு மாசம் ஆச்சா? பல ரசிகப்பெருமக்கள் அலுத்துப் போய் ஒதுங்கிட்டாங்க போல! 263 க்கும் மேல் இருந்த பின் தொடர்பவர்கள் இப்போ 246 க்கு வந்துட்டாங்க! ஹிஹிஹி, ஆள் கொஞ்ச நாட்கள் இல்லைனா எப்பூடினு பாருங்க! மும்பை விமான நிலையம் நம்மளை ஒரு வழி பண்ணிடுச்சு! அதுவும் மதுரை--மும்பை விமானத்தை ஏர் இந்தியாக்காரங்க பிடிவாதமா பன்னாட்டு முனையத்திலே தான் நிறுத்தறாங்க. அதிலே ஏரோ பிரிட்ஜ் வழியா இறங்கி இறங்கி இறங்கி இறங்கி இறங்கி வந்தாலும் வழி நீ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாப்போயிட்டே இருக்கு. வெளியே காத்திருக்கிறவங்க விஷயம் தெரிஞ்சவங்கன்னா ஓக்கே! இல்லைனா என்னடா இது சோதனைனு நினைச்சுப்பாங்க. வெளியே வரவே அரை மணிக்கும் மேல் ஆகிடுது.
புது தில்லி விமான நிலையமோ, கல்கத்தா விமான நிலையமோ பெரிசா இருந்தாலும் மும்பை விமான நிலையம் கிட்டக் கூட நிற்க முடியாது. இதைப் பார்த்துட்டு நம்ம சென்னை விமான நிலையம் பொம்மை மாதிரி இருக்கு! அதிலும் தினம் தினம் கண்ணாடி வேறே விழுந்துட்டுப் பயமுறுத்தும். நல்லவேளையா ட்ரான்சிட்டுனு வெளியே வந்து உட்காரச் சொல்லலை! விமானத்துக்கு உள்ளேயே உட்காரச் சொல்லிட்டாங்க. இந்த விமானச் சேவை கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேல் இருக்காம். இதை ரத்து செய்து சில நாட்கள் முன்னர் அறிவிப்புக் கொடுத்துட்டுப் பின்னர் மக்களெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கவே மறுபடி பழைய சேவையையே தொடர்ந்திருக்காங்க. இது விமானத்தில் ஏறும்போது தான் தெரியும். நல்லவேளையா அலைச்சல் இல்லாமல் போச்சு. ஃப்ராங்க்ஃபர்ட், ஹூஸ்டன், துபாயிலெல்லாம் நடக்கிறது ஒண்ணுமே இல்லைனு இங்கே மும்பையில் நடக்க வைச்சுட்டாங்க. இனிமேல் ஒரு மாசத்துக்கு நடைபயிற்சியே செய்ய வேணாம் போல.
இனியாவது ஒழுங்கா இணையச் சேவை செய்யணும்னு நினைச்சுட்டு இருக்கேன். பல பதிவுகள் பாதியிலே நிக்குது. பல கட்டுரைத் தொகுப்புக்களைப் பதிப்புக்கு ஏற்றாற்போல் அமைக்கணும். ஏதோ ஒரு பெரிய தூக்கத்திலே இருந்து எழுந்தாப்போல் இருக்கு இப்போ! இதுக்கு நடுவிலே நம்ம ரங்க்ஸுக்குக் கண் ஆபரேஷன் வேறே ஆகணும். பல வேலைகள் காத்திருக்கு. வர்ட்டா? நாளைக்குப் பார்க்கலாம். எதை எல்லாம் பாதியிலே விட்டிருக்கேன்னு பார்த்துட்டு அதை எல்லாம் முழுசா எழுதி முடிக்கணும்.