கோனாரக்கின் கோபுரத்தை ஒரு தூரப்பார்வையில் எடுத்த படம்.
சாலைகள் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. கிராமங்களில் கூடக் குப்பைகளைக் காண முடியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள காய்கறித் தோட்டங்களில் விளைந்த பச்சைப்பசேல் என்ற காய்களை அந்தக் கிராமத்தாரே நெடுஞ்சாலைப்பக்கம் கொண்டு வந்து கடை போட்டு விற்பனை செய்கின்றனர். இக்காய்களைப் போட்டி போட்டுக்கொண்டு அக்கம்பக்கம் நகரத்திலிருந்து பெரிய பணக்காரர்கள் கூட வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகள் விற்கும் விலை தான். நேரடியாக விற்கப்படுவதால் லாபமும் நேரடியாக விவசாயிகளுக்கே போய்ச் சேருகிறது. காலிஃப்ளவர் வெள்ளை வெளேர் எனக் காட்சி அளிக்கிறது. நாங்கள் அங்கிருந்து ஶ்ரீரங்கம் திரும்பி இருந்தால் நம்ம ரங்க்ஸ் ஒரு மூட்டையே காய்கறிகளை வாங்கி இருப்பார். பழங்களும் அப்படித் தான். ஆப்பிள் பழம் சுவையோ சுவை. ஆரஞ்சும் நன்றாக இருக்கிறது. வாழைப்பழமும் இனிப்பு! கூடியவரை பசுந்தாள் உரமே போடுவதாகச் சொல்கின்றனர். ஏனெனில் பசுமாடுகளை அதிகம் காண முடிகிறது.
இதுவும் கோனாரக் தான். இதைக் குறித்த விரிவான பதிவு விரைவில் வரும்.

காடுகள் அடர்ந்து காணப்படுவதோடு அவற்றில் துஷ்ட மிருகங்களும் இருப்பதாக ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகள் காண முடிகின்றன. அதோடு யானைகள் கூட்டம் கூட்டமாக வருமாம். நெடுஞ்சாலையிலேயே யானைகளைக் குறித்த அறிவிப்பைக் காண முடிகிறது. யானைகள் வரும்போது ஒரு கிலோமீட்டர் முன்னாலேயே இருபக்கங்களிலும் போக்குவரத்தை நிறுத்தி விடுவார்களாம். யானைகள் சாலையைத் தாண்டிச் சென்ற பின்னரே மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும். எங்கள் நெடுஞ்சாலைப் பயணம் மூன்று மணி நேரத்துக்கும் குறையாமல் இருந்தும் எங்களை ஆனையார் வந்து தொந்திரவு செய்யலை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான்! :)
மஹாநதிப்பாலத்தில் வண்டி செல்கையில். கைப்பிடிச் சுவரைத் தாண்டித் தெரிவது நதி தான். என்றாலும் இறங்கி எடுக்க ஓட்டுநர் அனுமதிக்கவில்லை.
பாலத்திலிருந்து கீழே இறங்கும்போது வரும் இடத்தில் எடுத்த படம்.
பதிவுகளுக்குப் படங்கள் தேவை. பிற்காலத்தில் நினைவுகளை மீட்டும்போது உதவும்
ReplyDeleteஆம் ஐயா, உண்மைதான்.
Delete//எங்கள் நெடுஞ்சாலைப் பயணம் மூன்று மணி நேரத்துக்கும் குறையாமல் இருந்தும் எங்களை ஆனையார் வந்து தொந்திரவு செய்யலை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான்! :)//
ReplyDeleteயானையார் ஒருவேளை பயந்திருப்பாரோ என்னவோ :))))))
ஹிஹிஹி, அப்படீங்கறீங்க? இருக்கும் இருக்கும்! :)
Deleteஒரிசா படங்கள் கண்டுகொண்டேன்
ReplyDeleteநன்றி மாதேவி.
Deleteஅருமை! பயணங்கள் என்றுமே ரசிப்புக்குரியவை தான்!அதிலும் கிராமத்தினூடான பயணங்கள் சுவாரஷ்யமானவையே!
ReplyDeleteஆமாம், அதிலும் அங்கெல்லாம் காடுகள் அழியாமல் அடர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன என்னும்போது இன்னும் சுவாரசியம் கூடுகிறது.
Deleteசூரியனார் கோவிலா? நான் சில தமிழ்ப்படங்களில் அந்த இடத்தைப் பார்த்திருப்பதொடு சரி! சூரியன், கர்ணன்!
ReplyDeleteகாய்கறிகள் பசுமையாக இருந்தன என்றதும் வாட்சப்பில் வந்த வீடியோ நினைவுக்கு வருகிறது!
வாட்சப்பில் ஒடிஷா காய்கறிகள் வந்தனவா? ஆச்சரியம் தான்!
Deleteபதிவு நன்று மேலும் படங்கள் வரும் என்ற ஆவலில்...
ReplyDeleteமேலும் படங்கள் வரும் கில்லர்ஜி!
Deleteஎனக்கு ஒரிஸா மாநிலம் முழுதும் அத்துப்படி. மயூர்பஞ்சிலிருந்து கோரப்பட் வரை, காலஹண்டியிலிருந்து பாரதீப் வரை எல்லா ராஸ்தாக்களையும் அறிவேன். உங்கள் கட்டுரை 'அந்த நாளும் வந்திடாதோ' என்றை இழுத்துச்செல்கிறது. மக்கள் தங்கக்கம்பி. பழங்குடிகள் அதிகம். ரோடோரம் டயர் ரிப்பேர் செய்பவர்கள் மலையாளிகள். பாசனத்துக்கு ஆந்திரவாடு. நிர்வாகத்துக்குத் தமிழர்கள். குலதெய்வம் பூரி ஜகன்னாத். ஊருக்கு ஊர் மார்வாடி நாட்டாண்மை. யானை, புலி, கரடி எல்லாம் ரோட்லெ பாத்தாச்சு.
ReplyDeleteவாங்க இ சார். உங்கள் நினைவுகளை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் மேலும் பகிருங்கள். மக்கள் உண்மையிலேயே தங்கக் கம்பி தான்.
Delete
ReplyDelete// துஷ்ட மிருகங்களும்// விலங்குகள் துஷ்டர் அல்ல. அவை வன விலங்குகள் என்று சொல்ல வேண்டும். வனவிலங்குகள் நாம் அவற்றை உபத்திரவம் செய்யாதவரை நம்மை ஒன்றும் செய்யாது. மனிதர்கள் தாம் தற்போது துஷ்ட மிருகங்கள்.
Jayakumar
ஹிஹிஹி, ஆமாம், அண்ணா! என்றாலும் அப்படிச் சொல்லிப் பழகி விட்டது. இனி மாத்திக்க முயல்கிறேன். :)
Deleteபயணம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். ஒடிசா - அலுவலக விஷயமாக ஒரே ஒரு முறை புவனேஷ்வர் வரை சென்றது. அங்கேயும் ஒன்றும் பார்க்கவில்லை.... :( ஒடிசா பயணம் செய்ய ஆவலைத் தூண்டுகிறது உங்கள் பதிவு. பார்க்கலாம்!
ReplyDeleteபோயிட்டு வாங்க, உங்களால் இன்னும் அதிகமான தகவல்களைத் திரட்ட முடியும்! எங்களுக்கு நேரப்பற்றாக்குறை என்பதோடு இறங்கி இறங்கி ஏற முடியலை என்பதும் ஒரு சிரமமான காரியமாக இருந்தது. :) ஆவல் என்னவோ நிறைய இருக்கு!
Deleteமஹா நதி முதல் தடவையாகப் பார்க்கிறேன். தங்கள் வர்ணனை மிக அருமை. வீல் சேர் வைத்துக் கொண்டது புத்திசாலித்தனம்.. யானைக்கு முன்னாடியே சேதி அனுப்பி இருக்கணும் நீங்கள்.
ReplyDeleteவாங்க வல்லி. அவ்வளவு பெரிய கோயிலைச் சுற்றி, சுற்றினா நிஜம்மாவே சுற்றிப் பார்த்தாகணுமே. ஏற்கெனவே மேலே ஏறிப் படம் எடுக்க முடியலைனு வருத்தம். :( யானைக்குச் செய்தி அனுப்பி இருக்கணும். ஆமா இல்ல! :)
Delete