இந்தத் தலைப்பில் என்னுடைய புகுந்த ஊரான பரவாக்கரைப் பெருமாள் பத்தி எழுதி இருந்தேன். அதன் பின்னர் அவர் காணாமல் போனார். அதைக் குறித்து எழுதிய பதிவு இதோ!
அதன் பின்னர் அப்போது இந்தச் சிலைக்கொள்ளைகளைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியான திருமதி திலகவதியை நேரில் சென்று பார்த்து விண்ணப்பித்தோம். அப்போது இந்தப் பெருமாளின் படத்தையும் ஸ்கான் செய்து எடுத்துப் போனோம். அதை வைத்துப் பின்னர் காவல்துறை பெருமாள் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துப் பெருமாளை மீட்டு விட்டார்கள். ஆனாலும் பெருமாள் கோயிலுக்கு வரவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்ற காரணத்தால் திருவாரூரிலேயே வைக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த 2015 ஆம் வருடம் ஒரு வழியாகக் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.
அதன் பின்னர் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டு செய்தோம். படங்களுக்கான சுட்டி இங்கே
இந்தப் பதிவில் சொன்ன மாதிரிப் பெருமாள் கிடைத்தாலும் வலக்கையின் சக்கரம் உடைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு கைக்கட்டை விரல், சக்கரத்தைப்பிடித்திருக்கும் ஆட்காட்டி விரல் போன்றவையும் வெட்டப்பட்டு இருக்கின்றன. அந்தப் படங்கள் கீழே! இது இன்றைய நிலைமை.
இதோ கீழே இந்தப் படத்தில் பெருமாளின் வலக்கையைப் பாருங்கள், சுண்டுவிரல், ஆட்காட்டி விரல், கட்டை விரல் போன்றவை இல்லை. இதைச் சரி செய்ய ஸ்தபதிகளிடம் எடுத்துச் சென்றதில் அவங்க அறநிலையத் துறை கோயிலில் அவர்கள் அதிகாரிகளை முன்னே வைத்துக் கொண்டு இதைச் செப்பனிட வேண்டும் என்று சொல்வார்கள் எனக் கூறவே மீண்டும் அறநிலையத் துறை அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டுச் செப்பனிடச் சம்மதம் கொடுத்து உத்தரவும் கொடுத்துவிட்டார்கள்.
ஆனால் ஸ்தபதி வலக்கையை மணிக்கட்டோடு துண்டித்துவிட்டுப் புதிதாக வார்த்துப் பொருத்த வேண்டும் எனவும் அந்த உலோகக் குழம்பு அப்போது தான் முழங்கை வரையில் போய் மணிக்கட்டைக் கையோடு பொருத்தும் என்றும் சொல்லி இருக்கிறார். அது தான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. விரைவில் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டுப் பெருமாள் கோயிலுக்குக் கிரஹப்பிரவேசம் ஆனப்போச் செய்த கருடன் வாஹனத்தில் விரைவில் கருட சேவையும் செய்வார்கள் எனத் தெரிய வருகிறது.
பட்டாசாரியார் இதை விவரிக்கையில் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லையே. எல்லாம் நல்லபடியாக முடிய அந்தப் பெருமாள் தான் தன்னைத் தானே பார்த்துக்கணும். இன்னிக்கு மாவிளக்குப் போடறதுக்காகக் குலதெய்வம் கோயிலுக்குப் (அதுவும் பரவாக்கரையில் தான் உள்ளது.) போனபோது பெருமாளையும் பார்த்துவிட்டு வந்தோம். அப்போது உற்சவரை எடுத்த படங்கள் இது. ஆஞ்சியும் இருக்கார் கைகூப்பிய வண்ணம் மிகச் சிறிய வடிவில். படம் எடுத்தேன், தெளிவாக வரலை. காமிரா எடுத்துப் போக முடியலை. ஆகவே அலைபேசியில் எடுத்தவை. அதையும் பிகாசாவில் ஏற்றுவதற்குத் தகராறு பண்ணி ஒருவழியா ஏறியது.
பெருமாள் தன்னைப் பார்த்துப் பார் கீதா. இவ்வளவு அன்பு இதயபங்கள் செயல் படும் போது
ReplyDeleteஅவர் வளம் பெறுவார். படங்கள் அழகு.
ஆமாம், அவர் தான் தன்னைப் பார்த்துக்கணும்!
Deleteதிலகவதி மேடம் அப்பாவுக்கு இலக்கிய வட்டம் மூலமாகவும், கே. பாரதி மூலமாகவும் நண்பர். மதுரையில் வீட்டுக்கு வந்திருக்கார்.
ReplyDeleteபெருமாள் படங்கள் நன்றாய் இருக்கின்றன.
முன்னமேயே சொல்லி இருக்கீங்க! :) எங்களுக்கும் சித்தப்பா அசோகமித்திரன் சிபாரிசு செய்து தான் திலகவதியைப் போய்ப் பார்க்க முடிஞ்சது! :)
Deleteஅடடா......
ReplyDeleteநன்றி வெங்கட், காலம்பர தேர் கிட்டே நிக்கிறச்சே உங்களை நினைச்சுண்டேன், வந்திருப்பீங்களோ என்னமோ என! ஆனா அந்தக் கூட்டத்திலே தேட முடியலை! :)
Deleteவெங்கட்ஜி மிக உயரமானவராயிற்றே!!! தனியாகத் தெரியவில்லையா...??!!
Deleteம்ஹூம், நான் இருந்தது தேரின் ஆரம்பம் அருகே. அவர் எங்கே இருந்தாரோ! :)))) மேற்கு உத்திர வீதி என எழுதி இருக்காரே. ஆகையால் தேர் நகர்ந்து முக்குத் திரும்பியதும் இருந்திருப்பார். கூட்டமாக இருந்ததால் நாங்க அந்தப் பக்கம் போகலை.
Deleteபரவாக்கரைப் பெருமாளை பற்றி பல வருடங்களுக்கு முன் நீங்கள் எழுதியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. நான் கூட உதவா யோசனைக்ள் சொன்னதாக நினைவு. எல்லாம் நல்லபடியாக நடக்கும். மாபாவிகள் ஏன் இப்படி உடைத்தார்களோ? என்ன என்னமோ ஆபரேஷன் எல்லாம் நடக்கிறது. இதை ஸ்தபதி நல்ல படியாக செய்வார். முன் கூட்டி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇ. வேறே யாரு?
வாங்க இ சார். நல்லா நினைவு வைச்சிருக்கீங்க. ஸ்தபதி நல்லபடியாச் செய்து தர அந்தப் பெருமாள் தான் அனுகிரஹம் பண்ணணும். கருடசேவை பத்தி உறுதியானதும் கிளம்பிப்போகணும் என நினைக்கிறோம். பார்க்கலாம்.
Deleteபெருமாள் அழகாய்த்தான் இருக்கின்றார்...
ReplyDeleteஆமாம், அழகு தான்!
Deleteதிருடர்கள் விக்கிரகங்களை ஏன் சிதைக்கின்றார்கள் என்று தெரியவில்லை! பெருமாள்தான் அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்!
ReplyDeleteஆமாம், மனவக்கிரமே காரணமாக இருக்கணும்.இந்தத் திருட்டில் கோயிலில் வழிபாடுகளை நடத்தும் ஒருவரும் கூட்டு! :(
Delete