எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 16, 2016

பயணங்கள் முடிவதில்லை-- தொடர் பதிவு

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
எப்போனு சரியா நினைவில் இல்லை. ஆனால் பத்து வயதில் என்னோட அண்ணா&தம்பி உபநயனம் திருமலையில் நடந்தது. அதுக்குக் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாகச் சென்றோம். மதுரையிலிருந்து விழுப்புரம், அங்கிருந்து ரயில் மாற்றம். அப்போ ஜன்னலோர சீட்டில் உட்காரப்போட்டி போட்ட நானும் என் தம்பியும் ஜன்னல் கதவில் கையில் அடிபட்டுக் கொண்ட நினைவு இருக்கு.

திருப்பதியிலிருந்து திரும்பும்போது முதல் முதல் சென்னைக்கு வந்தோம். அப்போவே ஐயே! இதான் மெட்ராஸானு ஒரு எண்ணம் மனதில் பதிந்து விட்டது. காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது! :)

2. மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
பயணங்களே மகிழ்ச்சியை அளிக்கிறவை தானே. குறிப்பிட்டுச் சொல்ல முடியலை என்றாலும் உறவினருடன் சென்ற பல பயணங்கள் மகிழ்வானவை. உதாரணமாக என்னோட அண்ணா கல்யாணம், தம்பி கல்யாணம், மாமாக்கள் கல்யாணங்கள் இப்படிப் போயிருக்கோம். என்றாலும் திருக்கயிலைப் பயணம் மறக்கவே முடியாத பயணம் பல காரணங்களால். அதுவும் எனக்கு எதிர்பாராமல் கிடைத்த பரிசு அந்தப் பயணம். அந்தப் பயணத்தில் பெரிய பெரிய உயரமான மலைகளும், அதலபாதாளத்தில் தெரியும் நதியும் நம்மோடு கூடவே பயணிக்கும்போது ஒவ்வொரு திருப்பத்திலும் மனதில் ஓர் திகில் தோன்றி மறையும். ஏனெனில் அவ்வளவு ஒட்டில் வண்டி செல்லும். அதுவும் தொடுவானம் தொலைதூரத்தில் தெரிவதும், அதன் பிரம்மாண்டமும் இம்மாதிரிப் பயணங்களில் ஓர் மயக்கநிலையைத் தரும்.  அதோடு இத்தனை பெரிய பிரபஞ்சத்தின் முன்னர் நம் சிறுமையும் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதையும் புரிய வைக்கும். அடுக்கு அடுக்காகக் கூடவே வரும் முடிவில்லா மலைத்தொடர்களை கயிலை யாத்திரையின் போது கண்டு அதிசயித்திருக்கிறோம்.

விதம் விதமான நிறங்களில் ஏரிகள், வண்ண வண்ணமான பூக்கள் ஓர் மலையில், இன்னொரு மலை வறட்சியாக, பனி மூடி ஓர் மலை எனில் துளிக்கூடப் பனியே இல்லாமல் இன்னோர் மலை! இப்படியான பல விசித்திரங்களை அங்கே பார்க்கலாம். இயற்கை தன்னுள் பல அதிசயங்களைப் பொதிந்து மறைத்து வைத்திருக்கிறது. மனிதனால்  கண்டுபிடிக்கப்படப் பற்பல அதிசயங்கள் இன்னமும் காத்திருக்கின்றன.


3. எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்?
புரியலையே! எப்படின்னா? முக்கால்வாசி ரயில் பயணம் தான் பிடிக்கும். பேருந்துப் பயணம் அவ்வளவாப் பிடிக்காது! அதோடு பயண சமயங்களில் பேருந்துப் பயணத்தில் கழிவறை வசதி இருக்காது. ரயில் என்றால் அந்தப் பிரச்னை இல்லை. என்றாலும் பேருந்துப் பயணங்களும் நிறைய இருக்கின்றன. மதுரையிலிருந்து ஹோசூருக்கு, ஹோசூரிலிருந்து மதுரை, மதுரையிலிருந்து சென்னை, சென்னையிலிருந்து மதுரை, சென்னையிலிருந்து கும்பகோணம், திருச்சி, திருச்சியிலிருந்து பெண்களூரு இப்படிப் போயிருக்கோம்.

4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை
இசை எல்லாம் கேட்டதில்லை. பேருந்தில் போனாலோ, ரயிலில் போனாலோ கூட வர பயணிகள் போடும் இசையை வேறு வழியில்லாமல் கேட்பது உண்டு. யு.எஸ்ஸில் காரில் நீண்ட பயணங்கள் செய்தது உண்டு. அது மிகவும் பிடிக்கும். ஏனெனில் ஆங்காங்கே தங்கிச் செல்லலாம். அப்போது பிள்ளையோடு சென்றால் பிள்ளையோ, பெண்ணோடு சென்றால் மாப்பிள்ளையோ பாடல்கள் காசெட்டைப் போடுவார்கள். கேட்டுக் கொண்டு வருவது வழக்கம். காரில் நீண்ட பயணம் என்றால் யு.எஸ்ஸில் செய்யப் பிடிக்கும். வசதிகள் அதிகம்.  


5. விருப்பமான பயண நேரம்.
முன்னெல்லாம் இரவுப் பயணம் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் இரவுப் பயணம் தூக்கம் கெடுவதால் பிடிப்பதில்லை. பகல்நேரப் பயணம் தான் பிடிக்கிறது.


6. விருப்பமான பயணத் துணை
சந்தேகமே இல்லாமல் ரங்க்ஸ் கூடத் தான்.


7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்
முன்னெல்லாம் வீட்டில் இருந்து புத்தகங்கள் எடுத்துச் செல்வேன். அபூர்வமாகச் சில சமயங்களில் நல்ல புத்தகங்கள் ரயில் நிலையத்தில் கிடைத்தால் வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது எப்போதோ ஓரிரு முறை தான்! ஆகவே பொதுவாக ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே போவதில் பொழுது போய்விடும்.

8. விருப்பமான ரைட் அல்லது ட்ரைவ்
அப்படி ஏதும் இல்லை. விருப்பம் எனில் யு.எஸ்ஸில் கார்ப் பயணம் தான்மிக மிகப் பிடிக்கும்.


9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்
அப்படி ஏதும் கிடையாது. பாடினால் கூட வரவங்க பயந்துட்டா என்ன செய்யறது? :)

10. கனவுப் பயணம் ஏதாவது?

அநேகமாய் எல்லா இடங்களுக்கும் போயிட்டு வந்தாச்சு. கனவுப் பயணம்னு ஏதும் இல்லை. முன்னே அமர்நாத், வைஷ்ணோ தேவி, மற்றும் கங்கை, யமுனை, சிந்து பிறக்கும் இடங்கள் பார்க்கும் ஆவல் இருந்தது. நர்மதை நதி பிறக்கும் அமர்க்கண்டும், காவிரி பிறக்கும் மடிக்கெரேயும் போக நினைத்தது உண்டு. இப்போது உடல் நலம் இருக்கும் நிலையில் அந்தப் பயணங்கள் எல்லாம் முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. கல்கத்தாவில் கங்காசாகர் பார்க்க நினைத்து அதையும் பார்க்க முடியாமல் போனது. 

20 comments:

  1. Replies
    1. நீண்ட நாட்கள் கழித்து உங்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி டிடி. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

      Delete
  2. யதார்த்தமான பதில்கள். தொடர் பதிவை உடனே முடித்து விடீர்கள். பரவாயில்லையே..

    ReplyDelete
    Replies
    1. அட? நான் ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பாக்கும்! நினைச்சால் உடனே முடிப்பேன். நினைக்கத் தான் நாளாகும்! :)

      Delete
  3. அனைத்தும் அருமை. 9-இல் உண்மை :)

    ReplyDelete
    Replies
    1. ஹூம், உண்மை, ஒத்துண்டு தான் ஆகணும்! :(

      Delete
  4. அருமை. கீதா,துளசி இரண்டு பேருக்கும் காலில் சக்கிரம். இதே போல எப்பொழுதும் பயணம் செயது எங்களையும் மகிழ்விக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார் உங்களையும் சேர்த்துக்கச் சொல்றாரே! :)

      Delete
  5. சுவாரஸ்யமான பதில்கள்! நன்றி!

    ReplyDelete
  6. 9-ல் உண்மை என்று போட்டு படித்ததை மீண்டும் பார்க்க வைத்து விட்டார், கோபு ஸார். ஸ்ரீராமின் பரவாயில்லையே--யைப் படித்து புன்முறுவல். குறிப்பிட்ட இரண்டு பேருடன் வல்லிம்மா தன்னையும் சேர்த்துக் கொண்டிருக்கலாம்.

    நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்பார்கள். எனக்கென்னவோ நாலும் மூன்றும் சொந்த அனுபவத்தில் பிடித்த பதில்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், உண்மை, யு.எஸ். சென்ற பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஶ்ரீராம் சமீபத்தில் என்னால் அதிகம் எழுத முடியலை என்பதற்காகச் சொல்கிறார். ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் கூடப் போட்டாச்சு! கொஞ்சம் குறைச்சுக்கலாமே, என்ன ஆயிடும்! :)

      Delete
    2. நான் என்னால் உடனடியாக எழுத முடிவதில்லை என்பதால் அப்படிச் சொன்னேன்.

      :)))

      Delete
    3. //ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் கூடப் போட்டாச்சு! கொஞ்சம் குறைச்சுக்கலாமே, என்ன ஆயிடும்! :)//

      ஒரு காலத்தில் என்ன ..... இப்போதே தினமும் (வெவ்வேறு வளைத்தளங்களிலுமாகச் சேர்த்து) நான்கு பதிவுகள் தாங்கள் தருவதுபோல ஒரு ஃபீலிங் எனக்கு உள்ளது. :) இதெல்லாம் எல்லோராலும் செய்ய முடியாத, தங்களின் மாபெரும் ஸ்பெஷாலிடியாகும். வாழ்த்துகள்.

      Delete
    4. நீங்கள் அதிகம் வேலை உள்ளவர் ஆச்சே ஶ்ரீராம். பல ஜோலிகள் இருக்கும். ஆகையால் மெதுவாக எழுதுவீர்கள். மேலும் சுவையான சம்பவங்களின் சேர்க்கையும் இருக்கும். யோசித்து எழுதுவீர்கள். நான் அந்த நிமிடம் மனதில் தோன்றுவதை எழுதுபவள்.

      Delete
    5. நன்றி வைகோ சார். மற்றப் பதிவுகளில் எழுதுவதும் இப்போது குறைந்திருக்கிறது.

      Delete
  7. அட!பயணங்கள் முடிவதில்லை தொடர்ந்துவிட்டதே! அழ்கான பதிலகள்!சகோ! யதார்த்தம்! திருக்கயிலை பயணம் சென்றுவிட்டீர்களா!! ஆஹா! அருமை!

    கீதா: ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பது போல் யு எஸ் ல் பயணம் செய்வது எதில் என்றாலும் காரில் கூட அருமையாக இருக்கும். வசதிகள் அதிகம்தான்...சுத்தம் என்று பல...

    ReplyDelete
    Replies
    1. திருக்கயிலைப் பயணம் 2006 ஆம் வருடம் செப்டெம்பரில் சென்றோம். அது குறித்த கட்டுரைத் தொடர் மின்னூலாக வந்துள்ளது. ஓம் நமசிவாய என்னும் பெயரில். க்ரியேடிவ் காமன்ஸ் வெளியீடு.

      Delete
  8. மிக்க நன்றி அழைப்பை ஏற்றுப் பதிவு இட்டமைக்கு!

    ReplyDelete