இவர் நேற்றைய புது வரவு. முதல்லே எதிர் குடியிருப்பு ஜன்னலில் (நாங்க முந்தி குடியிருந்த வீடு) அமர்ந்திருந்தது. பாத்திரம் தேய்க்கையில் பார்த்தேன். அங்கேயே உட்கார்ந்திருந்தது. சாயந்திரம் தேநீர்த் தயாரிப்பின் போது சமையலறை ஜன்னலில் வந்து உட்கார்ந்திருந்தது. போயிடுமோனு நினைச்சேன். போகலை.சரினு படம் எடுத்தேன்! பறந்துவிட்டார்.
பின்னர் ராத்திரி தோசை செய்கையில் மறுபடி ஜன்னலுக்கு வந்திருந்தார். இம்முறை படம் எடுத்தும் போகலை. அங்கேயே இருந்தார். இரவு முழுவதும் அங்கேயே இருந்துட்டுக் காலையிலேயும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். குளிச்சுட்டு வந்து பார்த்தால் காணோம். எங்கே போனார்னு தெரியலை. அன்றாட வேலைக்குப் போயிருக்கலாம். மறுபடி இன்னிக்குச் சாயந்திரம் பார்க்கிறேன்.
இன்னிக்கு சூரிய பூஜைக்கு சூரியனாரே நேரில் வந்திருந்தார். பூஜையை ஏற்றுக் கொண்டார்.
இது தீபாராதனை முடிஞ்சதும் எடுத்த படம். ஹிஹிஹி, நிவேதனம் எல்லாம் எடுத்துட்டேன்! :)
புதிய நண்பருக்கு உணவிட்டு ஆதரியுங்கள்!! பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஏற்கெனவே பறவைகளுக்கு உணவுக்கும் குடிநீருக்கும் ஏற்பாடு செய்து வைத்திருப்பதைப் படம் எடுத்துப் போட்டிருக்கேனே ஶ்ரீராம். இங்கே சமையலறைக் கதவைத் திறப்பதில் சில பிரச்னைகள். ரங்க்ஸ் வந்து தான் திறக்கணும். :)
Deleteஜன்னல் பரப்பு முழுவதும் அவரோட கழிவுகள் தான்! :) சுத்தம் செய்தால் கீழே யார் தலையிலாவது விழும். என்ன செய்யலாம்னு யோசிக்கிறோம். :)
Deleteசூரியனார் கோவிலில் படி ஏற முடியவில்லை என்று கவலைப்பட்டீங்க இல்ல? அதான் சூரியனார் நேரே உங்க வீட்டுக்கே வந்துட்டார். பொங்கல் எப்படி? இனிப்பில்லாத வெல்லம் போட்டு செய்தீர்களா?
ReplyDelete--
Jayakumar
ஹாஹா, வாங்க அண்ணாரே! இனிப்பு உள்ள வெல்லம் தான். பண்ணுவதே ரொம்பக் கொஞ்சம் போலத் தான். அதான் படத்தில் காட்டலை. :) ஆகவே அதிலே ஒரு கரண்டிப் பொங்கலை நல்ல வெல்லம் போட்டதாகவே சாப்பிட்டுக்கலாம், ஒரு நாள் தானே என்னும் எண்ணம். நல்ல பாகுவெல்லம் தான் போட்டேன். சூரியனார் தினம்தினம் வரார்!
Deleteபுறா வந்தா ஏதாவது தின்னக்கொடுக்கறதை வுட்டுட்டு.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
ReplyDeleteமேலே பாருங்க தம்பி,ஶ்ரீராமுக்குக் கொடுத்திருக்கும் பதிலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteதம்பி, நீங்களும் இங்கே போய்ப் பாருங்க, இந்தச் சுட்டியிலே, http://sivamgss.blogspot.in/2015/11/blog-post_25.html
Deleteபறவைங்களுக்காக ஏற்பாடு செய்திருக்கோமாக்கும்! க்கும்! :P :P :P :P
'பொங்கலுக்கு வந்த விருந்தாளி! பூஜைக்கு நேரிலே வந்த சூரியன்!'
ReplyDeleteதலைப்பே ஆச்சர்யம் அளிப்பதாக அழகாக உள்ளது.
பொங்கலுக்கு வந்த விருந்தாளிக்கும் தாங்கள் கொஞ்சமாவது பொங்கல் கொடுத்ததாகத் தெரியவில்லை.
பூஜைக்கு நேரிலேயே வந்த சூரியனாருக்கு நிவேதனம் படைத்ததாகவும் தெரியவில்லை.
மாமாவும் நீங்களுமாவது சர்க்கரைப் பொங்கல் + வெண் பொங்கல் + பாயஸம் + பச்சடி + வடை எல்லாம் செய்து சாப்பிட்டேளா?
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் + கணு நல்வாழ்த்துகள். :)
புறாவுக்கு தினமும் ஏதாவது கொஞ்சம் தீனியும் + குடிக்க தூத்தமும் வையுங்கோ. புண்ணியமுண்டு. :)
வந்த விருந்தாளி பொங்கலெல்லாம் சாப்பிடறதாத் தெரியலை. அவருக்கு வேண்டிய தானியங்கள் போட்டாச்சு. எங்க வீட்டிலே நோ வெண்பொங்கல்+பாயசம்+பச்சடி. வெறும் சர்க்கரைப் பொங்கல் மட்டுமே. சூரியனாருக்கு நிவேதனம் பண்ணாமல் கற்பூர ஆரத்தி எப்படி எடுப்போம். நிவேதனத்தை உள்ளே கொண்டு போயிட்டு அப்புறமாப் படம் எடுத்தேன்.
Deleteஏற்கெனவே ஒரு பதிவில் அன்னிக்கும் ஏதோ பண்டிகை! பறவைகளின் சாப்பாடுக்கான ஏற்பாடு செய்து வைத்திருப்பதைப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். நீங்க அப்போப் பார்க்கலைனு நினைக்கிறேன். :) சுட்டி தரேன் பாருங்க!
Deletehttp://sivamgss.blogspot.in/2015/11/blog-post_25.html
Deleteஇங்கே பார்க்கவும். :)
அன்னிக்குக் கார்த்திகை தீபம். அண்ணன்மார், தம்பிமாரிடம் அன்னிக்கும் சீர் கேட்டிருந்தேன். அதனால் அன்னிக்கு உங்க கணினிக்குக் கோளாறு ஏற்பட்டிருக்கும் வைகோ சார்! :P :P :P :P :P :P
Deleteஅட! புதிய நண்பர் அழகாக இருக்கிறாரே....அருமையான விருந்தாளிதான். சூரியனும் வந்துவிட்டாரே..சூப்பர் பொங்கல்தான்னு சொல்லுங்க..
ReplyDeleteஆமாம், சூப்பர் பொங்கல் தான் துளசிதரன். :)
Deleteசூரியனாரே நேரில் வந்து வாழ்த்தினார் என்றால் நீங்க அதிர்ஷ்ட சாலிதான்! வாழ்த்துக்கள்!
ReplyDelete