மேலே மண்டபம் போல் தெரிகிற இடத்தில் சூரியனின் சிற்பம் உள்ளது. மேலே ஏறும்படியாகப் படிக்கட்டுகள் எளிதாக இல்லை. ஒவ்வொரு படியும் இரண்டு, மூன்று அடி உயரத்தில் உள்ளன. இது போல் இரண்டு தளம் ஏற வேண்டும் என்பதால் ஏறவில்லை. :(
படத்துக்கு நன்றி விக்கி பீடியா!
படத்தில் இடப்பக்கம் காணப்படுவது கோயிலின் ஆதி கட்டுமானம். 1837 வரை இப்படிப் பட்ட விமானத்துடன் காணப்பட்டது சூரியன் கோயில். விமானத்தின் உயரம் கிட்டத்தட்ட 230 அடி என்று சொல்கின்றனர். இந்த விமானம் அங்குள்ள மண்ணின் தன்மையினால் தாக்குப் பிடிக்க முடியாமல் விழுந்து விட்டது எனவும் மூலஸ்தானத்தில் இருந்த சூரியனார் இப்போது புரியில் இருப்பதாகவும் சொல்கின்றனர். எனினும் மேல் தளத்தில் நாலு பக்கமும் சூரியனின் சிற்பம் நம்மூரில் கோஷ்டத்தில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று உதய சூரியனாகவும் இன்னொன்று மதிய நேரத்து நண்பகல் சூரியனாகவும், இன்னொன்று அஸ்தமன சூரியனாகவும் சொல்கின்றனர். நான்காவது எதற்கு எனத் தெரியவில்லை.
ஜகமோகனா என்னும் அர்த்த மண்டபமும், நாட்டிய மண்டபமும், போஜன மண்டபமும் மட்டுமே இப்போது இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பவிஷ்ய புராணம், சாம்ப புராணம் ஆகியவற்றில் மூன்று சூரியக் கோயில்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அவற்றில் கோனாரக்கில் ஒன்றும், மத்ராவில் ஒன்றும் முல்தான் எனப்படும் பாகிஸ்தானின் பஞ்சாபிலும் உள்ளது எனச் சொல்லப்படுகிறது. கோனாரக்கில் உள்ள இந்தக் கோயில் தற்சமயம் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் வசம் உள்ளது. கோயிலின் பல சிற்பங்கள் கடல் காற்றால் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். அரிக்கப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே செப்பனிடும் வேலைகள் நடந்தாலும் பழைய முறையில் அது வருமா என்பது சந்தேகமே!
இதைத் தவிரவும் இந்தக் கோயிலுக்கு அருகே இன்னமும் இரு கோயில்கள், ஆனால் இதை விடப் பழமை வாய்ந்தவை இருப்பதாகவும் சொல்கின்றனர். ஒன்று மாயா தேவிக்கான கோயில், இன்னொன்று வைஷ்ணவிக்கான கோயில். இரண்டிலுமே மூலஸ்தானத்தில் எந்தவிதமான கடவுளரும் இல்லாமல் காணப்படுகின்றன. இந்தக் கோயிலின் ஒரு சக்கரத்தின் மூலம், நாள், கிழமை, நேரம், இரவு, பகல் போன்றவற்றை அறிந்து வந்தனர் என்றும் தெரிய வருகிறது.
இன்னும் சில கூற்றுகளின் படி இந்தக் கோயிலின் இத்தகைய மோசமான நிலைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பதினான்காம் நூற்றாண்டில் கோயில் நல்ல நிலையில் இருந்ததாகத் தெரிய வருகிறது. பதினாறாம் நூற்றாண்டில் அயினி அக்பரியில் அபுல் ஃபாசலின் கூற்றுப்படி கோயில் நன்றாக இருந்தாலும் அதே நூற்றாண்டில் ஒடிஷாவை காலா பஹர் என்பவன் தாக்கிய சமயம் இங்கேயும் தாக்குதல்கள் நடந்ததாகச் சொல்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் அப்போதிருந்த ராஜாவால் அங்கிருந்த சூரியனின் விக்ரஹம் அகற்றப்பட்டு புரி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜேம்ஸ் ஃபெர்கூஸன், இங்குள்ள மண்ணின் தன்மையே கோயில் இடிந்ததற்குக் காரணம் என்று சொன்னாலும் கோயிலின் அஸ்திவாரம் உறுதியாகவே இருப்பதாகவும் கோயில் பூமியில் புதைந்து போகும் நிலையில் இல்லை என்றும் சொல்கின்றனர். இன்னும் சிலர் கோயில் கட்டுமானங்களே முழுமையாக முடியவில்லை என்றும் கருதுகின்றனர். இடி, மின்னல்களாலும் கோயிலில் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பூகம்பங்கள் ஏற்பட்டதும் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். ஆனால் கோயில் பதினாறாம் நூற்றாண்டிலேயே சிதைய ஆரம்பித்திருக்கிறது என்பதை 1929 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு நிரூபிக்கிறது.

அரிய தகவல்கள் முதல் புகைப்படம் மிகவும் அழகு வாழ்த்துகள் தொடர்கிறேன்
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி!
Delete//இன்னமும் சூரியனார் கோயிலில் தான் இருக்கோம்!//
ReplyDeleteஅடடா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திலோ என நான் தவறாக நினைத்து விட்டேன். அங்கேயே இருங்கோ. மிக்க மகிழ்ச்சி. :)
>>>>>
வாங்க வைகோ, நன்றி!
Delete// மேலே ஏறும்படியாகப் படிக்கட்டுகள் எளிதாக இல்லை. ஒவ்வொரு படியும் இரண்டு, மூன்று அடி உயரத்தில் உள்ளன. இது போல் இரண்டு தளம் ஏற வேண்டும் என்பதால் ஏறவில்லை. :(//
ReplyDeleteமிகவும் நல்லது ..... பிழைத்தது நீங்கள் மட்டுமல்ல. அந்தத் தளங்களும் கூடத்தான். :)
>>>>>
தளங்கள் எல்லாம் நல்ல உறுதியானவை! அத்தனை பேரோட எடையைக் கணக்கிட்டால் என்னோட எடை ஒண்ணுமே இல்லை வைகோ சார்! :)
Deleteஅப்பொழுதிலிருந்தே இயற்கைச் சீற்றத்தைத் தாங்கி வந்திருக்கிறது ஒரிஸ்ஸா.
ReplyDeleteபடிகள் இத்தனை உயரமாக இருந்தால் ஏறுவதுதான் யார். நல்ல விவரங்கள் கீதா.
ஆமாம், இயற்கைச் சீற்றங்களை நன்றாகவே சமாளிக்கிறார்கள். சமீபத்திய பெருமழையின் பாதிப்புக் கூட அங்கே அதிகம் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தாழ்வான பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அதோடு வெள்ளக் காலங்களில் தங்குவதற்கெனக் கட்டி இருக்காங்க பாருங்க கடற்கரைப் பகுதியில் பெரிய பெரிய சத்திரங்கள் மாதிரி மூன்று, நான்கு தளங்களில்! அடுக்கடுக்காகப் போகிறது. சௌகரியமாய்த் தங்கிக்கலாம், எத்தனை நாட்கள் ஆனாலும். எல்லாக் கடற்கரைப் பகுதிகளிலும் இம்மாதிரிக் கட்டிடங்கள் அரசாங்கமே கட்டி வைத்திருக்கிறதோடு பராமரிப்பும் வெகு சுத்தம். ஊர்களே சுத்தம், சுத்தம், படு சுத்தம்!
Deleteகருங்கல் சிற்பங்களுடன் கூடிய முரட்டு சைஸ் படங்களுடன் இந்தப் பதிவு மிகவும் சூப்பராக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். இனிய பயணப் பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி வைகோ சார்!
Deleteமிக சுவாரஸ்யமான விவரங்கள். இந்த இடத்தைப் பார்க்க ஆவல். எங்கே...ம்ம்ம்... பார்ப்போம். கொஞ்ச வருடங்கள் போகட்டும். அப்புறம் ஃப்ரீதான்.
ReplyDeleteம்ம்ம்ம்ம் உங்களுக்கும் எல்டிசி இருக்குமே ஶ்ரீராம்! இருந்தால் அதிலே போகலாம். நாங்க இப்படித் தான் ராஜஸ்தானில் இருக்கிறச்சே ஒரு தரம் கன்யாகுமரி, ஒரு தரம் ராமேஸ்வரம் என்று போனோம். அதற்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து கோவா ஒரு முறை, ஒருமுறை மத்தியப் பிரதேசம் என்று போனோம். இரண்டு இடங்களிலும் என் நாத்தனார்கள் இருந்தனர் என்பது தனிச் செய்தி! :)
Deleteதகவல்கள் சிறப்பு! இரண்டு பதிவு மிஸ் ஆயிருச்சு! நாளைக்கு படிச்சுடறேன்! தூக்கம் சொக்குது...! உங்க பதிவை படிச்சு இல்லே...!
ReplyDeleteமெதுவாப் படிச்சுட்டு வாங்க சுரேஷ், ஒண்ணும் அவசரம் இல்லை!
Deleteவணக்கம்
ReplyDeleteசிற்பங்கள் ஒவ்வொன்றும் வியக்கவைக்கிறது. சொல்லிய தகவல் நன்று.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன். பாராட்டுக்கு நன்றி.
Deleteசூரியக் கோவில்கள் பற்றி நல்ல விரிவான தகவல்கள். படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி மேடம்.
ReplyDeleteவாங்க கீதமஞ்சரி, வருகைக்கும் கருத்ஹ்டுக்கும் நன்றி.
Deleteபடங்களைப் பார்க்கும்போதே கோயிலின் பிரமாண்டம் தெரிகிறது. அதன் இன்றைய நிலையையும் அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள். அருமை.
ReplyDeleteவாங்க செந்தில்குமார், பெரிய கோயில் தான்! ஆனால் இப்போது மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்துள்ளது! :(
Deleteபுரி சென்றதில்லை வருத்தம் உண்டு. வாய்ப்பிருக்குமா தெரியவில்லை.
ReplyDeleteபுவனேஸ்வரில் மட்டும் 3 நாட்கள் இருந்து பார்க்க வேண்டும். எங்களால் முடியலை. நிதானமாய்த் திட்டம் போட்டுக் கொண்டு போய் வாருங்கள்!
Deleteசூரியனார் கோயிலின் மேல் என்றைக்குமே எனக்கு மோகம் உண்டு. ரோகிணி நட்சத்திரம். சந்திரனின் ஆளுகை உள்ளவன். அதனால் என்றில்லை. கல்லில் வடித்த அந்த சிற்பங்கள் கண்கொள்ளாக் காட்சியாய் என் நினைவில் என்றும் படிந்தவை.
ReplyDeleteஎங்கு போங்கள்.. அந்த பெருமை வாய்ந்த இடத்திற்கான தகவல்களைச் சேகரிக்கும் ஆர்வமும், உடனே அதைப் பதிவிட்டு ஆவணப்படுத்தும் உங்கள் நேர்த்தியும் அடிக்கடி நான் மனத்திற்குள் வியந்து கொண்டதுண்டு. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று நமது மதிப்பிற்குரிய விஷயங்களைப் பற்றி எழுத்தில் எழுதிவிடாத உங்கள் ஜாக்கிரதை உணர்வும் பொறுப்புணர்ச்சியும் பாராட்டத்தக்கது.
வாங்க ஜீவி சார், முதலில் உங்கள் பாராட்டுக்கு நன்றி. ஆனால் இது ஒண்ணு தான் எனக்குத் தெரிந்த விஷயம் என்பதையும் சொல்ல வேண்டுமே! மற்றவர்கள் மாதிரிக் கற்பனை வளமெல்லாம் எனக்குக் கிடையாது. ஆகவே தெரிந்த ஒன்றில் திறமை காட்டுவது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. இல்லையா?
Delete2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
நன்றி ஜீவலிங்கம், காசிராஜலிங்கம்.
Deleteபடங்களே ரொம்ப அழகா இருக்கே. நிறைய தகவல்கள். நல்ல காலம் பூமியில் புதையாது என்று சொல்லியது கொஞ்சம் சமாதானம். சிதைந்திருப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கின்றது. இப்படித்தான் பல கோயில் சிற்பங்கள். தாம்தமாகிடுகின்றது சகோ.
ReplyDeleteஒரு சின்ன ரிக்வெஸ்ட்...இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்க முடியுமா சகோ. அதுல எங்கள் ஐடியைப் போட்டுவிட்டால் உங்கள் பதிவுகள் எங்கள் வீட்டுப் பெட்டிக்குள் வந்துவிடுமே.(அதான் எங்கள் இமெயில் பெட்டிக்குள்) எளிதாக இருக்கும் என்பதால்தான் ...
ஏற்கெனவே ஒரு முறை கேட்டிருந்தீங்க இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் பத்தி! ஆனால் பாருங்க, தொடர்ச்சியாய் உட்கார முடியலை. இன்னிக்கு இப்போத் தான் வலைப்பக்கம் திறந்திருக்கு. முயற்சி செய்யறேன். நன்றி.
Delete