எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 31, 2016

அப்பாடா! வந்து சேர்ந்துட்டேனே!

அப்பாடானு இருக்கு. ஒரு வழியாக் குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாம் சுபமாக முடிவடைந்தன. இனிமேல் பயணங்கள் குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்று மாலை நாலு மணிக்குத் தான் மும்பையிலிருந்து திரும்பி வந்தோம். மைத்துனர் பையருக்குக் கல்யாணம், 29 ஆம் தேதி மும்பையில் நடந்தது. அதுக்காகப் போயிட்டு இன்று தான் திரும்பினோம். பார்க்கப் போனால் அங்கே பத்து, பதினைந்து நாள் டேரா போடுகிறாப்போல் இருந்தது. ஆனால் இப்போ அதுக்குத் தேவை இல்லைனு சொல்லிட்டாங்க. இங்கேயும் நம்ம சொந்தக் காரியங்களை இனிமேல் பார்க்கணும்.

இணையத்திலே ஒழுங்கா இருந்தே ஆறு மாசம் ஆச்சா?  பல ரசிகப்பெருமக்கள் அலுத்துப் போய் ஒதுங்கிட்டாங்க போல! 263 க்கும் மேல் இருந்த பின் தொடர்பவர்கள் இப்போ 246 க்கு வந்துட்டாங்க! ஹிஹிஹி, ஆள் கொஞ்ச நாட்கள் இல்லைனா எப்பூடினு பாருங்க! மும்பை விமான நிலையம் நம்மளை ஒரு வழி பண்ணிடுச்சு! அதுவும் மதுரை--மும்பை விமானத்தை ஏர் இந்தியாக்காரங்க பிடிவாதமா பன்னாட்டு முனையத்திலே தான் நிறுத்தறாங்க.  அதிலே ஏரோ பிரிட்ஜ் வழியா இறங்கி இறங்கி இறங்கி இறங்கி இறங்கி வந்தாலும் வழி நீ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாப்போயிட்டே இருக்கு. வெளியே காத்திருக்கிறவங்க விஷயம் தெரிஞ்சவங்கன்னா ஓக்கே! இல்லைனா என்னடா இது சோதனைனு நினைச்சுப்பாங்க. வெளியே வரவே அரை மணிக்கும் மேல் ஆகிடுது.

புது தில்லி விமான நிலையமோ, கல்கத்தா விமான நிலையமோ பெரிசா இருந்தாலும் மும்பை விமான நிலையம் கிட்டக் கூட நிற்க முடியாது. இதைப் பார்த்துட்டு நம்ம சென்னை விமான நிலையம் பொம்மை மாதிரி இருக்கு! அதிலும் தினம் தினம் கண்ணாடி வேறே விழுந்துட்டுப் பயமுறுத்தும். நல்லவேளையா ட்ரான்சிட்டுனு வெளியே வந்து உட்காரச் சொல்லலை! விமானத்துக்கு உள்ளேயே உட்காரச் சொல்லிட்டாங்க. இந்த விமானச் சேவை கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேல் இருக்காம். இதை ரத்து செய்து சில நாட்கள் முன்னர் அறிவிப்புக் கொடுத்துட்டுப் பின்னர் மக்களெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கவே மறுபடி பழைய சேவையையே தொடர்ந்திருக்காங்க. இது விமானத்தில் ஏறும்போது தான் தெரியும். நல்லவேளையா அலைச்சல் இல்லாமல் போச்சு.  ஃப்ராங்க்ஃபர்ட், ஹூஸ்டன், துபாயிலெல்லாம் நடக்கிறது ஒண்ணுமே இல்லைனு இங்கே மும்பையில் நடக்க வைச்சுட்டாங்க. இனிமேல் ஒரு மாசத்துக்கு நடைபயிற்சியே செய்ய வேணாம் போல.

இனியாவது ஒழுங்கா இணையச் சேவை செய்யணும்னு நினைச்சுட்டு இருக்கேன். பல பதிவுகள் பாதியிலே நிக்குது. பல கட்டுரைத் தொகுப்புக்களைப் பதிப்புக்கு ஏற்றாற்போல் அமைக்கணும். ஏதோ ஒரு பெரிய தூக்கத்திலே இருந்து எழுந்தாப்போல் இருக்கு இப்போ! இதுக்கு நடுவிலே நம்ம ரங்க்ஸுக்குக் கண் ஆபரேஷன் வேறே ஆகணும். பல வேலைகள் காத்திருக்கு. வர்ட்டா?  நாளைக்குப் பார்க்கலாம். எதை எல்லாம் பாதியிலே விட்டிருக்கேன்னு பார்த்துட்டு அதை எல்லாம் முழுசா எழுதி முடிக்கணும்.

30 comments:

  1. வாங்க வாங்க மும்பை பற்றிய பயண அனுபவங்கள் பதிவாக வரும் என்று எதிர் பார்த்து இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. மும்பையில் கல்யாணத்தில் ரொம்ப பிசி கில்லர்ஜி! அதிகம் வெளியே போகலை! :)

      Delete
  2. நல்ல வேளை .கீதா. மிஸ்ஸிங்க்னு. தந்தி கொடுக்க இருந்தேன். அப்புறமா ஸ்ரீராம் நினைவு படுத்த அப்பாடான்னு அமைதி. இருமல் போச்சாமா.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, உங்க கிட்டேயும் ஶ்ரீராம் கிட்டேயும் ஏற்கெனவே சொல்லி இருந்தேன். ஶ்ரீராம் தொலைபேசியில் பேசினார். :)

      Delete
  3. ஃபாலோயர்ஸ் குறைந்ததற்கு நீங்கள் பதிவு போடாதது காரணம் அல்ல. ப்ளாகர் வேலை. எங்களுக்கும் நிறைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் மூலம்தான் நான் விவரம் அறிந்தேன். ஜிமெயில் அக்கௌண்ட் இல்லாத ஃபாலோயர்ஸை நீக்கி விட்டதாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? ப்ளாகர் வேலையா இது? கிட்டத்தட்ட 60 பேர் போல் காணோம்! :)

      Delete
  4. //அப்பாடா! வந்து சேர்ந்துட்டேனே!//

    கடந்த ஒரு வாரமா உங்களைக்காணாமல் நாங்கள் எல்லோரும் துடியாய்த் துடித்துப் போய்விட்டோம். :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நம்பிட்டோமுல்ல! :)

      Delete
  5. //பல ரசிகப்பெருமக்கள் அலுத்துப் போய் ஒதுங்கிட்டாங்க போல! 263 க்கும் மேல் இருந்த பின் தொடர்பவர்கள் இப்போ 246 க்கு வந்துட்டாங்க!//

    இது இப்போ எல்லாப் பதிவர்களுக்குமே நடக்கும் கதைதான். அதனால் கவலைப்படாதீங்கோ.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அதான் ஶ்ரீராமும் சொல்லி இருக்கார்! :)

      Delete
  6. //ஃப்ராங்க்ஃபர்ட், ஹூஸ்டன், துபாயிலெல்லாம் நடக்கிறது ஒண்ணுமே இல்லைனு இங்கே மும்பையில் நடக்க வைச்சுட்டாங்க. இனிமேல் ஒரு மாசத்துக்கு நடைபயிற்சியே செய்ய வேணாம் போல.//

    அப்போ எக்கச்சக்கமா பதிவுகள் வரும் என்று நினைக்கிறோம்.

    தினமும் நடைபயிற்சி செய்யும் நேரமும் பதிவுகளாக எழுதித் தள்ளிவிடுவீர்களோ என்னவோ !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் வராது! தேவையான பதிவுகள் மட்டுமே வரும்!

      Delete
  7. //இனியாவது ஒழுங்கா இணையச் சேவை செய்யணும்னு நினைச்சுட்டு இருக்கேன். பல பதிவுகள் பாதியிலே நிக்குது. பல கட்டுரைத் தொகுப்புக்களைப் பதிப்புக்கு ஏற்றாற்போல் அமைக்கணும்.//

    தங்களின் இந்தக்கடமையுணர்வு (வலையுலக சேவை) என்னை அப்படியே புல்லரிக்க வைக்கிறது. :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நாங்க கடமை உணர்ச்சி நிரம்பியவங்களாக்கும்!

      Delete
  8. //ஏதோ ஒரு பெரிய தூக்கத்திலே இருந்து எழுந்தாப்போல் இருக்கு இப்போ!//

    உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இப்போ ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால் போலத் தெரிகிறது! :)

    //இதுக்கு நடுவிலே நம்ம ரங்க்ஸுக்குக் கண் ஆபரேஷன் வேறே ஆகணும்.//

    ஆஹா, இது மிகவும் முக்கியமாச்சே. நல்லபடியாக ஆகட்டும்.

    //பல வேலைகள் காத்திருக்கு. வர்ட்டா? நாளைக்குப் பார்க்கலாம்.//

    சரி ..... வாங்கோ ..... நாளை பொழுது நல்ல பொழுதா விடியணுமேன்னு ஒரே கவலையா இருக்குது.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நன்றாக நடக்கும். மேலே இருப்பவன் பார்த்துப்பான்.

      Delete
  9. தொடர்பவர்கள் எண்ணிக்கை சென்ற வாரத்தில் நிறையவே மாற்றம் இருந்தது. Blogger செய்த மாற்றம் என்று புரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? என்னவாம் அவங்களுக்கு?

      Delete
  10. இனி ஸ்ரீரங்கத்திலிருந்து அதிக பதிவுகளை எதிர் பார்க்கலாம். நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சதை எழுதுவேன் ஐயா!

      Delete
  11. இணையத்திலே ஒழுங்கா இருந்தே ஆறு மாசம் ஆச்சா? //ம்க்கும்! எந்த கால்த்தில ஒழுங்கா இருந்தீங்க? :P

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தம்பி, முன்னாடி எல்லாம் பாருங்க, ஒரு நாளைக்கு இரண்டு கூடப் போட்டிருப்பேன். :) இப்போ ரசிகப்பெருமக்களும் ஜாஸ்தி ஆயிட்டாங்க, நமக்கும் ஒழுங்கா வரமுடியலை! :)

      Delete
  12. //பல ரசிகப்பெருமக்கள் அலுத்துப் போய் ஒதுங்கிட்டாங்க போல! 263 க்கும் மேல் இருந்த பின் தொடர்பவர்கள் இப்போ 246 க்கு வந்துட்டாங்க! //

    வந்திட்டீங்கள்லே! வாங்க.. வாங்க.. விட்டதைப் பிடிச்சிடலாம். :))

    //மைத்துனர் பையருக்குக் கல்யாணம், 29 ஆம் தேதி மும்பையில் நடந்தது. அதுக்காகப் போயிட்டு இன்று தான் திரும்பினோம்...//

    இதான் சாக்கா?.. நீங்க என்னவோ ஹாயா வட இந்திய டூர் (சுற்றுலா) போயிருக்கறதாக அல்லவோ நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!..

    // ஃப்ராங்க்ஃபர்ட், ஹூஸ்டன், துபாயிலெல்லாம் நடக்கிறது ஒண்ணுமே இல்லைனு இங்கே மும்பையில் நடக்க வைச்சுட்டாங்க. //

    ஏன் வீல் சேர் என்னாச்சு?.. (இதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே வரும் என்று எதிர்பார்த்தே கேள்வி!)

    //எதை எல்லாம் பாதியிலே விட்டிருக்கேன்னு பார்த்துட்டு அதை எல்லாம் முழுசா எழுதி முடிக்கணும்.//

    very very S.S. (sincere sister)

    ReplyDelete
    Replies
    1. ஹையோ, வட இந்திய டூரா? இப்போதைக்கு இல்லை ஜீவி சார்! :) அப்புறமா அந்த வீல் சேர்! பழகிக்க வேண்டாம்னு ஒரு எண்ணம். பழகிட்டா அப்புறமா நடை என்பதே இல்லாமல் போயிடும். பிடிவாதமா நடக்கறதுனு வைச்சிருக்கேன்.

      Delete
    2. நடக்க முடியலைங்கறத்துக்காக இல்லை, வீல் சேர்! குறிப்பிட்ட விமானம் நிற்கும் 'பே'யில் குறிப்பிட்ட நேரத்திற்கு வழிதெறியாமல் தடுமாறாமல் போய்ச் சேருவதற்கு இப்பொழுதெல்லாம் வயதான பலர் நாடுவது வீல் சேரில் தான். வீல் சேர் இடத்தில் இப்பொழுது பேட்டரி கார் ஃப்ராங்க் ஃப்ர்ட் போன்ற கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போன்ற ஏர்போர்ட்டுகளில் (நடை, லிப்ட் இல்லேனா எக்ஸ்லேட்டர், ரயில் என்று ஒரு விமானதளத்திற்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போவதற்கு எத்தனை சாதனங்களை உபயோகிக்க வேண்டியிருக்கிறது..) வயதானவர்களுக்கு, மொழி சங்கடம் உள்ளவர்களுக்கு கண் கண்ட தெய்வமா இருக்கு.

      Delete
    3. இந்தப்பதிவு முகநூலில் திரும்ப வந்ததா? உங்களோட இந்தக் கருத்தை இப்போத் தான் பார்க்கிறேன். ஹிஹிஹி. அ.வ.சி. இந்த முறை யுஎஸ் வந்தப்போ நாங்களும் ஃப்ராங்க்பர்ட்டில் அதிகம் சுத்த வேண்டி இருக்கும்னு வீல் சேர் தான் கேட்டு வாங்கிக் கொண்டோம். ஆனாலும் அங்கே வீல் சேரே கொடுக்காமல் எப்படியோ நடத்தி அப்படி இப்படிக் கூட்டி வந்து. தனியா செக்யூரிடி செக் வைத்து நாங்க ஏற வேண்டிய டெர்மினலுக்குக் கொண்டு சேர்த்தாங்க. அதுக்குச் சிறிது நேரம் பாட்டரி கார் தயவு. சரியாகப் பயணிகளை விமானத்தின் உள்ளே அழைக்கும் நேரம் போய்ச் சேர்ந்தோம். :)

      Delete
  13. ஹி..ஹி.. வண்டம்ல... அதெல்லாம் ஊருக்குப் போயி இருபத்தஞ்சு நாள் மதுரை அழகுல ( !!!)...மூழ்கி எழுந்து வந்தாச்ச்!..பாத்தா நீங்களும் ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கீங்க...எல்லா பதிவுகளும் நிதானமா படிக்குறேன்!..எனக்கும் ஃபாலோயர்ஸ் காணமேன்னு பக்குன்னு போச்சு!... இப்பத்தான் ப்ளாகர் கைவரிசைன்னு புரிஞ்சது. :))!.

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க பார்வதி, நீங்களும் டூர் அடிக்கிறீங்களாக்கும்? எல்லாம் டூர் மயம் தான்! மெதுவாப் படிச்சுட்டுக் கருத்துச் சொல்லுங்க!

      Delete
  14. வாங்க வாங்க மும்பை இண்டெட்னாஷனல் ஏர்போர்ட்னு அப்படி பண்ணிட்டாங்களா..ஹிஹிஹி ..இணைய சேவை செய்ய வந்தாச்சு....அப்புறம் எங்களுக்கும் ஃபாலோயர்ஸ் 89 இருந்தது திடீர்னு 87 ஆச்சு...அப்புறம் பார்த்தா 88 காமிக்குது என்னவோ போங்க இந்த ப்ளாகர் ரொம்பவே பூதம் போல ஆட்டம் போடுது....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பார்வையாளர்களும் ஒரு நாள் பதிவு வரலைனாக் குறைஞ்சுடறாங்க! :)

      Delete