இவையெல்லாம் சிதைந்த பகுதிகள் செப்பனிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இங்குள்ள சக்கரங்களின் ஒவ்வொரு பகுதியும் படம் எடுத்தேன். அவையே இங்கு இடம் பெறுகின்றன.
ஒரு பக்கப்பார்வை
நாட்டியக் கரணங்கள் மேலே உள்ளவை
இதற்கே மணி மூன்று ஆகிவிட்டது. மதிய உணவு வேண்டாம் என ஏற்கெனவே முடிவு எடுத்திருந்தோம். ஆகவே அங்கே இருந்த இளநீர் வியாபாரியிடம் இரண்டு இளநீரை வாங்கிக் குடித்துத் தேங்காயையும் சாப்பிட்டோம். எங்கு பார்த்தாலும் பத்தடிக்கு ஒரு இளநீர்க்கடை! சுவையான இளநீரும் கூட! விலையும் அதிகம் இல்லை. சக்கர நாற்காலியை இழுத்து வந்தவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தோம். பின்னர் நாங்கள் வந்த வண்டியில் ஏறி புவனேஸ்வரத்துக்குத் திரும்பச் சொன்னோம். அங்கே மிகவும் பிரசித்தி பெற்ற லிங்கராஜா கோயிலுக்குப் போகச் சொன்னோம். மாலை நாலு மணிக்குத் தான் நடை திறக்கும் என்பதால் போகும்போது சரியாக இருக்கும் என்று கணக்குப் போட்டோம். அது போல் நாலரை மணிக்கு லிங்கராஜா கோயிலுக்குப் போனோம். இங்கேயும் தோல் பொருட்கள், காமிரா, மொபைல் பயன்பாட்டில் இல்லை என்பதால் எல்லாவற்றையும் வண்டி ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டுச் செருப்பையும் அங்கேயே கழட்டிப் போட்டோம். அதற்குள்ளாக ஒரு பண்டா இளைஞர் வந்து ஆளுக்கு ஐம்பது ரூ கொடுத்தால் போதும். கோயிலைச் சுற்றிக் காட்டுகிறேன். என்றார்.
படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினகரன் தினசரி
ரொம்ப அதிகமும் இல்லாமல் குறைவும் இல்லாமல் நியாயமான பேரமாக இருக்கவே ஒத்துக் கொண்டோம். ஆனாலும் என்னால் தான் நடக்கவே முடியவில்லை. பல படிகள் ஏறி உள்ளே செல்லணும். உள்ளேயும் படிகள். அந்த இளைஞர் நின்று நின்று காத்திருந்து அழைத்துச் சென்றார். இந்தக் கோயிலின் வரலாறும் மற்ற விஷயங்களும் நாளை!
நாட்டியக் கரணங்கள் படம் அருமை. இளநீர் விலை குறைவு என்றால் எவ்வளவு, அதிகம் என்றால் எவ்வளவு?
ReplyDeleteஇளநீர் ஒடிஷாவில் 20, 25. நாங்க 25 ரூபாய் இளநீரைத் தேர்ந்தெடுத்தோம். முந்தாநாள் கும்பகோணத்தில் தாராசுரம் கடைத்தெருவில் இளநீர் ஒன்று பதினைந்து ரூபாய். அபிஷேஹத்திற்கு என 2 வாங்கினோம். நிறையத் தண்ணீர்! :)
Deleteபடங்கள் எல்லாமே அழகோ அழகாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள்.
ReplyDeleteஓர் இடத்துக்குச் சென்றால், மற்றவர்கள் பார்வையும், ஓர் பதிவரின் பார்வையும் வித்யாசமாகத்தான் இருக்கும். பதிவு எழுத மட்டுமே பயணம் என்று ஆகிவிடுகிறது. :)
பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.
பதிவுக்காகப்பயணம் போக முடியுமா? பயணங்கள் ஏற்கெனவே முடிவானவை! நாங்க விரும்பறோமோ இல்லையோ சில பயணங்கள் கட்டாயம் ஆகிவிடுகின்றன. :)
Deleteஇந்த சிற்ப அழகுகளைக்---
ReplyDelete'காணாதார் கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்து காண்பார் தம்
கண்ணென்ன கண்ணே'..
(அடிகளாருக்கு நன்றி)
//இங்குள்ள சக்கரங்களின் ஒவ்வொரு பகுதியும் படம் எடுத்தேன். அவையே இங்கு இடம் பெறுகின்றன.//
தங்கள் அயராத முயற்சிக்கு கைமேல் பலன். (சுவையான இளநீர்+தேங்காய்)
எங்களுக்கு கண்கண்ட பலன். அதற்கு அடுத்த நன்றி.
இந்தத் தொகுப்பு பூராவுமே கல்லிலே கலைவண்ணம் கண்டவர்களின் அற்புதம். (அதற்கடுத்து கவியரசருக்கும் நன்றி)
நன்றி ஜீவி சார்! ஆனால் அந்தக் கலை வண்ணம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது! :(
Deleteபடங்கள் எல்லாமே அழகோ அழகு அம்மா...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteபொறாமையா இருக்கு. என்னமா ஊர் சுத்தறா!!!
ReplyDeleteஒடிஷாவில் எல்லாருமே அநேகமா பண்புடன் நடந்து கொள்வார்கள்.
ஹாஹாஹா இ சார், மும்பைக்குப் போயிட்டு நேத்துத் தான் திரும்பினேன். :)
Deleteசூரியனார் கோவில்.... மத்தியப் பிரதேசத்தில் இப்படி ஒரு சூரியனார் கோவில் பிர்லா குடும்பத்தினர் கட்டியது பார்த்திருக்கிறேன். இங்கே சென்றதில்லை.
ReplyDeleteஉங்கள் பதிவு மூலம் பார்த்து ரசித்தேன். நன்றி.
பிர்லா குடும்பத்தினர் கட்டினது எனில்? ம்ம்ம்ம்ம், அந்தக்காலத்து ராஜபுத்திர ராஜாவால் ஜந்தர் மந்தர் சூரியனின் சுழற்சியை ஆதாரமாக வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இது புதுசா இருக்கு.
Deleteபடங்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete