எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 16, 2016

சின்ன ஆம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து! :) அண்ணன், தம்பிமாருக்குச் செய்தி!கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே,

சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு "

சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க. சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு. என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு! அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான். அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்; இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும் என்பதற்கு வாழ்த்துவதே,

"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது. அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.

தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

இது ஒரு மீள் பதிவு!

கனுப்பிடி க்கான பட முடிவு

நன்றி பார்வதி ராமச்சந்திரன்.

சரி, சரி, இப்போ நம்ம வேலையைப் பார்ப்போமா! 

அண்ணன்மாரே, தம்பிமாரே!

உங்க எல்லோருக்காகவும் வேண்டிண்டு கனுப்பிடி வைச்சாச்சு. இனிமே ஒவ்வொருத்தரா வந்து "சீ"று"(ரு)ங்கப்பா! நீங்க அன்போட தங்கம் கொடுத்தாலும் வாங்கிப்பேன். வைரம் தான் கொடுப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்க கிட்டே, பரவாயில்லைனு அதையும் வாங்கிப்பேன். ஒரு சிலர் நவரத்தினங்களையும் வைச்சுட்டுக் காத்திருக்கிறதாச் செய்தி கசியுது. ஹிஹிஹி, நன்னீஸ்! அதுவும் வாங்கிக்கொள்ளப்படும். புடைவை எல்லாம் நல்லி பட்டுன்னாலும் ஓகே! எல்லா ஊர்ப் பட்டும் ஆரெம்கேவியிலேதான்னு ஆரெம்கேவின்னாலும் ஓகே தான். சென்னை சில்க்ஸும் பரவாயில்லை. போத்தீஸும் ஓகே! எல்லாக் கடைகளிலேயும் வகைக்கு ஒண்ணாக் கொடுக்கிறவங்க அப்படியே கொடுத்துடுங்க. எங்கே, எல்லோரும் வரிசையா வாங்கப்பா! கூட்டம் நெரியுது!  இவ்வளவு கூட்டம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா கட்டுப்படுத்தக் காவல் துறையைக் கூப்பிட்டிருக்கலாம். சரி, போனாப் போகட்டும். நீங்களே வரிசையா வாங்க.

தலைப்பு ரொம்பப் பெரிசா இருக்கோ? ம்ம்ம்ம்? இரு செய்திகளையும் சேர்த்துக்கணுமே! அதான்!

14 comments:

 1. சீர் ப்ளஸ்ல போட்டாச்சு, எடுத்துக்கோங்க! :-))

  ReplyDelete
  Replies
  1. அப்பாடி, ஒரு வழியாப் பதிவுகள் திறந்தன ஜி+ திறந்தது. சீரும் எடுத்துண்டேன். :)

   Delete
 2. ஓ இப்படியா? எங்கல் வீட்டில் வேறு ஏதோ சொல்லுவார்கள்...ஆனால் இப்படி அல்ல...அதுவும் இப்போது இல்லை..சும்மாக் கீறுவதோடு சரி...ஆஹா! சீர்??!!! நானே உங்கள் சைடில்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது என்னனு சொல்லி இருக்கலாமே, தெரிஞ்சுக்கலாம் இல்ல! சீர் நீங்க கொடுக்காட்டி என்ன? உங்கள் சார்பாக துளசிதரன் கொடுத்துடுவார். :)

   Delete
 3. //சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
  பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
  சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
  ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு "//

  இதையெல்லாம் நானும் ஆராய்ந்தது உண்டு. கன்னிகாதானம் செய்துகொடுத்தபோது சொல்வது ... பொருத்தம்தான் என்பதைத் தெரிந்துகொண்டேன். தாங்களும் இங்கு அதனை நன்கு விளக்கியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இது ஏற்கெனவே எழுதி இருக்கிறதோட மீள் பதிவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. //சரி, சரி, இப்போ நம்ம வேலையைப் பார்ப்போமா! அண்ணன்மாரே, தம்பிமாரே!//

  இந்த வரிகளுக்குப்பிறகு எழுதியுள்ள எதுவுமே என்னால் படிக்க முடியாமல் உள்ளன. கம்ப்யூட்டரில் ஏதோ கோளாறு ஆகிவிட்டது. எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொண்டு விட்டேன். :)

  தங்களுக்கு என் கணு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதானே பார்த்தேன்! :)

   Delete
 5. கனு நாள் வாழ்த்துகள். இந்த விளக்கம் ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். ஓ... மீள்பதிவா!

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சீரல்லை? ரொம்ப மோசம்! :)

   Delete
 6. தாயோடும் தந்தையோடும் , சீரோடும் செலுத்தியொடும் ,

  சின்ன ஆம்படையனை தேடி வாக்கப்பட்டு ,

  பெரிய ஆம்படையானுக்கு புள்ளை பெத்து ,

  பெண் , பிள்ளை , பெத்து பெருக்கி ,

  கட்டின மாங்கல்யம் , காமாக்ஷி மாங்கல்யமா

  குடும்பம் செழிக்க வாழணும்

  ithu full version !

  ReplyDelete
  Replies
  1. ஏற்கெனவே போட்ட ஞாபகம். அதான் திரும்பப் போடலை! :)

   Delete
 7. இந்த பாட்டு எல்லாம் வீட்டுல பாடுவாங்களான்னு பார்த்தது இல்லே! ஆனா கனுப்பொடி வைப்பாங்க! பார்த்து இருக்கிறேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அந்தக் காலத்து மனுஷங்க இருந்தால் சொல்வாங்க சுரேஷ், நிறையப் பேருக்கு இப்போ இதெல்லாம் தெரியறதே இல்லை.

   Delete