எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Thursday, February 07, 2008
பிச்சை எடுக்கும் பெருமாள்! :((((((((
எங்க ஊரில் மாரியம்மன் கோவில் தவிர, ஒரு சிவன் கோவிலும், ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது. இது தவிர, ஐயனார் கோவில், பிடாரி கோவில் போன்ற காவல் தெய்வங்களும், பொய்யாப் பிள்ளையார் துணையே இல்லாமல் தனியாகவும் இருக்காங்க. இந்த ஐயனார் கோவில் பக்கம் உள்ள வயலில் உழுவதற்குத் தோண்டியபோது சில சிலைகளும், அஸ்திவாரங்கள் போன்ற அமைப்பும் கிடைத்ததாய்ச் சொல்கின்றனர். அந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்ததாயும் திருமூலர் எழுப்பிய முதல் மாடக் கோயில் அது எனவும், அதை லிங்கத்தடி எனவும் சொல்கின்றனர். அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் தனியாய் வரும். இப்போப் பெருமாள் கோயில் பத்தி. பரம்பரை தர்மகர்த்தாக்கள் ஆன எங்க குடும்பத்தார் அதை அரசுக்கு மாற்றி 70களின் கடைசியில் கொடுத்தாச்சு. கோவிலுக்கு என்று எங்கள் குடும்ப நிலத்தில் இருந்து அரைவேலியும் எழுதி வைத்திருக்காங்க. அதைத் தவிரவும், கொஞ்சம் நிலத்தில் சில மரங்கள், ஒரு கருகமரத் தோப்பு போன்றவையும் உண்டு. இதில் மரங்கள் இருந்த நிலத்தில் மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன. விற்கப் பட்டிருக்கிறது. கோவில் நிலத்தில் விவசாயமும் நடைபெற்று வருகிறது. கருகத் தோப்பும் இருக்கிறது. ஆனால் பெருமாள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் யாராவது ஊருக்குப் போனால் தான் அவருக்குக் குளியல், துணி மாற்றம், சாப்பாடு எல்லாமே. வெளிச்சமே அப்போது தான் பார்க்கிறார். நான் திருமணம் ஆகிவந்து இந்தக் கோயிலில் நல்ல முறையில் எல்லாக் கால பூஜையும் நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு விளக்குக் கூடப் போடுவது இல்லை. கோவில் தேர்முட்டி, மற்றும் கோவிலின் வெளிச்சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதால் அந்த இடம் எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டு இப்போது பட்டாவே போட்டுக் கொடுத்தாச்சு. கோவிலுக்கு நேர் எதிரே சன்னதிக்கு நேரே ஒரு பெரிய மரம் வெட்டப் பட்டுப் பல நாட்களாய்க் கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தச் சொல்லி தற்போதைய டிரஸ்டி கிட்டே சொல்லியும் அவர் இதோ, போய்ச் சொல்லறேன், என்று டாடா இண்டிகாம் ஆட்கள் மாதிரியே சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போப் போனவாரம் போனபோது கூட அப்படியே இருக்கிறது. மாடுகள் கட்டப் பட்டு, ஆடுகள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றன கோயிலுக்குப் போகும் வழியில். நிலத்தில் விளைந்து வந்த நெல் கோவிலுக்கு அளக்கப் படவே இல்லை. நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம். அதுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகரோ, குருக்களோ, பட்டரோ வருவாங்க. வேறு ஊரில் இருந்து வந்து இருந்து செய்வதென்றால் நிரந்தரமாய் ஏதேனும் ஒரு வருமானம் வேண்டாமா?
தன்னிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டுப் பெருமாள் வேண்டுமானால் பட்டினியாய் இருப்பார். அவருக்குப் பரவாயில்லை. ஆனால் வந்து பூஜை செய்யறவங்களுக்குக் குடும்பம், குழந்தைன்னு இருக்குமே? அதுக்கு ஏதாவது கொடுக்கணுமே? கோவில் டிரஸ்டியிடம் கேட்டால் குத்தகைக்காரர் அளக்கவில்லை என்கிறார். குத்தகைக்காரர் கிட்டே கேட்டால் விளையவே இல்லை, சிவன் கோவிலுக்கு என்ன கொடுத்தாங்க? அவங்க கிட்டே கேட்கிறதில்லையே, என் கிட்டே மட்டும் ஏன் கேட்கணும்? என்று சொல்றாங்க. இந்த அழகில் பெருமாளின் இருப்பிடமே இடிந்து விழுந்து விடுமோனு பயமா வேறே இருக்கு. கர்ப்பக் கிரகத்தில் மூலவருக்குக் கீழே வரை வேர் பிடித்து ஒரு அரசமரம் அபாரமாய் வளர்ந்திருக்கு. அங்கங்கே விரிசல்களில் வெளவால்கள் அடைந்துள்ளன. நாங்களும் இந்தக் கோயிலுக்குப் பராமரிப்புச் செய்து கும்பாபிஷேகம் நடத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறோம். நேற்று வந்த தகவல் படி ஊரில் யாருமே பொறுப்பு ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. கோவில் நிலத்தை விற்றாவது அதை வைப்பு நிதியில் போட்டு அதில் இருந்து வரும் வட்டியில் கோவிலை நிர்வாகம் செய்யலாமே எனத் தோன்றுகிறது. ஆனால் ஊர் இரண்டு பட்டுக் கிடக்கிறபடியால் எதையும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை, பெருமாளே தனக்கு ஒரு வழியைத் தேடிக்கணும்.
R.E.A.C.H. Foundation மூலம் ஏதானும் வழி பிறக்கும் என்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்றைய பதிவுகள் இரண்டுமே கொஞ்சம் சீரியஸ் பதிவாகி விட்டது. இவங்க மூலமாத் தான் ஏதேனும் செய்ய முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இவங்க விலாசம் reach.foundation.india@gmail.com. இதிலே நம்ம சக பதிவாளர் மரபூர் ஜெ.சந்திரசேகரன் ஒரு உறுப்பினர். அவரை ஞாயிறு அன்று போய்ப் பார்த்தோம். உதவிகள் செய்வதாய்ச் சொன்னாலும் எப்படி இருந்தாலும் ஊர்க்காரங்க சம்மதம் தான் முக்கியம்னு அவரும் சொல்றார். (வழக்கம் போல் சந்திரசேகரும், நான் நினைச்சாப்பலே இல்லை, ஹிஹிஹி) பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே தான் மனசு வைக்கணும் போல் இருக்கு. மேலே இருப்பது அவர்தான் குடும்ப சமேதராய், பொதுவாய் மூலஸ்தானத்தில் இருக்கும் திருமேனிகளைப் படம் எடுத்துப் போடுவது இல்லை. இவருக்கு முறையான பூஜைகள் நடந்து 25 வருஷமாவது ஆகி இருக்கும். கோவிலின் வெளிப்புறம் படம் கிடைக்கவில்லை. கிடைத்ததும் போடுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
அலங்கார பிரியன் இப்படி இருக்காறேன்னு ரொம்ப வருத்தமாயிடுச்சு....
ReplyDeleteஅகில உலக தலைவியான உங்களால உங்க ஊர் பிரச்சனையை தீர்க்க முடியாதா என்ன.. அங்கே ஒரு 2-3மாசம் இருந்து, ஊர்ல எல்லாரையும் கூட்டி வெச்சு பஞ்சாயத்து பண்ணுங்க.. :)
வேற ஒண்ணும் சொல்ல தோணல்ல...:(
வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டை என்பது நம் மக்களுக்கு கை வந்த கலை ஆகி விட்டது.
ReplyDeleteஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு கோடி கோடியாய் கொட்டவும் வேண்டாம், இப்படி பிச்சை எடுக்கும் பெருமாள்!னு உங்களை பதிவுக்கு தலைப்பு வைக்கவும் விட்ருக்க வேண்டாம்.
அடுத்து என்ன, பிடுங்கி தின்ற அனுமாரா?
பேசாம நம்ம கண்ணபிரான் அண்ணாவை அமெரிக்கவில் இருந்து வரவழைத்து இங்கு இந்து அற நிலையதுறை அமைச்சராக போட்டா எல்லா ப்ரச்சனைகளும் முடிவு பெறும்! என்ன சொல்றீங்க..? :))
கீதா, ஏ.எம் ராஜகோபாலன் சார் சிதிலமடைந்த கோவில்களைப் புதிப்பிக்கும்படி குமுதம் ஜோதிடத்தில் எழுதுவதைப் படித்திருக்கிறேன். இப்போது நீங்கள் உங்கள் ஊர்க் கோவிலைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteம்ம்.
இந்த அழகில அவரவர் இஷ்டத்துக்கு எத்தனை கோவில்கள் வந்து விட்டன!!
ம்ம்ம்.. கொஞ்சம் வருத்தப்பட வச்சுட்டேங்களே! ஊர் ஒத்துழைப்புதான் முக்கியம் கிறது ரொம்பவே கரெக்ட். பூஜை முறையா நடக்காததால ஏற்படும் விளைவுகளுக்கு அப்புறம்தான் முழிச்சுப்பாங்க போலிருக்கு.
ReplyDelete:-(
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி-ன்னு ஆண்டாள் சொன்னது இப்படிப் பெருமாளுக்கும் ஆகிப் போச்சுதா? :-(
ReplyDeleteREACH-இல் உழவாரத் தொண்டு, மற்ற பணிகள் எல்லாம் செய்ய முடியுமே தவிர, நிலம் விற்க/வாங்க என்பதெல்லாம் சற்றுக் கடினம்!
ஊர் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. பொதுக் கருத்தை ஊரில் திரட்டினால் தான் உண்டு!
இதுக்கு ஒரே வழி பஞ்சாயத்து தான்! இதை நீங்க தனி ஒருவரா பண்ணாம, ஊரில் செல்வாக்குள்ள தலைகளைக் கைக்குள்ள போட வேணும் கீதாம்மா!
அது சரி, கோயிலுக்கு எத்தனை பேர் வராங்க? யாருமே வரலைன்னா பூட்டி வைக்கப் போறோம்-னு சொல்லுங்க! கோயிலுக்கு கேரளாவில் இருந்து பிரஸ்னம் பார்க்க ஒரு ஆளை செட்டப் செய்யுங்க! :-)
சில சமயம் கலகத்தை நாமளே உருவாக்கினாத் தான் இதுக்கெல்லாம் வழி பொறக்கும் போல!
//பேசாம நம்ம கண்ணபிரான் அண்ணாவை அமெரிக்கவில் இருந்து வரவழைத்து இங்கு இந்து அற நிலையதுறை அமைச்சராக போட்டா எல்லா ப்ரச்சனைகளும் முடிவு பெறும்! என்ன சொல்றீங்க..?//
ReplyDeleteதோடா!
நன்றிங்க முதலமைச்சரே! இலாகாவைக் கையில் கொடுங்க! அரசியல் தலையீடு வந்தா கண்டுக்காதீங்க! அடிச்சி ஆடிறலாம்! என்ன சொல்றீங்க முதல்வா? :-)
//பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே தான் மனசு வைக்கணும் போல் இருக்கு//
ReplyDeleteஇல்லை கீதாம்மா!
யாரு கோயில் கட்டினாங்களோ, அவங்க தான் மனசு வைக்கணும்! இன்றைய சூழலில் ஒன்னு ஹைப் உருவாக்கணும்! இல்லை எம்.எல்.ஏ, எம்.பி-ன்னு கொஞ்சம் பெரிய தலைகளைக் கூட்டியாந்து பயமுறுத்தனும்! அரசியல் செஞ்சாத் தான் குத்தகைக்காரங்க முதற்கொண்டு பயப்படறாங்க என்பது எங்க வாழைப்பந்தல் கிராமத்தில் எனக்கு சொந்த அனுபவம்! பணம் கொடுப்பதோ, பொருள் கொடுப்பதோ எல்லாம் நிரந்தரத் தீர்வாகாது!
இது பற்றி உங்களிடம் விரிவா சாட்டுறேன்!
இன்னொரு முக்கியமான விஷயம்!
கிராமக் கோயில்கள் எல்லாம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடம் பிடிக்கணும்! அப்ப தான் நிலைச்சி நிக்கும்! இல்லீன்னா வெறும் சடங்காத் தான் போகும்! கொஞ்ச நாளில் காணாமப் போகும்!
கோயிலில் அறப் பணிகள், மருத்துவ முகாம், அன்னதானம்-னு ஊரைத் தொடர்புபடுத்த முடியுமா பாருங்கள்! அடுத்த மருத்துவ முகாம் ஏதாச்சும் நடந்தா கோயிலில் நடத்துங்கள்!
ஊர் மக்கள் பயன் காணாத வரை, நாம் என்ன தான் பக்தியில் கரைந்து வருத்தப்பட்டாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான்! இது எங்கள் கிராமக் கோயில் நேரடியாக எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்! இப்போது எங்கூரு கோயிலை நான் கண்டுக்கிறது கூட இல்லை! ஊர்ஸ் தான் ஞாபகம் வைச்சிருந்து பிரசாதம் அனுப்புறாங்க! :-)
@KRS, என்னது முதல்வரா? ஹிஹி, அப்புறம் மனிஷா மாமி எங்கே?னு வாய் தவறி நான் கேட்பேன். எங்க வீட்ல வீக் எண்டுல பூரிகட்டை சிலம்பாட்டம் ஆடிடும்(பழைய பாக்கியே இன்னும் முடியலையாம்).எதுக்குண்ணா வம்பு? :))
ReplyDelete@geetha paatti,
ReplyDeleteபாத்தீங்களா? கண்ணபிரான் எப்படி ஐடியாக்களை அள்ளி தெளிக்கறார் பாருங்க.
சும்மா பெருமாள் கோவில் போய் பிரசாதம் வங்கிண்டு வந்தா மட்டும் போதாது. அவர் சொன்னதில் எதாவது ஒன்னை அமுல் படுத்த பாருங்க.
"சும்மா வாக்கிங்க் போனாலே தலைவியின் திக் விஜயம்!" பதிவு போட்டு ஹைப் கிரியேட் பண்றதுல நீங்க தான் டாக்டர் பட்டம் வாங்கினவங்க ஆச்சே! நான் சொல்லியா தறனும்? :p
இருந்தாலும் உங்களுக்கு வயசானதுனால சில ஐடியாஸ் இதோ நான் தரேன்: :))
1) சாம்பு மாமாவுக்கு மலையாள தந்திரி வேஷம் போட்டு அங்க அனுப்பி ப்ரச்ன சோதிடம் பாக்க வைங்க.
2) அங்க இருக்கற பெருந்தலை வீட்டுக்கு போன் பண்ணி பிரதீபா பாட்டீல் குல தெய்வம் இந்த பெருமாள் தான், அதனால கும்மிட வராங்க!னு உங்கள் பயமுறுத்தும் குரலில் பேசுங்க.
3) இராமர் இலங்கைக்கு போறதுக்கு முன்னாடி இந்த ஊர்ல தான் இளனி குடிச்சார்!னு குங்குமத்துக்கு எழுதி போடுங்க, அவங்க தான் என்ன மொக்கை போட்டாலும் பப்ளிஷ் பண்ணிடுவாங்க.
//வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டை என்பது நம் மக்களுக்கு கை வந்த கலை ஆகி விட்டது.
ReplyDeleteஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு கோடி கோடியாய் கொட்டவும் வேண்டாம், இப்படி பிச்சை எடுக்கும் பெருமாள்!னு உங்களை பதிவுக்கு தலைப்பு வைக்கவும் விட்ருக்க வேண்டாம்//
வழிமொழிகிறேன்...
ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாய் மக்களின் வாழ்வியலில் ஒன்றியிருந்த
நமக்கு அறியாத பல கோவில்களுக்கும் சேர்த்து ஒரு பொதுத் திட்டம் கொண்டு வரலாம்ன்னு தோணுது...
@ அம்பி
ReplyDelete4) ஒரு ஜோசியரை பிடிச்சு இந்த கோவில்லசாமி கும்பிட்டா உடனே வேலை கிடைக்கும், கல்யாணம் ஆகும் நெட் கனெக்ட் ஆகும்னு சொல்லச்சொல்லுங்க.
//ambi said...
ReplyDeleteஎங்க வீட்ல வீக் எண்டுல பூரிகட்டை சிலம்பாட்டம் ஆடிடும்//
ச்சே..அண்ணீ பொழைக்கத் தெரியாதவங்களா இருக்காங்களே! வெறும் வீக் எண்ட மட்டும் தான் பூரிக்கட்டையா! ஒரு வாரத்துக்கு மொத்தம் ஏழு நாட்கள் இருக்கு-ன்னு யாராச்சும் அண்ணியாருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பு! :-)
//இராமர் இலங்கைக்கு போறதுக்கு முன்னாடி இந்த ஊர்ல தான் இளனி குடிச்சார்!னு குங்குமத்துக்கு எழுதி போடுங்க//
ReplyDeleteஅதுவும் இல்லியா...
இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் முன் இந்த மரத்தின் கீழத் தான் இளைப்பாறித் தம் அடிச்சாரு-ன்னு சொல்லுங்க! ஆத்திகர் நாத்திகர் ரெண்டு பேரையும் இழுத்துப் போட்டுறலாம்! :-))
அடப் பாவமே, அம்பி! எப்படிய்யா இப்படி எல்லாம் ரிசார்ட்டுல ரூம் போட்டு யோசிக்கற? :-)
jokes apart...
கோயிலால் ஊருக்கு என்ன நன்மை-ன்னு வெளிப்படையாத் தெரிஞ்சால் ஒழிய, இது போன்ற சிறு கோயில்கள் எல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தான் போகும்!
கோயில்கள் சமூகக் கூடங்களாக மாறினால் தான் நிரந்தரத் தீர்வு! அப்பிடி மாறினாத் தானா மெயின்டையின் ஆகிக்கும்!
நம்ம ஊர்க் கோயிலால் நமக்குத் தான் பயன் என்று மக்கள் உணர்வது போல் ஆலய நடவடிக்கைகள் இருக்கனும்! சும்மா அர்ச்சனை, தேங்கா ஒடைக்க, சாமி கும்புட-ன்னு மட்டுமேன்னு இருக்கக் கூடாது!
புதுசா கோயில் கட்டுறவங்க, இருக்கும் கோயிலைச் சீர்தூக்கி நிறுத்தறவுங்க - இதை எல்லாம் மனதில் வைத்துச் செயல்பட்டா பெருமாள்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட மாட்டார்கள்!
ச்சே..அண்ணீ பொழைக்கத் தெரியாதவங்களா இருக்காங்களே! வெறும் வீக் எண்ட மட்டும் தான் பூரிக்கட்டையா! ஒரு வாரத்துக்கு மொத்தம் ஏழு நாட்கள் இருக்கு-ன்னு யாராச்சும் அண்ணியாருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பு!
ReplyDeleteபாக்கி நாட்களுக்கெல்லாம் சவுக்கு கட்டை கொண்டு வந்துட்டாங்கள்ளே
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு கோடி கோடியாய் கொட்டவும் வேண்டாம், இப்படி பிச்சை எடுக்கும் பெருமாள்!னு உங்களை பதிவுக்கு தலைப்பு வைக்கவும் விட்ருக்க வேண்டாம்
முன்னூறு கிலோ தங்கத்திலே புது கோவில் கட்டும்போது இது போல கோவில்களுக்கும் ஏதாவது வழி செய்யவேண்டும்.
\\\மதுரையம்பதி said...
ReplyDeleteஅலங்கார பிரியன் இப்படி இருக்காறேன்னு ரொம்ப வருத்தமாயிடுச்சு....
அகில உலக தலைவியான உங்களால உங்க ஊர் பிரச்சனையை தீர்க்க முடியாதா என்ன.. அங்கே ஒரு 2-3மாசம் இருந்து, ஊர்ல எல்லாரையும் கூட்டி வெச்சு பஞ்சாயத்து பண்ணுங்க.. :)
வேற ஒண்ணும் சொல்ல தோணல்ல...:(
மதுரையம்பதி said...
அலங்கார பிரியன் இப்படி இருக்காறேன்னு ரொம்ப வருத்தமாயிடுச்சு....
அகில உலக தலைவியான உங்களால உங்க ஊர் பிரச்சனையை தீர்க்க முடியாதா என்ன.. அங்கே ஒரு 2-3மாசம் இருந்து, ஊர்ல எல்லாரையும் கூட்டி வெச்சு பஞ்சாயத்து பண்ணுங்க.. :)
வேற ஒண்ணும் சொல்ல தோணல்ல...:(\\
வழிமொழிகிறேன்...
en pathivukku vandhamaiku nandri akka
ReplyDeletenatpodu
nivisha
நம் ஊரில் உள்ள, நாம் ஈந்த உதவித்தொகை, நிலம் வழங்கிய பெருமாள் கோவில் பிரபலமாகவில்லையே என்ற விசனத்திற்குப் பின்னால், இதற்கு " நாம் " அல்லது " நான் " உதவி செய்தேன், கொடுத்தேன் என்று ஒரு மன நிலை இருக்கிறது அல்லவா ? இந்த மன நிலைதான் இன்றைய துயருக்கு காரணம்.
ReplyDeleteஎதையும் யாரும் யாருக்கும் கொடுப்பதில்லை.
நீங்கள் எதையோ கொடுத்ததாகச் சொன்னீர்களே, அதையும் ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவர் (அவர் உங்கள் மூதாதையராகவே இருக்கட்டும்) உங்களுக்குத் தந்தது தானே..
எதை தாங்களோ தங்கள் குடும்பத்தாரோ கொடுத்தார் என நினைக்கிறீகளோ அந்த நினைப்பிலிருந்து
விடுபடவும். தங்களிடம் வந்து யாராவது கொடு, எனக்குக் கொடு எனக் கேட்டார்களா என்ன? நீங்களாக விரும்பிக்கொடுத்தது தானே..எதைக் கொடுத்தீர்களோ அதிலேயே மனம் நிலைத்து நிற்கும்போது, நீங்கள் கொடுத்து விட்டேன் என்று சொல்வது சரியா?
நீங்கள் உங்கள் கருமத்தைச் செய்தீர்கள். பலன் கருதியா செய்தீர்கள் ?
உலகில் உள்ள யாவையும் அவன் படைப்பே, அவன் பிரதிபலிப்பே எனும்போது,
கொடுத்தவரும், பெற்றவரும், கொடுத்ததாகச் சொல்லப்படும் பொருளும் அவனே.
திருப்பதியில் உள்ளவர் மட்டுமல்ல, திவ்ய தேசம் எனச்சொல்லப்படும் 108 திவ்ய க்ஷேத்திரங்களில் அருள் பாலிக்கும் பெருமாள் ஒருவனே. நீங்கள் கொடுக்கும் யாவையும் அவனையே அடைகின்றது.
நடப்பது நடக்கட்டும். பெருமாளிடம் விட்டுவிடுங்கள்.எல்லாம் அவன் செயல். அவன் பார்த்துக் கொள்வான்.
சரணாகதியின் அடிப்படைத் தத்துவம் இதுவேயாம்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
//பிச்சை எடுக்கும் பெருமாள் ..//
ReplyDeleteபெருமாள் போட்ட பிச்சையை நாம் நமது என நினைத்துக் கொண்டு, அதில் என்றோ ஒரு நாள்
பத்து ரூபாய்க்கு ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், சூடம், திரு நூல், எண்ணை, அரை முழம் புஷ்பம்
வாங்கிக் கொண்டு போய், அங்கு அ நாதையாக பெருமாள் இருக்கிறாரே என்று அரை சொட்டுக் கண்ணீர் வடித்து என மனம் நொந்தது ஒரு பக்கம்.
தாம் இத்தனை தந்தோமே, இந்த பெருமாளுக்கு இதையெல்லாம் ஒரு சாமர்த்தியமாக வைத்துக்
கொள்ளக்கூடத் தெரியலையே.." என நினைப்பு மற்றோர் பக்கம்.
இருக்கட்டும்.
"தைப்பூசத் திருவிழா" என்ற தலைப்பிலே ஒரு பத்து நாட்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறீகளே !
அதில் வந்த வர் யாவருக்கும் உணவு அளிக்கப்படுவதாக எழுதியிருக்கிறீகளே...அந்த உணவைக்
கொடுத்ததும் நீங்கள் குறிப்பிடும் " பிச்சை எடுக்கும் பெருமாள் " தான். அங்கு அவருக்கு வள்ளலார் எனப்பெயர்.
காண்பதெல்லாம் பெருமாள் தான். ஐயமில்லை.
சிவ.சூ. நா.
சென்னை.
பி.கு:
தானம், தருமம் என்ன என அறனெறிச்சாரம் தரும் கருத்துக்களை அறிய
http://vazhvuneri.blogspot.com
வாருங்கள்.
// நம் ஊரில் உள்ள, நாம் ஈந்த உதவித்தொகை, நிலம் வழங்கிய பெருமாள் கோவில் பிரபலமாகவில்லையே என்ற விசனத்திற்குப் பின்னால், இதற்கு " நாம் " அல்லது " நான் " உதவி செய்தேன், கொடுத்தேன் என்று ஒரு மன நிலை இருக்கிறது அல்லவா ?//
ReplyDeleteதிரு சூரி அவர்கள் சொல்வது ஒரு மட்ட (லெவல்) சிந்தனையில் சரி. ஆனால் அது ப்ராக்டிகல் மட்டம் இல்லை.
ஆழ்ந்து பாக்கப்போனால் எல்லாமே அவனது மட்டும் இல்லை எல்லாமே அவன்தான். அப்பொழுது எல்லா பூஜை, ஹோமங்கள் அர்த்தமில்லாது ஆகிவிடும். கோவில் வேண்டாம் வழிபாடு வேண்டாம். இது எதோ ஒரு ஸ்டேஜில் மனசு முதிர்ந்து தானாக வர வேண்டியது.
நாம் என்றும் அவன் என்றும் ஒரு நினைப்பு இருக்கும்வரை இது சரிப்படாது. அப்பொழுது நாம் நாம்தான். அவன் அவன்தான். நாம் அவனுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யத்தான் வேண்டும். செய்யாவிட்டால் சில விளைவுகள் ஏற்படத்தான் படும்.
நடந்ததை சொல்வதற்காக நாங்கள் கொடுத்தோம் என்று எழுதியிருக்கிறார். அதில் "நான்', "எனது" என்ற த்வனி இருப்பதாக தோன்றவில்லை. வ்யவகார சத்தியங்களை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். "கோவில் சீர் கெட்டுப் போச்சா? சரி. கோவில் காணாமலே போச்சா? சரி" இப்படிப்பட்ட மனநிலை வ்யவகாரத்துக்கு ஒத்து வராது. இந்த நிலையை பார்த்து வருந்தும் போதே பல கர்மாக்கள் கரைகின்றன.
கீதா அக்கா தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
வ்யவஹார ஸத்யங்கள் இருப்பதாக திவா குறிப்பிட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.கோவில்கள் எதற்கு,
ReplyDeleteஹோமங்கள் எதற்கு, எல்லாமே அவனே என்ற மன நிலைக்கு எல்லோரும் இருக்கவேண்டும் என எண்ணுவதும்
ப்ராக்டிகல் இல்லை. அதுவும் உண்மைதான்.
எந்தெந்த மட்டத்தில் அல்லது நிலையில் ( may be we call this "wave length" rather than "level" of thoughts )
யார் இருக்கிறார் என்பது அவரவர் கர்ம வினைகளைப் பொறுத்தது. இந்த நிலையில்தான் நான் இருக்கிறேன் என்று சொல்வது யாருக்கும் சாத்யம் இல்லை. இதில் சர்ச்சை இல்லை.
ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பது தான் சொல்லவந்த விஷயம். ஒரு குறிப்பிட்ட ஸ்தலம் அல்லது திருவுரு மேல் ஒருவருக்கு உள்ள அதீத ஈடுபாடு அவரை மேன்மேலும் பந்தக்களுக்கு உட்படுத்துகிறதே ஒழிய அதிலிருந்து விடுபட உதவி செய்வதில்லை. நீங்கள் உங்கள் பணியை செய்துவிட்டீர்கள். அதில் த்ருப்தி அடைந்து அங்கிருந்து சென்றுவிடுங்கள்.
இல்லை..விட்டேனா பார் என்று
திவா அவர்களின் // (கீதா அக்கா தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.)//அட்வைஸ் படியும் நடக்கலாம். தப்பில்லை. இரண்டு சிவில் லாயர்கள் உதவியுடன் முனிசிப் கோர்ட் துவங்கி டிஸ்டிரிக்ட் கோர்ட் மூலம் ஹை கோர்ட்டுக்கு வரை சென்று தாங்கள் நினைத்ததை சாதிக்க சட்ட ரீதியாக முடியும். பேப்பரில் ஒரு டிகிரி வாங்கி வைத்துக்கொள்ளலாம். என்ன ஒரு லட்சம் செலவாகும். கண்டிப்பாக, 2108 பிப்ரவரி 10ம் தேதி அன்று மஹா கும்பாபிஷேகம் செய்யலாம்.
பெருமாள் உங்கள் வழியாகத்தான் புனருத்தாரணம் நடக்கவேண்டும் என நினைத்திருந்தால் அதுவும் சாத்தியம்.
எல்லாம் ஈஸ்வர ஸங்கல்பம்.
நீங்கள் சாஃப்ட் வேரா? ஹார்ட் வேரா ? நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
அது சரி, திவா சார், ஏன் அழகான அர்த்தம் வாய்ந்த, அருமையான தங்கள் வலைப்பதிவுதனை
http://gurukulapatam.blogspot.com/
தொடர்ந்து எழுதக்கூடாது? ஜூன் 2007 ல் ஒரு பாடசாலை அமைத்து அதில் வேத அத்யயனம் சொல்லிக்கொடுப்பது
பற்றிய தாங்கள் இட்ட வலைப்பதிவு அங்கேயே நிற்கிறதே ?
போட்ட பிள்ளையார் சுழி மேன்மேலும் வளர என் ஆசிகள்.
அதுவும் ஈஸ்வர ஸங்கல்பம்.
சுப்புரத்தினம்.
தஞ்சை.
// ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பது தான் சொல்லவந்த விஷயம். //
ReplyDeleteபுரிகிறது. ஆனால் இது எப்போது வரவேண்டும்?
முதலில் சாதாரணமாக இழுக்கும் ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டுவிட்டு "கெட்ட" விஷயங்களை துறந்து பின் "நல்ல" விஷயங்கள் மீது வைக்கும் பற்றையும் துறக்க வேண்டும். "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" ஸ்டேஜ் வரும். அதற்கு இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும். அது அந்த அந்த நபருக்கும் அவர் குருவுக்கும் மட்டுமே தெரியும் அல்லவா? அது வரை உயர்ந்த விஷயங்களில் பற்று இருக்கலாமே?
//அது சரி, திவா சார், ஏன் அழகான அர்த்தம் வாய்ந்த, அருமையான தங்கள் வலைப்பதிவுதனை
http://gurukulapatam.blogspot.com/
தொடர்ந்து எழுதக்கூடாது? ஜூன் 2007 ல் ஒரு பாடசாலை அமைத்து அதில் வேத அத்யயனம் சொல்லிக்கொடுப்பது
பற்றிய தாங்கள் இட்ட வலைப்பதிவு அங்கேயே நிற்கிறதே ?//
அது நண்பர் ஒருவர் ஆரம்பித்தது. எதிர்பார்த்தப டி அதில் மற்றவர்கள் பங்கீடு இருக்கவில்லை. ஆகவே அது அங்கேயே நின்று போனது. ஆனால் இந்த எண்ணம் வேறு ஒரு இடத்தில் வளர்ந்து வருகிறது. செயலாக்கமும்தான்.
இங்கே பாருங்கள்; http://vedaminterface.blogspot.com/
// போட்ட பிள்ளையார் சுழி மேன்மேலும் வளர என் ஆசிகள்.
அதுவும் ஈஸ்வர ஸங்கல்பம்.//
ஆசிகளுக்கு நன்றி.
சுழி போட்ட பிள்ளையார் சதுர்த்தி அன்றே எங்கள் பாடசாலை துவங்கிவிட்டது.
இபோதைக்கு நான் பகுதி நேர பாடங்கள் எடுக்கிறேன். 15 பேர் பயன்பெறுகிறார்கள். மேலும் அதைப்பற்றி இங்கே பேசுவது சரியில்லை. அக்கா உதைக்க வருமுன் ஜகா வாங்கிக்கிறேன். :-)
பிக்ஷ்ஐ எடுப்பது கேவலமா என்ன? கிருஹஸ்தன் தவிர மற்றவர்களுக்கு அது தர்மமே!
ReplyDeleteபிச்சை எடுத்த பெருமாளை தெரியாதா என்ன? ரொம்ப சக்தி வாய்ந்தது, இரண்டு அடியில் அண்ட சராசரங்களை அளந்து விட்டது.
கேஆரெஸ் எழுதுங்க அவரைப்பத்தி.
@ சூரி.
ReplyDelete//கண்டிப்பாக, 2108 பிப்ரவரி 10ம் தேதி அன்று மஹா கும்பாபிஷேகம் செய்யலாம்.//
ரொம்பவே நெகடிவ்வாக சொல்கிறீர்கள். மனித முயற்சியும் இறை அருளும் சேர்ந்தால் சாதிக்க இயலாதது அல்லவே?
திவா, இறை அருள் கூடி வந்தால் பிட்சை எடுத்த பெருமாளின் அனுகிரஹமும் இருந்தால் நானே எழுதலாம் அவரைப் பத்தி, விவாதம் இத்தோடு முடியுது. இனி இந்தக் கோயில் பற்றிய பதிவுகள் ஆன்மீகப் பயணம் பக்கத்தில், சிதம்பர ரகசியம் முடிஞ்சதும் வரும், இது பத்தி இன்னும் எழுத நிறைய இருக்கு, இங்கே எழுதினால் சிஷ்யகேடிகள் தாங்க மாட்டாங்க, அதனால் முற்றுப் புள்ளி. :))))))))))))
ReplyDeleteதலைப்பு மிகவும் மனதிற்கு வேதனை கொடுப்பதாக உள்ளது
ReplyDeleteபல கோடி ரூபாய்கள் செலவழித்து புது கோவில்கள் கட்டப்படுவதை தவிர்த்து உண்மையிலேயே சிதிலமடைந்து வரும் இம்மாதிரி கோவில்களுக்கு செலவழிக்கலாம்
ஊருக்கு ஊர் இது போல் கோயில் சொத்தை ஆட்டைய போடுபவர்கள் பலர் இருக்கிறார்கள் போல, அவர்கள் மனசு உறுத்தவே உருத்தாது போல, கோயில் பாதையில் சிறு கடை போட்டு இருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக வீடே கட்டிவிட்டார், ஊர் மக்கள் ஒற்றுமை இல்லாததால். நம்ம மக்களுக்கு சிறு குடிசையாக இருந்தால் கண்ணை உறுத்தாது வீடு கட்டியவுடன் தான் ஞானோதயம் வந்து போய் அனைவரும் சேர்ந்து இரவோடு இரவாக இடித்து பின் கோர்ட் கேஸ் என்று நடந்துக்கிட்டு இருக்கு.
ReplyDeleteஅவர்களாக திருந்தாவிட்டால் ஒன்னும் நடக்காது!