

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2.
பெறற்கரிய பேறு பெற்றோம் என நினைத்துக் கொண்டாள். உண்மையும் அது தானே. பெற்றவள் எங்கோ குழந்தைக்காக ஏங்கி அழுது கொண்டிருக்க, யசோதை தானே பாக்கியம் பெற்றிருக்கின்றாள்? இது எதுவும் அறியாத அப்பாவியாய் யசோதை குழந்தையைக் கையில் எடுத்து ஆசையுடன் அணைத்துக் கொண்டாள். பாலூட்டித் தாலாட்டினாள். ஆயர்பாடி முழுதும் செய்தி சொல்லப் பட்டது. ஆயர்பாடியில் உள்ள ஆயர்கள் அனைவரும் ஆடிப்பாடிக் குதூகலித்தனர். தங்கள் இல்லங்களிலேயே குழந்தை பிறந்தாற்போல் மகிழ்வு அவர்களுக்கு. ஒருவர் மேல் ஒருவர் வண்ணப் பொடிகள் தூவிக் கொண்டனர். பாட்டுப் பாடித் தங்கள் மன மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4.
தங்கள் வீட்டில் இருந்த பால், தயிர் வைக்கும் உறியை உருட்டி விட்டும், பாலையும், தயிரையும், வெண்ணெயையும் இஷ்டத்துக்குக் குடித்தும், கொடுத்தும், கொட்டியும் மகிழ்ந்தனர் ஆய்ப்பாடி மக்கள் அனைவரும். சங்கங்கள் ஆர்ப்பரித்தன. வாத்தியங்கள் முழக்கமிட்டன. எக்காளங்கள் ஊதப்பட்டன. மக்கள் அனைவரும் ஊர்வலமாய் வந்து குழந்தைக்கு ஜெயகோஷம் இட்டதோடு, குழந்தையைப் பார்த்து ஆசிகள் வழங்கியும், பரிசுகள் வழங்கியும் சென்றார்கள். அனைவரையும் கவர்ந்தது குழந்தையின் உடல்நிறம் தான். இத்தனை அழகான ஒரு குழந்தையை இதுவரையிலும் அவர்கள் யாரும் கண்டதே இல்லை.ஆயிற்று.

வண்ண மாடங்கள் சூழ்திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே!
என்னும்படிக்கு முற்றமெல்லாம் வந்தவர்கள் கொண்டு வந்த சந்தனமும், மஞ்சளும், கஸ்தூரியும், அகிலும் மணத்தது. பின்னர் வெகுசிரமப் பட்டு ஆசாரியார் ஆன கர்காசாரியார் வர வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8.
தன்னுடைய முக்கியமான சீடர்களுடன் வந்திருந்த அவர், தேவகிக்கு ஏற்கெனவே கொடுத்திருந்த உறுதிமொழியை மறக்கவில்லை. குழந்தை பிறந்த நேரத்தைக் கணித்த சான்றோர்களும், மூத்தோர்களும் கூறியபடியும், அந்தக் குழந்தையின் பெயர் "கிருஷ்ணா" என்றே வைக்கப் பட்டது.

கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9.
யசோதை தொட்டிலில் இட்டாலோ குழந்தை உதைத்துக் கொண்டு அழுவானாம். கையில் எடுத்துக் கொண்டாலோ இடையை நெருக்கிவிடுவான். இறுக அணைத்து சமாதானம் செய்தாலோ வயிற்றில் உதைப்பானாம். இவை அனைத்தையும் செய்யும் இந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு நான் நாள் பூரா இவனோடு இருப்பதிலேயே உடல் நெகிழ்ந்து போய் மெலிந்தாளாம் யசோதை. இதற்கு உள்ளார்ந்த அர்த்தம் வேறே உண்டு என்று சொல்வார்கள். இது பற்றிக் குமரன் தன்னுடைய கூடல் பதிவிலே எழுதிய நினைவும் இருக்கு.
//பால், தயிர் வைக்கும் உறியை உருட்டி விட்டும், பாலையும், தயிரையும், வெண்ணெயையும் இஷ்டத்துக்குக் குடித்தும், கொடுத்தும், கொட்டியும் மகிழ்ந்தனர்//
ReplyDelete:-))))))))))))))
குமரன் எழுதியிருந்தார், ஆனா இப்ப கண்டு பிடிக்க முடியல. என்ன தவம் செய்தனை, யசோதா...!
ReplyDeleteநேற்றைக்கு குலசேகராழ்வாரின் ஆலை நீள் கரும்பன்னவன் தாலேலோ (708?) ப்ரபந்தப் பத்து முழுவதும் படித்தேன். அதில் நீங்கள் எழுதியிருப்பதற்கு ஆப்போசிட்டா, தேவகி, இப்படிப்பட்ட குழந்தையை நான் கொஞ்சி மகிழ்ந்திடும் வாய்ப்பு பெற்றிலையே, கண்ணனைப் பெற்றபோதும் என்று சொல்லி வருந்துவதாக 10 பாடல்கள். எதேச்சையாக இதனைச் சேவித்தேன். ஒரு இடுகைக்கு அந்தப் பாடல்களை உபயோகப்படுத்துங்கள்.
ReplyDeleteநெ.த. கிருஷ்ணாவதாரம் 2008 இல் ஆரம்பிச்சு 2017 வரை தொடர்ந்து ஏழு பாகங்களும் எழுதி முடிச்சாச்சு! இனிமேலே அடுத்த கிருஷ்ணன் பிறப்புக்கோ அல்லது வேறே எதுக்கானுமோ எழுதலாம்! :) இதுக்கு முந்திய பதிவைப் பார்த்தால் தேவகியின் வருத்தம் பதிவாகி இருக்கும். :)
Deleteஅதிலே அந்தப் பாசுரங்கள் ஒன்றிரண்டு வரும். :))))
Delete