எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 21, 2018

ஹையா, நானும் ரொம்பவே பிசியே! :)

எல்லோரும் பிசி,பிசினு சொல்லும்போது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். ஆனால் இன்னிக்கு உண்மையாவே நான் ரொம்பவே பிசி! :))) ஹிஹிஹி, நானும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டேனா! நாளைக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமை. பெருமாள் வரார் நம்ம வீட்டுக்கு! ஆகவே இன்னிக்கு எல்லா உம்மாச்சிங்களும் குளிச்சாங்க! அதுக்கப்புறமா அவங்களுக்கு உடைகள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்துப் பூக்களைப் போட்டுவிட்டு இதுக்கு நடுவில் சமைச்சுச் சாப்பிடும்போதே ஒரு மணி ஆகி விட்டது. சாப்பிட்டுவிட்டுப் பூத்தொடுக்க உட்கார்ந்துவிட்டேன். அது முடிய 3-45 ஆகிவிட்டது. அதன் பின்னர் பதினைந்து நிமிஷம் படுத்துவிட்டு எழுந்து வந்து பாத்திரம் கழுவித் தேநீர் தயாரித்து நாளைக்கு ஊறுகாய்க்கு ஏற்பாடு செய்துட்டுக் கணினிக்கு வந்திருக்கேன். இப்போவும் சீக்கிரமாப்போயிடுவேன்.

இப்போ நான் சொல்ல வந்ததே இன்னிக்குக் காலம்பர வாட்சப்பில் பார்த்த ஒரு வாத, விவாதம் தான்! எல்லாம் நம்ம எ.பி.குழு நண்பர்கள் தான்! எந்தக் கேள்வி மூலம் என்பதைக்கவனிக்கலை! ஆனால் நடுவில் அது மஹாபாரதத்துக்குப் போய் அப்பாதுரை (அவர் ஏன் எழுதறதே இல்லை? அதோடு யாரோட வலைப்பக்கமும் வரதில்லை) நான் போன வருஷத்தோடு முடிச்ச கண்ணன் பதிவைப் பற்றி சிலாகித்துக் கூறி அதை எ.பி. ப்ரஸ்ஸில் வெளியிடக் கேட்டுக் கொண்டார்! இஃகி, இஃகி, அதை வெளியிட அணுகிய ப்ரஸ்ஸெல்லாம் ஒரு பாகமே ஆயிரம் பக்கம் வருது! இதிலே சுருக்குவதும் கடினமா இருக்குனு ஓடியே போயிட்டாங்க! இதுக்காக வித்யாபவனிடம் அனுமதி எல்லாம் வாங்கி வைச்சிருந்தேன். முடியலை. விட்டுட்டேன். முடிஞ்சால் மின்னூலாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பாகமாக வெளியிடணும். அதுக்கு முன்னாடி அதை முடிக்கணும். குருக்ஷேத்திரத்தில் நடந்தவைகளைப் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் தகவல்களைப்  படித்து வந்து கொண்டிருக்கேன். என்றாலும் முன்ஷி அவர்களைப் போல் சுவாரசியமாகச் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்.

இதைப் பற்றி அப்பாதுரையின் வாட்சப் செய்தியைப் பார்த்ததும் உடனே தோன்றி மறைந்தன. அதிலேயே பானுமதி அவர்கள் கர்ணனுக்கு வக்காலத்து வாங்கி இருந்தாங்க! கர்ணனுக்கு இயற்கை மட்டுமில்லாமல் மனிதர்களும் வஞ்சனை செய்தாங்க என்று சொல்லி இருந்தாங்க.அவங்க நினைக்கிறாப்போல் கர்ணன் நடுநிலையாளனோ எவராலும் ஒதுக்கப்பட்டவனோ இல்லை. அவனுக்கு துரோணாசாரியார் கற்றுக்கொடுக்க மறுத்தது பிரம்மாஸ்திரப் பிரயோகம் மட்டுமே! அதுவும் அவன் அதை அர்ஜுனன் மேல் தான் பிரயோகிக்கப் போகிறான் என்பது வெளிப்படையாக அனைவருமே அறிந்த ஒன்று.அவன் க்ஷத்திரியன் இல்லை, சூத புத்திரன் என்பதால் எல்லாம் துரோணர் மறுக்கவில்லை. இப்போதைய தொலைக்காட்சி செய்தி சானல்கள் ஒரு வரியை மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குவதைப் போல் மஹாபாரதத்திலும் துரோணர் மறுத்ததை மட்டுமே பிடித்துக் கொண்டு அனைவரும் தொங்குகின்றனர். பின்புலம் தெரியவில்லை.

மேலும் சூதனும் க்ஷத்திரியன் தான். க்ஷத்திரியர்களிலேயே அரசகுலத்தவர் தனி! மற்ற க்ஷத்திரியர்கள் தனி! இவர்கள் அதிரதர்கள், மஹாரதர்கள் என்னும் பட்டியலில் வருவார்கள். அதனால் தான் கர்ணனை வளர்த்த தந்தையைத் தேரோட்டி என்கிறார்கள்! தேரோட்டுவதற்குத் தனித் திறமை வேண்டும். யுத்த களத்தில் அரசகுமாரர்களுக்குத் தேரோட்டுபவர்கள் அதற்கெனத் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். ஒரே சமயத்தில் தங்களை எதிர்கொள்ளும் ஆயுதங்களையும் தடுத்துக் கொண்டு தேரையும் சரியான திசையில் அந்த வியூகத்துக்கு ஏற்ப நகர்த்திக் கொண்டு தேரில் இருந்து போரிடும் அரசகுமாரர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு அசாத்தியத் திறமை வேண்டும்.அத்தகைய ஒரு தேரோட்டியே கர்ணனை வளர்த்தவன் ராதேயன்!  மேலும் கர்ணன் திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு திரௌபதியால் அவமானம் செய்யப்படுகிறான். அரசகுமாரர்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் அவன் கலந்து கொள்ள முடியாமைக்குக் காரணமும் அது கௌரவ அரசகுமாரர்கள் இடையே நடக்க வேண்டிய ஒன்று என்பதே காரணம். ஆனாலும் அர்ஜுனனை அவமானம் செய்யவும் அவனை ஜெயிக்கவும் வேண்டியே துரியோதனன் அப்போது கர்ணனுக்கு அங்க நாட்டு அரசபதவியைக் கொடுக்கிறான்.

மேலும் அறிய

https://kannanvaruvan.blogspot.com/2011/12/blog-post_23.html

https://kannanvaruvan.blogspot.com/2011/12/blog-post_28.html

இங்கே சஹஸ்ரகவசன்

கர்ணனின் பூர்வோத்திரம் இங்கே அறியலாம். இதன் மூலம் கர்ணன் அவ்வளவு ஒன்றும் நல்லவன் இல்லை என்பதையும் அறியலாம். மேலும் சில தகவல்களுக்கான சுட்டி இருக்கிறது. ஆனால் இப்போ நேரம் இல்லை. பின்னர் தேடித் தருகிறேன்.

நாளைக்குப் பெருமாளுக்கான வழிபாடுகள் முடிந்து மதியத்துக்கு மேல் தான் இணையத்துக்கே வர முடியும். ஆகவே கருத்துச் சொல்லிவிட்டு வெளியிடவில்லை என்றோ, வெளியிட்டு பதில் வரவில்லை என்றோ யாரும் நினைக்கவேண்டாம். இது ஓர் அவசரப் பதிவு. சுட்டிகள் மட்டும் தேடிக் கொடுத்திருக்கேன். 

38 comments:

  1. இது அவசரப்பதிவுன்னு சொல்லி விட்டு ராமாயணக்கதை சொல்லுறீங்களே... பரவாநஹி நாளைக்கு வந்து சொல்லுங்கோ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, பரவாக்கரைப் பதிவுகளே இன்னும் முடியலை! ஹிஹிஹி!

      Delete
  2. Thank you Geetha ma. PERUMAL VANTHU IRUKKATTUM. BEST WISHES.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரேவதி. பெருமாள் வந்துட்டார்! :)

      Delete
  3. எங்கள் பகுதியில் 'திருப்தியாக திருப்பதி' விழாவில் 40-வது வருடத்தை நெருக்கிக் கொண்டிருக்கிறோம்... அதனால் இந்த வாரமே அடியேன் ரொம்ப busy...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் டிடி. இல்லைனாலும் நீங்க எப்போவுமே பிசி தான்!

      Delete
  4. கீதா அக்காவை அந்த விவாதத்தில் நான் மிஸ் செய்கிறேன் என்று நான் அங்கு சொல்லி இருந்ததையும் குறிப்பிட்டிருந்திருக்கலாம்!!!! எனக்கொரு கிரெடிட்...!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஶ்ரீராம். கவனிச்சேன். அதைக் குறிப்பிட்டிருக்கலாமோ! மன்னிக்கவும்! :( ஆனால் அத்தகைய நீண்ட விவாதங்களில் வாட்சப்பில் எல்லாம் என்னால் கலந்துக்கறது ரொம்பக் கஷ்டம்! :(

      Delete
  5. அவசரத்தில் படித்ததில் அங்கு திரௌபதி சிரித்த இடத்தையும் தவறாக விவாதிருந்தார்களோ என்றும் தோன்றியது. மறுபடி சென்று படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நான் எல்லாத்தையும் டெலீட் செய்துட்டேன். ஆகையால் நீங்க படிச்சுட்டு என்ன சொன்னாங்க என்பதை எனக்கும் சொல்லுங்க ஸ்ரீராம்.

      Delete
  6. நிறைய தகவல்கள். மஹாபாரதம் குறித்தும்.

    அக்கா பிஸி என்பது வேலைப்பளு என்பது ஒரு புறம் என்றாலும்..நம்ம மைன்ட் ரொம்ப பல முக்கியமான விஷயங்களில் ஆக்குபைடா இருந்தாலும் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தவும் முடியாதே அதையும் சொல்லலாமோ?!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, மைன்ட் முக்கியமான விஷயங்களை நினைத்தாலும் அன்றாட வேலைகள் பாதிக்காது அல்லவா? இப்போக் கூட மனதில் வேறே ஒண்ணு ஓடிட்டு இருக்கு. உங்களுக்கு பதிலும் சொல்றேன். :)

      Delete
  7. சுட்டிகளில் கொடுத்த பதிவுகள் படிக்க வேண்டும்.... பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நேரம் இருக்கும்போது படிங்க வெங்கட், அந்த விவாதத்திற்காகக் கர்ணன் பற்றிய பின்புலம் அறிய வேண்டிச் சுட்டிகளைக் கொடுத்திருக்கேன். மெதுவா வாங்க!

      Delete
  8. >>> பெருமாளுக்கான வழிபாடுகள் முடிந்து மதியத்துக்கு மேல் தான் இணையத்துக்கே வர முடியும்.. <<<

    ஆகா!..

    ஆர அமர வாருங்கள்...
    அரிய செய்திகளை அறிய விரும்புகின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, பெருமாள் காலங்கார்த்தாலே எட்டரைக்கே வந்துட்டார். அப்புறமா எனக்கு நிவேதனம் ஆகறதுக்காக அரை மணி காத்திருந்தார்! :)

      Delete
  9. >>> ஆனாலும், அர்ஜுனனை அவமானம் செய்யவும் அவனை ஜெயிக்கவும் வேண்டியே துரியோதனன்.. <<<

    இன்றைய மானுடர்கள் செய்து கொண்டிருப்பதும் இதுவே தான்!...

    ReplyDelete
    Replies
    1. துரை, இதை நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தால் யார் மேல் தப்புனு புரியும். நீங்க சொல்வது சரியே!

      Delete
  10. desa drohi modi'kku support panra geetha sambasivam ozhiga..

    ReplyDelete
    Replies
    1. வாங்க நல்லா மோதுது? முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இங்கே மோதி பற்றிய எந்தத் தகவலும் சொல்லவே இல்லை. இல்லாட்டியும் என்னைப் பாராட்டியமைக்கு மீண்டும் நன்றி.

      Delete
  11. கீசா மேடம்... புரட்டாசி சனிக்கிழமை ஆயத்தங்கள்ளேர்ந்து ஆரம்பித்து கர்ணனுக்கு சர்டிஃபிகேட் கொடுப்பதுவரை எழுதிட்டீங்க. 'கலவை சாதம்' பண்ணறதுல நீங்க கில்லாடிதான்.

    //அவ்வளவு ஒன்றும் நல்லவன் இல்லை // - மஹாபாரதத்தில் விதுரரைத் தவிர வேறு நல்லவர்களை லிஸ்ட் போடுங்க பார்க்கலாம். விதுரருமே, அவசியமான நேரத்தில் ஒருவன் மீது கொண்ட கோபத்தால் உதவி செய்ய மறுத்துவிட்டவர். குற்றங்களே இல்லாதவர், கடவுள் ஒருவர்தான். மற்ற எல்லோரும் குறைகள் உள்ளவர்கள். % மட்டுமே மாறும்.

    சினிமா, சீரியல் வசனங்களை வைத்து எதையும் மதிப்பிடக்கூடாது. அது எழுதுபவரைப் பொறுத்து மாறும்.

    ReplyDelete
    Replies
    1. நான் ஆரம்பிக்க நினைச்சது என்னமோ கர்ணன் பத்தித் தான் நெ.த. ஆனால் அதுக்கு இப்போ நேரம் இல்லைனு சொல்லறதுக்கு ஆரம்பிச்சுக் கலந்து கட்டி வந்திருக்கு! மற்றபடி நேரடியாகத் தட்டச்சிய விஷயங்கள். சேமிப்பில் இருந்தெல்லாம் போடலை! :))))) அந்த நிமிடம் மனதில் தோன்றியவற்றை அப்படியே எழுதிட்டுப் போயிட்டேன். இன்னிக்குத் தான் திரும்பியும் பார்க்கிறேன். :)))))

      Delete
  12. குழந்தையின் விளம்பர வாசகம் நினைவுக்கு வருது.
    உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். சுட்டிகளை படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மெதுவாப் படிங்க கோமதி. உங்களோட இந்தப் பின்னூட்டம் மாடரேஷனில் இருந்திருக்கு. மெயிலில் வரலை! இப்போத் தான் பார்த்தேன்.

      Delete
  13. பெரும்பாலோனவர்கள் சினிமா தொலைக்காட்சிமூலம்தான் இதிகாசக்கதைகளை அறிகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், பெரும்பாலான தவறான புரிதலுக்கும் இதுவே முக்கியக் காரணம்! :(

      Delete
    2. நான் புராண கதைகளை படித்துதான் அறிந்து கொண்டேன்.அதனாலேயே புராண படங்கள் மற்றும் சீரியல்கள் பார்ப்பதில்லை.

      Delete
    3. நான் புராண,இதிகாசங்களை படித்தும், படித்தவர்கள் சொல்லக் கேட்டும்தான் அறிந்து கொண்டேன். அவற்றில் சந்தேகம் வரும் பொழுது தகுந்த நபர்களிடம் கேட்டு தெளிந்திருக்கிறேன். அதனாலேயே புராண படங்கள் மற்றும் சீரியல்கள் பார்ப்பதில்லை.

      Delete
    4. வாங்க பானுமதி,கடவுளரை நினைத்தாலே அந்தப் பாத்திரம் ஏற்றூ நடித்த நடிகர் தான் நினைவில் வரார்! :( ஆகவே நானும் புராணப் படங்கள் சீரியல்கள் என்றால் தவிர்த்துவிடுவேன்.

      Delete
  14. கர்ணன் பத்தி நீங்க சொல்றது தான் சரி!.. ஒரிஜினல் படிச்சவங்களுக்குத் தெரியும்!.. அதே போல், கொடை வள்ளல்னு சொல்றதும்.. துரியோதனனைச் சக்கரவர்த்தி ஆக்குவேன் அது வரைக்கும் யார் இல்லைன்னு வந்தாலும் கொடுப்பேன் அப்படின்னு சபதம் செய்தே கொடுக்க ஆரம்பித்தான் (இதோடு இன்னும் சில சபதங்களும் சேருது). மேலும் திரௌபதியை நிறைந்த சபையில் இழிந்த வார்த்தை பேசி வஞ்சம் தீர்த்துக் கொண்டான். அப்புறம் என்ன நல்லவன்?!.. சினிமாவும் இப்ப இருக்கற சீரியல்களும் பண்ணினது தன் இப்ப கர்ணன் மேல இருக்கற இமேஜ்!. அதுவும் ஈஸியா பொறுப்புத் துறப்புன்னு போட்டு, பொடிசா கற்பனைக் கதைன்னுடறாங்க!.. என்ன பண்ண?!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, கர்ணனைப் பற்றி நல்ல விரிவாகவே எழுதி இருக்கேன். என்றாலும் இது எல்லாம் நம்ம ஜிவாஜி ஆரம்பிச்சு வைச்சதுனு சொல்லலாம். வீரபாண்டியக்கட்டபொம்மனைப் பத்தி ஏத்தி விட்டதும் அவர் வீரபாண்டியக் கட்டபொம்மனா நடிச்சதுக்குப் பின்னர் தான். அதே போல் கர்ணனாக அவர் நடிச்சதாலே அந்தப் பாத்திரத்தை அப்படி உருவாக்கிட்டாங்க என்றாலும் இது தேரோட்டி மகன் என்னும் பி.எஸ். ராமையா அவர்களின் மேடை நாடகத்தின் தயாரிப்பு. ஜிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கவென்றே உருவாக்கப்பட்ட காட்சிகள்.

      Delete
    2. இந்த ஆன்டி ஹீரோ சென்டிமென்டே ஜிவாஜிக்காக ஆரம்பிக்கப்பட்டது தான்.

      Delete
    3. மிகவும் ஆசையாக கர்ணன் படம் பார்க்கச் சென்று ஏமாந்தேன்.

      Delete
    4. மிகவும் ஆசையாக கர்ணன் படம் பார்க்கச் சென்று ஏமாந்தேன்.

      Delete
    5. நான் கர்ணன் படமெல்லாம் பார்த்தது படம் வெளிவந்து பல வருடங்கள் கழித்துத் தொலைக்காட்சி தயவில் தான். ஆனால் தேரோட்டி மகன் நாடகம் படிச்சிருக்கேன்.

      Delete
  15. கீதா அக்கா கர்ணனைப்பற்றி நான் எழுதிய பொழுதே கர்ணன் மீது எனக்கு பெரிய மரியாதை கிடையாது, கர்ணனை நான் ஆதரிக்கவுமில்லை என்று டிஸ்க்ளைமர் போட நினைத்தேன்.
    பாஞ்சாலியை துகிலுரிந்ததில் பெரும் பங்கு அவனுக்கு உண்டு. இவளும் அடமைதானே? இவளுக்கு மட்டும் என்ன மேல் துணி என்று கேட்டவன். நீங்கள் சொல்லியிருக்கும் பல விஷயங்களை நானும் ஒப்புக் கொள்கிறேன். சகஸ்ரகவசன் கதை நானும் அறிவேன்.
    அவனுடைய கொடைத்தன்மைக்கு காரணம் அவன் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கலாம் என்பது என் யூகம். சிறு வயதில் வறுமையை அனுபவித்த எம்.ஜி.ஆர் வசதி வந்ததும் வள்ளலாக மாறவில்லையா? தவிர எனக்குத் தெரிந்த சிலர் தங்களுக்கு மறுக்கப்பட்ட விஷயங்களை மற்றவர்களுக்கு வழங்கியதை பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கர்ணன் வள்ளலாக மாறியதன் காரணம் அவன் புறக்கணிக்கப்பட்டதால் அல்ல! எம்ஜிஆரும் எல்லோருக்கும் வள்ளலாக விளங்கியதாகத் தெரியலை!

      Delete
    2. கட்டபொம்மனை எட்டப்பன் காட்டியே கொடுக்காதபோது காட்டிக் கொடுத்தான் எட்டப்பன் எனச் சொல்லி !!!!!!!!!!!!!!! இப்போவும் அவன் வழித் தோன்றல்கள் இதை மறுத்துப் பேட்டி கொடுத்ததை மின் தமிழில் சீதாலக்ஷ்மி அம்மா பதிவாக்கி இருக்கிறார்கள். சரித்திரபூர்வமான ஆதாரமே இருக்கு.

      Delete