எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 16, 2019

நான் வேலைக்குப் போனேன்

நான் வேலைக்குப் போனேன்

கோமதி அரசு கேட்டதன் பேரில் ஆரம்ப காலத்தில் எழுதிய இந்தப் பதிவை இங்கே மீள்பதிவாகப் போடுகிறேன்.

நான் மின்வாரியத்தில் வேலைக்குப் போனது பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அது கல்யாணத்துக்கு முன்னேயே பரிக்ஷை எழுதி நேர்முகத்தேர்வும் முடிந்து தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேரும் தேதிக்காகக் காத்திருந்த நேரம் திடீரென்று 15 நாளில் கல்யாணம் ஆகி அதன் பின் ஒரு மாதத்தில் எல்லாம் சென்னை வந்து, அம்பத்தூரில் குடித்தனமும் தொடங்கியாச்சு. அதற்கு அப்புறம்தான் பரமக்குடிக்குப் போய் வேலையில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது. மதுரைன்னாலும் பரவாயில்லை. பரமக்குடினா என்ன செய்யறது? பாட்டியோட பிறந்த ஊர். ஆனால் யாரும் தெரிஞ்சவங்க கிடையது. அப்பா அந்த உத்தரவை அப்படியே எங்களுக்குத் திருப்பி இருந்தார். அதை எடுத்துப் போய் மின்வாரியச் சேர்மனைப் போய்ப்பார்த்து விவரம் சொல்லிச் சென்னைக்கு மாற்றல் கேட்டு அதுவும் வந்து விட்டது. ஆனால் எங்கே போய்ச் சேருவது என்று எந்த விவரமும் அதில் குறிப்பிடவில்லை. மவுண்ட் ரோடு ஆஃபீஸில் இருந்து வந்திருந்தது. மேலும் அங்கே தான் போய்ச் சேர்மனைப் பார்த்து பேட்டி கொடுக்கவும் போனோம். ஆகையால் அங்கேயே போய்க் கேள் என்று சொல்லி விட்டு என் கணவர் அவர் ஆஃபீஸ் கிளம்பினார். அப்போதுதான் ஊரில் இருந்து வந்திருந்தோம். அன்றுதான் அவர் மறுபடி வேலையில் விடுமுறை முடிந்து சேருவதால் மறுபடி விடுமுறை போட முடியாது. ஆதலால் "நீ தான் உன் சித்தி வீட்டில் இருந்திருக்கிறாயே! சென்னை ஒன்றும் புதிது இல்லை. போய்ப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு போன் செய்." என்று கூறினார். நானும் பெரிசாகத் தலை ஆட்டி விட்டேன். என் கடைசி நாத்தனார் வேறே அப்போ எங்களுடன் இருப்பதற்கு வந்திருந்தாள். அவளுக்கு முன்னால் எனக்குத் தெரியாது என்று எப்படிக்கூறுவது? பேசாமல் இரண்டு பேரும் கிளம்பினோம். அம்பத்தூரில் ரெயில்வே ஸ்டேஷனில் சென்னை ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு, "ஜாக்கிரதை! போனதும் போன் பண்ணு." என்றார். அவர் ஆவடிப்பக்கம் போக நான் எதிர்திசை வண்டிக்குக் காத்து நின்றேன்.

***********

சித்தி வீட்டில் இருந்தேனே ஒழிய எங்காவது போக வேண்டும் என்றால் முப்பாத்தம்மன் கோவில், அல்லது தி.நகர் போஸ்ட் ஆஃபீஸ். இதோடு சரி. என் தம்பிகளை பள்ளியில் இருந்து அழைத்துவர எப்போவாவது சித்தி அனுப்புவார். அதுவும் ராமகிருஷ்ணா பள்ளியைச் சேர்ந்த சாரதா வித்யாலயா. அப்போது இருபாலாரும் படிக்கும் பள்ளியாக இருந்தது. அது கூடச் சில சமயம் சித்தியும் வருவார். திருவல்லிக்கேணியில் என் பெரியப்பா இருந்தார். அவர் திருமணம் ஆகாதவர் என்பதாலும், அவர் தங்கி இருந்தது மான்ஷன் என்று அழைக்கப்படும் அறை மாதிரி என்பதாலும் அவருடன் தங்காமல் சித்தியிடம் தங்கினேன். பெரியப்பா இருந்த வீட்டில் 10 பேர் அது மாதிரி தங்கி இருந்தார்கள். அங்கே போவது என்றால் முன்கூட்டியே பெரியப்பா சொல்வார்,. இந்தத் தேதிக்கு வா என்று. அப்போது போவேன். நேரே 13-ல் ஏறினால், "ரத்னா கஃபே' எதிரே உள்ள ஸ்டாப்பில் இறங்கினால், ரத்னா கஃபே பக்கத்துதெரு சாமிப்பிள்ளை தெருவில் பெரியப்பா இருந்தார். இப்போ ரத்னா கஃபே இருக்கா தெரியாது. அங்கே போனால் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு "ஹாய்" சொல்லிவிட்டுப் பார்த்தசாரதியிடம் செளக்கியம் விசாரித்துவிட்டு, பாரதி இருந்த தெரு வழி வந்தால் பெரியப்பா சாப்பிடும் மாமி மெஸ். சில சமயம் அங்கே, சில சமயம் ரத்னா கஃபே, சிலசமயம் ராயர் மெஸ் என்று ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுப்பார். அவர் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார்.திருவல்லிக்கேணியில் இருந்து திரும்ப கோஷா ஆஸ்பத்திரி வாசலில் ஏற்றி விட்டால் தி.நகர். சிலசமயம் பெரியப்பாவும் கூட வருவார். இந்த மாதிரி போய்விட்டு நான் என்ன சென்னையைப் புரிந்து கொள்வது? உண்மையில் ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது.

**********

செண்ட்ரலில் இறங்கி வெளியே வந்து, மவுண்ட் ரோடுக்கு எந்த பஸ் போகும் என்றால் எல்லாரும் விசித்திரமாய்ப் பார்த்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன, எதுவும் போகாதா?" என்று அப்பாவியாய்க் கேட்டேன். உடனே ஒருத்தர் வந்து "என்னம்மா, ஊருக்குப் புதுசா?" என்றார். கதைகளில் படித்த ஏமாற்று வேலைகள் நினைவுக்கு வரவே நான் பதிலே பேசவில்லை. எல்லா பஸ்ஸும் மவுண்ட் ரோடு வழியாத்தான் போகும்னு அப்புறம் தான் தெரிஞ்சது. கையில் ஒரு முறை அட்ரஸைப் பார்த்துக் கொண்டேன். வரும் வண்டியில் ஏறலாம் எனத் தீர்மானித்து ஏதோ ஒரு வண்டியில் ஏறினேன். கடவுளே, அது பாதியில் திரும்புமாம், வேறு வழியில் போய் விடும். மின்வாரியம் வரை போகாதாம். மவுண்ட் ரோடு போஸ்ட் ஆஃபீஸில் இறக்கி விட்டார்கள். அங்கே இருந்து மறுபடி பஸ் பிடித்து இம்முறை கண்டக்டரிடம் முன் கூட்டிச் சொல்லி வைத்து விட்டதால் ஸ்டாப் வந்ததும் இறங்கினேன். உள்ளே போனால் ஒரே சமுத்திரம். ஆட்கள் வருவதும், போவதுமாக இருக்கிறது. யாரை என்ன கேட்பது என்று ஒன்றும் புரியவில்லை. திகைப்புடன் ஒரு ஊழியரிடம் போய் எனக்கு வந்த கடிதத்தைக் காட்டினேன். அவர் யாரிடமோ சொல்ல அவர் வேறு யாரையோ கூப்பிட ஒரு வழியாக நான் போக வேண்டிய செக்க்ஷனுக்குள் போனேன். அங்கே உள்ள அதிகாரியிடம் என் கடிதத்தைக் காட்டினேன். அவர் என்னிடம் "முதல் நாள் தனியாவே வந்திருக்கியே? சென்னை பழக்கமா? உன் ஊர் மதுரைனு போட்டிருக்கே?" என்று கேட்க நான் அவரிடம் எல்லா விவரமும் சொன்னேன். "நீ அம்பத்தூரில் இருந்து வரியா? அப்போ DCA/Chennai office அல்லது DCA/Royapuram இரண்டில் ஒன்று சரியாக இருக்கும். எது உனக்குச் சரியாக இருக்கும்?" என்றார். எனக்கு இரண்டுமே எங்கு இருக்கிறது என்று தெரியாது. ஆகவே சும்மா இருந்தேன். அதற்குள் அவரே "DCA/Royapuram messenger இப்போ தான் வந்தார். அங்கே ஆள் இல்லாமல் ரொம்பக் கஷ்டமா இருக்காம். நீ அவர் கூடவே போயிடு." என்றார். நானும் "சரி" என்றேன். உடனே ஒரு லெட்டெர் டைப் செய்து கொடுத்தார். "அந்த மெசெஞ்சர் வெளியிலே இருப்பார் பாரு", என்றார். அதற்குள் ஒருத்தர் "அவர் அப்போவே போயிட்டார் சார்". என்றார். "சரி, நீ எப்படிப் போவே?" என்றார் என்னிடம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியில் வந்தேன்.பைத்தியக்காரத் தனமாக ஆஃபீஸ் இருக்குமிடம் கேட்கவில்லை. மறுபடி உள்ளே போனேன். கேட்டதற்கு ராயபுரம் ஸ்டேஷனில் இருந்து நடக்க முடிந்தால் நடக்கலாம் என்றார்கள். அவர்கள் நினைத்தது அம்பத்தூரில் இருந்து தினமும் போக நான் கேட்பதாக. ஒருத்தர் பேசின் பிரிட்ஜ் சிபாரிசு செய்தார். இன்னொருத்தர் செண்ட்ரல் தான் நல்லது என்றார். ஆகவே ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்லவே குழம்பிப்போய் வெளியில் வந்த நான் பீச் செல்லும் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். கண்டக்டரிடம் ராயபுரத்துக்கு டிக்கெட் கேட்க அவர் "இது போகாது." என்று சொன்னார். "எங்கே போகிறது?" நான்.

"செகண்ட் லைன் பீச்." கண்டக்டர்.

"சரி, அங்கேயே கொடுங்கள்." நான்.

பஸ் போய்க் கொண்டிருந்தது. மணி ஏற்கெனவே மத்தியானம் 12க்கு மேல் ஆகி விட்டது.

61 comments:

  1. //கதைகளில் படித்த ஏமாற்று வேலைகள் நினைவுக்கு வரவே நான் பதிலே பேசவில்லை//

    ஹா.. ஹா.. ஸூப்பர்

    பதிவு சுவாரஸ்யமாக செல்கிறது.
    இது தொடரும்தானே ?

    பரமக்குடியிலிருந்து... கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, பரமக்குடியிலே இருக்கீங்களா? இஃகி, இஃகி! தொடரும், தொடரும், இன்னும் ஒன்றோ, இரண்டோ வரும்! மீள் பதிவு!

      Delete
    2. ஆ ஆ ஆ கில்லர்ஜி எப்ப மய்யத்துல சேர்ந்தீங்க!!! ஹா ஹா ஹா

      கில்லர்ஜி என்னை துரத்த வரதுக்குள்ள மீ எஸ்கேப்

      கீதா

      Delete
  2. நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீங்கள் வேலைபார்த்த அனுபவத்தை சொல்வதற்கு நன்றி.

    தைரியமாய் செயலில் இறங்கி விட்டீர்கள்.
    படிக்க படிக்க ஆச்சிரியமாய் இருக்கிறது.

    //"DCA/Royapuram messenger இப்போ தான் வந்தார். அங்கே ஆள் இல்லாமல் ரொம்பக் கஷ்டமா இருக்காம். நீ அவர் கூடவே போயிடு." //

    வெகு எளிதாக அந்தக்காலத்தில் வேலை மாற்றம் கிடைத்து இருக்கிறதே!
    வேலையில் சேர்ந்த அனுபவம் படிக்க வருகிறேன்.

    இன்று இரவு சாரின் தம்பி குடும்பத்தினர் கோவையிலிருந்து வருகிறார்கள். இரண்டு நாள் இணையம் பக்கம் வர முடியாது.வந்து படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! உண்மையில் நாங்க வேலை மாற்றல் கேட்டுச் சென்ற அன்று மின் வாரிய சேர்மன் இல்லை என்றே சொன்னார். பரமக்குடியில் போய் வேலையில் சேர்ந்துக்கோ! அப்புறமா மாற்றல் கேள் என்றார். ஆனால் நடுவில் யாரோ பலமாக சிபாரிசு செய்ததாகக் காதில் விழுந்தது. உண்மையாகவே யாரோ பலமான சிபாரிசு செய்திருக்கின்றனர்.

      உங்கள் கொழுந்தனார் குடும்பத்தை உபசரித்துவிட்டு அவர்களோடு இனிமையாகப் பொழுதைக் கழித்துவிட்டு மெதுவாக வாருங்கள்.

      Delete
  3. சஸ்பென்ஸ் வைத்து எங்களை வேலை வாங்கிவிட்டீர்களே! எப்படி உங்களுக்கு டக் டக் கென்று திருப்பங்கள் நிகழ்ந்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. சஸ்பென்ஸெல்லாம் வைக்கலை. என் வாழ்க்கையில் இதைவிடப் பெரிய திருப்பங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன! சொல்லப் போனால் கதை மாதிரி இருக்கும்!

      Delete
  4. ஒரே சுற்றல் தான் போல...!

    ReplyDelete
    Replies
    1. ஜாஸ்தியா எல்லாம் சுற்றலை டிடி.

      Delete
  5. ஆஹா...சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, பயணம்னு கில்லர்ஜி பதிவிலே பார்த்தேன். எங்கே பயணம்? குலதெய்வ தரிசனமா? நல்லபடி ஆகட்டும். மீண்டும் இங்கேயும் ஒரு முறை திருமண நாள் வாழ்த்துகளையும் புளியோதரை கிடைக்கப் பிரார்த்தனைகளையும் சொல்லிக்கிறேன்.

      Delete
  6. நல்ல தைரியம். அந்த இள வயதில் கீதா மா. ஆரம்பத்தில் இத்தனை
    தொந்தரவுகளைச் சந்தித்தது என் அனுபவங்களையும் மீட்டு எடுக்கிறது.
    உங்களை எழுதத் தூண்டிய கோமதிக்கும் என் நன்றி. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, அப்போ இருந்த தைரியம் இப்போ இல்லைனே நினைக்கிறேன். அதுவும் கடந்த 2 வருடங்களாக வெகுவாகக் குறைந்திருக்கு!

      Delete
  7. நல்ல விறுவிறுப்பு. உங்கள் அனுபவத்தை படிக்கும் பொழுது மஸ்கட்டில் என் முதல் நாள் அனுபவத்தை எழுதலாம் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி! நேரம் கிடைத்து எல்லாம் நல்லபடி ஆனதும் எழுதுங்கள். அவசரம் இல்லை!

      Delete
  8. வணக்கம் சகோதரி

    வேலைக்கு போன அனுபவத்தால்தான் நீங்கள் இன்னமும் தைரியசாலியாக இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் தைரியங்களை தக்க வைத்துக் கொண்டு எத்தனை வருடங்கள் வேலை பார்த்தீர்கள்? பதிவு சுவாரஸ்யமாக செல்கிறது. பிறகு என்னவாயிற்று என அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நான் சின்ன வயசில் இருந்தே தைரியசாலி என்றே சொல்லணும். என் அண்ணா, தம்பி எல்லாம் அப்பாவிடம் வெகுவாகப் பயப்படும்போது நான் ஒருத்தி தான் திருப்பிக் கேட்பேன். வல்லியின் வாரிஜம் மாதிரினு வைச்சுக்கோங்களேன்! :))))) ஆனால் கேள்வியில் உள்ள நியாயத்தில் அப்பாவால் பதில் சொல்ல முடியாது! திணறுவார். பின்னர் திட்டு, அடி! ஆனாலும் திருந்தலை! :))))))

      Delete
    2. முன்னரே கவனிக்கலை கமலா. வருடங்கள் எல்லாம் வேலை பார்க்கலை. சும்மா பில்ட் அப் தான் ஜாஸ்தி! அதுக்குள்ளே குழந்தை பிறந்து நம்ம ரங்க்ஸுக்கும் ராஜஸ்தான் மாற்றல் ஆகி விட்டது! கூடவே கூட்டிச் சென்று விட்டார்.

      Delete
  9. நல்ல நல்ல மனிதர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்..
    அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் துரை! நல்ல மனிதர்கள் எங்கேயும் எப்போதும் உண்டு.

      Delete
  10. எப்படித்தான் இவ்வளவு தைரியமோ.... இது தைரியமா இல்லை 'அ....தனமா' என்பதை அறிந்துகொள்ள ஆவல் (நீங்க கமெண்ட் படித்துட்டு அடிக்க வரலைனா)

    ReplyDelete
    Replies
    1. நெ.த. வாங்க எரிசேரி சாப்பிடலை, அதுக்குள்ளே அவியல் சாப்பிட வந்துட்டீங்க! போகட்டும். தைரியம் தான். இதிலே எங்கேருந்து அசட்டுத் தனம் வருது? சுட்டிக் காட்டுங்களேன்!

      Delete
    2. அசட்டு தைரியம்னு மனசுல தோணித்து. ஆனாலும் இண்டெரெஸ்டிங் ஆக இருக்கு. எப்படித்தான் தனியாளாக இதெல்லாம் பண்ணினீங்களோ... உங்க 'கல்யாண வைபோகமே' டக்குனு முடிஞ்ச மாதிரியும் இருக்கு. நீங்களே இப்போ படிச்சால் இன்னும் வேற மாதிரி, இன்னும் அதிக சம்பவங்களோட எழுதணும்னு தோணும்னு நினைக்கிறேன்.

      இதையும் அம்போன்னு விடாம எழுதுங்க

      Delete
    3. நீங்க நினைக்கிறதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? கல்யாணமே வைபோகமே! தொடரில் தேவையானவற்றை மட்டும் என்னுடைய பார்வையில் கொடுத்திருக்கேன். இதுவும் நான் வேலையில் சேர்ந்ததும் முடிஞ்சுடும். தொடராது!தேவையானதைத் தானே சொல்ல முடியும்! நான் தனி ஆளாக சுமார் 20 பேருக்குச் சமைச்சுப் போட்டு இட்லி, தோசை, அடை, உப்புமா, சப்பாத்தினு பண்ணிப் போட்டிருக்கிறேன். இதெல்லாம் என்ன? ஜுஜுபி!

      Delete
    4. //நான் தனி ஆளாக சுமார் 20 பேருக்குச் சமைச்சுப் போட்டு // - நாங்க சத் சங்கத்துக்காக ஏதேனும் ஒரு ஐட்டம் மட்டும் (அது தயிர் சாதமோ இல்லை இனிப்போ இல்லை வேறு ஏதாகிலுமோ) கொண்டுபோகும்போது அதுவே ஒரு வேலை என்று தோணும். 20 பேருக்கு சமையலா? இந்த சமாராதானைக்கு (100 பேர்லாம்) உங்க சமையலா (துணை ஆளோட) இல்லை வெளில ஆள் கூப்பிட்டுப் பண்ணச் சொல்வீங்களா?

      காலம்தான் எப்படி மாறிடறது (நீங்க அப்போ அப்போ முடியாம, சாதம் மட்டும் பண்ணிக்கிட்டு மற்றதை வெளியில் வாங்கிக்கறேன்னு எழுதும்போது எனக்கு இப்படித் தோணும்). விரைவில் இந்தப் பிரச்சனையெல்லாம் தீரட்டும்.

      அம்பேரிக்கா பயணத்துக்கு சப்பாத்தி பண்ண ஆரம்பிச்சாச்சா ஹா ஹா

      Delete
    5. நீங்க நம்பிவிட்டால் நான் செய்தது உண்மை என்றும் நம்பலைனா நான் எதுவுமே செய்யலைனும் ஆகி விடுமா என்ன? :))))) கூட்டுக்குடும்பமாக இருந்தவரையில் நாங்களே 10 பேர் இருப்போம். அதோட அடிக்கடி வரும் உறவினர் வருகை. விடுமுறையைக் கழிக்கவும், பிறந்தகத்தில் இருக்கவும் வரும் நாத்தனார்கள், அவர்கள் குடும்பம்! இந்த சமாராதனைனு நீங்க கிண்டல் செய்யும் சமையலுக்கு வெளி ஆளோ துணை ஆளோ இருந்ததில்லை. உடம்பு முடிந்தாலும் சரி, முடியாட்டியும் சரி நான் தான் செய்தாகணும்.

      Delete
    6. அம்பேரிக்கா போகச் சப்பாத்தி எல்லாம் நீங்க இத்தனை நாள் முன்னாடியே செய்யறாப்போல் நாங்கல்லாம் செய்ய மாட்டோம். கிளம்பற அன்னிக்குப் புத்தம்புதுசாப் பண்ணி எடுத்துப்போம். :)))))

      Delete
    7. /இந்த சமாராதனைனு நீங்க கிண்டல் செய்யும் // - அது எப்படி..எழுத்துலேர்ந்து எது கிண்டல்னு நீங்க முடிவு பண்ணறது? நான் நிஜமாகவே எழுதினேன். நாங்க ச்ராத்தத்துக்கு ஒரு தடவைதான் செய்திருக்கிறோம் (பஹ்ரைன்ல). அப்புறம் இங்க தளிகை பண்ண பரிசாரகர் வருவார். 20 பேர்களுக்கே பண்ணினவங்க ஒருவேளை சமாராதனைக்கும் பண்ணியிருப்பாங்களோன்னு தோன்றியது. அவ்வளவு பேருக்கும் நீங்க பண்ணினீங்களா? நினைக்கவே ரொம்ப வியப்பாவும் அசுர சாதனையாவும் தோணுது

      Delete
    8. நெல்லைத் தமிழரே, உங்களுக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை.போகட்டும். எப்போவானும் எங்க வீட்டுக்கு வருவீங்க இல்லையா? அப்போ மாமாவிடம் கேளுங்கள்! நான் 19,20 வயசிலேயே கல்யாணம் ஆகி முதல் முதல் சமைத்தபோதே சுமார் 20 பேர்களுக்குக் குறையாமல் வீட்டில் இருந்தனர். அவ்வளவு பேர்களுக்கும் வெண்கலப்பானை, கல்சட்டி, ஈயச்செம்பு, இரும்புச்சட்டி ஆகியவற்றில் விறகு அடுப்பிலும், குமுட்டி அடுப்பிலும் சுமார் 20 நாட்களுக்கு மேல் சமைத்திருக்கிறேன். ராத்திரிக்கு தினம் டிஃபனும் பண்ணிப் போட்டிருக்கேன். 2017 ஆம் ஆண்டு வரையிலும் ஸ்ராத்தம் என்றால் கூட நான் மட்டும் தான் தனியாகச் சமைத்திருக்கேன். சென்னையில் இருந்தவரை கூடமாட மாமியார் இருந்தால் காய் நறுக்கித் தருவார். வறுவல் வறுப்பார். மற்றபடி வீட்டில் இருக்கும் யாரானாலும் உதவி எனச் செய்ததில்லை. அதிலும் எண்பதுகளில் எல்லாம் ஸ்ராத்தத்துக்கு விறகு அடுப்பில் சமைய்ல் இல்லையே தவிர குமுட்டி அடுப்பு, மண்ணெண்ணெய் ஸ்டவ் ஆகியவற்றில் சமையல்! வடைக்கு, மற்றும் சமையலுக்கு எல்லாம் கையால் அரைக்கணும். ஸ்ராத்தம் என்றால் நாங்கள் மட்டும் சாப்பிட்டதில்லை. தாயாதிகளை எல்லாமும் மாமனார் கூப்பிடுவார். அவர் சகோதரியும் வருவார். ஸ்ராத்தத்தின் முன்னால் வீடு சுத்தம் செய்யும்போது நீங்க பார்த்திருக்கணும். சுவரெல்லாம் அலம்பணும். அடுப்பை எல்லாம் கவுத்துப் போட்டு அலம்பி ஸ்டவ் திரியை எல்லாம் மாற்றிப் புதுத் திரி போட்டு, ஸ்டவின் எண்ணெய் டாங்கைச் சுத்தமாய்க் கழுவிப் புதுசாய் எண்ணெய் விட்டு குமுட்டிக்குப் புதுக்கரி வாங்கி, (பழைய கரி கூடாது என்பார் மாமியார்)அதைப் பிடிக்க வைக்கிறதுக்குள்ளே போதும் போதும்னு ஆகும்! ஸ்ராத்தத்துக்கு ஒரு மாசம் முன்னரே வீட்டில் வெங்காயம் யாருக்குமே இருக்காது. எங்க குழந்தைகளுக்குக் கூடப் பண்ணிப் போட முடியாது! அன்னிக்குக் குழந்தைகளுக்குக் கடையில் இட்லி வாங்கினால் அதை வீட்டில் வைச்சுக் கொடுக்கக் கூடாது. ஆகவே ப்ரெட், பட்டர், ஜாம் வாங்கிச் சாப்பிடக் கொடுத்துட்டு டப்பாவில் நேரே ஓட்டலுக்குப் போய் அங்கேயே இட்லி வாங்கி வைத்துக் கொடுத்துவிட்டு வருவார். 95 க்குப் பிறகு தான் கொஞ்சம் மாறியது என்றாலும் ஸ்ராத்தம் என்றால் சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டதில்லை. நாங்க திருக்கயிலை யாத்திரை 2006 ஆம் ஆண்டு போயிட்டு வந்து சமாராதனை பண்ணினப்போக் கூட சுமார் 50 பேருக்கு என்னோட சமையல் தான்! கூட உதவிக்குப் பக்கத்து வீட்டுப் பெண், என் மன்னி, தம்பி மனைவி, கடைசி நாத்தனார் ஆகியோர் இருந்தனர். எல்லோருமாகப் பரிமாறுவோம். அவ்வளவு ஏன்? முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ எனக்கு 22 வயதுக்குள் தான். அங்கே அப்போ டிசம்பர் மாதம் ஆடிட்டுக்கு மீரட்டிலிருந்து ஒரு குழு வரும். பத்துப்பேருக்குக் குறையாது. மேலே தான் இருக்கும். அத்தனை பேருக்கும் இட்லி, தோசை, வடை, இனிப்பு ஏதானும் என்று பண்ணிப் போடணும். டிசம்பரில் ராஜஸ்தானில் குளிர் ஜீரோ டிகிரிக்குப் போகும். ஆகவே நாலு நாள் முன்னாடியே அரைச்சு வைச்சுப் புளிக்க வைக்கணும். கையில் இரண்டு வயதுக் குழந்தை. அதன் பின்னர் எங்கபையர் பிறந்தப்போவும் அப்படித் தான்.மடியில் போட்டுக் கொண்டு கல்லுரலில் அரைப்பேன். கிரைண்டர் எல்லாம் அப்போ பழக்கத்துக்கு வரலை. பழக்கத்துக்கு வந்ததும் கூட வாங்கும் வசதி வரவில்லை.

      Delete
    9. அதிரசம், தேன்குழல் மாவெல்லாம் கையால் இடிக்கணும்! :))) அதை விட்டுட்டேனே! பயத்தம் லாடுக்கு பருப்பை வறுத்து உலக்கையால் இடிக்கணும்.

      Delete
    10. நினைக்கவே மலைப்பா இருக்கு. எப்படி இதெல்லாம் சாத்தியம் (உடலுழைப்பில்) என்று தோன்றுது. என் பெரியம்மாவும் சொல்லுவா.. ச்ராத்தத்துக்கு எல்லாம் 20 பேருக்கு (கணவரின் தம்பிகள்/மனைவி/குழந்தைகள் வந்தா.. அப்புறம் வருபவர்களுக்கு) ஆசார சமையல்னு நெட்டி எடுத்துவிடும் என்பார்கள். வருஷத்துக்கு நிறைய திருநட்சத்திரம்னு, 20 பேரைக் கூப்பிட்டு, ப்ரபந்தம்லாம் வாசிச்சுட்டு சாப்பிடச் சொல்வாங்க. ஏகப்பட்ட ஐட்டம் பண்ணணும். நீங்க எழுதினதைப் படித்த பிறகுதான் இதெல்லாம் ஞாபகத்துக்கு வருது.

      பெண்களை அந்தக் காலத்துல ரொம்ப வேலை செய்யவச்சுப் படுத்துவாங்களோ? ஹா ஹா

      Delete
    11. நெல்லைத் தமிழரே, எங்க பிறந்த வீட்டில் யாரும் இத்தனை வேலை செய்ததில்லை. அதோடு அங்கே வேறு விதம். ரொம்பக் கஷ்டப்படுத்திக்கவும் மாட்டாங்க, கஷ்டப்படவும் விடமாட்டாங்க! ஸ்ராத்தம், சமாராதனை போன்றவற்றிற்கு சமையலுக்கு ஆள் உண்டு. என்னுடைய இரண்டு பிரசவ சமயத்தில் கூட வீட்டில் சமைக்கவெனத் தனி ஆள் உண்டு. இன்னும் சொல்லப் போனால் நான் இத்தனை வேலை செய்ததைப் பார்த்து என் அம்மா அழுதிருக்கார்! ஒவ்வொருத்தர் வாழ்க்கை ஒவ்வொரு விதம். 90களுக்குப் பின்னர் தான் மிக்சி, கிரைண்டர், எரிவாயு அடுப்பின் பயன்பாட்டை அதிகரித்தது எல்லாம். அதற்கு முன்னரும் எரிவாயு அடுப்பு என்னிடம் இருந்தாலும் அதில் விசேஷங்களுக்குச் சமைக்க முடியாது அப்படிச் சமைக்க நேர்ந்தால் சிலிண்டரையே கவுத்துப் போட்டு என் பெரிய நாத்தனார் அலம்புவார். அடுப்பையும் கவுத்துப் போட்டு அலம்புவார். மடி, ஆசாரம் என்பது அதிகமாகவே பார்ப்பார்கள். இப்போல்லாம் எல்லோருக்கும் எல்லாமும் மாறி விட்டது. அடுத்த நூற்றாண்டுக்கு வந்து விட்டோம் இல்லையா? :))))))

      Delete
    12. உங்க பெரியம்மாவெல்லாம் எனக்கு 2 தலைமுறையாவது முந்தி இருப்பாங்க! அது காலம் இன்னமும் கடினம் இல்லையா? என் மாமியார் கிராமத்தில் மாட்டுக் கொட்டில் அலம்பி விட்டு பசு மாடு எனில் மாடு கறந்து எல்லாமும் பண்ணுவார். எருமை மாடு மாமனார் கறப்பார். நம்ம ரங்க்ஸும் சின்ன வயசில் மாமனார் இல்லை எனில் மாடெல்லாம் கறந்திருக்கார். வண்டி மட்டும் அதிகம் ஓட்டினதில்லையாம். என் பெரிய மைத்துனர் வண்டி ஓட்டுவார். மாடெல்லாம் கறந்ததில்லை. சாணி மட்டும் ஆள் வந்து வாரி எருக்குழியில் கொட்டுவாங்க! மாட்டை எல்லாம் மாமனார் தான் குளிப்பாட்டுவார். அந்த மாதிரி வேலை நம்மால் செய்ய முடியுமா?

      Delete
  11. ஆஆஆஆஆஆஆஅ கீசாக்கா வேலைக்குப் போன கதையோ... இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துது...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அடுத்த மாசம், நான் வெள்ளை மாளிகை கீதானு போட்டுக்குவேனே! ஜாலிலோ ஜிம்கானா!

      Delete
    2. நோஓஓஓஓஓஒ ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமெண்டால் மட்டும்தேன் படம் போடோணும்:)).. இல்லாட்டில் உண்ணா விரதம் இருப்போம் வெள்ளை ஹவுஸ்:) முன்னால்:))

      Delete
    3. போனப்புறமாத்தானே படமெல்லாம் எடுத்துப் போட முடியும். இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  12. ஆஆஆஆஆ அப்பவும் மாமா கீசாக்காவைக் கூட்டிப்போகவில்லை..:) இப்பவும் மார்க்கட்டுக்குக் கூட்டிப் போறாரில்லை கர்ர்:)) ஹா ஹா ஹா... ஹிந்தி தெரியாமல் முழிச்ச கதையை விடப் பெரிய கதையாக இருக்கும்போல இருக்கே இக்கதை.. தொடரட்டும் வாறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளை மாளிகை அதிரா, மாமா அதெல்லாம் எனக்குக் கூட வந்து எந்தவிதமான உதவிகளும் செய்ததில்லை. இப்போ மார்க்கெட்டுக்குப் போறதையே நிறுத்தியாச்சு!ஹிந்தி தெரியாமல் நான் எங்கே முழிச்சேன்! அதெல்லாம் ஜமாளிச்சோமாக்கும்!

      Delete
  13. வழிதெரியாத இடமென்றால் முடிந்த வரை நடந்துபோகலாம் சில நேரங்களில் அசட்டு தைரியம்கை கொடுக்கும்

    ReplyDelete
    Replies
    1. நடந்தெல்லாம் போக முடியாது ஐயா! அசட்டு தைரியமும் இல்லை.

      Delete
  14. ஸ்வாரஸ்யம் தான். வேலை பார்த்த கதை மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், பெரிசா ஒண்ணும் இல்லை. :))))

      Delete
  15. ஆமாம் கீதாக்கா நீங்க சொல்லியிருக்கீங்க இல்லையா...வேலைக்குப் போயிருக்கிறேன் என்று...இதோ முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்.

    பதிவுகள் வாசிக்காமல் விட்டு விடுகிறேன். காலையில் வரும் என்று நேரம் தெரிந்த பதிவுகளுக்கு நேரடியாகச் சென்று விடுவதால் வரும் பிரச்சனை இது...ஹிஹிஹி

    ப்ளாகர் பார்த்தோ இல்லை தளத்தில் சைடில் தொடரும் வலைத்தளங்கள் அப்டேட் ஆகியிருக்கா என்று பார்க்காமல் போவதால்...

    இரண்டாவது வேலைப் பளுவும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா! மெதுவா நேரம் கிடைக்கும்போது வாங்க! நானுமே இப்போ அடிக்கடி வருவதில்லை.

      Delete
  16. அக்கா ஆஹா உங்களைப் போலவே எனக்கும் மத்திய அரசு வேலை தேர்வாகியுள்ளேன் என்று செய்து மட்டும் வந்த 15 நாளில் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி கல்யாணம் ஆன பிறகு ஆர்டர் வர புகுந்த வீட்டில் வேலைக்குச் சேரவேண்டாம் என்றிட....ம்ம்ம்ம் என்ன செய்ய. வேலையில் சேர்ந்திருந்தால் என்று ஒரு பகுதியும், சேரவில்லை என்பதால் என்ற பகுதியையும் கதையாகவே எழுதலாம்...ஏதோ ஒரு படம் கூட வந்ததாமே இப்படி..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, மத்திய அரசு வேலை எனக்குக் கிடைச்சிருக்கும். ஆனால் அடிக்கடி மாற்றல் வரும் என்பதால் மாமா வேண்டாம்னு சொல்லிட்டார். இப்போல்லாம் அவங்க எங்கே இருக்காங்களோ அங்கேயே அந்த ஊருக்குள்ளேயே மாற்றல் கொடுக்கிறாங்க. அப்போ அப்படி இல்லை. மாற்றல் வந்தால் போய்த் தான் ஆகணும்.

      Delete
  17. அப்பா அந்த உத்தரவை அப்படியே எங்களுக்குத் திருப்பி இருந்தார்.//

    அதே அதே அக்கா எனக்கும் என் அப்பா எங்களுக்கு சென்னைக்கு திருப்பி அனுப்பியிருந்தார்....

    எனக்கும் சென்னை ரொம்பவே புதியது. வேலைக்குப் போகவில்லை என்றாலும் வெளி வேலைகள் எல்லாமே தனியாகவே சென்றுதான் செய்ய வேண்டும். முதலிலேயே சொல்லப்பட்டது இப்படியானவற்றிற்கு தன்னை எதற்கும் சார்ந்திருக்கக் கூடாது என்று...எல்லாமே தனியாகச் செய்து கொள்ள வேண்டும் என்று. எனக்கும் அந்தத் தைரியம் உண்டு. பிறந்தவீட்டிலும் அப்படித்தானே அதனால்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்குச் சென்னை புதியதுனு சொல்ல முடியாது! அண்ணாவுக்கும் தம்பிக்கும் திருமலையில் பூணூல் போட்டப்போத் திரும்பி வந்து நாங்க சென்னையில் தங்கி சுற்றிப் பார்த்தோம். அப்போவே எங்களுக்கு, குறிப்பா எனக்குச் சென்னை பிடிக்கலை! இத்தனைக்கும் அப்போப் பெரும்பாலான இடங்களுக்குத் திருவல்லிக்கேணியில் பெரியப்பா இருந்த வீட்டில் இருந்து நடந்தே சுற்றிப் பார்க்கச் செல்வோம். 63-64 ஆம் ஆண்டுகளில்!

      Delete
  18. அதுவும் ராமகிருஷ்ணா பள்ளியைச் சேர்ந்த சாரதா வித்யாலயா. //

    ஆஹா என் புகுந்த வீட்டில் பெண்கள் சாரதாவித்யாலயா ஆண்கள் அதைச் சார்ந்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஐந்து வகுப்பு வரை சாரதா வித்யாலயா அதன் பின்னர் தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி. சித்தப்பாவுக்கும் ராமகிருஷ்ணா மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மயிலையில் சித்தப்பா மடத்திலேயே அதிக நேரம் செலவு செய்வதைப் பார்த்து அவர் அம்மா, "வீட்டுக்கு மூத்த பிள்ளை, சந்நியாசியாகிவிடப் போகிறான்." எனப் பயப்படுவார் எனச் சொல்லுவார்கள். ஆகவே அவர் பிள்ளைகளை அங்கே படிக்க வைத்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இதைத் தான் ஜெயமோகன், சித்தப்பா வருமானம் இல்லாமல் சாதாரணப் பள்ளியில் படிக்க வைத்ததாகச் சொல்லுவார். எஞ்சினியரிங், மருத்துவம்னு படிக்க வைக்க முடியலைனு சொல்லுவார். ஆனால் உண்மை என்னவெனில் மூத்த பையனுக்கு ஆடிட் தொழில் தான் பிடித்திருந்தது. ஆகவே சி.ஏ. படித்தார். இரண்டாவது விமானத் துறையில் க்ரவுன்ட் இஞ்சினியராக இருந்து படிப்படியாக உயர்ந்தார். ஆரம்பத்தில் வாயுதூத்தில் இருந்தார். மூன்றாவது பையர் மத்திய அரசு அலுவலகத்தில் அதிகாரி பதவியில் சேர்ந்தாலும் அது பிடிக்காமல் தில்லியை விட்டுச் சென்னைக்கு வந்து இந்துவில் சேர்ந்தார். அவருக்குப் பத்திரிகைத் தொழில் தான் பிடித்தது.

      Delete
    2. ஜெ மோ வை விடுங்க...கீதாக்கா...இப்படித்தான் பலரும் உண்மை தெரியாமல் ஏதோ தாங்கள்தான் கூடவே இருந்து கவனித்தது போல பேசுவார்கள்.

      நல்ல வேலையில் தான் இருந்திருக்கார்கள் அவரவருக்குப் பிடித்த வகையில் அப்புறம் என்ன. இஞ்சினியரிங்க் மருத்துவம் படித்தால்தான் படிப்பா...ஊர் உலகம் இப்படித்தான்...

      அதே தான் என் கணவர் அவர் சகோதரர்கள் இராமகிருஷ்ணா மிஷன் பள்ளி திநகரில் தான் படித்தார்கள்...நாத்தனார் சின்ன மாமியார் பெண்கள் சாரதா வித்யாலயா. என் பூனா ஓர்ப்படியும் சாரதாவித்யாலயா. நித்யஸ்ரீ அவர் அக்கா காயத்ரி எல்லாம் அவரது தோழிகள். சீனியர், ஒரே வகுப்பு. என்று.

      கீதா
      கீதா

      Delete
    3. //நல்ல வேலையில் தான் இருந்திருக்கார்கள் அவரவருக்குப் பிடித்த வகையில் அப்புறம் என்ன// இருக்காங்க! ஹிஹிஹி!

      Delete
  19. ஒரு வேளை உஉங்கள் தம்பிகளை எங்கள் புகுந்த வீட்டு ஆண்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. "இந்து"வில் இருப்பவரைப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. அடிக்கடி தொலைக்காட்சியில் வருவார். பேட்டிகளில் இருப்பார். தி.ராமகிருஷ்ணன் என்னும் பெயர். மற்றவர்களைத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் மூத்தவர் பத்ரி சேஷாத்ரியுடன் தமிழ் ஹெரிடேஜில் இருப்பதால் அது சம்பந்தமான விழாக்கள், சுற்றுலாக்களில் பங்கெடுப்பார். இப்போக் கூட ஹம்பி எல்லாம் போனாங்க.

      Delete
  20. அக்கா தைரியமாக கையாண்டிருக்கீங்க சிச்சுவேஷனை. இந்த தைரியம் நமக்கு எப்போதும் கை கொடுக்கும் கீதாக்கா. சூப்பர் கீதாக்கா. எனக்கு ரொம்பப் பிடித்திருக்கு நீங்க இப்படித் தனியாகவே முயன்று உங்கள் இடத்தைக் கண்டுபிடித்து ஏறி என்று.

    பாராட்டுகள் கீதாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, நெ.த. சொல்லுவது போல் எங்க புக்ககத்திலும் இதை அசட்டு தைரியம் என்றே சொல்வார்கள். எப்படியோ எங்கும் ஏமாறாமல் எப்படியோ சமாளித்துக் கொண்டு வருகிறேன். எதானாலும் நேருக்கு நேர் சொல்லிவிடுவதால் பின்னாடி பேசுவா என்னும் புகார் இல்லை. இங்கே குடியிருப்பிலும் அப்படித் தான் சொல்வாங்க. மாமி பின்னாடி பேச மாட்டாங்க என்று!

      Delete
  21. நீங்கள் வேலைக்குச் சென்ற அனுபவங்கள் பிரமிப்பாக இருக்கின்றன. எப்படித் தனியாகவே சென்று சமாளித்திருக்கின்றீர்கள். இப்போதும் கூட எங்கள் குடும்பங்களில் பெண்ணுடன் கணவன் கூடவே செல்ல வேண்டியதாகத்தான் இருக்கிறது.

    உங்கள் தைரியத்தை மெச்சுகிறேன் அக்காலகட்டத்திலேயே இருந்திருக்கிறதே.

    ஸ்வாரஸ்யமாக இருக்கிறது தொடர்கிறோம்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், மழையினால் உங்க ஊரில் பாதிப்பு இல்லை எனவும் அக்கம்பக்கம் பாதிப்பு எனவும் சொல்லி இருந்தீர்கள். எல்லாம் சரியாப் போச்சா? ஆயிற்று! பிள்ளையாரோடு மழை (தென்மேற்குப் பருவ மழை) போயிடும். அப்புறம் வ.கி.ப.ம. தான், அதுக்கு இன்னும் நாள் இருக்கு. காற்றே மாறவில்லையே!

      Delete
    2. துளசிதரன், பள்ளிக்காலத்திலே இருந்தே நான் தைரியமாக முன்னே வந்து பேசுவேன். தனியாகப் போவது ஒன்றும் பிரச்னை இல்லை. ஒரு நாள் துணைக்கு வரலாம். தினம் தினம் யார் வருவார்கள்? அதோடு என் கணவர் நான் சென்னையில் அடிக்கடி வந்து தங்கி இருப்பதால் சமாளிச்சுப்பேன் என நினைத்துத் தனியாகப் போகச் சொல்லி விட்டார். அக்கம்பக்கம் விசாரிக்கும் வழக்கம் என்னிடம் உண்டு என்பதால் ஒரு மாதிரி போய்ச் சேர்ந்தேன்.

      Delete