நம்ம அம்பத்தூர் வீடு! வாசலில் வேப்பமரம்! இப்போ வெட்டிட்டாங்க! :( சொல்லச் சொல்லக் கேட்கலை!
திருக்கயிலை தரிசனம் அஷ்டபத் என்னும் இடத்தில் இருந்து!
மானசரோவர் இரு கோணங்களில்
பூடா நீல்கண்ட்(Bhuda Neelkant) சிலர் விஷ்ணுவின் தோற்றம் என்றும் சொல்கின்றனர். எங்களுக்கு ஈசன் ஆலஹால விஷத்தை உண்டதும் இங்கே வந்து மயக்கமாய்ப் படுத்ததாகச் சொன்னார்கள். மேலே பசுபதிநாதர் கோயில்
மேலே காட்மாண்டு நகரம் விமானத்திலிருந்து.
கீழே அதே பூடா நீல்கண்ட் வேறே கோணத்தில்.
இப்போ எதுக்கு இவை எல்லாம்னு கேட்கறீங்களா? சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! பார்க்காத்வங்க பார்க்கலாமே! இந்தப் படங்களை எடுத்தவர் நம்ம ரங்க்ஸ். டிஜிடல் காமிராவெல்லாம் அப்போ வாங்கலை. கானன் ஃபில்ம் மாற்றும் காமிரா தான்! 38 ஃபில்மோ அல்லது 36 ஃபில்மோ தான்! அதிகப்படி ஃபில்ம் சுருளை வாங்கிட்டுப் போகாததால் கயிலை பரிக்ரமா காட்சிகள் எல்லாம் எடுக்க முடியலை! ஃபில்ம் இருந்தவரைக்கும் எடுத்தோம். எல்லோரும் டிஜிடல் காமிராவில் வீடியோ படமாக்கிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். :(
திடீர்னு பழைய பதிவுகளில் ஒரு தேடல் நடந்தப்போக் கிடைச்சது இவை எல்லாம். வீட்டின் படமே வாசலில் முல்லை, மல்லிகைக் கொடிகளோடு ஒரு படம் போட்டிருந்தேன். அதைத் தேடி எடுக்க முடியலை! இது சமீபத்தில் எடுத்த படம்! ஹிஹிஹி, 2006 ஆம் வருடமோ? அப்போக் காமிரா இல்லையே? யார் எடுத்த படம்? நினைவில் இல்லை!
மீட்டெடுத்த படங்கள் - ஸ்வாரஸ்யம்.
ReplyDeleteநான் கூட நேற்று External Hard Disk-ல் நான் எடுத்து, சேமித்து வைத்திருக்கும் நிழற்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இனிமையான பல நினைவுகளைக் கொடுத்தது.
வாங்க வெங்கட், மீட்டு எல்லாம் எடுக்கலை. கோமதிக்காக நான் வேலை செய்த அனுபவப் பதிவுகளைத் தேடினப்போப் பதிவுகளிலேயே கிடைத்தன. அதிலிருந்து இங்கே வெட்டி ஒட்டியாச்சு!
Deleteஅம்பத்தூர் வீடு அம்பத்தூர் வீடுன்னு சொல்றீங்களே... அதைத்தான் அடுத்தவங்களுக்கு வித்தாசே...இன்னும் உங்க வீடுன்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க?
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், 30 வருடங்களுக்கும் மேல் எங்க வீடாகத் தானே இருந்தது! புகை விடாதீங்க! :)
Deleteஇதைத்தான் நானும் கேட்க நினைத்தேன் நெல்லை முந்தி விட்டார்.
Deleteஹாஹாஹா!
Deleteதிருக்கயிலை படமும் கடைசிப் படமும் நல்லா வந்திருக்கு.
ReplyDeleteஆரம்பிச்சுட்டீங்களா.... யாருமே கற்பனை பண்ணாதபடிக்கு, சிவன் ரெஸ்ட் எடுக்கறார், அது விஷ்ணு இல்லைனு சொல்லி....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நெ.த. அங்கே எங்களுக்கு வந்த நேபாளி வழிகாட்டிகள் சொன்னதைத் தான் சொல்லி இருக்கேன். விஷ்ணு என்பதற்கான சங்கு, சக்கரம் இருக்கத் தான் செய்யுது! :) இருவருமாகச் சேர்ந்து காட்சி அளிப்பதாகவும் சிலர் சொன்னார்கள்.
Delete/வாசலில் வேப்பமரம்! இப்போ வெட்டிட்டாங்க! :// - நான், எங்க வீட்டுல இருந்த 6 மா மரங்களையும், கருவேப்பிலை, எலுமிச்சை மரங்களையும் தம்பி வெட்டினதை வருத்தமா நினைக்கிறேன். நீங்க வேப்ப மரத்துக்கு இந்த அலுப்பு அலுத்துக்கறீங்களே... உங்களுக்கே இது ஓவராப் படலை?
ReplyDeleteநெ.த. எங்க வேப்பமரத்தை நீங்க பார்த்ததில்லை. குழந்தை போல் வைச்சிருந்தோம். அதிலிருந்து ஒரு சின்னக் கிளையை வெட்டுவது என்றால் கூட மின்வாரியக் காரர்கள் என்னைக் கூப்பிட்டுக் கேட்காமல் வெட்ட மாட்டாங்க! அந்த அம்மா வருத்தப்படும். என்று சொல்வாங்க! :( தெருவுக்கே ஓர் அழகாய் இருந்தது.
Deleteஅக்கம்பக்கம் எழுப்பின அடுக்குமாடிக்குடியிருப்புகள் கட்டும்போது போட்ட சிமென்ட், ஜல்லி, செங்கல்தூள், கலவை போன்றவற்றால் எங்க கருகப்பிலை மரம், பாக்கு மரம், மாதுளை மரம், எலுமிச்சை மரம், மாமரங்கள் (4) இருந்தன. எல்லாம்போய்விட்டன. அதில் பாதிரி வகை மரம் போனது தான் ரொம்ப வருத்தம். கடைசியில் மிஞ்சியவை நாரத்தை மரம். அதையும் நாங்க அங்கிருந்து கிளம்புகையில் வெட்டிச் சாய்த்தாச்சு! :( தென்னை மரங்கள் நான்கு தான் இருந்தன. அருமையாகக் காய்த்துக் கொண்டிருந்தன. அவற்றை இப்போது வேப்பமரம் வெட்டும்போது வெட்டிட்டாங்க!எனக்கு இதெல்லாம் ஓவராய்ப் படவில்லை. மனதில் அழுத்தமாகப் பதிந்த வடுக்கள்! :(
Deleteவேப்பமரம் படங்களை இணைத்துள்ளேன்.
Deleteசும்மாக் கலாய்ச்சேன். எந்த மரத்தையும் வெட்டினால், அத்துடன் வாழ்ந்தவர்களுக்கு வருத்தம் ஏற்படுவது இயற்கை. மரங்களும் நம்மைப்போல்தான் என்பது என் எண்ணம்.
Deleteசமீபத்தில், மரங்களும் வேர்களின் வழியாகப் பேசிக்கொள்கின்றன, சண்டையிட்டுக்கொள்கின்றன என்றெல்லாம் படித்தேன். சமீப பயணத்தில், மாமரத்தில் மாம் பிஞ்சுகள் நிறையப் பார்த்தேன். அதற்கு அந்த வீட்டு உரிமையாளர், சில மரங்கள் இப்படி சீசன் இல்லாத சமயத்தில் காய்க்கும், நிறைய பேசினால் நிறைய காய்க்கும் என்றார். (இன்னொரு இடத்தில், காய்க்காத மரத்தை வெட்ட உரிமையாளர் முடிவெடுக்கிறார்...ஆனால் மரங்களின் காவலன், அந்த மரத்திடம் வந்து அரை மணி நேரம் அன்பாகப் பேசி, இனி காய்த்துவிடு என்று சொல்லிவிட்டுச் செல்கிறார், அதற்குப் பிறகு அந்த மரம் நிறைய காய்க்க ஆரம்பித்துவிட்டது என்று படித்தேன்).
வேப்ப மரம் நல்லா இருக்கு. ரொம்ப குளிர்ச்சி தரும். கல்ஃப் தேசங்களில் நிறைய வேப்பமரத்தைப் பார்த்திருக்கிறேன் (பார்க் மற்றும் கார் நிறுத்தும் இடம் இவைகளில் ஏகப்பட்டது வளர்க்கிறார்கள்)
அம்பேரிக்காவில் ஹூஸ்டனிலும் குருவாயூர்க்கிருஷ்ணன் கோயிலில் மலை வேம்பு வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போ எப்படி வந்திருக்குனு தெரியலை.
Deleteஎங்க வீட்டு எலுமிச்சை மரம் காய்ப்பதற்கு என் அம்மா புட்டு சமைத்துப் போட்டார்கள். அதையும் ஓர் பௌர்ணமி அன்றே செய்ய வேண்டும் என்றார். அதே போல் நாரத்தை மரம் காய்க்க நான் புட்டு சமைத்துப் போட்டேன். தென்னை மரம் பாளை விட்டதும் வீட்டில் புட்டு சமைத்து விநியோகம் செய்தோம். அதெல்லாம் மறக்க முடியா நினைவுகள். மரங்களை மரங்களாக நினைக்கவில்லை! :(
Deleteபழைய இடங்களும் படங்களும் ஏதோ ஒரு வெறுமையைக் கொடுக்கத்தான்செய்யும்
ReplyDeleteவெறுமையைக் கொடுக்கவில்லை. பழைய நினைவுகளை மீட்டுத் தந்தன ஐயா!
Deleteநல்லா படம் காட்டி இருக்கீங்க...!! அம்பத்தூர் வீட்டின் படத்தில் வீட்டில் தெரிவது மாமாதானே? அந்த உயரமே சொல்கிறதே!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், மாமாவே தான்! இது 2006 ஆம் வருடம் போட்ட பதிவில் இருந்து எடுத்த படம். படம் எப்போ யார் எடுத்தாங்கனு நினைவில் வரலை!
Deleteபாம்பணையில் படுத்திருப்பதால் விஷ்ணுவோ? ஆலகால விஷம் உண்ட சிவனைதான் பார்வதி கழுத்தில் கைவைத்து நீலகண்டனாக்கி விடுகிறாரே...
ReplyDeleteஶ்ரீராம், சிலர் விஷ்ணு எனவும், சிலர் ஆலஹாலம் உண்ட சிவன் எனவும், சிலர் ஹரியும் சிவனும் சேர்ந்த திருக்கோலம் எனவும் அவரவருக்குத் தோன்றியபடி சொல்கின்றனர். ஆனால் சமீபகாலமாக இவர் அதிகமாகப் படங்களாக வெளி வந்து பிரபலமாகவும் ஆகி விட்டார்.
Deleteவேப்பமரம் இல்லாமல் போனதற்கு வருத்தம்... ம்...
ReplyDeleteவாங்க டிடி. ஆமாம் வேப்பமரத்தை இழந்த வருத்தம் நீங்கவில்லை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅத்தனைப் படங்களும் அழகாக இருக்கின்றன. அந்த வேப்பமர படங்கள் மிகவும் அழகாக அம்பத்தூர் வீட்டிற்கே (நீங்கள் சொல்லி, சொல்லி நானும் அந்த பெயரையே சூட்டுகிறேன்.) ஒரு அம்சமாய் இருக்கின்றன. திருக்கயிலை தரிசனம், வெவ்வேறு கோணங்களில் எடுத்த படங்கள் என அத்தனையும் சிறப்பு. பூடா நீலகண்ட் படங்களை சற்றே பெரிதாக்கி பார்க்கலாம் என்றால் இயலவில்லை. டிஜிட்டலில் எடுக்கவில்லை என்பதாலா? பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, படங்கள் எதுவும் நான் எடுக்கலை. ஹிஹிஹி, அதான் நல்லா வந்திருக்கு. அம்பத்தூர் வீட்டுப் படங்களை நீங்க இப்போத் தான் பார்க்கிறீங்கனு நினைக்கிறேன். பூடா நீல்கண்ட் படங்களைப் பெரிதாக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
Deleteஉங்கள் அம்பத்தூர் வீடு நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteவேப்பமரம் அழகுதான், பச்சை பசேல் என்று எல்லோருக்கும் நிழல் தந்து கொண்டு.
வீட்டுக்கு முன் மண்ணை கொட்டி போட்டு இருந்த படம், தண்ணீர் வீட்டுக்குள் புகுந்த காட்சி என்று அம்பத்தூர் வீடு மனதில் பதிந்து விட்டது.
மரங்களோ செடிகளோ வெட்டபடும் போது மனம் வருந்துவது நிஜம்.
கயிலை படங்கள் அற்புதம். நீல்கண்ட் படங்கள் நினைவுகளை அங்கு கொண்டு போனது.
//கோமதிக்காக நான் வேலை செய்த அனுபவப் பதிவுகளைத் தேடினப்போப் பதிவுகளிலேயே கிடைத்தன. அதிலிருந்து இங்கே வெட்டி ஒட்டியாச்சு!//
அப்போ அடுத்து அந்த பதிவுகள் மீள் பதிவாய் வருமா? என் பின்னூட்டம் வருதா பாருங்கள். சில பதிவுகள் படித்த நினைவு. (வேலை அனுபவ பதிவுகளை)
வாங்க கோமதி, வீட்டுக்குள் தண்ணீர் புகுந்த படங்களும் இருக்கு. ஆனால் இவை பழைய பதிவுகள். ஆரம்பகாலப் பதிவுகள். அதில் உங்கள் பின்னூட்டம் எல்லாம் இருக்காது. 2006 ஆம் வருடம் போட்டவை! ஒருவேளை நீங்கள் போய்ப் படித்திருக்கலாம்.
Deleteபடங்கள் அருமை
ReplyDeleteகாட்மண்டு மேலிருந்து எடுத்தது ஸூப்பர்
வாங்க கில்லர்ஜி! காட்மாண்டுவில் இறங்கும் முன்னர் எடுத்தது என நினைக்கிறேன். ஏனெனில் முக்திநாத் படங்களெல்லாம் எடுக்க முடியலையே! :(
Deleteபடங்கள் அருமை...
ReplyDeleteஆசையோடு வளர்த்தெடுத்த மரங்களைப் பறி கொடுக்கும் போது
மனசாட்சியுள்ள யாருக்கும் வேதனை ஏற்படத்தான் செய்யும்....
என்ன செய்வது...
காலக் கொடுமைகளில் இதுவும் ஒன்று...
நன்றி துரை, படங்கள் நம்மவர் எடுத்தவை! முதல் படம் தவிர்த்து. வேப்பமரங்கள் படங்களெல்லாம் நான் எடுத்தது. சமீபத்தில். 2016 ஆம் வருடம்னு நினைக்கிறேன்.
Deleteகீதாக்கா படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன. மாமா நின்று கொண்டிருக்கும் அந்த அம்பத்தூர் வீடு படம் முன்னரே பார்த்த நினைவு. அம்பத்தூர் வீட்டுப் படங்கள்! நினைவிருக்கிறது. அந்த வேம்பு உட்பட. அழகான வீடு.
ReplyDeleteகாட்மண்டு ஏரியல்வியூ செமையா இருக்கு.
அந்தக் கடைசி படம் துளசி கோபால் அக்காவும் போட்டிருந்தாங்களே. விஷ்ணுனு சொல்லி. ஆனால் அது சமீபத்திய படம் . நீங்க எத்தனை வருடங்களுக்கு முன்னர் போயிருக்கீங்க...பரவால்ல கீதாக்கா எந்த கேமராவா இருந்தா என்ன படங்கள் அழகா இருக்கு. டிஜிட்டல்னா அப்படியே அப்லோட் செய்யலாம் இதை நீங்க இப்ப ஃபோட்டோ எடுத்து வேற போடவேண்டும் இல்லையா? நன்றாகவே இருக்கின்றன.
கீதா
எந்த சாமியா இருந்தாலும்
வாங்க தி/கீதா, பழைய காமிராவில் எடுத்த படங்களை எல்லாம் ஸ்கான் செய்து போட்டேன். அப்போது ஜீவ்ஸ் சொல்லிக் கொடுத்தார். ராமலக்ஷ்மியும் சொல்லிக் கொடுப்பாங்க! டிஜிடல் வந்ததும் தான் நேரடியாகக் கணினியிலேயே ஏற்ற ஆரம்பித்தேன். அதிலும் ஆரம்பகாலங்களில் பிகாசாவில் போட்டு அதை ஃபோட்டோஷாப் செய்து பின் வலைப்பக்கங்களில் நேரடியாகப் போட்டுக் கொண்டிருந்தேன். அதுவே பெரிய சாகசமாகத் தெரிந்தது அப்போ!
Deleteமானசரோவர் செமையா இருக்கு.
ReplyDeleteஎனக்கும் திருக்கயிலை, மானசரோவர் பார்க்க வேண்டும் என்ற அவா உண்டு. வாய்ப்பு கிடைக்க வேண்டும்...
கீதா
உடல் நலம் போகும்படி இருக்கையிலேயே அங்கெல்லாம் போயிட்டு வந்துடணும் தி/கீதா. நாங்க போனப்போ 80 வயது ஆனவங்கல்லாம் வந்திருந்தாங்க. இப்போ அரசும் சரி, நேபாளத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களும் சரி 70 அல்லது 75 வயதுக்குள் என மாற்றிவிட்டதாகச் சொல்கின்றனர். சங்கரா தொலைக்காட்சி கண்டிப்பாக 70 வயதுக்குக் கீழுள்ளவர்கள் தான் எனச் சொல்கிறது.
Deleteமானசரோவர் செமையா இருக்கு.
ReplyDeleteஎனக்கும் திருக்கயிலை, மானசரோவர் பார்க்க வேண்டும் என்ற அவா உண்டு. வாய்ப்பு கிடைக்க வேண்டும்...
கீதா
ரெண்டு தரம் வந்திருக்குப் போல!
Delete