எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 08, 2019

திடீர் விருந்தாளிகள் அதிகாலையில் வரவு!

இஃகி, இஃகி, இஃகி, இன்னிக்குக் காலம்பர ஐந்து மணிக்கு எழுந்துக்கும்போதே லேசாகத் தூறல். வானம் என்னமோ பெரிசாக் கொட்டும் போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தது. நான் வாசல் தெளிக்கும் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு காஃபி டிகாக்‌ஷன் போட்டுக் கஞ்சியும் தயார் செய்துட்டு நம்ம ரங்க்ஸ் வரவரைக்கும் காத்துண்டு இருக்கணுமேனு மறுபடி படுக்கையில் போய்ப் படுத்துட்டேன். அவர் கோபுர தரிசனம் முடிக்கப் பத்து நிமிஷத்துக்கு மேலாகும். ஆகவே படுத்துட்டு இருந்தப்போ திடீர்னு கத்தினார் பாருங்க! தூக்கி வாரிப் போட்டது. என்னனு கேட்டால் இங்கே வந்து பார்னு ரகசியமாக் கூப்பிட்டார். சத்தம் போட்டால் ஓடிடுங்க! என்னவோ ஏதோனு எழுந்து வந்து பார்த்தால் கம்ப்யூட்டர் அறையின் தெற்குப் பார்த்த ஜன்னலில் ஒடுங்கிக் கொண்டு நம்மாளுங்க நாலு பேர் உட்கார்ந்திருக்காங்க. ஜன்னலுக்கு உள்ளே இருந்த எங்களையே பார்த்தாங்க. அதிலும் அம்மாவுக்கு ஒரே முறைப்பு.  நாங்க என்னடா? என்ன விஷயம்னு கேட்டதும் முகத்தை நீட்டிக் கொண்டு உன்னிப்பாகப் பார்த்தனர் நால்வரும்.  ஏற்கெனவே நேற்றே சொல்லி இருந்தார்.  ஜன்னலுக்கு மேலிருக்கும் சன்ஷேடில் உட்கார்ந்துக்கறாங்க. வால் நீளமாகக் கீழே தொங்குது என்று சொன்னார். நான் போய்ப் பார்க்கறதுக்குள்ளே அது போயிடுத்து! இன்னிக்கு விடிந்தும் விடியாத அதிகாலை கருக்கிருட்டில் இவை குடும்பத்துடன் தேடி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தன.

வெளிச்சம் இல்லாததால் விளக்குப் போடறேன் என்றார். வேண்டாம், ஓடிப் போயிடுங்க என்று சொல்லிவிட்டு மெதுவாக செல்லை எடுத்துக் கொண்டு வந்தேன். அட? காமிரா அங்கேயே தானே கம்ப்யூட்டர் டேபிளில் இருந்தது! அது நினைவில் இல்லை. முதலில் கொஞ்சம் பயத்துடனேயே இரண்டு படங்கள் எடுத்தேன். திருப்தியாக இல்லை. அதுக்குத் தான் விளக்குப் போடறேன் என்று மறுபடி ரங்க்ஸ் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டுக் கொஞ்சம் கிட்டப் போய்ப் படம் எடுத்துக் கொண்டேன். திருப்தி இல்லை தான்! ஆனால் விளக்கைப் போட்டால் அதுங்க அங்கேயே உட்கார்ந்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லையே! வந்தவரை போதும்! என்ன சொன்னால் நெ.த. தான் சொல்லுவார்! அவருக்கு அதே வழக்கம். சொல்லிக் கொண்டு இருக்கட்டும்னு விட்டுட்டேன்.  அம்மாவுக்கு அப்பாவோ அது? பேன் பார்த்துக் கொண்டிருந்தது. அதுக்குள்ளே ஒரு சின்னக் குட்டியார் இடப்பக்கம் கடைசியில் இருப்பவர் வலைக்கதவின் ஒரு பக்கத்துக் கொண்டி கழன்றிருந்ததால் அதை எடுத்துட்டு உள்ளே வரலாமா என ஆராய்ந்து கொண்டிருந்தார். கதவும் கொஞ்சம் போல் திறந்தும் விட்டது. இடுக்கு வழியாகக் கையை உள்ளே நுழைக்கப் பார்த்தார். உடனே நம்மவர் கம்பை எடுத்துக்கொண்டோ/எடுக்காமலோ அவற்றை விரட்டினார். எல்லாம் போயிடுத்துங்க! அதுக்கப்புறம் அந்த வலைக்கதவுப் பக்கம் இருக்கும் கண்ணாடிக்கதவை நன்கு அழுத்தி மூடி விட்டு வந்தார்.

காலை இருட்டில் அதுங்க இருப்பது சரியாத் தெரியலை! என்றாலும் பெண்ணுக்கும், பையருக்கும் அனுப்பி வைச்சேன். அவங்க பார்த்து ரசிச்சாங்க!

இரண்டு, மூன்று நாட்களாகக் காற்று வேகம் அதிகம்! வண்டி ஓட்டமுடியவில்லை. நேற்றுப் பெரிய ரங்குவைப் போய்ப் பார்த்து சுமார் ஆறு மாதங்களாவது ஆகி இருக்கும்னு போயிட்டு வந்தோம். காலம்பரவே கோயிலில் கூட்டம் அதிகம் இல்லைனு புரிஞ்சது. அதோடு பெரிய ரங்குவுக்கு இப்போ ஜ்யேஷ்டாபிஷேஹம் முடிஞ்சு தைலக்காப்புச் சார்த்தி இருப்பதால் முக தரிசனம் மட்டும் தான். முழுசாவும் பார்க்க முடியாது.  திருவடி தரிசனம் இல்லை.  அதனாலும் கூட்டம் குறைவு! நாங்க போகலாம், வேண்டாம்னு எப்போவும்போல் இழுத்துப் பறித்துக் கொண்டு இருந்தோம். கடைசியில் 3 மணிக்குப் போகலாம் வானு கூப்பிட்டார். உடனே கிளம்பினோம். வழக்கமான முறையில் முதலில் தாயாரைப் பார்த்தோம். அங்கேயும் கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் உள்ளே சந்நிதிக்கு நேரே மக்கள் நின்று கொண்டு நகராமல் பார்க்கவிடாமல் செய்து கொண்டிருந்தனர். நல்லவேளையா நாங்க வந்தப்போ அவ்வளவு கூட்டம் இல்லை. தாயாரைப் பார்த்து சடாரி சாதித்துக் கொண்டு மஞ்சள், மரிக்கொழுந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வைகுண்ட வாசல் அருகே தன்வந்திரி சந்நிதிக்குப் பக்கம் நின்றோம். சிறிது நேரத்தில் பாட்டரி கார் வந்தது.

நம்பெருமாள் க்கான பட முடிவு

அதில் போய் ஆர்யபடாள் வாசலில் இறங்கிக் கொண்டு உள்ளே போனால் ஐம்பது ரூபாய்ச் சீட்டு வாங்கும் இடத்தையே மாத்தி இருக்காங்க! என்னடா இது சோதனைனு நினைச்சுட்டுப் போனால் அங்கே உள்ளே இருந்தவர் கூட்டமே இல்லை. சும்மாப் போய்ப் பாருங்கனு சொல்லிட்டாராம். சரினு போனால் வழியில் இருந்த பாவைகளும் நேற்று எதுவும் கேட்கவில்லை. நாங்க உள்ளே போகிற வழியில் செல்வதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். உள்ளே போனால் அங்கே தான் சந்தனு மண்டபத்தில் ஜெய, விஜயர்களுக்கு எதிரே சுமார் பத்துப் பதினைந்து நிமிஷங்கள் காத்திருக்க வேண்டி வந்தது. பின்னர் உள்ளே போகும்போதே ரங்குவைப் பார்த்துக் கொண்டே போனேன். நம்பெருமாளும் உட்கார்ந்திருந்தார். எட்டிப் பார்த்ததில் பக்கத்தில் யாகபேரர் இருப்பதும் தெரிந்தது. சரினு மறுபடி ரங்குவைப் பார்த்தேன். மார்பு வரை ஆடை மூடி இருக்க முகம் எந்த அலங்காரங்களும் இல்லாமல் எண்ணெய்க்காப்புடன் காட்சி அளித்தார் ரங்கு! நன்கு தரிசனம் செய்து கொண்டோம். நம்பெருமாள் வழக்கம் போல் நமட்டுச் சிரிப்புடன் காட்சி தந்தார். ஆடி 28 ஆம் தேதி வருவீங்க இல்லையா, அப்போப் பார்க்கலாம் என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். நேற்று பட்டாசாரியார்களும் கடுகடுவென விரட்டாமல், மெதுவாகவே பார்த்தாச்சுன்னா போங்க மாமி! என்று சொன்னார்கள். அப்படியும் ஒரு நிமிஷம் நின்று ரங்குவைப் பார்த்துட்டுத் திரும்பி வந்தேன்.

3 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி 4-10க்குள் ரங்கு, தாயார் இருவரையும் பார்த்துவிட்டு வீட்டுக்கும் கிளம்பியாச்சு!

36 comments:

  1. இந்த மாதிரி மனதுக்குள்ளேயே பேசுவது என்பது அசாத்தியம்... அதை எழுதுவது அதைவிட...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, ரொம்ப நாட்கள்/வருடங்கள் கழிச்சு முதல் வரவு! நமக்கு மனதுக்குள் பேசிக்கொள்வது தானே முக்கியப் பொழுது போக்கு! :)))))

      Delete
  2. எப்படியோ இரு தரிசனங்கள் திருப்திதானே

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா. நன்றி.

      Delete
  3. நண்பர்கள் வருகையா? மற்ற வீட்டுக்காரர்களிடம் எச்சரித்து வையுங்கள். ஜன்னல்கள் திறந்திருந்தால் உள்ளே நுழைந்து விடப்போகிறார்கள். குழந்தைகள் இருக்கும் வீடாக இருந்தால் இன்னும் சிரமம்.

    ReplyDelete
    Replies
    1. அட? அவங்க இங்கேயே தானே இருக்காங்க! எங்கே போவாங்களாம்? அவங்க இடத்திலே தானே நாங்க வீடு கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கோம்! :)))) தினம் பலமுறை எல்லாவீடுகளுக்கும் போவாங்க! கிடைச்சதை எடுத்துப்பாங்க! முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே ஒரு தரம் இதே குடியிருப்பில் வாடகைக்கு இருந்த வீட்டில் படுக்கை அறை வழியா இவர்களில் ஒருத்தர் உள்ளே நுழைந்து நான் அலறிய அலறலில் பயந்து ஓடி, கடைசியில் நான் கையில் கொதிக்கும் எண்ணெயைக் கொட்டிக் கொண்டதோடு முடிந்தது. இப்போவும் போன மாசமெல்லாம் பால்கனியில் வந்து உட்காருவாங்க! ஆனால் உடனே போயிட்டதால் படமெல்லாம் எடுக்க முடியலை. இன்னிக்குத் தூறல் என்பதால் மழையிலிருந்து ஒதுங்கி இருக்க இங்கே வந்திருக்காங்க! எங்க மொட்டை மாடியில் தினமும் உலா!

      Delete
  4. விளக்குப் போடாமல் எடுத்தீர்கள், விளக்குப் போட்டு ஒன்றும் முயற்சித்திருக்கலாமே...

    ரங்குவைப் பார்த்து வந்து விட்டீர்களா? நல்லது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்! விளக்குப் போட்டும் எடுத்திருக்கலாமோ? ஆமா இல்ல! தோணலை!

      Delete
  5. உங்கள் தளமும் எபியில் அப்டேட் ஆகவில்லை. ஃபேஸ்புக்கில் நீங்கள் கொடுத்த லிங்க் பார்த்து வந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? ஃபேஸ்புக்கிலும் இன்னிக்குச் சரியாப் போகலை லிங்க்! ஒரு மாதிரி முயற்சி பண்ணிக் கடைசியாச் சரியாக் கொடுத்துட்டு வந்தேன்.

      Delete
  6. செல்லங்கள் அட்டகாசமா இருங்காங்க 😍😍😍😍😍😍 ரங்கனை எப்போ பார்ப்பேனோ.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி, இம்மாதிரி அபூர்வ விருந்தாளிங்க வந்தால் தான் உங்களைப் பார்க்க முடிகிறது. வாங்க, வாங்க சீக்கிரமா அரங்கன் அழைப்பான்! செல்லங்கள் சுமார் 10,12 பேர் இருக்காங்க! அக்கம்பக்கம் தென்னைமரம், கொய்யாமரம், வீடுகளுக்குள் வைச்சிருக்கும் பழங்கள் எல்லாம் நிமிஷமாகக் காணாமல் போயிடுது! :)))) அதிலும் கடந்த 2 மாதங்களாக ஒரே கொண்டாட்டம் தான்!

      Delete
  7. இப்போதெல்லாம் உறவுக்காரவுங்க செல்பேசியில் சொல்லாமல் வருவதில்லையே... என்று யோசித்தேன் கடைசியில் அவுங்களா ?

    ReplyDelete
    Replies
    1. இவுங்களே தான் கில்லர்ஜி! பத்தாதா? எங்க வீட்டு வந்தவங்க நாலு பேர் தான். ஆனால் பத்துப் பனிரண்டு பேர் நடமாட்டம்!

      Delete
  8. வணக்கம் சகோதரி

    வியாழனன்று காலையில் நல்ல தரிசனந்தான். ஆஞ்சனேயரும், சிவனும் ஒரே அம்சந்தானே.! ஆக இன்றைக்கு தட்சணாமூர்த்தி தங்களுக்கு அருள் தர தங்கள் வீடு தேடி வந்துள்ளார். கடவுள் எந்த ரூபத்திலும் வரலாமே.. மிக்க மகிழ்ச்சி. மிக அழகாக படமெடுத்து போட்டுள்ளீர்கள்.
    அடுத்து நாராயணனின் அற்புத தரிசனம் கிடைத்திருக்கிறது. ஹரியும் சிவனும் எந்நாளும் ஒன்றுதானே..

    தாங்கள் மனதுக்குள் அவனிடம் பேசுவது மகிழ்வாக இருக்கிறது. மனதுக்குள் இறைவனிடம் பேசுவது எனக்கும் ரொம்பவே பிடிக்கும். வருத்தம், கோபம், அன்பு, நன்றி என அவனிடந்தான் கொட்டுவேன். அத்தனைக்கும் அவன் இயல்பு மாறாமல் சிரித்துக் கொண்டேயிருப்பதாக எனக்குத் தோன்றும். அவன் இயல்பே அது ஒன்றுதானே..! நானும் பெருமாளை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, காலையில் அவங்களைப் பார்த்ததும் எனக்கும் நம்ம ஆஞ்சி தான் நினைவில் வந்தார். உண்மை தான். கடவுள் எந்த உருவிலும் வரலாமே! மனதுக்குள் பேசிக் கொள்வது எல்லோருக்குமே இருக்கும் என நினைக்கிறேன். நாம் அவனிடம் தானே நம் மனதைத் திறந்து காட்டிப் பேச முடியும்!

      Delete
    2. கருத்துக் கொடுக்கும்போதே திடீர்னு மின் தடை! போகுதோ இல்லையோனு நினைச்சேன். போயிருக்கு! :)))))

      Delete
  9. அட! திடீர் விருந்தாளிகள் நம்ம செல்லங்கள்! என்ன அழகு..அம்மாடியோவ் இத்தனையா? எப்படி சமாளிச்சீங்க ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சமாளிக்கிறது என்ன பெரிய விஷயம்? இஃகி,இஃகி, ஜன்னலுக்கு வெளியே தானே இருக்காங்க. வலைக்கதவு இல்லைனா தாராளமா உள்ளேயும் வருவாங்க தான்! வலைக்கதவு அதுவும் உலோக வலைக்கம்பிகள்! அதனால் வர முடியலை! :)

      Delete
  10. ஏன் விருந்தாளிகள் இப்படி இருட்டடித்து இருக்காங்க? கேமராவில் ஃப்ளாஷ் போடலையா அக்கா? ஓ முன்னாடி சொல்லிருக்கீங்க இல்ல? ஃப்ளாஷ் வேலை செய்யலைனு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இது அதிகாலை ஐந்தேகால், ஐந்தரை மணிக்குள். கருக்கிருட்டில் எடுத்த படம்! விளக்குப் போட்டால் எல்லாம் ஓடிடுமோனு ஜந்தேகம்!

      Delete
  11. அக்கா அந்த ஜன்னல் சுவர் ஓரம் ஒடுங்கி உக்காந்து உள்ளேயே பாருக்கும் அந்தக் குட்டி பாவமாகப் பார்க்கிறது...இந்த அம்மா ஏதாவது கொடுப்பாங்களானு பார்க்குது போல!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, நாம கொடுக்கிறவரைக்கும் அவங்க சும்மாவா இருக்காங்க? எல்லாம் அவங்களே சுவாதீனமா எடுத்துக்கறாங்களே! நேத்திக்கு நாலைந்து வீடுகளின் பழங்கள், காய்கள், பக்ஷணங்கள் தவிர்த்துத் தென்னை மரத்தில் இருந்து தேங்காய்கள், கொய்யாப்பழங்கள்னு எல்லாமும்!

      Delete
  12. உங்களை நாடிவந்து அருளிய
    திவ்ய தரிசனத்தை எங்களுக்கும் வழங்கியிருக்கின்றீர்கள்...

    ஏதாவது சாப்பிடக் கொடுத்திருக்கலாம்!...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, கொடுத்துப் பழக்கிட்டால் பின்னால் தொடர்ந்து வருவாங்களே! அதான் கொஞ்சம் யோசனை! அதோடு பழங்கள் ஏதும் இல்லை. அதுவா எடுத்துக் கொண்டால் கூட எடுத்த இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போகுதுங்க! உள்ளே விட்டுப் பழக்க வேண்டாம்னு தான் எதுவும் கொடுக்கிறதில்லை. பால்கனியில் வந்து சும்மாவானும் உட்கார்ந்து கொண்டு உள்ளேயே பார்க்கும்! அப்போல்லாம் படம் எடுத்தால் பால்கனி கதவைத் திறக்குமோனு பயந்துட்டு எடுக்கலை. இது வலைக்கதவு போட்டிருப்பதால் எடுத்தேன்.

      Delete
  13. அக்கா நானும் மனதிற்குள் பெரிய வசனமே பேசுவதுண்டு....!!! ஒரு டயரி என்ட்ரி போல....பின்னே மனிதர்களிடம் சொன்னால் வம்பு. பிரச்சனைதான் மிஞ்சும். இது எந்தப் பிரச்சனையும் இல்ல பாருங்க. நான் என் குறை எல்லாம் சொல்லவே மாட்டேன்...

    பெரியவரைப் போய்ப் பார்த்துட்டு வந்துவிட்டது மகிழ்ச்சியான விஷய்ம் என்னன்னா அக்கா இஸ் பேக் டு ஃபார்ம்னு!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே தி/கீதா, முந்தாநாள் போயிட்டு வந்தது இன்னமும் அலுப்பாகவும் சோர்வாகவும் இருக்கு! உள்ளூரக் கொஞ்சம் பயம், கவலை வந்துவிட்டது. இனி இந்தமாதிரிப் போகமுடியாமல் போயிடுமோன்னு! காலம் தான் பதில் சொல்லணும்.

      Delete
  14. செல்லங்கள் இப்போது திருவரங்கத்தில் நிறைய... கோவில் மதில் சுவரில் ஐம்பதுக்கும் மேலே வரிசையாக, குடும்பம் குடும்பமாக உலா போவார்கள். நிறைய படங்கள் எடுத்திருக்கிறேன் எனது கேமராவில்! அவை உட்கார்ந்து தூங்குவதைக் கூட படம் பிடித்தது உண்டு! :)

    அரங்கனின் தரிசனம்.... மகிழ்ச்சி. நான் பார்த்து சில வருடங்கள் ஆகிவிட்டன. கோவிலுக்குச் சென்றால் தாயாரையும் சக்கரத்தாழ்வாரையும் தரிசித்து சுற்றுச் சன்னதிகளை தரிசிப்பதோடு சரி. அடுத்த முறை அரங்கனையும் தரிசிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஆமாம், அந்தப் பக்கம் அதிகம் தான் என்றாலும் இங்கேயும் சுமார் 20,30 செல்லங்கள் குடும்பத்தோடு இருக்குங்க! அதோட மயில் வேறே! மயில் கத்தும்போது இதுங்க எல்லாம் சீண்டுதுங்க! மயில் அப்போ அபயக்குரல் கொடுக்கும். அரங்கனை 2 மாதத்துக்கு ஒரு தரமாவது போய்ப் பார்ப்போம். இம்முறை பெரிய இடைவெளி.

      Delete
  15. அக்கா நானும் மனதிற்குள் பெரிய வசனமே பேசுவதுண்டு....!!! ஒரு டயரி என்ட்ரி போல....பின்னே மனிதர்களிடம் சொன்னால் வம்பு. பிரச்சனைதான் மிஞ்சும். இது எந்தப் பிரச்சனையும் இல்ல பாருங்க. நான் என் குறை எல்லாம் சொல்லவே மாட்டேன்...

    பெரியவரைப் போய்ப் பார்த்துட்டு வந்துவிட்டது மகிழ்ச்சியான விஷய்ம் என்னன்னா அக்கா இஸ் பேக் டு ஃபார்ம்னு!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இஃகி,இஃகி,இஃகி,இஃகி

      Delete
  16. பெங்களூரில் எங்கள் குடியிருப்பிலும் நம் முன்னோர்கள் நிறைய வருவார்கள். அதைப்பற்றி வாட்ஸாப் குழுவில் அமளி துமளிப்படும். நம்மைப் போன்ற நகரவாசிகள்தான் இதற்காக இப்படி அலட்டிக் கொள்கிறோம், கிராமத்தில் பாருங்கள் அவர்கள் பாம்பு உட்பட எல்லா மிருகங்களோடும் இணைந்துதான் வாழ்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி. அங்கேயும் வருவது குறித்து சந்தோஷம். உள்ளே விட்டால் வீட்டை ஒரு வழி பண்ணிடறாங்களே! அதுக்குத் தான் அலட்டல் எல்லாம்! மற்றபடி நாங்கல்லாம் பாம்புகளோடு குடித்தனமே நடத்தி இருக்கோம். அது பற்றியும் அம்பத்தூர் வீட்டுச் செல்லங்கள் பற்றியும் பல பதிவுகள் போட்டிருக்கேன். தினம் ஒரு பாம்பாரை அம்பத்தூர் வீட்டுக்குள்ளிருந்து வெளியேற்றுவோம். அடிச்சதில்லை!

      Delete
  17. ஆஹா ...விருந்தாளிகள் ...

    அரங்கன் தரிசனம் மிக மகிழ்ச்சி ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு! இன்னிக்கானும் உங்க தளம் வரமுடியுதா பார்க்கிறேன். மறந்து மறந்து போகிறது. :(

      Delete
  18. நேற்று நான் பெருமாள் தரிசனம் செய்ய 50 ரூ கியூவில் 3/4 மணி நேரம் ஆச்சு. தாயார் சன்னிதியிலும் கிட்டத்தட்ட அதே அளவு நேரம் 50 ரூ கியூவில்.

    பெருமாளை தரிசனம் பண்ணிட்டுத் திரும்பும்போது (சன்னிதியில்) திரும்பவும் வந்து சேவிக்க வாய்ப்பு கிடைத்தது.

    தைலக்காப்பின்போது பெருமாள் முகம் நிறைய வடுக்களுடன் தெரிவதைக் கவனித்தீர்களோ? பிறகு முகம் வழ வழவென மாறிடும்.

    ReplyDelete