வேலையில் சேர்ந்தேன் 1
பஸ்ஸுக்குள் கடுமையான வாக்குவாதம். எல்லாம் என்னை எங்கே இறக்கி விடுவது என்றுதான். பஸ்ஸில் இருந்த எல்லாரும் ஆட்சேபித்தார்கள், நான் காலரா ஆஸ்பத்திரியில் இறங்குவதற்கு. அந்தப் பொண்ணு ஊருக்குப் புதுசு போல இருக்கு. எங்கேயோ போய் எப்படி வழி தேடும்? என்று பேசிக் கொண்டார்கள். எனக்கு பயம் அதிகரித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அப்போது ஒரு பெண்மணி பஸ்ஸில் ஏறினார். அவர் ஏதோ இடம் சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டு உட்கார்ந்த சமயம் பஸ்ஸில் எல்லாரும் பேசிக் கொள்வதைப் பார்த்து விட்டு என்ன விஷயம்? என்று கேட்டார். .உடனே ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள் என்னைத் தவிர. அந்தப் பெண்மணி விவரம் புரியாமல் பேசாமல் உட்கார்ந்திருந்த என்னிடமே விவரம் கேட்க நான் அரை மனதுடன் என்னைப் பற்றிச் சொன்னேன். உடனேயே அந்தப் பெண்மணி, "அட, கரண்ட் ஆஃபீஸா? நாங்க அங்கே தான் பணம் கட்டுறோம். எங்க வீடு இருக்கும் தெருவுக்குப் பின்னாலே சந்திலே இருந்து மெயின் ரோடுக்குப் போகலாம். அந்தச் சந்து முனையிலேதான் இருக்கு ஆஃபீஸ். மெயின் ரோடிலே போனால் பணம் கட்டுமிடமும், சந்து முனையிலே ஆஃபீஸும் இருக்கு. ஆஃபீஸரைப் பார்க்கறதுனா அப்படித்தான் போகணும்."என்றாள். எனக்கு உயிர் வந்தது. "கொஞ்சம் நான் இறங்க வேண்டிய ஸ்டாப் சொன்னீங்கன்னா" நான் இழுத்தேன். அதுக்குள் அந்தப் பெண்மணி, "அது என்ன அப்படிச் சொல்லிட்டே? உன்னைத் தனியாப் போக விடுவேனா? நான் இறங்கும் போது கூட இறங்கு. நான் உன்னைக் கொண்டு விடறேன்." என்றாள்.
பஸ் கண்டக்டரில் இருந்து எல்லாருக்கும் நிம்மதி. நான் அந்தப் பெண்மணியுடன் இறங்கினேன். திருவொத்தியூர் ஹை ரோடுக்கு இணையாக அதன் பின்னால் உள்ள ஒரு ரோடில் இறங்கினோம். அங்கிருந்து ஒரு 10 நிமிஷ நடை. உடனே ஆஃபீஸ் வந்து விட்டது. அந்தப் பெண்மணி சொன்ன மாதிரி சந்து முனையில் ஆஃபீஸ் நுழையும் இடம். மெயின் ரோடில் பணம் கட்டும் கவுண்ட்டர் முதலியன இருந்தன. என்னை விட்டு விட்டு அந்தப் பெண்மணி போய் விட்டார். ஆஃபீஸில் நுழைந்ததும் உடனேயே முதலில் ஆஃபீஸர் அறை வந்ததால் நேரே அங்கே போய் என் கடிதத்தைக் காட்டியதும் அவர் பார்த்து விட்டு,"அப்போவே மெயின் ஆஃபீஸில் இருந்து நீங்கள் வரப் போகும் செய்தி வந்தது. ஏன் இத்தனை நாழி? திரும்ப அம்பத்தூர் போயிட்டு வரீங்களா?" என்றார். "இடம் தெரியவில்லை. அலைந்தேன்." என்று சொன்னதும், உடனே அவர்,"மெயின் ஆஃபீஸை விட்டு வெளியே வந்தால் உடனே அங்கேயே பஸ் நிற்குமே?" என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "பக்கத்தில் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டாப் தான் இருக்கிறது." என்றேன். "அங்கே இருந்துதான். திருவொத்தியூர் போகும் பஸ்ஸில் அங்கே ஏறினால் தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இறங்கினால் நேரே ஆஃபீஸ்." என்றார்.
என் அசட்டுத்தனத்தை நினைத்து நொந்து போனேன். அங்கே நான் பார்க்கும் சமயம் பஸ் எதுவும் இல்லை. அதனாலும் அங்கே இருந்து பஸ் கிளம்பும் என்பது தெரியாத காரணத்தாலும் அங்கே கேட்கவே எனக்குத் தோன்றவில்லை. சரி, என்று என் கணவருக்கு போன் செய்யப் போனேன். அதற்குள் joining report டைப் செய்து வரவே அதில் கையெழுத்துப் போட்டேன். "கீதா சாம்பசிவம்" என்று. இந்த மாதிரிக் கையெழுத்து முதல் முதலாக அன்று தான் அவர் பெயரையும் சேர்த்துப் போட்டேன். ஆனால் நான் கொடுத்த joining report மறுநாளே திரும்பி விட்டது. ஙேஏஏ! என்னவென்று விசாரித்தால் ஒரு மெமோ (வேலையில் சேர்ந்த மறுநாளே மெமோ வாங்கிய ஒரே ஊழியர் நானாகத் தான் இருக்கும்.) வந்தது. கையெழுத்து வாங்கிக் கொண்டு கொடுத்தார்கள். அதைப் பிரித்துப் பார்த்தால் நாங்க தேர்ந்தெடுத்தது என்.ஆர்.கீதாவை. ஆனால் இங்கே கையெழுத்தில் கீதா சாம்பசிவம்னு போட்டு வந்திருப்பதால் இந்த ஜாயினிங் ரிபோர்ட் செல்லாது. என்.ஆர். கீதா கையெழுத்துடன் வந்தால் தான் செல்லும் என்று சொல்லிவிட்டார்கள்.
அது வரைக்கும் எல்லோரும் சொன்னது கல்யாணம் ஆனால் தானாகப் பெண்களின் பெயரோடு கணவன் பெயர் இணைந்துவிடும் என்று தான். சரினு நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னோட அசலான சான்றிதழில் என்.ஆர்.கீதா என்று கொடுத்திருப்பதாலும் நானும் அந்தப் பெயரில் தான் தேர்வு எழுதி பேட்டிகள் எல்லாம் கொடுத்து வேலைக்கான உத்தரவும் அந்தப் பெயருக்குத் தான் வந்திருந்தது. ஆகவே என்னுடைய மேலதிகாரி அந்தப் பெயரில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்படி சொல்லிவிட்டு கணவர் பெயரைச் சேர்த்துக் கையெழுத்துப் போடவேண்டுமெனில் முதலில் அரசுக்கு விண்ணப்பம் செய்து அவங்க முறைப்படி விண்ணப்பப் படிவம் அனுப்பினதும் அதில் கேட்டிருக்கும் தகவல்களைக் கொடுத்து என் பெயரை மாற்ற வேண்டும் என்று விண்ணப்பித்தால் ஆறு மாதத்துக்குள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாங்க கெஜட்டில் வரும் என்றும் நமக்குத் தேவையானால் தினசரிகளிலும் கொடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார். அப்பாடி. பெருமூச்சு விட்டு விட்டு இந்தப் பெயரிலேயே இப்போதைக்குத் தொடரலாம் என முடிவு செய்தேன். நம்ம ரங்க்ஸ் இதைச் சொன்னப்போக் கேட்டுக் கொண்டார். மற்றபடி ஏதும் சொல்லவில்லை. ஆனால் இந்த விஷயம் ஏதோ நான் தான் தானாக முடிவு எடுத்தேன் எனப் புக்ககத்தில் அனைவரும் நினைக்கும்படி ஆயிற்று.பல வருடங்களுக்கு யாரும் நம்பவில்லை. அவங்களுக்கே ஒரு முறை இப்படி வந்ததும் தான் நம்பினார்கள். எப்படியோ பல தடங்கல்களுக்கு இடையில் வேலையில் சேர்ந்தாச்சு.மாலை 4-30க்கு வேலையில் சேர்ந்த முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். 5 மணிக்கு ஆஃபீஸ் முடிகிறது. இவருக்கு ஆஃபீஸ் 3-30க்கே முடிந்து விடும். ஆகையால் எங்கே போன் செய்வது என்றும் புரியவில்லை. அதற்குள் மேலே என்னுடைய இடத்திற்கு அழைத்துப் போனார்கள். நான் மாடி ஏறும்போது வெளியில் இருந்து வந்தது யார் என்கிறீர்கள்? என் கணவர்தான். எப்படி வந்தார்? எனக்கும் ஆச்சரியம்தான்.
வேலையில் சேர்ந்தேன் 2
என் கணவரைத் திடீரென்று அங்கே பார்த்ததில் எனக்கு ஆச்சரியம். எப்படி வந்தார்? நான் எதுவும் கேட்கவில்லை. அவர் என்னிடம் "joining report" கொடுத்தாச்சா? "என்று கேட்டார். நான், "ம்ம்ம்" என்று சொல்ல "சரி, மணி 5 ஆகி விட்டது. வீட்டுக்குப் போகலாம்." என்று சொல்ல நானும் கிளம்பினேன். அங்கிருந்து செண்ட்ரல் போய்ப் பின் செண்ட்ரலில் இருந்து ரெயிலில் போனோம். வீட்டுக்கு வந்ததும் தான் என் நாத்தனார் என்னிடம், "ஆஃபீஸ் போனதும் அண்ணாவுக்கு ஃபோன் செய்யவில்லையா?" என்று கேட்டாள். நான் பதில் சொல்வதற்குள் அவளே "உங்களிடமிருந்து தகவல் இல்லாததால் அண்ணா சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்னைக் கேட்டு விட்டுப் பின் ஆஃபீஸ் போய்ப்பார்ப்பதாகச் சொன்னார்." என்று சொன்னாள். பிறகுதான் தெரிந்தது, அவர் மெயின் ஆஃபீஸுக்குப் ஃபோன் செய்து விசாரித்து விட்டு நான் தண்டையார்பேட்டை ஆஃபீஸில் ஜாயின் பண்ணும் விவரம் தெரிந்து கொண்டு தண்டையார்பேட்டை வந்த விவரம். மறுநாளில் இருந்து எப்படிப் போவது என்று புரியவில்லை. என் கணவர் அவர் அலுவலகத்தில் விசாரிப்பதாகவும் அதுவரை செண்ட்ரலில் இருந்து போய் வருமாறும் சொன்னார். அங்கே என் அலுவலகத்தில் இருந்த எல்லாரும் மிண்ட், தண்டையார்பேட்டை, ராயபுரம், மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்தவர்கள். யாரும் இவ்வளவு தூரத்தில் இருந்து வரவில்லை. மறுநாள் செண்ட்ரல் போயே போ என்று என் கணவர் சொன்னதால் அப்படியே போனேன். சிலர் வீடு மாற்று என்றார்கள்.
அப்போதெல்லாம் அம்பத்தூருக்குக் கரி இஞ்சின் தான்! உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ் எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டு வரும். அதில் சென்ட்ரல் வரை போய்ப் பின்னர் அங்கிருந்து வால்டாக்ஸ் ரோடில் பேருந்தைப் பிடித்துப் போக வேண்டும். அப்போது பனிரண்டு அல்லது பதின்மூன்றாம் நடைமேடையில் தான் இந்த வண்டிகள் எல்லாம் நிற்கும். அங்கிருந்து வால்டாக்ஸ் ரோடு ஒரு மைலாவது இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது வரை நடக்கணுமே! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி யோசனை கொடுத்தார்கள். வால்டாக்ஸ் ரோடில் பஸ்ஸில் இருந்து இறங்கிப் பின் லோக்கல் வண்டியைப் பிடிக்க வெகு தூரம் தினமும் நடக்க வேண்டும். அதிலேயே ஒரு வண்டி போய் விடும்.இந்த மாதிரிக் கொஞ்ச நாள் போனதும் என் சிநேகிதி ஒருத்தித் தினமும் பெரம்பூரில் இருந்து வருவாள். அவள், "பெரம்பூர் வழியாகத் தானே இந்தப் பேருந்து வருகிறது. நீ பெரம்பூரில் இறங்கு. நாம் இருவரும் சேர்ந்து போகலாம். நீ ரெயிலில் வரும் நேரம் வரை நான் காத்திருப்பேன்." என்று சொல்ல மறு நாளில் இருந்து நான் பெரம்பூரில் இறங்கிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் வீட்டில் ஏதோ வேலை. கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. 9-15 வண்டியை விட்டு விட்டேன். அடுத்த வண்டியில் தான் போனேன். சேர்ந்த புதிது. நேரம் கழித்துப் போனால் என்ன சொல்வார்களோ என்ற பயம் வேறு. கவலையுடன் உட்கார்ந்திருந்தேன். கூட இருந்தவர்கள் எல்லாம் பயப்படாதே என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை. பெரம்பூரும் வந்தது. ரெயில் வேகம் குறைய ஆரம்பித்தது. நான் இறங்கத் தயார் ஆனேன். அப்போது ஒரு வினாடி ரெயில் நின்றதும், நான் ஒரு காலைக் கீழே வைத்து இறங்க முயன்றேன். வண்டி outer-ல் இருந்திருக்கிறது. அதைக் கவனிக்கவில்லை. வண்டி சட்டென்று ஒரு குலுக்கலுடன் முன்னே போக நான் வண்டியில் இருந்து கீழே விழுந்து நடைமேடையில் உருண்டேன்.

மீதாஆஆஆஅன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ
ReplyDeleteவாங்க அதிரடி, வாங்க! நல்வரவு.
Delete//நான் இறங்கும் போது கூட இறங்கு. நான் உன்னைக் கொண்டு விடறேன். என்றாள்//
ReplyDeleteஇன்றைய காலமாக இருந்தால் நம்பமுடியுமா ?
நடைமேடையில் விழுந்து விட்டீர்களா ?
என்ன ஆச்சு...
வாங்க கில்லர்ஜி, ஒண்ணும் பிரச்னை இல்லை. அதானே இதெல்லாம் எழுத முடிஞ்சது! :)))) இப்போவும் உதவுகிறவர்கள் இருக்கத் தான் செய்யறாங்க கில்லர்ஜி!
Deleteஇண்டெரெஸ்டிங்.
ReplyDelete//"அது என்ன அப்படிச் சொல்லிட்டே? உன்னைத் தனியாப் போக விடுவேனா? // - இந்த மாதிரி ஆட்கள் அப்போ சர்வ சாதாரணம். இப்போ... அப்படிச் சொன்னாலே நாம இன்னும் அவங்ககிட்ட கவனமா இருக்கணுமோன்னு தோணும்.
வாங்க நெ.த. ஒரு விதத்தில் உண்மைதான் என்றாலும் இப்போவும் நல்லவங்க இருக்கத் தான் செய்கிறார்கள்.
Deleteகையெழுத்தில் கணவரின் பெயர் - ஓ..நான் எப்போது என் கையெழுத்தை மாற்றினேன் என்று ஞாபகம் வரலை. ஆனால் எதிலும் பிரச்சனை வந்த மாதிரித் தெரியலை. அரசு அலுவலகமல்லவா?
ReplyDelete//வண்டியில் இருந்து கீழே விழுந்து நடைமேடையில் உருண்டேன்// - இது அப்போவே ஆரம்பிச்சாச்சான்னு எழுத நினைத்தேன்... நீங்க நான் கிண்டல் பண்றேன்னு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்கிறீர்கள். எனக்கு எதற்கு வம்பு
நெ.த. பொதுவா ஆண்களுக்கு இந்தியாவில் அதிகம் பிரச்னை வருவதில்லை. தந்தை பெயர் தானே இனிஷியல். பெண்களுக்குத் தான்! நான் என்னோட இனிஷியலோடு தேர்வும் எழுதி நேர்முகப் பேட்டியும் முடித்து வேலைக்கான உத்தரவும் அந்தப் பெயரிலேயே பெற்றிருந்ததால் "கீதா சாம்பசிவம்" எனக் கணவன் பெயரைச் சேர்த்துப் போட்டதில் பிரச்னை வந்தது. நான் கேட்டுக் கொண்டு கையெழுத்துப் போட்டிருக்கணும்.
Delete//ஆனால் எதிலும் பிரச்சனை வந்த மாதிரித் தெரியலை. அரசு அலுவலகமல்லவா?// மின் வாரியமும் அரசைச் சேர்ந்தது தானே!
Deleteசென்னையில் வேலை பார்ப்பது என்றால் சும்மாவா? இப்படியெல்லாம் உருண்டு பிறண்டுதான் ஆகவேண்டியிருக்கும். ஆனால் அன்று உங்களுக்கு அடி பலமாகப் படவில்லை அல்லவா? உங்கள் கணவர் உங்களுக்காக, ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, உங்களுக்குத் தெரியாமல் அதே ரயிலில் வந்தவர், உடனே ஓடிவந்து உங்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார் அல்லவா? அந்த அதிர்ச்சியில் அவர் அங்கிருந்த பார்சல் மூட்டை ஒன்றில் மோதி, காலெல்லாம் சிராய்த்துக் கொண்டார் அல்லவா?
ReplyDeleteவாங்க செல்லப்பா சார், அதெல்லாம் நம்மவருக்கு சாயங்காலம் நான் போய்ச் சொன்னதும் தான் தெரியும். அதுவரையிலும் தெரியாது. அப்போவும் அவர் உனக்கு எல்லாவற்றுக்கும் அவசரம் என்று தான் சொன்னாரே தவிர்த்துக் கவலைப்படவோ அதிர்ச்சி அடையவோ இல்லை என்பதே உண்மை! பெரம்பூர் ரயில் நிலையத்தில் பார்சல் மூட்டை எல்லாம் அதிகம் காண முடியாது!
Deleteவேலையில் சேர்ந்த அனுபவம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. ஆனாலும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட மறக்காமல் சொல்லும் உங்களின் ஞாபக சக்தி ஆச்சரியத்தை அளித்தது. இது ஒரு வரப்பிரசாதம்! வசந்த கால நினைவுகளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாதல்லவா?
ReplyDeleteவாங்க மனோ! அதை ஏன் கேட்கறீங்க! இந்த ஞாபக சக்தியால் தான் இரண்டு பேருக்கும் அடிக்கடி வாக்குவாதமே! :))))))
Deleteஅந்தக் காலத்தில் பஸ்ஸில் அவ்வளவு கூட்டம் இருந்திருக்காது. அவ்வளவு பேர்களும் இதைப்பற்றிய பேசியது ஆச்சர்யம், ப்ளஸ் நெகிழ்ச்சி. இப்படியும் சென்னையில் மக்கள் இருந்திருக்கிறார்கள்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம்! என்ன்ன்ன்ன்ன்னாது? பேருந்தில் கூட்டம் இருந்திருக்காதா? சரியாப் போச்சு போங்க! வளைவுகளில் திரும்பும்போது நின்று கொண்டு பேருந்தில் போனால் படும் பாடு இருக்கே! அதெல்லாம் கொட்டு மேளத்தோடு கூட்டம் இருக்கும். அதிலும் மின்ட்டில் இருந்து வரும் பேருந்து என்றால் கூட்டம் இல்லாமல் வராது!
Deleteபுதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்களுக்கு முதல் நாளிலேயே மெமோ கொடுப்பது அநியாயம். சொல்லி அல்லவா கொடுக்க வேண்டும்!
ReplyDeleteஅதெல்லாம் பத்தி அப்போ அவ்வளவாத் தெரியாது ஶ்ரீராம். நானே பள்ளி மாணவி மாதிரி தான் இருப்பேன். புதுசு, பயம் எல்லாம் இருந்தது.
Deleteஐயோ... அதெப்படி பார்க்காமல் இறங்கி இருப்பீர்கள்? கேட்கவே பயங்கரமாக இருக்கிறது. மாமா கவலைப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
ReplyDeleteஶ்ரீராம், வண்டிஒரு கணம் நின்றது. நிற்கவும் நான் காலைக்கீழே வைத்து விட்டேன். காலை வைக்கவும் வண்டி நகர ஆரம்பித்துப் பின்னர் ஓர் குலுக்கலுடன் நின்றது.
Deleteஅந்தக் காலத்திலும் உருண்டு விழுவது...? சிரமம் தான்...!
ReplyDeleteவாங்க டிடி, எந்தக் காலத்திலுமே சிரமம் தானே!
Delete//அது என்ன அப்படிச் சொல்லிட்டே? உன்னைத் தனியாப் போக விடுவேனா? நான் இறங்கும் போது கூட இறங்கு. நான் உன்னைக் கொண்டு விடறேன்." என்றாள்.//
ReplyDeleteநல்ல பெண்மணி. உதவும் உள்ளம் நிறைந்த அந்த பெண்மணி வாழ்க!
//கீதா சாம்பசிவம்" என்று. இந்த மாதிரிக் கையெழுத்து முதல் முதலாக அன்று தான் அவர் பெயரையும் சேர்த்துப் போட்டேன்.//
சோதனைதான். நல்லவேளை உங்கள் என். ஆர் கையெழுத்து செல்லும் என்று சொல்லிவிட்டார்களே!
//எப்படியோ பல தடங்கல்களுக்கு இடையில் வேலையில் சேர்ந்தாச்சு//
தடங்கல்களை தாண்டி வேலைக்கு சேர்ந்தாச்சு, நல்லபெருமூச்சு விட்டு கொண்டு அடுத்து படிக்க ஆரம்பித்தால், வீட்டுக்கு திரும்பி போகனுமே! நல்லவேளை சார் வந்து நின்றது மகிழ்ச்சி.
//வண்டி சட்டென்று ஒரு குலுக்கலுடன் முன்னே போக நான் வண்டியில் இருந்து கீழே விழுந்து நடைமேடையில் உருண்டேன்.//
அச்சோ! அப்புறம் என்னாச்சு?
எத்தனை சோதனைகள், கஷ்டங்கள் நீங்கள் சொல்லும் வேலைக்கு சென்ற அனுபவங்கள்!
தொடர்கிறேன்.
வாங்க கோமதி, அப்பா பெயரின் இனிஷியலோடு உள்ள கையெழுத்துத் தான் செல்லும் என்றார்கள். அந்தப் பெயரில் தானே எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் இருந்து மற்றச் சான்றிதழ்களும் இருந்தன. அதோடு தேர்வு எழுதி நேர்முகத் தேர்வு கொடுத்து, வேலைக்கான உத்தரவு பெற்றது எல்லாம் இந்தப் பெயரில். ஆகவே அதான் செல்லும் என்றார்கள். இப்போவும் எனக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆதார் கார்டிலே இந்தப் பெயர். பாஸ்போர்ட்டிலும் இந்தப் பெயர். பான் கார்டில் மட்டும் கீதா சாம்பசிவம்! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Delete//உன்னைத் தனியாப் போக விடுவேனா? நான் இறங்கும் போது கூட இறங்கு. நான் உன்னைக் கொண்டு விடறேன்." என்றாள்./
ReplyDeleteகும்பிடப் போன தெய்வம்.. குறுக்கே வந்ததுபோல்..
நாம் கும்பிடும் பலன், அப்ப அப்ப, ஆரோ வடிவில் நமக்குக் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை..
வாங்க அதிரடி, நீங்க சொல்லுவது உண்மை தான். தெய்வம் மாதிரித் தான் அந்தப் பெண்மணி வந்தார். அதன் பின்னர் ஒரு நாள் அவர் என்னை அலுவலகத்தில் கண்டு பேசும்போது எனக்கு அடையாளம் தெரியவில்லை என்பது தான் உண்மை! :( அப்புறமா அவர் அறிமுகம் செய்து கொண்டார்.
Deleteஆஆஆஆஆ மாமா தேடி வந்திட்டாரோ.. பார்த்தீங்களோ எதுக்கெடுத்தாலும் மாமா குறை சொல்வார் என ஏசுவீங்க... இப்போ பாருங்கோ .. தேடி வந்திட்டார்ர்..
ReplyDelete//வண்டி சட்டென்று ஒரு குலுக்கலுடன் முன்னே போக நான் வண்டியில் இருந்து கீழே விழுந்து நடைமேடையில் உருண்டேன்.//
ஆஆஆஆஆஆஆஆஆஅ மேடை உடைஞ்சிடுச்சோ? ஆவ்வ்வ்வ்வ்வ் கீசாக்கா உருண்டால் எப்பூடி இருந்திருக்கும்:)).. ஹா ஹா ஹா கடவுளே..
சும்மா ஜோக் பண்ணினேன் கீசாக்கா, இருப்பினும் இது பழைய சம்பவம் என்பதால் இப்போ பதறத் தேவையில்லைத்தானே.... என்ன ஆச்சு என ஆவலோடு காத்திருக்கிறேன்..
மாமா முதல்நாள் வந்தது தான்! விழுந்தப்போ எல்லாம் மாமாவுக்குத் தெரியாது. சாயந்திரமா நான் போய்த் தான் சொன்னேன். ஒண்ணும் ஆகலை!
Deleteபணி சேர்வறிக்கையின் கையொப்பம் சிக்கலில் விட்டதைப் படித்தபோது இதுபோன்ற அனுபவத்தை மேலும் பலர் பெற்றிருப்பர் என்று தோன்றியது.
ReplyDeleteஆமாம், முனைவர் ஐயா, பெண்களுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். அதுவும் திருமணம் ஆன பின்னர் வேலைக்குச் சேரும் பெண்கள்!
Deleteகொஞ்ச நாள் முன்பு மடிசார் மாமி என்று விகடனில் ஸ்கூட்டர் ஓட்டும் மாமி பக்கத்தை ஒன்று வந்திருந்தது. இந்த கதை அதை நினைவு மூட்டியது.
ReplyDeleteகொஞ்ச நாளா? கொஞ்ச decadeக்கு முன்னால் இல்லையோ அந்தத் தொடர்கதை வந்தது ஜே கே சார்
Deleteவாங்க ஜேகே அண்ணா. மடிசார் மாமிக்கும் இதுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் தெரியலை. ஆனாலும் அது விகடனில் வந்தது எண்பதுகளில் என நினைக்கிறேன். தேவிபாலா கதை! கே.ஆர்.விஜயாவைப் படமாகப் போட்டு விகடனில் வந்த நினைவு. தொலைக்காட்சித் தொடராக வந்தப்போ ஶ்ரீவித்யா நடிச்ச நினைவு. இரண்டையும் படிக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை! தேவிபாலா ஒரே மாதிரிக் கதைகளாக எழுதுவார். அம்பத்தூரில் தான் பேருந்து நிலையம் பக்கம் வீடு! மனைவி இல்லை!
Deleteகீதா மா. என்ன சங்கடம் டா இது. அந்தக் காலமாக இருந்ததால் இது போல உதவிகள் கிடைத்தன. இருந்தாலும் ,அம்பத்தூர் எங்கே தண்டையார் பேட்டை எங்கே.
ReplyDeleteஇதில மாமாவுக்குக் கவ்லை வேற வந்துட்டதா.
அப்பவே விழுந்தாச்சா. என்ன கீதாமா. ரொம்ப வலித்திருக்குமே.
அச்சோ பாவம். அப்புறம் என்னாச்சுன்னு சொல்லவும்.
வாங்க ரேவதி! ஆமாம், அம்பத்தூரில் இருந்து தண்டையார்ப்பேட்டை நேர் எதிர். இது வடமேற்கு, அது வடகிழக்கு! விழுந்தது 2,3 நாட்கள் வலிக்கத் தான் செய்தது.
Deleteகையொப்பம் - அதிலும் பிரச்சனையா.... :)
ReplyDeleteவிழுந்து எழுந்தெல்லாம் வேலைக்குப் போய் வந்து இருக்கிறீர்கள்!
மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்/காத்திருக்கிறேன்.
ஹாஹாஹா, வாங்க வெங்கட், ஆமாம், விழுந்து எழுந்து போனேன். :)))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅந்த காலத்தில் வேலைக்கு, அதிலும் தெரியாத ஊரில், திருமணமான புதிதில் சென்றது சிரமமான விஷயந்தான். மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒரு பெண்மணியை நம்பி அவர்களுடன் இறங்கி அந்த அலுவலகம் சென்றது தங்கள் தைரியத்தை காட்டுகிறது. ஆனால் அப்போதும் சரி. இப்போதும் சரி ஏமாற்றுகிறவர்கள் நிறைய பேரை படிக்கிறோம், பார்க்கிறோம் என்னும் போது,தெய்வம் நிச்சயமாய் அன்று தங்களுடன் துணையாக இருந்திருக்கிறது என்று புரிகிறது.
அவசரத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டது மிகவும் மன கஸ்டத்தை தந்தது. பிறகு எப்படி சமாளித்து எழுந்து அலுவலகம் சென்றீர்கள்.? அடி, காயங்கள் ஏதும் இல்லாமல் அந்த சமயத்தில் கடவுள்தான் வந்து காப்பாற்றியிருக்க வேண்டும்.பதிவை படிக்கையில் ஒரே பதற்றமாக உள்ளது. மேலும் நல்லபடியாக பகிருங்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க காலா, தாமதமாகப் பதில் அளிப்பதற்கு மன்னிக்க வேண்டும்.ரொம்பக் கஷ்டம்னு இப்போத் தெரிந்தாலும் அந்த வயதில் அதெல்லாம் தெரியவில்லை. ஏதோ என் நல்ல காலம் அன்று முதல் இன்று வரை ஆண்டவன் துணையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடி, காயங்கள் ஏதும் கீழே விழுந்ததில் படவில்லை. ஆனால் இடுப்பில் கொஞ்சம் வலி இருந்து கொண்டே இருந்தது.
Deleteவாங்க கமலா! என்பது "காலா" என வந்திருக்கு. பிழைக்கு மன்னிக்கவும். கவனிக்கவில்லை.:(
Deleteசகோதரி எப்படி இப்படிக் காலை வைத்தீர்க்ள்? ப்ளாட்ஃபார்மில் உருண்டு. பயங்கரமாக இருக்கிறதே வாசித்த போது..அடிபடாமல் தப்பித்தீர்களா? பலத்த காயம் பட்டிருக்குமே. சாகசப் பயணம் போல? ஒன்றும் அடிபட்டிருக்காது என்ற நம்பிக்கை.
ReplyDeleteதொடர்கிறோம்.
துளசிதரன்
வாங்க துளசிதரன், நான் ரயில், பேருந்து போன்றவற்றில் ஆண்கள் வண்டி நிற்கும் முன்னே இறங்குகையில் சிறிது தூரம் ஓடி நிற்பதைப் பார்த்திருக்கேன். நானும் அது மாதிரி ஓடி நிற்கலாம் என நினைத்து இறங்கினேன். ஹிஹிஹி, மாற்றுத் திசையில் ஓடியதால் விழுந்தேன். உருண்டேன். அடி எல்லாம் படவில்லை. அதுக்குள் கூட்டம் கூடிவிட்டது. காலை வேளையல்லவா?
Delete"கீதா சாம்பசிவம்" //
ReplyDeleteகீதாக்கா இதைப் பார்த்ததுமே அடடா அக்கா இப்படி சைன் போட்டிருக்காங்களே. ஆர்டர் வந்த போது உங்கள் பெயர் பிறந்தகத்தில் உள்ளது போல அல்லவா இருக்கும். இப்படி சைன் போட்டால் செல்லுபடியாகாதே என்னா ஆச்சோ என்று வாசித்துக் கொண்டே வந்தால் அடுத்தது மெமோ என்றிருக்கு...
இதோ வாசித்துவிட்டு வருகிறேன்.
கீதா
தி.கீதா, அப்போ அந்த வயசில் அதெல்லாம் தெரியாது. ஆனாலும் அரசல் புரசலாகக் கேள்விப் பட்டிருந்தேன். ஆனால் அதைச் சொன்னாலும் ஒத்துக்கொள்பவர்கள் இல்லை எங்க வீட்டிலே! அது எப்படி அப்படிச் சொல்லலாம் என்பார்கள். இன்னும் சொல்லப் போனால் நான் 15 வயது முடிவதற்குள்ளாகப் பள்ளி இறுதி வகுப்பை முடித்தேன் என்பதையே அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை! :)))) அது எப்படி முடியும்? நீ பொய் சொல்றே, இல்லைனா உனக்கு மறந்து போச்சு என்பார்கள். :)))) இப்படி எத்தனையோ கடந்து வந்தாச்சு.
Deleteகீதாக்கா நாம் நம்பிக்கையுடன் இப்படிப் பயணம் செய்கையில் கண்டிப்பாக எப்படியேனும் ஒரு ரூபத்தில் வழி பிறக்கும் அந்த பெண்மணி உங்களுக்கு உதவ வந்தது போல. இப்படி இல்லை என்றால் நம் மனதில் ஓர் உபாயம் பிறக்கும்.
ReplyDeleteஅப்ப இப்படி உருண்டு பிரண்டு விழுவது அப்போதே தொடங்கிவிட்டதா கீதாக்கா...
அப்புறம் என்ன ஆச்சு கீதாக்கா.. யாரேனும் உதவிக்கு வந்தார்களா?
கீதா
தி/கீதா, நான் முதல் முதல் மும்பை போனது பத்தி எழுதி இருந்ததைப் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். ஓரிரு வருடங்கள் முன்னர் மீள் பதிவு செய்திருந்தேன். அதிலே சொல்லி இருக்கிறாப்போல் எனக்கு எப்போவும் வழித்துணை கந்தர்சஷ்டி கவசம் தான். அன்றும் அது தான் என்னைக் காப்பாற்றியது.
Delete