இங்கே
இங்கே
முதலில் நல்ல செய்தி! சில நாட்களுக்கு முன்னர் மேற்கண்ட சுட்டியில் கணினி மருத்துவர் பற்றி வருந்தி இருந்தேன். கிட்டத்தட்ட மேமாதம் 23 ஆம் தேதி நடந்த விஷயம். அதன் பின்னர் அவரிடம் கேட்கவே வேண்டாம்னு விட்டுட்டோம். இரண்டு நாட்களாகப் பழைய மடிக்கணினியில் பிரச்னை. ஜாவ ஸ்க்ரிப்ட் எரர்னு செய்தி வருது. என்ன செய்யறதுனு புரியாமல் நடப்பது நடக்கட்டும்னு அவரையே கூப்பிட்டேன்.முதல் இரு அழைப்புக்களுக்கு எடுக்கவே இல்லை. விடாமல் மூன்றாம் முறை கூப்பிடவும் எடுத்தார். அவரிடம் முதலில் எடுத்த எடுப்பிலேயே பணம் கேட்கக் கூப்பிடலைனு சொல்லிட்டுப் பிரச்னையைச் சொன்னேன். மத்தியானம் வரேன் என்று சொன்னார். எங்கே வரப் போகிறார்னு நம்ம ரங்க்ஸ் சொல்லிட்டுப் படுக்கப் போயிட்டார். ஆனால் இன்னிக்கு நம்ம உள்ளுணர்வு வருவார் எனச் சொல்லியது. இருந்தாலும் அதற்கான தயார் நிலையில் எல்லாம் இல்லை. மத்தியானத்தில் சற்றுக் கால்களை நீட்டிப் படுத்த பின்னர் எழுந்து கணினியைப் போட்டால் அதே பிரச்னை தலை தூக்கியது. என்னடா செய்யலாம்னு யோசிக்கையில் வாசலில் அழைப்பு! அவரே தான்! உள்ளூர ஆச்சரியம் அடைந்தாலும் வரவேற்றுக் கணினியைக் காட்டினேன்.கணினியைப் பார்க்கையில் என்ன நினைத்தாரோ தெரியலை, சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டுத் தாமதமானதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். கணினியில் பிரச்னையைப் பார்த்து சரி பண்ணிவிட்டதாகவும் சொன்னார்.
ஆனால் அவர் இருக்கையில் சரியாக வந்த கணினி அவர் போனதும் இப்போ மறுபடி ஜாவா ஸ்க்ரிப்ட் எரர் காட்டுகிறது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். போகட்டும். வராது என நினைத்திருந்த பணம் 3 மாதம் கழித்து வந்திருக்கிறது. அதுவே பெரிய விஷயம் இல்லையா? முதலில் ஏன் அப்படிப் பண்ணினார் என்று புரியவில்லை. இப்போ எப்படி மனம் மாறியது என்றும் புரியவில்லை.
இங்கே மெயிலில் தினம் தினம் 30 லட்சம் தனிப்பட்ட கடன் கொடுப்பதாக அழைப்பு. தொலைபேசித் தொல்லைகள் தனி! பென்ஷன் மட்டும் மாசம் பத்து லக்ஷம் கொடுப்பதாக ஒருத்தர் சொல்கிறார். இது எதற்கும் கவராத மனம் நம்ம பணம் வந்ததும் தான் அமைதி பெறுகிறது. லட்சமும், கோடியும் யாருக்கு வேண்டும்? நமக்கு உள்ளதே போதும். அதுவே அதிகம்!
இங்கே
முதலில் நல்ல செய்தி! சில நாட்களுக்கு முன்னர் மேற்கண்ட சுட்டியில் கணினி மருத்துவர் பற்றி வருந்தி இருந்தேன். கிட்டத்தட்ட மேமாதம் 23 ஆம் தேதி நடந்த விஷயம். அதன் பின்னர் அவரிடம் கேட்கவே வேண்டாம்னு விட்டுட்டோம். இரண்டு நாட்களாகப் பழைய மடிக்கணினியில் பிரச்னை. ஜாவ ஸ்க்ரிப்ட் எரர்னு செய்தி வருது. என்ன செய்யறதுனு புரியாமல் நடப்பது நடக்கட்டும்னு அவரையே கூப்பிட்டேன்.முதல் இரு அழைப்புக்களுக்கு எடுக்கவே இல்லை. விடாமல் மூன்றாம் முறை கூப்பிடவும் எடுத்தார். அவரிடம் முதலில் எடுத்த எடுப்பிலேயே பணம் கேட்கக் கூப்பிடலைனு சொல்லிட்டுப் பிரச்னையைச் சொன்னேன். மத்தியானம் வரேன் என்று சொன்னார். எங்கே வரப் போகிறார்னு நம்ம ரங்க்ஸ் சொல்லிட்டுப் படுக்கப் போயிட்டார். ஆனால் இன்னிக்கு நம்ம உள்ளுணர்வு வருவார் எனச் சொல்லியது. இருந்தாலும் அதற்கான தயார் நிலையில் எல்லாம் இல்லை. மத்தியானத்தில் சற்றுக் கால்களை நீட்டிப் படுத்த பின்னர் எழுந்து கணினியைப் போட்டால் அதே பிரச்னை தலை தூக்கியது. என்னடா செய்யலாம்னு யோசிக்கையில் வாசலில் அழைப்பு! அவரே தான்! உள்ளூர ஆச்சரியம் அடைந்தாலும் வரவேற்றுக் கணினியைக் காட்டினேன்.கணினியைப் பார்க்கையில் என்ன நினைத்தாரோ தெரியலை, சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டுத் தாமதமானதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். கணினியில் பிரச்னையைப் பார்த்து சரி பண்ணிவிட்டதாகவும் சொன்னார்.
ஆனால் அவர் இருக்கையில் சரியாக வந்த கணினி அவர் போனதும் இப்போ மறுபடி ஜாவா ஸ்க்ரிப்ட் எரர் காட்டுகிறது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். போகட்டும். வராது என நினைத்திருந்த பணம் 3 மாதம் கழித்து வந்திருக்கிறது. அதுவே பெரிய விஷயம் இல்லையா? முதலில் ஏன் அப்படிப் பண்ணினார் என்று புரியவில்லை. இப்போ எப்படி மனம் மாறியது என்றும் புரியவில்லை.
இங்கே மெயிலில் தினம் தினம் 30 லட்சம் தனிப்பட்ட கடன் கொடுப்பதாக அழைப்பு. தொலைபேசித் தொல்லைகள் தனி! பென்ஷன் மட்டும் மாசம் பத்து லக்ஷம் கொடுப்பதாக ஒருத்தர் சொல்கிறார். இது எதற்கும் கவராத மனம் நம்ம பணம் வந்ததும் தான் அமைதி பெறுகிறது. லட்சமும், கோடியும் யாருக்கு வேண்டும்? நமக்கு உள்ளதே போதும். அதுவே அதிகம்!
வராது வந்த பணம் மகிழ்ச்சி.
ReplyDeleteஇது அத்தி வரதரின் திருவிளையாடலே...
உங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கடன் தருகிறார்களா...?
வேண்டாமெனில் என்னிடம் திருப்பி விடுங்களேன்.
ஹாஹாஹா, கில்லர்ஜி! தினம் தொந்திரவு தாங்கலை! :))))) எனக்கும் வேண்டாம், உங்களுக்கும் வேண்டாம். அவங்க எதிர்பார்ப்பது நம்ம வங்கிக்கணக்கு விபரங்கள்! :)))))
Deleteஎல்லோரும் இதையே சொல்கிறார் ஆனால் எனக்கு இப்படி ஒரு கிராக்கிகள் இதுவரை சிக்கவில்லை.
Deleteசிக்கினால் ???
ஆடியோவோடு பதிவு வரும்.
ஹஹாஹாஹாஹா, விரைவில் பதிவை எதிர்பார்க்கிறேன் கில்லர்ஜி!
Deleteநேற்றைக்கு இதைக் குறித்து எழுதணும்னு நினைச்சேன் (எந்த இடுகைல என்று சட்னு நினைவுக்கு வரலை).
ReplyDeleteநம்ம பணம், அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், வந்தால் ஏற்படும் நிம்மதி......
அது சரி...கொடுத்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவர் வாங்கிக்கொள்ளும்படி ஆகிடப்போகுது, உங்க கணிணியைச் சரி பண்ணிச் சரி பண்ணி..
நெல்லைத் தமிழரே, கணினி அப்படி எல்லாம் தொந்திரவு கொடுக்கிறதில்லை. இது மாதிரி எப்போதானும் வரும். நேற்று வந்ததுக்குப் பணமே வாங்கிக்கலை! வேண்டாம்னு சொல்லிட்டார்.இதுக்கு முன்னாடியும் அப்படிச் சொல்லி இருக்கார். அதனால் தான் அவர் பணத்தைக் கொடுக்கலைனதும் எனக்கு மனசு வருதம் தாங்கலை!
Deleteஅயயய்யோ, இனிமேல் எழுதப் போவதில்லையா நீங்கள்? ஒரு சின்ன யோசன- (உங்களிடம் நிறையப் ப்ணம் இருப்பதாகச் சொன்னதால்)- இன்னொரு புதிய மடிக்கணினி வாங்கிவிடுங்கள். அத்துடன், அல்ல்து அது இல்லாமலேயே, mobile இல் Google Docs ஆப்பை download செய்து voice typing மூலம் எழுதிவிடுங்கள். ரொம்ப சுலபம். படுத்துக்கொண்டே எழுதலாம்.
ReplyDeleteநான் எழுதுவதைப் பற்றிப் பதிவில் எதுவுமே சொல்லலையே? என்னிடம் நிறையப் பணம் இருக்குனும் சொல்லலை!தரேன்னு பிடுங்கி எடுக்கறாங்க! மொபைலில் எல்லாம் நான் எந்த app ம் தரவிறக்கிக் கொள்வதில்லை. அப்டேட் பண்ணும்போது அதுவாக வந்தால் உண்டு. மற்றபடி மொபைல் வாங்கினப்போ அதோடு இருந்தவை மட்டுமே! குரல் தட்டச்சு பற்றி கேஜிஜி கூட விளக்கம் கொடுத்திருந்தார். எனக்கு அவ்வளவு சோம்பல் எல்லாம் இல்லை! :)))))))
Deleteஉங்களுக்கு வர வேண்டிய பணம் திரும்பி கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தும் காசியில் ஒரு புரோகிதருக்கு என் கணவர் அட்வான்ஸ் அனுப்பி வைத்தார். இப்போது எங்கள் காசிப் பயணம் ரத்தான நிலையில் அந்த பணத்தை திருப்பி அனுப்பச் சொல்லி காசி புரோகிதருக்கு ஃபோன் செய்தால, எப்போது அனுப்பினீர்கள்? பாங்க் டீடெயில் கொடுங்கள்"என்கிறார். மகனை விட்டு தேடச்சொல்ல வேண்டும். அவன் பிஸி. எங்களுக்கும் பணம் கிடைத்து விடும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteவாங்க பானுமதி, உங்கள் கணவர் உடல்நலம் இப்போ எப்படி இருக்கு?நாங்களும் இந்த மாதம் 3 ஆம் தேதி காசிப் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்திருந்தோம். சங்கர மடத்துக்குப் பணம் அனுப்பணும். கிளம்பும் முன்னர் அனுப்பிக்கலாம்னு தாமதித்தோம். பயணமே ரத்து செய்யும்படி ஆகிவிட்டது! நீங்க வங்கியின் இணையச் சேவை மூலம் பணம் அனுப்பி இருந்தால் அதிலேயே உங்கள் கணக்கு குறித்த தகவல்களை உள்ளே சென்று பாருங்கள்! எந்தத் தேதியில் பணம் அனுப்பினீர்கள் என்ற விபரம் எல்லாம் கிடைத்துவிடும். அதில் உள்ளதை அப்படியே காசிப் புரோகிதருக்கு அனுப்புங்கள். பணம் கிடைக்க வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.
Deleteவாராது வந்த மா Money! எப்படியோ திரும்பி வந்ததே... அதுவே போதும்.
ReplyDeleteலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் - எனக்கும் நிறைய மின்னஞ்சல் வந்து கொண்டிருக்கிறது! அனைத்தும் படிக்காமலேயே டெலீட் தான்! ஆசையே துன்பத்திற்குக் காரணம் நு சொல்லிட்டே டெலீட் பட்டன் அழுத்தி விட வேண்டியது தான்.
வாங்க வெங்கட், நானும் படிப்பதில்லை. மெயில் பெட்டியில் கொஞ்சம் போல் தெரியுமே அதான்! :)))) அவங்க நினைச்சுக்கறாங்க இதிலெல்லாம் மயங்கிடுவாங்கனு!
Delete// இது எதற்கும் கவராத மனம் நம்ம பணம் வந்ததும் தான் அமைதி பெறுகிறது... //
ReplyDelete100% உண்மை... அப்புறம்...
Mail மற்றும் Mobile SMS - இவற்றில் வரும் இணைப்புகளை (link) தயவு செய்து சொடுக்கிட வேண்டாம்... அதனால் பல தொல்லைகள் உள்ளது...
வாங்க டிடி. அறிவுரைக்கு நன்றி. நான் சும்மாவே சந்தேகக் கண்ணோடு பார்ப்பேன். எதையும் ஒருமுறைக்கு இருமுறை தெரிந்து கொண்டு அதில் கவலையோ, பயமோ இல்லைனு தெரிந்து கொண்டு தான் மேலே போவேன். சந்தேகாஸ்பதமான மடல்களைத் திறப்பதே இல்லை. மொபைலில் இப்படி எல்லாம் வராது. மொபைல் மூலம் பேசுவதும் வாட்ஸப் பார்ப்பதும் மட்டுமே. எப்போவானும் முகநூல்! மொபைலில் எந்தப் புதிய app ம் திறந்து பார்ப்பதே இல்லை.
Deleteஜீவி ஸார் கதை நிஜமாகி விட்டது! கிளல்ர்ஜி சொல்லி இருப்பது போல அத்தி வரதரின் மகிமையும்!
ReplyDeleteஅது சரி.. கணினி மறுபடி வேலை செய்யவில்லையே... என்ன செய்யப் போகிறீர்கள்?
வாங்க ஸ்ரீராம், ஜீவி சாரின் அந்தக் கதையைப் படிக்கையில் எனக்கு இதான் நினைவு! :)))) அத்தி வரதர் மகிமைதான்னு என்னைப் பொறுத்தவரை சொல்லலாம். கணினி மருத்துவர் வேறே உம்மாச்சியைக் கும்பிடுவார். கணினி வேலையெல்லாம் செய்யாமல் இல்லை. இப்போ அந்தக் கணினியில் தான் வேலை செய்கிறேன். எப்போவானும் இம்மாதிரி ஜாவா ஸ்க்ரிப்ட் எரர்னு செய்தி வருது! அதை ஓகே கொடுத்தால் மறைந்துவிடும். ஒண்ணும் பிரச்னை இல்லை. இல்லாட்டியும் திரும்பக் கூப்பிட்டால் வருவார். இனிமேல் அவருக்கு தர்மசங்கடம் இருக்காதுஅல்லவா?
Deleteநம் மேல் விரோதம் இல்லை, நம்மையே மறுபடியும் ரிப்பேருக்குக் கூப்பிடுகிறார்கள் என்றதும் அவருக்கே ஒரு மாதிரி ஆகி இருக்கலாம். வேறு பேச்சு எதுவும் வந்து மனம் மாறும் முன் அல்லது நிலைமை தர்மசங்கடம் ஆகும் முன் அவர் பணம் கொடுத்து விட்டது அதுபற்றி அவர் யோசித்திருப்பார் என்று தெரிகிறது.
ReplyDeleteஶ்ரீராம், கணினியில் பிரச்னை எனில் நான் இனிமேலும் உங்களைத் தான் கூப்பிடுவேன் எனமுன்னரே சொல்லி விட்டேன். ஆகவே அவருக்குப் புரிந்திருக்கும். நான் வேறே பேச்சே பேசவில்லை. பேசுவதாகவும் இல்லை.
Deleteபிரச்னையை அவர் எப்படி சரி செய்கிறார் என்று பார்த்திருந்தீர்கள் என்றால், நீங்களே மறுபடி அதே மாதிரி முயற்சித்துப் பார்த்திருக்கலாம்.
ReplyDeleteமுயற்சி செய்து பார்த்தேன். சரியா வரலை ஶ்ரீராம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களுக்கு வாராது வந்த பணம் வந்திருப்பது சந்தோஷமான விஷயம். "வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணனவன்" என்ற பாடலின்படி நாளை கிருஷ்ண ஜெயந்திக்கு முன் தங்கள் பணம் வந்தே விட்டது. எல்லாம் பகவான் கிருஷ்ணரின் செயல்தான். நமக்கென்று உள்ளது நம்மை வந்தடைந்திருக்கிறது அது போதும்.. என்ற நல்ல எண்ணங்கள் என்றுமே மகிழ்ச்சியை மட்டும் தரும். பாராட்டுகளுடன், வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மைதான் கமலா. நமக்கென்று உள்ளது நம்மை வந்தடைந்து விட்டது! வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
Deleteஜீவி ஐயாவின் கதையை நினைவுபடுத்துகிறது உங்கள் இந்தச் சம்பவம்.
ReplyDeleteஙே!!!!!!!!!!!! அதிரடியா இப்படி ஒரு வரியில் கருத்துச் சொல்லி இருப்பது???????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Deleteஹா ஹா ஹா நான் நிறையப்பேசோணும் என எல்லோரும் எதிர்பார்ப்பது மகிழ்ச்சி:)).. சில நேரங்களில் மூட்டும்.. ரயேட்டும் ஒத்துழைக்காவிடில்.. சம்திங் இஸ் பெட்டர் தான் நத்திங் எல்லோ:)). எப்பூடியும் எதிர்ப்புக்களைச் சமாளிச்சிடுவேன் எனும் நம்பிகையிலதான் இப்படி எல்லாம் கூத்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன்ன்ன்ன்..
Deleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பெரீய கொமெண்ட் போட்டு விட்டேனே:)) ஹா ஹா ஹா கலைக்கக்கூடாது கீசாக்கா பிறகு முழங்கால் வலிக்கும் உங்களுக்கு:))
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போத் தான் முழங்கால் வலிக்குச் சிகிச்சை எடுப்பதில் கொஞ்சம் முன்னேற்றம். அதுக்குள்ளே மறுபடி முழங்கால் வலியா? அநியாயமா இருக்கே! :P :P :P
Delete
ReplyDeleteஉங்கள் பிரச்னை கணிணிப் பிரச்சினை அல்ல என்று தோன்றுகிறது. பழைய மடிக்கணினி என்று சொல்லியுள்ளீர்கள். அப்போது OS பழையதாக இருக்கும். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சப்போர்ட் மைக்ரோசாப்ட் நிறுத்தி விட்டது. அதனால் சில புதிய செயலிகள் மற்றும் பக்கங்கள் சரியாக வேலை செய்யாமல் போகலாம். இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.விண்டோவ்ஸ் 10 நிறுவ வேண்டும்.
முடிந்தால் அவரிடம் ஒரு பார்ட்டிஷனில் Linux போட்டு வாங்கிக்கொள்ளவும். ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு Linux நன்றாகத் தெரியும். உதவுவார்கள்.
என்னுடைய மடிக்கணினி மிகப் பழைய மாடல. விண்டோஸ் இல்லை, Linux தான் உபயோகிக்கிறேன்.
அரைக்காசானாலும் நம்முடையது என்பது கிடைத்தால் என்னவோ உலகமே கிடைத்தது போலத்தான். அது போலவே ஏமாறும் போதும். உலகமே நம்மை ஏமாளியாக்கி விட்டது என்று தோன்றும்.
Jayakumar
வாங்க ஜேகே அண்ணா, லினக்ஸ் பற்றி நான் நன்கு அறிவேன். லினக்ஸுக்காக மொழிபெயர்ப்பு எல்லாம் செய்து கொடுத்திருக்கேன். என்றாலும் கணினியில் அதில் வேலை செய்ததில்லை. எங்க பையர் வேண்டாம் என்கிறார். வின்டோஸ் 7 ப்ரிமியம் தான் இந்த மடிக்கணினியில். அதில் ஒண்ணும் பிரச்னை இல்லை. வின்டோஸ் 10 எனில் அதை ஆன்லைனில் தான் நிறுவ வேண்டும். அதற்கு சிடியெல்லாம் கொடுக்க மாட்டார்கள். புது மடிக்கணினியில் வின்டோஸ் 10 தான். இந்த தோஷிபா மடிக்கணினிக்கு எட்டு வயது ஆகிறது. புதியது "டெல்" மடிக்கணினிக்கே மூன்று வயது ஆகிவிட்டது! பையர் அதையே பழசு எடுத்துக் கொண்டு வராதே என்கிறார். :)
Deleteபோன பதிவில் விழுந்தீர்கள் அல்லவா? அப்படி விழுந்தது கணினி மருத்துவர் பார்த்திருப்பார். (பதிவில் தான்). அதனால இரக்கப்பட்டு கொடுத்து விட்டார்.
ReplyDeleteஹாஹாஹா, அவருக்கு நான் பதிவு எழுதுவது எல்லாம் தெரியாது! :))))
Deleteநான் எப்பவும் கணினி பற்றிய என் அறிவை நம்புவதில்லை எனக்கென்று ஒருகணினி மருத்துவர் இருக்கிறார் பணமெல்லம்நாம் திணிக்க வேண்டும்கணினியில் அதிகம்நேரம் செலவழிக்க வேண்டாம் என்றுஆலோசனை மட்டும் நிறையக் கூறுவார் இதனாலேயே சின்ன பிரச்சனைகளுக்கு அவரைக் கூப்பிடுவது இல்லை
ReplyDeleteசென்னையில் எனக்கு அப்படி ஒரு கணினி மருத்துவர் இருந்தார். ஸ்ரீகாந்த் என்ற பெயர். திருமூர்த்தி வாசுதேவன் மூலம் அறிமுகம். நன்றாகச் செய்து கொடுப்பார், புரியாதனவற்றைச் சொல்லியும் கொடுப்பார்.
Deleteமிக மிக மகிழ்ச்சி கீதா.மனதை வருத்துவது ஏமாற்றப்
ReplyDeleteபடுவது. கண்ணன் அருளில் பணம் மீண்டது. கணினியும் சரியாகட்டும்.
என் கணினியும் ஸ்பீட் குறைந்து விட்டது.
பரவாயில்லை.ஏழு வருஷங்களாக உழைத்திருக்கிறது.
இருக்கட்டும் என்று சொல்லி இருக்கிறேன்.
லெனோவா.
ஆச்சர்யக் குறி,வருத்தம், சந்தோஷம் எதுவும் காட்டாத ஞானி என்
சிஸ்டம்.
வாங்க வல்லி. கணினியில் வேகம் சரியாகவே இருக்கு. ஆகவே அதெல்லாம் பிரச்னை இல்லை. கணினி பூட் ஆனதும் இந்த ஜாவா ஸ்க்ரிப்ட் எரர்னு சொல்லி நீட்டி முழக்கிக் கொண்டு ஒரு செய்தி வரும். அதைப் படித்து ஓகே சொன்னதும் போயிடும்! :)))) உங்கள் கணினிக்கு ஞானம் கிடைத்திருப்பது ஆச்சரியம் தான். :)))))
Deleteஹப்பா ஒரு வழியாக உங்கள் பணம் கைக்குக் கிடைத்ததே. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக என்று..
ReplyDeleteஅவருக்கும் உறுத்தல் இருந்திருக்கலாம் அக்கா. அதுவும் நீங்கள் கேட்டுவிட்டு அப்புறம் கேட்காமல் இருந்துவிட்டு மீண்டும் அவரையே ரிப்பேருக்குக் கூப்பிட்ட போது, அவருக்குத் தோன்றியிருக்கும் அதுவும் முதலிலேயே பணம் பற்றி இல்லை என்று சொல்லிவிட்டுத் தொடங்கியதும் அவருக்கும் உறுத்தியிருக்கும்...
ஜீவி அண்ணா எழுதிய கதை நினைவுக்கு வருகிறது. பசவராஜ் போல...
எப்படியோ வர வேண்டிய பணம்! வந்துவிட்டது. அதுவரை மகிழ்ச்சி.
இப்ப அவருக்கும் இனி வருவதற்கு தர்மசங்கடம் இருக்காதுதான்
கீதா
தெரியலை! தி/கீதா, எனக்கு என்ன கவலைன்னா இனிமேல் கணினியை யார் கவனிப்பார்கள் என்று தான். இப்போ அந்தக் கவலை போய்விட்டது!
Delete